குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் கைது!!

kuwait

குவைத் நாட்டில் தனது தங்குமிடத்தில் கள்ளச்சாரயம் (கசிப்பு) காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளி சல்மியா என்ற பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வசித்து வந்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வசிப்பிடத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த தீ தொடர்மாடியில் பரவியதை அடுத்து, அவர் கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது.

தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்: வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்!!

1

ஒடிசாவின் கலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம் நடந்துள்ளது.

கலாகண்டி மாவட்டத்தில் உள்ள தோக்ரிபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் கனாக் சத்பதி, 75 வயது நிரம்பியவர். இவருக்கு நான்கு மகள்கள். கனாக் சத்பதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் இருவரின் கணவர்கள் இறந்து விட்டனர். இருவரை கணவர்கள் கை விட்டு விட்டனர். இதனால் மகள்கள் தங்கள் குழந்தைகளுடன் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பிச்சையெடுத்து அரைவயிற்றுக் கஞ்சி குடித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கனாக் சத்பதி வெள்ளிக்கிழமையன்று இறந்து விட்டார்.

தாயார் இறந்ததும் மகள்கள் அக்கம் பக்கத்தினரிடம் தாயாரிடன் உடல் அடக்கத்துக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயின் உடலை மாயானத்துக்கு எடுத்துச் சென்று எரிக்க உதவுமாறு கிராம மக்களிடம் அழுதபடி கெஞ்சியுள்ளனர்.

ஆனால் இவர்களின் அழுகை யார் மனதையும் அசைத்து விடவில்லை. எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சனிக்கிழமை காலையில் கானத் சத்பதியின் மகள்கள் பங்காஜினி தாஸ் (வயது 50 ) ராதா ( வயது 45) பிரதீமா (வயது 39) சஞ்சுக்கா ( வயது 40) ஆகியோர் தாயாரின் சடலத்தை ஒரு கட்டிலில் வைத்து தூக்கிக் கொண்டு மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு பேரும் சடலத்தை தூக்கி சென்றனர். சுடுகாட்டில் தாயாரின் சடலத்தை எரிப்பதற்கு விறகு கட்டைகள் வாங்கவும் அவர்களிடம் பணம் இல்லை.

அதனால், யாரும் விறகுக்கட்டைகள் கொடுக்கவில்லை. இதனால் மேலும் பரிதவித்து போன அந்த பெண்கள், தங்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து அதில் இருந்து கிடைத்த விறகுகளை வைத்து தாயாரின் சடலத்தை எரித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஒடிசாவின் பெரும்பாலான கிராமங்களில் மக்களிடையே கடுமையான மூடநம்பிக்கை நிலவுகிறது.

கணவன்மார்களால் கைவிட்டவர்களை ஒதுக்கி வைப்பது, கணவர்களை இழந்தவர்களை ஒதுக்கி வைப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு ஒடிசாவில் பர்கார் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனைவியை கைவிட்டு விட்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடி விட்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த பெண் இறந்து போனார். அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய, கிராமத்தினர் யாம் உதவிக்கு வரவில்லை. கடைசியில் அந்த பெண்ணின் இரு மகள்களும் சேர்ந்து தாயாரின் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-விகடன்-

2 3

மீன்களின் உயிர்களை காப்பாற்றிய இளைஞர்களின் மனிதநேயம்!!

fish

மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் மீன்களை பிடித்து தனக்கு உணவாக்கி கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பது சாதாதரணமானது. ஆனால், மனிதர்களில் பலர் விலங்குகள் உட்பட உயிரினங்களை நேசிப்பதையும் நாம் காண்கின்றோம்.

மீன்களை பிடித்து சமைத்தும் பொரித்தும் சாப்பிட விரும்புவது மனிதனின் இயல்பு.

ஆனால் , வரட்சியால் வற்றிப் போன குட்டையில் இருந்த மீன்களை இளைஞர்கள் சிலர் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று விட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்துள்ளது.

இலங்கையில் தற்போது பல இடங்களில் வரட்சியான காலநிலை நிலவி வருகிறது. சில இடங்களில் கடுமையான வரட்சி நிலவாத போதிலும் அம்பாந்தோட்டை , பொலனறுவை தண்ணீர் இல்லாத அளவுக்கு கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு எவருடைய உதவியாவது கிடைக்கும். ஆனால் அப்பாவி உயிரினங்கள் யாரிடம் உதவி கேட்க முடியும்.

வரட்சியான காலநிலையால் தண்ணீர் வற்றிப் போன குட்டை ஒன்றில் இருந்த மீன்களை சில இளைஞர்கள் பிடித்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று விட்டு ஒரு மனித நேய செயல் ஒன்றை செய்துள்ளனர்.

இளைஞர்களின் இந்த மனிதநேய நடவடிக்கை தொடர்பாக மேலதிக விபரங்கள் வெளியாகாத போதிலும் சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இளைஞர்களின் செய்த காரியத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

f1 f2 f3 f4

பைரவா திரைப்படத்தில் என்னுடைய காட்சியை நீக்கினால் தற்கொலை செய்வேன் : சதீஷ் மிரட்டல்!!

sathish

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள றெக்க படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் பைரவா படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், றெக்க படத்தின் படத்தொகுப்பாளரான பிரவீன் கே.எல் படத்தின் நீளத்தை குறைப்பதற்காக சதீஷ் நடித்த இரண்டு நகைச்சுவைக் காட்சிகளை கட் பண்ணிவிட்டாராம்.

இதனால் கோபமடைந்த சதீஷ், றெக்க படத்தின் ஓடியோ வெளியீட்டின்போது படத்தொகுப்பாளரைப் பார்த்து நகைச்சுவையாக மிரட்டல் ஒன்றை விடுத்தார். அப்போது அவர் கூறும்போது,

றெக்க படத்தில் நான் நடித்த இரண்டு காட்சியை எடிட்டர் பிரவீன் நீக்கிவிட்டார். அடுத்து நான் நடிக்கும் பைரவா படத்திற்கும் அவர்தான் படத்தொகுப்பாளர்.

அந்த படத்தில் நான் நடித்த காட்சிகளை நீக்கினால் , அவர் வீட்டு வாசலில் சென்று தற்கொலை செய்துகொள்வேன் என்று நகைச்சுவையுடன் மிரட்டினார்.

இதனால், ஓடியோ வெளியீடு விழா கொஞ்சம் கலகலப்புடன் சென்றது. பரதன் இயக்கத்தில் உருவாகும் பைரவா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நிலநடுக்கம்!!

jappan

ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, ஜப்பானின் வடபகுதியில் உள்ள முக்கிய தீவான ஹொக்கைடோவிலும் பிற்பகல் 2.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானதாக தெரியவந்துள்ளது.

இந்த இரு நிலநடுக்கங்களால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை, இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணத்த இதயத்தை கூட கண் கலங்க வைக்கும் வீடியோ!!

img

அமெரிக்காவில் அதிகமாக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கடை ஒன்றில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரை, அவரின் 2 வயது குழந்தை அழுது கொண்டே எழுப்பும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் லாரன்ஸ் என்ற பகுதியில் பேமிலி டாலர் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் வந்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

போதை பொருள் எடுத்து இருந்ததால், அப்பொழுது அந்த பெண் எதிர்பாரதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரின் 2 வயது குழந்தை அந்த பெண்ணை எழுப்பும் காட்சி கண்களை குளமாக்குகிறது. நீண்ட நேரமாக தனது தாயை அந்த குழந்தை அழுது கொண்டே எழுப்ப போராடுகிறது.

தாயின் கன்னத்தில் அடித்தும், நெஞ்சில் எழுப்பியும் அந்த பெண் எழுந்தபாடில்லை. இதனையடுத்து குழந்தையின் அழுகையை கேட்டு அங்கு வந்த கடை ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

மயக்க நிலையில் இருந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெல்லிப்பளையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!!

bomb

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து பெருந்தொகை குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் இந்த ஆயுதங்களை கண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அப் பகுதிக்குச் சென்ற தெல்லிப்பளை பொலிஸாரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட பிரிவு மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

acc

வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று (26.09.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறிச் சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார் பேரூந்து மோதியதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா பெரியதம்பனை பகுதியை சேர்ந்த அம்பலவாணர் ராமச்சந்திரன் என்ற 63 வயது நபராவார் .

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டிய விடயங்கள்!!

love-girl

காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும்.காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள். காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் காதலை எல்லா குடும்பத்திலும் ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே பெண்கள் தாங்கள் காதலிப்பதால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வருமா? காலம் முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காதலருடன் குடும்பம் நடத்த முடியுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இப்போது காதலிக்கும் முன்னர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பாருங்கள்.

1) முதலில் உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க நினைக்கும் நபரிடம் தோழமையோடு பழகி அவருடைய நல்ல / கெட்ட விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள் வீட்டில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று யோசியுங்கள்.
8) காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம் இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.
10) அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள் காதலிக்காதீர்கள்.

இவை அணைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் தாராளமாக காதலிக்களாம். நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால் தயவு செய்து காதலிக்காதீர். நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம் உங்களுக்கு மட்டும் இல்ல. உங்களுக்கும் கஷ்டம். நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்களை பெற்றவர்களுக்கும் கஷ்டம்.

எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?

love

மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஆசன வாய் உறவில் மிக்க நாட்டம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!!

 
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை (25.09.2016).”2008 O/L மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு” பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் அத்தோடு சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொணடனர். அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் மதிய போசன விருந்து உபசாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன் நிகழ்வின் நோக்கம் பாடசாலை வளர்ச்சி நோக்கில் மாணவர்கள் பெற்றோர்கள் சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாடசாலை வளர்ச்சியில் அக்கறையுடைய ஆசிரியர்கள், அதிபர்கள், இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்கள், ஆசிரியர் அனைவருக்கும் நன்றிகடன் செலுத்தும் நிகழ்ச்சியாகவே ஒழுங்கமைக்கபட்டது என்று நிகழ்ச்சி ஏட்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

1 image-0-02-07-747a98e69c10c297c4e050ef60b627dd577ad3d75eb686e44bf2cd67b19aea2d-v image-0-02-07-a27f69c0ae889371c239cea7089d6c2e0f4a9bf986540e2bda0b2cfe40119888-v img_20160926_1 img_20160926_5

உலகில் மிகப்பெரிய தொலைநோக்கி சீனாவில் உருவாக்கம்!!(காணொளி)

china-fast-aperture-spherical-telescope

பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்டது, இதில் 34 அடி நீளம் கொண்ட தகடுகள் அமைப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும்.

இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

30 கால்பந்து மைதானம் அளவிலான இந்த தொலைநோக்கியை அமைப்பது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே சீன விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது, 1.2 பில்லியன் யுவான்செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4450 பிரதிபலிப்பான்களை (panel reflector) கொண்ட இந்த தொலைநோக்கியை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 8000 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.

வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!!

accident

பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை கலஹா வீதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமான ஹிந்தகல பிரதேசத்தில் மணல் லொறி ஒன்றுடன் இம் மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடத்திற்கு அண்மையில் மாணவர் விடுதி ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மேற்படி மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினபுரியை சேர்ந்த 23 வயதுடைய சொய்சா என்ற மாணவன் என அறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி கரை சேர்ந்த இரு இலங்கையரும் யார் : பொலிசார் தீவிர விசாரணை!!

sea

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

விசாரணையில், அவர்கள் கார்த்திக் (23), சாந்தகுமார் (42), என தெரியவந்தது. கடந்த 1992ல் இலங்கை, திருகோணமலையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த இவர்கள் சென்னை, முகப்பேரில் வெளிப்பதிவில் தங்கி, விசைப்படகு பழுது நீக்கும் மெக்கானிக் தொழில் செய்வதாக கூறப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன், காரங்காடு கடல் பகுதியில் பழுதான பிரிட்டோ என்பவரின் விசைப்படகை சரி செய்த போது தண்ணீர் புகுந்து படகு நீரில் மூழ்கியது. தண்ணீரில் தத்தளித்த இருவரும் பிளாஸ்டிக் கேன்களை பிடித்து நீந்தி கரை சேர்ந்தது தெரிந்தது. ஆனால், அவர்கள் கூறியது நம்பும்படியாக இல்லாததால் படகு உரிமையாளர் பிரிட்டோவிடம் விசாரணை நடக்கிறது.

கடந்த, 2014 ஆகஸ்ட் மாதம் திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் இருந்து சயனைடு குப்பிகள், இலங்கை நாணயங்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்ற விடுதலை புலி உறுப்பினர் ஒருவரும், சில மாதங்களுக்கு முன் ஹெராயின் போதை பொருளுடன் ஒருவரும் பொலிசில் சிக்கினர்.

தொண்டி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இருந்து டீசல், பெட்ரோல், கடல் அட்டை, மருந்து பொருட்கள் இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்படுகின்றன. தற்போது சிக்கிய, இரண்டு பேரும் கடத்தல் பொருட்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்றிருக்கலாம், என பொலிசார் சந்தேகிக்கின்றனர் என தமிழக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வவுனியாவில் கடும் வறட்சி, குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

varatchi

வவுனியாவில் தொடரும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குளங்கள் மட்டுமன்றி கிணறுகளும் வற்றிவிட்டன.

கடும் வெயில் காரணமாக வேலைக்குச் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர் உட்பட முதியோரும் கடும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

வறட்சியான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆயிரத்து 348 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை இந்த மாத இறுதி பகுதி வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியின் பின்னர் ஓரளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பலமான கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!!

p

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த பட்டியிலில் உலகின் பலமான கடவுச்சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் கடவுச்சீட்டும் , மூன்றாம் இடத்தை பின்லாந்து கடவுச்சீட்டும் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், நீண்ட காலமாக இலங்கையின் கடவுச்சீட்டு உலகின் குறைந்த வரவேற்பை கொண்டுள்ள கடவுச்சீட்டுடனான நாடாகவே பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பின்வரும் நாடுகளுக்கு இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ளாது பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

pp