ராம்குமாரின் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் நீதி கிடைக்காது : திலீபன் ஆவேசம்!!

thiliban

ராம்குமார் பிணம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி கிடைக்காது என தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மர்மமாக முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், செப்டம்பர் 27ம் திகதிக்குள் மருத்துவரை முடிவு செய்து ராம்குமாரின் பிரேத பரிசோதனையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திலீபன் மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு,

ராம்குமார் ஜெயிலுக்கு போனபோதே நா போஸ்ட் போட்டேன் ஜெயில்லயே கொன்றுவானுங்கன்னு .. செஞ்சிட்டானுங்க…

நா ராம்குமார் கொல செய்யலன்னு சொன்ன போது என்ன வித்யாசமான ஜந்துவ பாக்குற மாதிரி பாத்த சமூகம். இப்ப ராம்குமார் அப்பாவின்னு உலகமே சொல்லுது ..

ராம்குமார் பொனம் புழு புளுத்து நாறிப்போனாலும் இந்த போலி இந்திய ஜனநாயகதுல நீதி மயிரு கெடைக்காது..

ராம்குமார் போஸ்ட்மார்டம் விசாரனை செப்ட் -27 தள்ளி வைப்பு.. இதுதான் உன் இந்திய தேசம்னா?… நா தேசவிரோதிதான்டா ..

நாளை மதியம் 2 மணிக்கு முழு தகவலுடன் போஸ்ட் போட்ரேன்..வேர என்னத்த சொல்ல? என கூறியுள்ளார்.

கல்லூரி மாணவியை கொன்றது ஏன்? காதலன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!!

murder

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி கொலையில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலித்து விட்டு ஏமாற்றியதால் கொன்றதாக காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 20ம் திகதி மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுர பகுதியில், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் தீபா மர்மமான முறையில் வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இந்நிலையில், கடைசியாக தீபிகாவிற்கு வந்த அழைப்பை வைத்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 2 பேர் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த அரசன் (வயது-21) பொலிசில் சரண் அடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து அரசன் அளித்துள்ள வாக்குமூலத்தில்: அண்ணாமலை பல்கலையில், எம்.பி.ஏ.படித்து வரும் நான், இதற்கு முன்பாக பூம்புகார் கல்லூரியில் தீபிகாவுடன் படித்தேன். அப்போதே அவருடன் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தீபிகாவுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. என்னை காதலித்தவள் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவளை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதன் காரணமாக ராஜமோகன் என்ற நண்பனை அழைத்துக்கொண்டு அப்பராஜபுரம் சென்றேன். அப்போது தீபிகாவுக்கு போன் செய்து உனக்கு கிப்ட் வாங்கி வந்திருக்கிறேன். இப்போவே கொடுக்க வேண்டும். வாய்க்கால் அருகே வா என்று கூறினேன்.

பின்னர், தயங்கியபடி வந்த தீபிகாவை அருகில் இருந்த கட்டையால் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்து விட்டாள். உடனே நான் அங்கிருந்து ஓடி விட்டேன் அதன் பிறகு பொலிசில் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் மாணவன் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் பரிதாபம்!!

uni

யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்த கிளிநொச்சி மாணவர் ஒருவர் அதனைக் கைவிட்டு தற்போது தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அதற்கு காரணம் யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டு வரும் பகிடிவதையே என நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விஜயகுமார் வசந்தகுமார் எனும் மாணவனே இவ்வாறான துன்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற பலர் திண்டாடுகின்ற நிலையில் ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த பகிடிவதைகள் நிறுத்தப்பட வேண்டும் அப்போதே அங்கு கற்க வரும் மாணவர்கள் தமது எதிர்கால கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் முதல் விண்வெளி நிலையம்: அடுத்தாண்டு பூமியில் விழக்கூடும்!!

tiangong-1

சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் – 1 ( Tiangong-1) என்ற விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அது பூமியில் வந்து விழக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த விண்வெளி நிலையம் விண்ணில் ஏவப்பட்டது.

டியான்காங் – 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020 இல் மிகப்பெரிய விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்க சீனா திட்டமிட்டிருந்தது.

ஆனால், டியான்காங் – 1 தற்போது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் பூமியில் வந்து விழவுள்ளது.

பூமியில் வீழும்போது அது துகள்களாகவே விழக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு ஒரு விண்கலம் பத்திரமாகத் திரும்புவது என்பது இன்னும் சாத்தியமாகவில்லை. அது மிகப் பெரிய கடினமான ஒன்றாகும்.

காரணம், பூமியிலிருந்து விண்வெளிக்கு ஏவுவதை விட பூமிக்கு விண்கலத்தைத் திரும்பக் கொண்டு வருவது மிகக் கடினமானது.

space-station-china-1024x683

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் : அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்!!

selvan

அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரச கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தம்மை விடுதலை செய்யுமாறுகோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசினதும் மனித உரிமை அமைப்புகளினதும் கவனத்துக்கு தமது கோரிக்கைகளை கொண்டுவரும் நோக்கிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

எனவே இந்த விடயத்தை மனிதாபிமான முறையில் அணுகி அவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை : கடிதம் ஒன்று மீட்பு!!

thookku

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் பாடசாலை மாணவியொருவரின் சடலத்தினை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் மாணவி என பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த மாணவி மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் சடலத்திற்கு அருகில் இருந்து மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும் குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் படகு கவிழ்ந்து 42 பேர் பலி, 400க்கும் அதிகமானோரைக் காணவில்லை!!

acci

எகிப்தின் மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாகப் பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலியாகியுள்ளனர்.

சுமார் 163 பேரை எகிப்தின் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதுடன் 400 க்கும் அதிகமானோர் கடலில் காணாமற்போயுள்ளனர். சுமார் 600 பேருடன் குறித்த படகு பயணித்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய படகினை மீனவர்கள் கண்டு, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சூடான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அறிமுகமாகும் நவீனரக ரயில்!!

train

இந்தோனேஷியாவில் தயாரிக்கப்படும் நவீன ரக ரயில் ஒன்றை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார டீசல் ரயில் ஒன்றை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

INKA எனப்படும் இந்தோனேஷியா ரயில்வே தொழில் நிறுவனம் ஒன்றிடமிருந்து புதிய வகை ரயில் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன் பெறுமதி 70 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

ஆசிய நாடுகளின் பலவற்றுக்கு இந்த வகையில் ரயில்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து வட ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் இந்த ரயில்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் மியன்மார் மற்றும் இலங்கை சந்தைகளில் தங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக INKA நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற அவலம்!!

dead

ஒடிசாவில் இறந்த தாயின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்லாமல் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குணா. இவருடைய தாய் பானா திரிகா(65), கடந்த சில தினங்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் குணா, தன் தாயை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக கட்டாக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள், சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையிலிருந்து தன் சொந்த ஊருக்கு 4 கி.மீற்றர் தூரம் என்பதால், குணா, தன் தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஊழியரிடம் விலை பேசியுள்ளார்.

ஆனால் அவரோ அதிகமாக கேட்டுள்ளார், பணம் இல்லாத காரணத்தினால் மனமுடைந்த குணா அருகில் இருந்த தள்ளுவண்டியில் தன் தாயின் சடலத்தை வைத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.

தன் தாயின் சடலத்தை கொண்டு சென்ற குணாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொலை இல்லை தற்கொலை : உண்மையை நிரூபித்த சிசிடிவி காட்சி!!

murder

கார் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டவர், தானாக முன்வந்து காரின் முன்பு தற்கொலை செய்து கொண்டது சிசிடிவி காட்சியின் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஹைதராபாத்தின் முக்கிய சாலையான லாங்கர் ஹவுஸ் பாலத்தில் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கார் மோதியதில் இறந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் கார் ஓட்டி வந்த பாரி என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது வழக்கின் திருப்பமாக கார் விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர், தானாகவே கார் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதில் வாகனங்கள் பல செல்லும் போது, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர், திடீரென காருக்கு அடியில் விழுந்துவிடுகிறார்.

காரை நிறுத்த முற்பட்டும் காரின் முன்சக்கரங்கள் அவரின் உடலில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்காட்சிகளை கண்ட பொலிசார், பாரி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை மறுபரீசிலனை செய்வதாகவும், காரை வேகமாக ஓட்டி வந்ததற்காக பாரி மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிட வந்த நபரை தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்திருக்குமாறு கூறிய பெண்!!

Brave Karamjit Sangha who saw off an armed robber who refused to hand over cash - because she was having her cup of tea. See Ross Parry story RPYCUPPA: A shop worker told a robber who brandished a seven-inch blade at her he would have to wait as she was having a cup of tea. Drug user Stuart Gleeson hung around the Sangha newsagents in Beverley Road, Hull for several minutes before entering and demanding cash from the till. But unflustered Karamjit Sangha put down her cup of tea and waved a craft knife she was using to open the papers at him, causing him to run away.

 

பிரிட்­டனில் வசிக்கும் இந்­திய பெண்­ணொ­ருவர் தனது கடையில் கத்­திமு­னையில் கொள்­ளை­யி­டு­வ­தற்கு வந்த நபரை, தான் தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்­தி­ருக்­கு­மாறு கூறி­ய­துடன் பின்னர் அந் ­ந­பரை பய­மு­றுத்தி துரத்­தி­யுள்ளார்.

49 வய­தான கரம்ஜித் சங்கா எனும் இந்த பஞ்­சாபி பெண், பிரிட்­டனின் ஹுல் நகரில் கடை­யொன்றை நடத்­து­கிறார். அண்­மையில் அவரின் கடைக்கு வந்த ஸ்டுவர்ட் கிளீசன் எனும் நபர் 7 அங்­குல நீள­மான கத்­தி­யொன்றைக் காட்டி அச்­சு­றுத்தி பணம் கொடுக்­கு­மாறு மிரட்­டினார்.

ஆனால், கரம்ஜித் சங்கா அஞ்­ச­வில்லை. மாறாக தான் தேநீர் அருந்தி முடிக்­கும்­வரை காத்­தி­ருக்­கு­மாறு ஸ்டுவர்ட் கிளீ­ச­னுக்கு கரம்ஜித் உத்­த­ர­விட்டார்.

கடந்த மே மாதம் நடை­பெற்ற இச் ­சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ரணை ஹுல் கிரவுண் நீதி­மன்றில் நடை­பெற்­றது.

இவ் ­வ­ழக்கில் சாட்­சி­ய­ம­ளித்த கரம்ஜித் சங்கா கூறு­கையில், “அந்­ நபர் கடை­யி­லுள்ள பணம் முழு­வ­தையும் தரு­மாறு கூறினார். ஆனால், நான் தேநீர் அருந்திக் கொண்­டி­ருக்­கிறேன் எனக் கூறினேன்.

தேநீர் கப்பை கீழே வைத்­து­விட்டு பணத்தை எடுத்தத் தரு­மாறு அவர் கேட்டார். நான் “சரி” எனக் கூறி­விட்டு, கத்­தி­யொன்றை எடுத்துக் காட்­டினேன். அதைக் கண்டு அந்­ நபர் ஓடி­விட்டார்.

அவரை நான் கத்­தியால் குத்­தி­யி­ருக்கப் போவ­தில்லை, எனினும், அவரை மிரட்­டு­வ­தற்கு அந்­ ந­ட­வ­டிக்கை போது­மா­ன­தாக இருந்­தது” என்றார்.

இவ் ­வ­ழக்கை விசா­ரித்த நீதிபதி, ஸ்டுவர்ட் கிளீசனுக்கு 5 வருட கால சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

1 2

நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் : விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை!!

act

எனக்கு திறமை இருக்கிறது, யாரும் என்னை பார்த்து அனுதாபம் படத் தேவையில்லை என்று விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் பின்னர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், மக்கள் ஏன் என்னை பார்த்து அனுதாபப்படுகிறார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை.

எனக்கு யாருடையை அனுதாபமும் தேவையில்லை. எனக்கு இப்போது வேலை தான் வேண்டும். எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அறிவித்த ஹன்சல் மேத்தா ஒன்றும் செய்யவில்லை.

எனக்கு திறமை இருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.

விபத்தில் மரணித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் மகளின் கல்விச் செலவை ஏற்ற விஷால்!!

vishal

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக் கார் மோதியதில் 13 முச்சக்கரவண்டிகள் சேதமடைந்தன.

அதில் முச்சக்கரவண்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9 முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் படுகாயமடைந்தார்கள்.

அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அக்குர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இறந்த ஆறுமுகத்துக்கு மணிஷா என்ற 7வயது மகள் இருப்பதை அறிந்தார். உடனே மணிஷாவின் கல்விச் செலவு அனைத்தையும் தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக அவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானம் அடைய வைத்தார். ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்ற 61 வயதுப் பெண்!!

b1

இத்தாலிய கம்பெனியா பிராந்தியத்தைச் சேர்ந்த 61 வயது பெண்ணொருவர் இயற்கையான முறையில் கருத்தரித்து திங்கட்கிழமை மாலை ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதன்பிரகாரம் இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தையைப் பிரசவித்த உலகின் மிகவும் வயதான தாயாக தான் விளங்குவதாக மரியா ரொஸாரியா வெனருஸோ என்ற மேற்படி பெண் உரிமைகோரியுள்ளார்.

கம்பனியா பிராந்தியத்தில் காஸ்டெல் வொல்துர்னோ எனும் இடத்திலுள்ள மருத்துவமனையில் பிறந்த இந்தக் குழந்தைக்கு எலியா பிரான்செஸ்கோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணரான லெயிலா ஹன்னா தெரிவிக்கையில், “அற்புதம் ஒன்று நிகழ்ந்தாலேயே இவ்வாறு இடம்பெறுவதற்கு முடியும். ஆனால் 61 வயதுப் பெண்ணொருவர் இயற்கை முறையில் கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

b2

இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி : ஜானகி அறிவிப்பு!!

janaki

பாடுவதிலிருந்து முழு ஓய்வு பெறுவதாக பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார்.

1957 இல் விதியின் விளையாட்டு படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ், ஜானகி. கடந்த 60 வருடங்களாக இடைவெளி இல்லாமல் பல மொழிகளில் பாடிவந்த ஜானகி, இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

தற்போது அனூப் மேனன், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள மலையாளப் படத்தில் தாலாட்டுப் பாடலை அவர் பாடியுள்ளார்.

அதுவே தனது கடைசிப் பாடல். இனிமேல் படத்துக்காக மட்டுமல்ல எந்தவொரு நிகழ்ச்சியிலும் கூட பாடமாட்டேன் என்றும் ஜானகி அறிவித்துள்ளார்.

தன் திரையுலக வாழ்வில் அவர் 48,000 பாடல்கலைப் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

2013 இல் அவருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. ஆனால், தாமதமாக வழங்கப்பட்டது என்று காரணம் சொல்லி அவ்விருதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்!!

top-10

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில் ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.15 இலட்சம் கோடி இந்திய ரூபா என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 இலட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி செல்போன் சேவையைத் தொடங்கியது. இது இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 ஆவது இடத்தில் இந்தியாவின் மருந்துப்பொருட்கள் உற்பத்தித்துறையில் சாதனை மன்னனாகத் திகழும் திலிப் சங்வி உள்ளார். இவரது சொத்து 11 இலட்சம் கோடி இந்திய ரூபா.

3 ஆவது இடத்தில் இந்துஜா சகோதரர்களும் (இ.ரூ.10.1 இலட்சம் கோடி), 4 ஆவது இடத்தில் அசிம் பிரேம்ஜி (இ.ரூ.10 இலட்சம் கோடி), 5 ஆவது இடத்தில் பல்லோன்ஜி பிஸ்திரி (இ.ரூ.9.31 இலட்சம் கோடி), 6 ஆவது இடத்தில் லட்சுமி மிட்டல் (இ.ரூ.8.37 இலட்சம் கோடி), 7 ஆவது இடத்தில் கோத்ராஜ் குடும்பம் (இ.ரூ.8.31 இலட்சம் கோடி), 8 ஆவது இடத்தில் ஷிவ் நாடார் (இ.ரூ.7.64 இலட்சம் கோடி), 9 ஆவது இடத்தில் குமார் பிர்லா (இ.ரூ.5.89 இலட்சம் கோடி), 10 ஆவது இடத்தில் சைரஸ் பூனவாலா (இ.ரூ.5.76 இலட்சம் கோடி) ஆகியோர் உள்ளனர்.