தாயின் காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி மற்றொருவராலும் பாலியல் வல்லுறவு!!

rape

தாயின் காத­லனால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்­றத்­தினால் கவ­ன­மாகப் பாது­காத்துக் கொள்­ளு­மாறு தாயிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்த 16 வயது சிறு­மியை மீண்டும் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் இரண்டு பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரை கைது செய்­வ­தற்­காக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருப்­ப­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் தந்தை தனது மனை­வி­யை­யும், மக­ளையும் கைவிட்­டு­விட்டுச் சென்­றுள்­ள­தோடு, சிறு­மியின் தாய் அதன்பின்னர் வேறொ­ரு­வ­ருடன் தொடர்பு வைத்­துள்ளார்.

அந்­ ந­பரால் குறித்த சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார் என்ற முறைப்­பாட்­டை­ய­டுத்து அவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதன் பின்னர் குறித்த சிறு­மியை கவ­ன­மாகப் பாது­காக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்டு அவ­ரது தாயிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தானும் மகளும் வேறு பிர­தே­சத்தில் வசிப்­ப­தற்குச் சென்­ற­தா­கவும் கடந்த இரண்டு மாதங்­க­ளாக அயல் வீட்­டுக்­காரர் ஒருவர் மகளை ஏமாற்றி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் சிறு­மியின் தாய் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடை களைந்து போராட்டம் நடத்திய மொங்கோலிய மல்யுத்த பயிற்றுநர்களுக்குத் தடை!!

protest

மொங்­கோ­லி­யாவின் மல்­யுத்தப் பயிற்­று­நர்கள் இரு­வ­ருக்கு ஐக்­கிய உலக மல்­யுத்த சங்­கத்­தினால் இரண்டு வருடத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் நடை­பெற்ற வெண்­கலப் பதக்­கத்­திற்­கான மல்­யுத்த போட்­டி­யின்­போது தமது வீரர் கன்­சோ­ரிஜின் மந்­தாக்­நரன் என்­ப­வ­ருக்கு எதிராக அதி­கா­ரிகள் வழங்­கிய தீர்ப்பை எதிர்த்த கார­ணத்­திற்­காக செரென்­பாட்டார் சொக்­பயார், பியாம்­ப­ரின்ச்சென் பயரா ஆகிய இரு­வ­ருக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சக­ல­வி­த­மான மல்­யுத்தப் போட்­டி­க­ளிலும் இவர்கள் இரு­வரும் 2019வரை பங்­கு­பற்ற முடி­யா­த­வாறு ஐக்­கிய உலக மல்­யுத்த சங்கம் தடை விதித்­துள்­ளது. அத்­துடன் மொங்கோ­லிய மல்­யுத்த சங்­கத்­திற்கும் 50,000 சுவிஸ் ப்ராங்­குகள் அப­ராதம் விதிக்கப்பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்­பிக்கில் உஸ்­பெ­கிஸ்­தானின் இக்­தியோர் நவ்­ரு­ஸோ­வுக்கு எதி­ரான வெண்­கலப் பதக்­கத்தை தீர்­மா­னிக்கும் சாதா­ரண மல்­யுத்தப் போட்­டியில் மந்தாக்நரன் 7 – 6 என்ற புள்­ளிகள் கணக்கில் முன்­னி­லையில் இருந்தார்.

ஆனால் போட்டி முடிய 18 செக்­கன்கள் இருந்­த­போது மந்­தாக்­நரன் சண்டையிடுவதற்குப் பதி­லாக வெற்­றிக்­கொண்­டாட்­டத்தில் குஷி­யாக இருந்தார்.

இதனை யடுத்து அவர் சண்­டை­யிடத் தவ­றி­ய­தற்­காக போட்டி விதி­களின் பிர­காரம் அவ­ரது புள்­ளிகள் மத்­தி­யஸ்­தர்­க­ளினால் கழிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து மோங்கோலிய பயிற்றுநர்கள் அரங்கில் தமது ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காகவே பயிற்றுநர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோர விபத்து ஒருவர் பலி : நால்வர் வைத்திசாலையில்!!

accident

கிருல – ஹங்காமா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத் பெண்ணுடன் கைகுலுக்கிய இலங்கைப் பிரஜை கைது!!

hand

குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று Arab Times இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை பிரஜையை அந்நாட்டு பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தான் அந்தப் பெண்ணை மதிப்பிற்காக கைகுலுக்கினேன் என்றும், வேறு நோக்கங்கள் இல்லை என்றும் குறித்த இலங்கை பிரஜை விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை தடுத்து வைத்து அந்த நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இருந்து எழுக தமிழ் பேரணிக்கு இலவச போக்குவரத்து வசதி!!

14462961_1048641431901832_6345667140503592498_n

தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கு அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் கலந்து கொள்ளும் முகமாக இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வரலாற்று கடமையை நிறைவேற்ற வரவிரும்பும் தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் நாளை காலை 6 மணிக்கு சிந்தாமணிபிள்ளையார் கோவில் முன்பாக கூடுமாறும், அங்கு வர முடியாதவர்கள் ஏ9 வீதியில் நின்று எழுக தமிழ் அடையாளத்துடன் வரும் பேரூந்துகளை மறித்து ஏறி நீங்களும் பங்கு பற்ற முடியும்.

வர்த்தக பெருமக்கள், தனியார் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என்பன நாளை விடுமுறை விடுத்து இந்த பேரணியில் குழு குழுவாகவும், தனித் தனியாகவும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக் கோரிழைய முரசறைய ஒன்று கூடுமாறு அழைக்கின்றோம்..

ஏற்பாட்டுக்குழு

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகிலிருந்த பயன்தரு பனைவடலிகள் தீயினால் சேதம்!!

வவுனியா நொச்சிமோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பாலத்துக்கு அண்மையில் A9 வீதிக்கு அருகில் காணப்படும் பயன்தரும் பனை வடலிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

வவுனியாவில் மிகவும் பிரபலமான வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு (OUTDOOR SHOOTING) பெயர்போன இடங்களில் முதன்மையாக விளங்கும் இந்த நோச்சிமொட்டை பாலத்துக்கு அண்மையில் காணப்பட்ட பனை வடலிகள் தான் புதர்கள்பற்றைகளுக்கு தீவைக்கும் நபர்களின் பொறுப்பற்ற செயல்களால் தீயில் கருகியுள்ளன.

தமிழர் வாழ்வோடு ஒன்றிப்பிணைந்துள்ள இந்த பனைமரங்களது பயன்களை அறியாத ஒரு சில மனிதர்கள் செய்கின்ற செயல்களால் பல்லாண்டுகாலம் பயன் தரக்கூடிய பனைமரங்கள் அழிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும் .

சம்பந்தப்பட்ட தரப்புக்களான பனை தெங்கு அபிவிருத்திச்சபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிரதேச செயலகம் வவுனியா , மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகள், பசுமை இயக்கம் என்பன ஒன்றிணைந்து பனை வளம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி வவுனியாவின் பனை வளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.

வயல் நிலங்கள், புல்வெளிகள் என்பவற்றின் மீது தீ வைக்கின்ற காணி அல்லது வயல் நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதுமான சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை விவசாய அல்லது கமக்கார அமைப்புக்களின் ஊடாக வழங்குமாறும் கேட்டுகொள்கின்றோம்.

இயற்கை வளத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

-பண்டிதர்-

1 14429152_1312147675471849_489546795_n 14429216_1312147758805174_591686132_n 14429583_1312147668805183_1817921555_n 14454714_1312147658805184_1824801928_n 14469296_1312147715471845_950264402_n capture

untitled-1 untitled-2 untitled-3 untitled-4 untitled-5 untitled-6

நீங்கள் பிறந்த கிழமையும் அதற்கான குணங்களும்!!

birth

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமைகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும் படியான அமைதியான மனம் படைந்தவர்களாக இருப்பர். அனைவரிடமும் அன்புடனும், உதவும் உள்ளத்துடனும் பழகுவார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு சொந்த தொழில் நல்ல கைக்கொடுக்கும். இவர்கள் வெற்றி பெறுவதற்காக அரும்பாடுபடுவார்கள்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். தான் சொல்வது தான் சரி என்னும் மனப்போக்கை கொண்டவர்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்களை பலருக்கு பிடிக்காது. இருப்பினும் இவர்களுக்கு மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எதிலும் நியாய தர்மத்துடன் நடந்து கொள்வார்கள்.

புதன் கிழமை

புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பர். பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாகவும் விளங்குவர். இவரிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். எந்நேரமும் ரிலாக்ஸாக இருப்பார்கள்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். நியாயம், தர்மத்துடன் நடப்பார்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவி புரிவார்கள். எந்த துறையிலும் வெற்றி காண்பார்கள்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல்மிக்கவர்களாக இருப்பர். தன் பேச்சாலேயே பலரை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். எந்த ஒரு வேலையையும் மற்றவர்களின் உதவியின்றி எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பர்.

சனிக்கிழமை

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள் மற்றும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பவர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாகவும் இருப்பர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

வவுனியா மாவட்டபிரஜைகள் குழு எழுக தமிழ் நிகழ்விற்கு வருமாறு அழைப்பு!!

eluka-tamil

தியாகி திலீபனின் வீரமரணம் அடைந்த இந்நாளில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் மக்களே எழுந்து வாருங்கள், எங்கள் தேசத்தை நாமே ஆள்வோம் என்ற தொணியில் வரும் 24.09.2016 காலை 9.00 மணிக்கு முத்தவெளி மைதானத்தில் ; நடைபெறவுள்ள ‘எழுக தமிழ் நிகழ்வில்’ அணி அணியாக திரண்டு வருமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

தாயகத்தின் சகலமாவட்டங்களிலிருந்தும் அரசஅரசார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர், மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப்பலரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை, எமது தாயக பிரதேசங்களை நாமே ஆளுவதற்கான உரிமையை வென்றெடுத்தல், பாதுகாப்பு படையினர் எமது மக்கள் வாழ்ந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டும் போன்ற விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு உரத்து சொல்வதற்கும் தமிழ்மக்களே ஒன்றாக திரண்டு வருமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சார்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும் தமிழர் தாயகத்தின் கையளிக்கப்ட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் இணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியா் விளக்கமறியலில்!!

abuse

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் 15வயது மாணவியை டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தின் 32 வயது ஆசிரியா் ஒருவா் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த ஆசிரியா் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யபட்ட சம்பவம் ஒன்று கடந்தவாரம் பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியா் மாணவியை மேலதிக வகுப்புக்கு வருமாறு அழைத்து விடுதியில் வைத்து அந்த மாணவியை ஆசிரியா் சில்மிசம் செய்தார் என சிறுமியின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனா்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரனைகளை ஆரம்பித்த நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் பெயரின் குறித்த ஆசிரியா் கைது செய்யப்பட்டு அட்டன் நீதவான் முன்னிலையில் அஐா்படுத்தபட்டபோதே விளக்கமறியில் குறித்த ஆசிரியரை வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த ஆசிரியருக்கு கடந்த 19 ஆம் திகதி சரீரபிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

earthquake

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. எனினும், கடலில் அலைகளின் எழுச்சி மிக வேகமாக இருக்கும். இதனால், ஜப்பானுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி : வளர்ப்புத் தாய் கைது!!(காணொளி)

attack

யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சிறுமி ஒருவரை மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காணொளி வெளியாகிய சில மணி நேரத்தில் சிறுமியை தாக்கியதாக கூறப்படும், சிறுமியின் வளர்ப்புத் தாயை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால், தந்தைய வேறு திருமணம் முடித்த நிலையில், அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மூர்க்க தனமாக தாக்கியுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அச்சுறுத்திய வைரஸ் : உண்மைத் தகவல் வெளியானது!!

virus

இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.

இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3 N2 என்ற வைரஸ் தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் வைரஸ் நிபுணர் ஜூட் ஜயமஹா இந்த தகவலை உறுதிசெய்துள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தீவிரமானதல்ல. எனினும் நோய் தடுப்புகள் குறைவான சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயோதிபர்களுக்கு தொற்றும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிக்கலுக்கு மத்தியில் கல்லீரல் மற்றும் நுரையீரல்களில் பல்வேறு தொற்று நிலைமைகள் ஏற்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று இலங்கையில் தொடர்ந்து காணப்படுகின்றமையினால் இது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உடலுக்கு நன்மைதருவது சைவ உணவுகளான? அசைவ உணவுகளா?

veg-vs-nonveg

சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. அதே சமயம் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவமா என்று கருத்துதொற்றுமை இல்லை.

உடல் நலத்திற்கு எது நல்லது?

நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை.

உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. இந்த காய்கறிகள் மட்டுமல்ல இன்னும் பல காய்கறிகளில் கணக்கிலடங்கா சத்துகள் அடங்கியுள்ளன.

புற்றுநோயை விரட்டும்

சைவ உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருட்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெங்காயம், பூண்டு, மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சக்கரை நோயை விரட்டும்

கண்டுகொள்ளாமல் விடப்படும் பாகற்காயில் கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு,புரதம், ஆகியவை அதிகமாக இல்லாவிட்டாலும் நோயை எதிர்க்கும் திறன் உள்ள சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.

இவற்றில் இருக்கும் முக்கிய சத்துக்கள் உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கின்றன.

கர்ப்பிணியை காப்பாற்றும்

இதை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என அம்மா ஊட்டி விடும் வெண்டைக்காயில், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம், மாவுசத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து என அவள் கூறியதை விட அதிகமான சத்துகள் உள்ளது.

உடலின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. கர்ப்பிணி பெண்கள் தினமும் சாப்பிடலாம்.

கல்லீரல் காக்கும் சைவம்

கல்லீரலை ஹெபடைடிஸ் என்ற வைரஸ் எளிதாக தாக்கிவிடும். இதில் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் பரவாக உள்ளன. இவை கல்லீரலை மாற்றம் செய்யும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கு சைவம் மட்டுமே தீர்வு. திராட்சை, கேரட், எலுமிட்சை, சீரகம், பூண்டு ஆகியவற்றில் கல்லீரல் பிரச்சனைக்கு தக்க தீர்வு உள்ளது.

எலும்புகளை வலுவாக்குபவை

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.

அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது.

அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

அசைவத்தில் என்ன இருக்கின்றது?

மேற்கூறிய பிரச்சனைகளுக்கு காரணம் அசைவம் என்றே கூறலாம். உதாரணமாக கோழி இறைச்சியை எடுத்து கொள்வோம்.

கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர்.

டெட்ராசைக்ளின்(Tetracyclin), ஃப்ளுரோகு வினோலோன்(Fluroquinolone), அமினோகிளைகோஸைடு(Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன.

கோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மற்ற அசைவங்களாக கருதப்படும்,மீன் மற்ற இறைச்சிகளில் புரதம் இருக்கும் அளவு நார்சத்துகள் இருப்பதில்லை. சிறுநீரக பாதிப்பு, எலும்பில் கால்சிய பிரச்சனை, ஜீரண சக்தி குறைபாடு இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

விமானத்தின் ஜன்னல் எதற்காக வட்டமாக இருக்கிறது என்று தெரியுமா?

flight

விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.

விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் அனைத்து இடங்களுக்கும் பரவாமல், ஜன்னல்களின் மூலைகளில் தாக்கி கண்ணாடியை உடையச் செய்து பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கிவிடக்கூடும்.

மல்டி புரோசஸ் வசதியுடன் அறிமுகமாகும் Mozilla Firefox!!

firefox

உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே.

அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or Freeze) ஆகின்றமையாகும். இதற்கு மல்டி புரோசஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக் குறைபாடு உட்பட மேலும் சில குறைபாடுகளை நீக்கியதாக புதிய Mozilla Firefox உலாவி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலாக அன்ரோயிட் சாதனங்களில் Offline Mode இலும் இணையப் பக்கங்களை பார்வையிடும் வசதியை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பின் ஆரம்பக்கட்ட பரிசோதனையில் 400 சதவீத முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் உலாவியானது பயனர்களின் பயன்பாட்டிற்காக 2017ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாதி படுகொலை குற்றவாளிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் : தமிழச்சி பரபரப்புத் தகவல்!!

tamilaci

சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வௌயிட்டுள்ள தகவல்:

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான ‘மணி’ என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதேப்போல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.

இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

2-வதாக கொல்ல முயற்சிக்க கூடியவர்களில் ராம்குமார் குடும்பத்தில் உள்ள ராம்குமார் அப்பா அம்மா இரு தங்கைகளில் யாராவது ஒருவ ர் பலியாக்கப்படலாம். எனவே அவ ர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லக் கூடாது. ராம்குமார் குடும்பத்தினருக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பது சொந்த செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்றது.

எனவே இயக்கங்கள் ராம்குமார் குடும்பத்திரை பாதுகாக்க பொறுப்பு ஏற்க வேண்டும். திலீபன் போன்ற ஒரு இளைஞன் தான் அந்த குடும்பத்தினரை தற்போது பாதுகாக்க முடியும். ஆனால் திலீபன் உயிருக்கும் ஆபத்து. அது உடனடியாக நடக்காது. சில மாதங்கள் ஆகலாம்.

சுவாதி படுகொலை விவாதம் இப்போது ராம்குமார் படுகொலை விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. ராம்குமார் படுகொலையில் மர்மம் இருப்பதால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிணஆய்வு நடைப்பெறக் கூடாது என்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னமும் ராம்குமாரின் பெற்றோர் தன் மகனின் உடலைக்கூட பார்க்க முடியாத ஜனநாயக நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்று பொது விமர்சனத்தை திசை மாற்ற மணி படுகொலை உதவக்கூடும்.

நம் நோக்கம் இதுவல்ல; சுவாதியை கொன்றது யார்? ராம்குமாரை கொன்றது யார்? மணியை கொன்றது யார்? இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள்? இதற்கு அடிப்படியான அரசியல் என்ன? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.

திலீப்பனைப் போல் ரோசியைப் போல் நீங்கள் இல்லாவிட்டாலும் ராம்குமார் குடும்பத்தினரைக் காப்பாற்ற சகமனிதனுக்காக உங்கள் கண்டனக் குரல்களையாவது வெளிப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.