தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year – 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு இன்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு,
Sports – Mathew Abeysinghe
Global Entertainer – Jacqueline Fernandez
Entrepreneur – W.K.H. Wegapitiya
Classical Entertainer – Dr. Arunthathy Sri Ranganathan
Entertainer / Popular Category- Bathiya and Santhush
சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக வெளிவந்த செய்தியை அடுத்து, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.
சுவாதி மற்றும் ராம்குமார் பற்றிய செய்திகள் பலவிதமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, சுவாதியும் ராம்குமாரும் இறந்த பிறகு பேசிக்கொள்வது போல், ஒரு உரையாடல் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மரணமடைந்துள்ள இருவரும் அப்படி என்னதான் பேசி இருப்பார்கள் என்பதை பார்ப்போம்,
சுவாதி: ராம்குமார் என்னாச்சு நீ நேற்று தற்கொலை செய்து கொண்டாயா?
ராம்குமார்: நீதான் ஸ்வாதியா? உன்னை இப்பதான் பார்க்கின்றேன். உன்னை கொலை பன்னதா தான், என்ன கைது பன்னி இப்ப கொலையும் பன்னிடாங்க.
சுவாதி: ஸாரி ராம், இனிமேலாவது என்னை கொலை பன்னவனை புடிப்பாங்களா?
ராம்குமார்: சத்தியமா உன்னை கொன்னவனையும் என்ன கொன்னவனையும் பிடிக்கவே மாட்டாங்க.
சுவாதி: அப்ப நமக்கு நியாயமே கிடைக்காதா? நமக்காக யாரும் நியாயம் கேட்டு போராட மாட்டாங்களா?
ராம்குமார்: நமக்காக நியாயம் கேட்டு யார் வந்தாலும், இங்க நம்ம இடத்துக்கு அனுப்பி வச்சுருவாங்க. வேனும்னா பாரு இன்னும் இரண்டு நாள்ல தீலிபன் மகேந்திரனையும் தமிழச்சியையும் இங்க அனுப்பி வைப்பாங்க.
சுவாதி: என் கொலைக்கு உன்னை ஏன் ராம் யுஸ் பன்னாங்க?
ராம்குமார்: அதான் எனக்கே புரியலை.
சுவாதி: நீ இறந்த அப்ப, உங்க அப்பா அழுததை பார்த்து கஷ்டமா இருந்துச்சு. அப்பதான் ஒன்னு புரிஞ்சுச்சு. பெத்த அப்பனுக்கும், மத்த அப்பனுக்கும் உள்ள வித்தியாசம்.
ராம்குமார்: ஆமா உன்னை வாயில வெட்டுனாங்க, என்னை கரண்ட்ட வாயில கடிச்சு செத்தேன்னு பொய் சொல்றாங்க. இதுக்கு முன்னாடி என் கழுத்தை அறுத்து வாய் பேச விடாம ஆக்குனாங்க. ஏன் இவுங்க வாய் மேலயே குறியா இருந்தாங்க?
சுவாதி: மரண நேரத்துல கூட வாய தொறந்து பேச கூடாதுன்னு தான் ராம்.
ராம்குமார்: இன்னும் சிலர் சாவாங்கன்னு தெரியுது. எத்தனை பேரை கொன்றாவது உன்னை கொன்னவனை காப்பாத்த முடிவு பன்னிட்டாங்க ஸ்வாதி.
சுவாதி: ராம், நீ நிஜமா தற்கொலைதான் பன்னுனியா?
ராம்குமார்: நான் ஏன் தற்கொலை பன்னனும், என்னை பிடிக்கும் போதே சொன்னாங்க, 2 மாசத்துல விட்டுருவோம் அதுவரை அமைதியா இருன்னு , எனக்கு ஜாமின் கிடைச்சி வெளியே போக போறேன் தெரியும், பின்ன ஏன் நான் சாகனும், 12 அடி மேல இருக்க வயரை புடிச்சு கடிக்க, உள்ள என்ன ஏணியா இருக்கு? அப்பிடினா என் தற்கொலையை தடுக்க முடியாத காவலர்களை என்ன வேலைய விட்டு தூக்கிட்டாங்களா?
வாழைச்சேனை பிரதேசத்தின் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவர் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளமை தொடர்பாக ஊடக சந்திப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பிரதேச செயலாளர் வா.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ் இயந்திரமானது மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி மனிதவலு மூலம் இயங்கி 150 லீற்றர் நீர்த்தாங்கிக்கு ஏற்றி அதன் பின்பு தானாக இயங்கும்.
அதாவது பாவனையாளர் அதனை பாவிக்கும் போது சமையலறை, குளியலறை அல்லது வேறு இடமோ பாவிக்கும் போது நீர் இறைக்கும் இயந்திரம் தானாகவே சுழன்று நீரை தாங்கிக்கு ஏற்றும்.
இந்த நீர் இறைக்கும் இயந்திரம் வீட்டுப் பாவனைக்கு மட்டுமின்றி விவசாயத்திற்கும் தோட்ட செய்கைக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த நீர் இறைக்கும் இயந்திரம் முதலில் மனிதவலு மூலம் இயங்கியது.
அதாவது 2004.11.25ம் திகதி வடக்கு கிழக்கு கைத்தொழில் திணைக்களத்தினால் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் நடாத்தப்பட்ட கைத்தொழில் கண்காட்சியில் மாகாண மட்டத்தில் முதலாது பரிசும், சான்றிதழும் கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜிக்கு வழங்கப்பட்டது.
கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் வடக்கு கிழக்கு கைத்தொழில் துறை பணிப்பாளரால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ் நீர் இறைக்கும் இயந்திரம் தற்போது 100க்கும் 95 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 5 வீதம் பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட 5 வீத தொழில் நுட்பமானது இவ் நீர் இறைக்கும் இயந்திரத்தை பெற்றுக் கொள்ளும் நிறுவனத்திடம் கூறப்படும் என கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி ஜெயராஜ் தெரிவித்தார்.
இதன் பிற்பாடு தனது சொந்த பாவனைக்காக பாவித்துக் கொண்டிருந்த வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்தேன்.
இதன் காரணமாக இயந்திரத்தின் சில பாகங்கள் சேதமடைந்து காணப்பட்டிருந்தது. பின்னர் இந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை தயாரிக்க தனது சில நண்பர்களின் உதவி மூலம் மீண்டும் இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.
இவ் இயந்திரமானது 50 அடி ஆழத்தில் இருந்து 50 அடி உயரத்திற்கு நீரை உறிஞ்சி நீர் தாங்கிக்கு ஏற்றும் திறன் மிக்கது.
அத்தோடு நீர் இறைக்கும் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பட்சத்தில் குறித்த இயந்திரத்தை கச்சிதமாகவும் அளவில் சிறியதாகவும் குதிரை வலுவினையும் அதிகரித்து கொள்ள முடியும் என்றார்.
இவ்வாறு பல கண்டு பிடிப்புக்கள் என்னிடம் உள்ளதாகவும், மேலும் தன்னிடம் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதற்கு போதிய நிதி வசதியின்மை காணப்படுகின்றது.
எனவே உதவும் உள்ளம் கொண்டவர்கள் தனக்கு உதவிகளை வழங்கி எனது கண்டுபிடிப்புக்களை மென்மேலும் வளர்க்க உதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.
இத்திட்டம் மற்றும் இவருடம் தொடர்பு கொள்வதாயின் 0773426800 அல்லது 0758863497 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
அட என்னடா இப்படியான கேள்வியை கேட்கிறான் என்று பதிவை பார்க்காமல் போய்விடாதீர்கள் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.
இவ்வாறான செயல்கள் மனிதனால் முடியாவிட்டாலும் தான் மனிதன் என்ற மனநிலையில் இல்லாத அரக்கர்கள் செய்யும் வேலையாக கூட கூறமுடியும்.
இவ்வாறான விலங்குகளை தன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) என்ற விஞ்ஞான பெயரால் அழைக்கலாம்.
அதாவது ஒர் இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இனத்தை சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு உயிர் வாழ்பவைகள் என கூறலாம்.
இதற்கான எளிய ஊதாரணமாக நாம் சில பாம்பு வகைகளை கூறலாம் சில பாம்புகள் தன் இனத்தை தானே சாப்பிடும்.
ஆதிகால மனிதர்கள் இதுபோல் மனிதர்களை வேட்டையாடி உண்ட வழக்கம் இருந்தது. இவர்களை இரண்டாக வகைபடுத்தலாம்.
தன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோ கானிபாலிசம்)
வெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)
மேலும் உணவுக்காக ஒர் உயிருள்ள மனிதனை கொள்பவர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)என்றும், உணவுக்காக முன்பே இறந்த மனிதனை உண்ணும் உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)என்றும் கூறுவார்கள்.
இவ்வாறான நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது,
1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப்படம் (Documentary) தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவ்வாறான நரமாமிச விரும்பிகள் பற்றி அறிவதற்காக சென்றார்கள்.
ஆனால் இவர்கள் அனைவருமே அந்த ஆதிவாசிகளால் வேட்டையாடப்பட்டு உணவாக உட்கொள்ளப்பட்டார்கள்.
அமேசன் காடுகளில் உள்ள “யக்குமோ” கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம் இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட்கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.
அதன் பின் கைப்பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப்படம் திரையிட அனுமதியேதுமின்றி தடைசெய்யப்பட்டிருந்தது.
இருந்தும் இது பற்றி புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் இருக்கின்றதா? என தேடுதல் வேட்டை நடத்தினால் “சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனை இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக” பெரியபுராணம் கூறுகின்றது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இந்தியர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய நாட்டில் உள்ள Devon நகரை சேர்ந்தவர் Scarlett Keeling(15). இவர் கடந்த 2008ம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில் 2008ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி அதிகாலை நேரத்தில் Anjuna கடற்கரையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த Samson D’Souza (36), Placido Carvalho (47) ஆகிய இருவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2010ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியான போது, போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இருவரும் நிரபராதிகள் எனக் கூறி நீதிபதிகள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.
இவ்வழக்கு தீர்ப்பு சிறுமியின் தாயாரை வெகுவாக பாதித்துள்ளது.
தீர்ப்பு குறித்து அவர் பேசியபோது, ‘இந்திய நீதிதுறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யாகி விட்டது.
என் மகள் இந்த நாட்டில் தான் கற்பழித்து கொல்லப்பட்டாள். இதற்கு நீதி கிடைக்காமல் ஓயமாட்டேன். இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக’ தாயார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த M. சந்திரக்குமாரின் புகழ் பெற்ற நாவலான “லாக் அப்” நாவலை தழுவி வெளியான இந்த படம் 72 ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மேலும் 63 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் கிட்டத்தட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதையும் இப்படம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையத்தின் செயல்பாடுகளை காட்சிப்படுத்தியிருந்த இந்த திரைப்படம் தற்போது ஒஸ்கார் விருதிற்கு வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய திரைப்பட கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி மராட்டிய மொழிப் படமான சாய்ரட், ஹிந்தி மொழிப் படங்களாக நீர்ஜா, உத்தா பஞ்சாப், நில் பட்டி சன்னாட்டா மற்றும் கன்னட மொழிப் படமான திதி ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர் நேர்த்தியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்லும் வகையில் புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாடசாலைகளுக்கு செல்லும் தாய்மார்கள் பொருத்தமான மற்றும் நாகரீகமான அடைகளை அணிந்து செல்வதற்கு புதிய சுற்றுநிருபம் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிக்கடுவை திரானாகம பிரதேச வீடொன்றுக்குள் நுழைந்து நாய் ஒன்றினை விழுங்குவதற்காக வந்த பெரிய மலைப்பாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துளள்னர்.
சம்பவ தினம் இரவு வீட்டுக்கு வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு குறித்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்த்த போது வீட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுக்கு அருகில் பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதனை கண்டு கூச்சலிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பில் ஹிக்கடுவை வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்ததனையடுத்து அவர்கள் குறித்த மலைப்பாம்பினை எடுத்துச் சென்று காலி, கொட்டவ வனப்பகுதியில் விடுவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வீடொன்றில் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்கத் தனமாக தாக்கும் காணொளி பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் , கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைது கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் குறித்த தாயாரை பொலிஸார் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் க. அருமைநாயகம் உத்தரவிட்டார்.
ஏனைய 3 பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் தந்தை தொடர்பான நடவடிக்கை, தொழில் ஆகியவற்றை ஆராய்ந்து விசாரணை செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26).
இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா 4 அடி 2 அங்குலமும் கொண்ட குள்ள மனிதர்கள் என்பது தான்.
இவர்கள் குழந்தை பெற்ற பின்னர் தான் திருமணமே செய்துள்ளனர். இதை பற்றி லாரா வொயிட் கூறுகையில், நான் ஹாரி பாட்டர் போன்ற பிரபல படங்களில் நடித்துள்ளேன்.
ஸ்னோ வொயிட் என்னும் படத்தில் நான் நடிக்கும் போது என்னுடன் சேர்ந்து நாதனும் நடித்தார், அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.
திருமணம் செய்யும் முன்பே நான் கருவுற்றேன். உறவினர்களும், மருத்துவர்களும் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாக பிறக்காது என்று என் கருவை கலைக்க சொன்னார்கள்.
நான் மறுத்து விட்டேன். பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன் என கூறியுள்ளார். இந்நிலையில் பிறந்த குழந்தை ஊனத்துடனே அவர்களுக்கு பிறந்துள்ளது.
மருத்துவர்கள் அந்த குழந்தை சில வாரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என கூற அந்த குள்ள தம்பதிகள் இருக்கும் வரை அதை நன்றாக பார்த்து கொள்வோம் என கூறினார்கள்.
ஆனால் ஆச்சரியமாக குழந்தைக்கு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது இரண்டரை வயது ஆகும் அந்த குழந்தை நன்றாகவே இருக்கிறது.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நாதனும், லாரவும் தங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் 50 பேர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்துக்காக மாற்றிய மோதிரத்தை அவர்கள் இரண்டரை வயது மகன் தன் கையால் எடுத்து கொடுத்தது சிறப்பான விடயமாக அமைந்தது.
இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு 7 இலட்சத்து பதினைந்தாயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் இம்முறையே அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றும் நாடு என்ற கௌரவம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, பரீட்சையானது புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறவுள்ளதாகவும்,பழைய பாடத்திட்டத்தின் படி 3,34,781 மாணவர்களும்,புதஜய பாடத்திட்டத்தின் படி 381,184 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் பலத்த வெடிசத்தம், புகை மூட்டம் ஏற்பட்டதால் விமானிகள் அனைவரும் பதற்றப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று கியூன்ஸ்லெண்ட் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது.
அப்போது விமானத்தின் இன்ஜின் பிரச்சனை காரணமாக விமான ஓட்டுநர் உடனடியாக பிரிஸ்பேனுக்கு விமானத்தை செலுத்தியுள்ளார்.
பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பயணிகளின் சீட்டிற்கு அடியில் பயங்கர வெடிசத்தத்துடன் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விமான பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர், இச்சம்பவத்தை அவ்விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் உரி ராணுவ முகாமில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவவீரர்கள் பலியானார்கள்.
அதில் வீரர் சுனில் குமார் வித்யார்த்தியும் ஒருவர், அப்படி தன் தந்தை இறந்த செய்திகேட்டு இதயம் உடைந்த நிலையிலும் அவருடைய மகள்கள் பள்ளியில் அன்றைய தேர்வை வந்து எழுதினார்கள்.
அது அவர்கள் குடும்ப தைரியமாக பாராட்டப்பட்டாலும் பார்த்தவர்களும் கேட்டவர்களும் அதை தாங்கும் தைரியமில்லாமல் உருகினர்.
உருக்கமான தேர்வு
சுனில் குமார் வித்யார்த்திக்கு இரண்டு வயது மகன் உட்பட ஆர்த்தி, அன்ஷூ, ஆன்ஷிகா என மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மூன்று மகள்களும் கயாவில் உள்ள டிஏவி பள்ளியில் படிக்கின்றனர்.
சம்பவத்தன்று ராணுவப்பணியில் இருந்த தங்கள் தந்தை இறந்ததாக அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதற்கு வருந்தினார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, அது எல்லோருக்கும் உள்ள இயல்புதான்.
ஆனால், அதன் பிறகும் அன்று பள்ளியில் பரீட்சை நாளாக இருந்ததால் அதை ஒதுக்க மனமில்லாமல் தைரியத்தோடு வந்து மூன்று மாணவிகளுமே வீட்டின் அனுமதியோடு தேர்வு எழுதினார்கள்.
நிகழ்காலத்தில் நேரும் எந்த துன்பத்தையும் தாங்கிக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மனோதிடத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
பள்ளியில் இந்த மூன்று பேருக்கும் மற்ற மாணவர்களோடு அல்லாமல் தனிப்பட்ட முறையில் தேர்வு நடத்தப்பட்டது. இது பள்ளியும் தேசபக்திக்கு தலைவணங்கிய செயல்.
மகளின் மனநிலை
சுனில் குமாரின் மூத்த மகள் அப்போது இந்து நாளிதழுக்கு கூறியது, என் தந்தையை நினைத்து பெருமையடைகிறேன். அவருடைய மரணம் வெறும் இறப்பு அல்ல ஒரு உயிர்த்தியாகம். பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் திடீர் திடீரென வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்கின்றனர். இந்தியாவும் அதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் அப்போதுதான் பாகிஸ்தானின் பயங்கரவாத போக்கை சீர்படுத்த முடியும் ஆதங்கத்தோடு கூறினார்.
ஆனாலும், பயங்கரவாதிகள் தாங்கள் அழிவதற்கும் தயாராக இருந்துகொண்டு, அமைதியாக வாழ்பவர்களின் நிம்மதியை கெடுப்பதுதானே அவர்களின் கொள்கையை செயலாக்கும் வழியாக நினைக்கின்றனர்.
சுனில்குமாரின் வாக்குறுதிகள்
சுனில் குமார் தன் மனைவி கிரண் தேவியுடன் கயாவில் வசித்து வந்தார். அவர் 1998 ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
அவர் இந்த ஆண்டின் தசரா பண்டிகைக்கு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். இறப்பதற்கு முதல் நாள் சனிக்கிழமை குடும்பத்தினரோடு போனில் பேசியுள்ளார்.
மேலும், விடுமுறை காலத்தில் வீட்டுக்கு வரும்போது, மூதாதையர் வீட்டை பழுது பார்ப்பதாக அவருடைய தந்தை மதுரா யாதவிடம் வாக்குறுதியும் அளித்திருந்தார்.
மோடியின் பதிலடி சூசகம்
சுனில்குமார் பணியாற்றிய ராணுவ பிரிவான 12 வது அணித்தலைமையகம் உரியில் அமைந்துள்ளது. இது ஸ்ரீநகரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கடந்த ஞாயிறன்று, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர், 32 பேருக்கு மேல் படுகாயமடைந்தார்கள். தீவிரவாதிகளில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இது அதிக உயிர்ச்சேதத்தை கொடுத்த ஒரு பெரிய பாதிப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராணுவ முகாமுக்கு உரிய வீட்டுவசதி பகுதிக்குள் நுழைந்த ஜிகாதி தீவிரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் மூலோபாய திட்டத்தோடு செயல்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
அவர்கள் துப்பாக்கியால் சுட்டது மட்டுமல்லாமல், கையெறி குண்டுகளாலும், டீசல் குண்டுகளாலும் முகாமையே தீக்கிரையாக்கினர். தீப்பிடித்த கூடாரங்களின் உள்பக்கத்தில் இருந்த 13 பேர் இறந்ததுதான் பலியை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது.
இந்த தாக்குதல் தண்டிக்கப்படாமல் விடப்படாது என்று பிரதமர் மோடி தனது எண்ணத்தை சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீர்வில்லாத தீவிரவாதம்
தன் நாட்டுக்காக போரில் காயம்பட்டு ஊனமடைந்த வீரனை, இனி பயனில்லை என அந்த ராணுவமே ஒதுக்குகிறது.
தியாக மரணமானாலும் கணவனை இழந்த மனைவியையும் தந்தையை இழந்த பிள்ளைகளையும் இந்த உலகம் உதாசினப்படுத்தவே செய்யும்.
ராணுவ மரியாதையோடு உடலை நல்லடக்கம் செய்வதாலும், வீரம், தேசபக்தி, தியாகம் என்று வந்தவர்கள் ஒருநாள் புகழ்வதாலும் அது அந்த குடும்பத்தினரை இறுதிவரை அரவணைக்காது.
தாக்குதல் வீரம், வென்றாலும் வீழ்ந்தாலும் எதோ ஒரு பக்கத்தில் அழிவுதான்.
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாகூ நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 20 கோடி பேரின் தகவல்களை விற்க PEACE என்ற பெயருடைய ஹேக்கர் முன்வந்தபோது தான் இத்திருட்டு குறித்து முதல் முறையாக செய்தி வெளியாகியுள்ளது.
கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 முதல் கடவுச் சொற்களை மாற்றாத நபர்கள் உடனடியாக அவற்றை மாற்றும் படி யாகூ நிறுவனம் அதன் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஜூலையில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யாகூ நிறுவனத்தை அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான வெரிசான் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் திருட்டு தொடர்பான விசாரணைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அனைத்து தகவல்களும் பெறப்பட்டபின் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் வெரிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.
தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.
இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 1,50,000 பேர் இந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.