வெப் கமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி?

web-cam

நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றே சிசிடிவி கமெரா. இதன்மூலம் என்ன நடந்தது என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நமது வீ்ட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்க்க முடியும்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் கணனி வெப்கமெராவை சிசிடிவி கமெராவாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.

யாகேம் (Yawcam) எனும் செயலியை பயன்படுத்தி கணனியுடன் இணைக்கப்பட்ட எவ்வித கமெராவையும் நேரலை வீடியோக்களை பார்க்க முடியும்.

முதலில் குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவ வேண்டும்.

பின்னர் செட்டிங்ஸ் ஐ ஓபன் செய்து, நீங்கள் பயன்படுத்த இருக்கும் கமெராவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

Integrated Camera ஒப்ஷன் தெரிவாகி இருந்தால் உங்களது கமராவை தெரிவு செய்து கொள்ளலாம். இதன்பின்னர் Preview Window-வை பார்க்கலாம்.

ரஜினியுடன் டோனி திடீர் சந்திப்பு : ரஜினி போன்று நடித்த டோனி!!(காணொளி)

d1

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி பட விளம்பர விழாவில் படையப்பா பட திரைப்பட வசனத்தை தமிழில் பேசி ரஜினி ரசிகர்களை டோனி மகிழ்வித்திருந்தார்.

இந்திரைப்பட விழா நிகழ்வில் நடிகர் சூர்யாவின் இரு பிள்ளைகளையும் சந்தித்து நகைச்சுவையாக பேசிய டோனி, நான் உங்கள் அப்பாவின் தீவிர ரசிகன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு “எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” என்கிற திரைப்படம் தாயராகியுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்பபடத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை சத்தியம் தியேட்டரில் நடைபெற்றது. இந்தி படமான இதில் டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி, தாம் ரஜினியின் தீவிர ரசிகர் என்றுதெரிவித்து, படையப்பா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசிக் காண்பித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களை டோனி கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுசின் வீட்டில் ரஜினிகாந்த்தை டோனி சந்தித்தார்.

45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது சினிமா, ஆன்மீகம், விளையாட்டு என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் சுவாரஷ்யமாகப் பேசிய மகிழ்ந்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது ரஜினி குடும்பத்தினருடன் உணவருந்தியமை குறிப்பிடத்தக்கது.

d2 d3 d4 d7

நீர்வேலியில் சிறுமி மீதான சித்திரவதை : பாதுகாக்க உதவிய சமூக வலைத்தளங்கள்!!

attak

நீர்வேலியில் சித்தியினால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 வயது சிறுமியை தொடர்ச்சியான சித்திரவதையில் இருந்து பாதுகாப்பதற்கு, சமூகவலைத்தளத் தகவலும், அதனைத் தொடர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்தின் துரிதநடவடிக்கையும் உதவியிருக்கின்றன.

இந்தச் சிறுமி தாக்கப்படுகின்ற காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில்தீயாகப் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்தக் காணொளி வெளியாகிய சில நிமிடங்களில் அது பற்றிய தகவலும் அந்தக்காணொளியும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட நீதிபதி இளஞ்செழியன், அந்தச்சிறுமியைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறுபொலிசார் உட்பட உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

மனிதாபிமானமற்ற ஒரு பெண்ணின் செயற்பாட்டினால், சித்திரவதைக்கு உள்ளாகியசிறுமியின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

அத்துடன்இந்தச் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமேயானால், அது அந்தச் சிறுமி மேலும்மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதை நீதிபதி இளஞ்செழியன் சம்பந்தப்பட்டஅதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

எனவே, பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்குமிடம் உடனடியாகக்கண்டுபிடிக்கப்பட்டு, அவரைப் பாதுகாக்க வேண்டும்.

அதேவேளை. அவரை அந்தநிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நீதிபதிஅறிவுறுத்தியிருந்தார்.

பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி பிரதேசம் என்றதகவலைத் தவிர ஏனைய துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நீர்வேலிகிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் உடனடியாக, தீவிர தேடுதல் நடத்தி காணொளியில்காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களைக் கொண்டுஅவர்களுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பொலிசாரும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் நலன்களுக்குப்பொறுப்பான துறை சார்ந்த அதிகாரிகள் மிகத் துரிதமாகச் செயற்பட்டு,பாதிக்கப்பட்ட சிறுமியைக் கண்டுபிடித்து, அவரைப் பாதுகாத்ததுடன் அவர் மீதுகொடுமை புரிந்த பெண்ணும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும், நீதிமன்றத்தின் துரிதச்செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கவும், சிறுவர்களுக்குஎதிரான சித்திரவதை என்னும் சமூகக் குற்றம் ஒன்றைத் தடுப்பதற்கும் உதவியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முன்னணி நிர்வாகி படுகொலை : இறுதி ஊர்வலத்தில் கலவரம் : 108 பேர் கைது!!

k

கோவையில் வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 108 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு நடந்தது. சசிகுமார் உடல் பிரேத பரிசோனை நடந்த கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திடீரென கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையின் உச்சகட்டமாக துடியலூரில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 3 கடைகள் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குலில் 4 போலீஸ் ஏட்டுகள் காயம் அடைந்தனர். கோவை மாநகர் மற்றும் துடியலூரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு தரப்பினர் திரண்டனர். வழிபாட்டு தலங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறிய அவர்கள் திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள்.

சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

kovai

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் தீவிபத்து!!(படங்கள், காணொளி)

 
வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று (24.09.2016) நண்பகல் 1.30 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரம்பலை அவதானித்த அருகில் வசிக்கும் மக்கள் தீயணைப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயணைப்புப் படையினருடன் இணைத்து வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜகுரு தலைமையிலான குழுவினரும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதே போன்று சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு தீப்பரவல் இடம்பெற்றதுடன் தீயணைப்புப் பிரிவினர் தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

வவுனியாவில் கடும் வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் இச் சம்பவம் இயற்கையாக நிகழ்ந்ததா அல்லது சதி வேலையா என பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 gbh-grtf gg juyhn jyytujm nhgj uk7yuh viber-image wewqew yhtg yjty yki

வவுனியாவில் இருந்து எழுக தமிழ் பேரணிக்கு மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!!

 
தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று (24.09.2016) காலை 6 மணிக்கு சிந்தாமணிபிள்ளையார் கோவில் முன்பாக ஒன்று திரண்ட தமிழ் ஆர்வலர்களும் இளைஞர்களும் பேருந்துகளில் தொடரணியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வவுனியா நகரில் சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவளிப்பதாக எமது தெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

1 14370049_1049948478437794_2485021886307554932_n 14370339_1049948475104461_3891427463715924021_n 14433071_1049948548437787_2727217262461403387_n 14440887_10208792704128746_3637587398392896830_n 14446083_10208792705048769_3937272322398891175_n 14448789_1049948411771134_2712508577201717061_n 14470566_1049948425104466_932095776793154084_n

நடுவானில் தீப்பிடித்த கையடக்கத் தொலைபேசி : அதிர்ச்சியடைந்த பயணிகள்!!

mobile

சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்திற்குள் கையடக்க தொலைபேசி தீப்பிடித்து புகை வெளியேறியதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் இன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னையை அண்மித்த போது பயணிகள் இருக்கையின் மேல்பகுதியில் திடீரென புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் விமான ஊழியர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

விமான ஊழியர்கள் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின் கைப்பையில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 2 கையடக்க தொலை பேசியில் இருந்து புகை வருவது கண்டறியப்பட்டது.

இதனால் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தெரியபடுத்தியதையடுத்து அவர் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.

இதனையடுத்து, குறித்த கையடக்க தொலைபேசி அப்புறப்படுத்தப்பட்டு தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதேவேளை, பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 2 கையடக்க தொலை பேசியை விமானத்துக்குள் எடுத்து வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுளம்புகளை விரட்டும் தொலைக்காட்சி இலங்கையில் அறிமுகம்!!

tv

இலங்கையில் தற்போது பெரும் சவாலுக்குரிய விடயமாக டெங்கு நோய் மாறியுள்ளது. அதன் தீவிரம் மக்களை வெகுவாகவே அச்சமடைய செய்துள்ளது எனலாம்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரா அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல சட்ட நடவவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது நுளம்புகளை விரட்டியடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சியொன்றை பிரபல நிறுவனம் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் சுகாதாரத்தை பாதிக்கும் வகையிலான எந்தவொரு வேதியப்பொருட்களும் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தவில்லை என அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த தொலைக்காட்சியானது இயங்கியதும் அதிலிருந்து சப்தமில்லாது வெளியாகும் கதிர்கள் சுற்றியுள்ள நுளம்புகளை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்திவிடும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, அண்மைய காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயாள் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, யாழப்பாணம், மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலியை தங்கை என்று அழைக்க வற்புறுத்தியதால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

dead

டெல்லியில் காதலியை தங்கை என்று ஏற்றுக்கொள்ள பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நிகார் விஹார் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் குடியிருந்து வரும் யாக்யா தத் என்பவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். குறிப்பிட்ட காதலர்கள் சம்பவத்தன்று அருகாமையில் உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவருந்த சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த பெண்ணின் உறவினர் சிலர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் காதலர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு இளைஞரின் உறவினர்களையும் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் தந்தை அந்த இளைஞனை கோபத்தில் திட்டியுள்ளார். தமது மகளை விட்டு விலகி விடுமாறும் கோரிக்கை வைத்தார்.

மட்டுமின்றி அந்த இளம்பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி அவரை தங்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். பொலிசார் முன்னிலையில் அந்த இளைஞரும் அவ்வாறே செய்துள்ளார்.

இச்சம்பவத்தால் மனமுடைந்த அந்த இளைஞர் வீட்டுக்கு திரும்பியதும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், குறிப்பிட்ட சம்பவத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், மன உளைச்சல் காரணமாகவே அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

8 மணி நேரம் பெருவெள்ளத்தில் சிக்கித்தவித்த 14 வயதுச் சிறுவன்!!

boy

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 14 வயது சிறுவன் 8 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூரில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு மக்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. சிலர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குண்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு (14), தந்தை கொண்டலு (35), தாய் சுப்புலு (25) மற்றும் தங்கை வனஜா (10) ஆகிய நால்வரும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெங்கடேஸ்வரலு என்ற சிறுவன் அங்குள்ள ஒரு மரத்தில் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளான்.

இந்நிலையில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன் அங்கிருந்த ஒரு மரத்தை பிடித்துக் கொண்டு, தன்னை காப்பாற்றுமாறு குரல் கொடுத்தான்.

ஆனால், அந்த பகுதியில் யாரும் வராததால் சிறுவன் பரிதவித்து போனான். பின்னர், சுமார் 8 மணி நேரம் மரத்தில் தொங்கி போராடிய சிறுவனை அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்து நிர்வாக குழுவினரிடம் உதவிக் கோரினார்.

இதனையடுத்து பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் சிறுவனை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நீர் அதிகமாக இருந்ததால் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. இறுதியாகக் கிராமத்தினர் கயிறு மூலம் சிறுவனை காப்பாற்றினர்.

இச்சம்பவம் குறித்து சிறுவன், 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளான். கிராமத்தினர் இல்லையெனில் தானும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருப்பேன் என்று கண்ணீர் மல்க நன்றி கூறினான்.

அப்பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் இன்று இயங்கும்!!

kilinochchi-market

கிளிநொச்சி பொதுச்சந்தையினை இன்றயதினம் மூடவேண்டும் என சந்தை வர்த்தக சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதணினால் மறுக்கப்பட்டுள்ளது

குறித்த வேண்டுகோள் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் தமது வாழ்வாதரத்தினை தொலைத்து மீண்டுகொண்டுள்ள சந்தைவர்த்தகர்கள் கடைகளை அடிப்பதனால் அவர்களது வாழ்வாதாரம் இன்னமும் பாதிக்கப்படும் அதனால் கிளிநொச்சி பொதுச் சந்தை நாளையும் வழமைபோல் நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ளார் ஆனால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் குறித்த பேரணிக்கு ஆதரவு வழங்குவதானால் அமைதியான முறையில் வழங்க முடியும் எனவும் ஆனால் சந்தை வழமைபோல் நடவடிக்கைகள் நடைபெற வேண்டும எனவும் தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினரிடம் நாளை கிளிநொச்சியில் கதவைப்பு இடம்பெறுமா என எமது செய்தியாளர் வினவிய போது தமக்கு குறித்த கதவடைப்பு

சம்பந்தமாக தமக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்பட வில்லை எனவும் எனவே அனைத்துக் கடைகளும் வழமைபோல் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

சதுரங்க வேட்டை 2 ஆம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா!!

aravindswamy_trisha

சதுரங்க வேட்டை படத்தின் 2 ஆம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.

நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சதுரங்க வேட்டை படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் கதை, திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர் வினோத்.

இக்கதையின் நாயகனாக அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். மனோபாலா தயாரிக்க இருக்கிறார்.

‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

அஷ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எப்படி நகர வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வினோத்.

தமிழகத்திலிருந்து 76 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!!

ref

தமிழகத்திலிருந்து 76 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். மூன்று குழுக்களாக எதிர்வரும் 29 ஆம் திகதி அவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

திருச்சியிலிருந்து 41 பேரும், சென்னையிலிருந்து 35 பேரும் நாடு திரும்பவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தமிழகத்திலிருந்து வருகை தரவுள்ளனர்.

நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கான இலவச விமான பயணச் சீட்டுக்கள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா யாழ் பல்கலைக்கழக வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக மாறுகின்றது!!

uni

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22.09.2016) அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே உயர்கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டும் என புத்திஜீவிகள் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பால் கல்விச் சமூகம் உட்பட வன்னிப் பிரதேச மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீர்வேலியில் சிறுமி மீதான கொடூர தாக்குதல் : ஒரே நேரத்தில் குவிந்த முறைப்பாடுகள்!!

attack

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெருமளவான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முதல் இவ்வாறு பெரும்பாலானோர் முறைபாடுகளை பதிவு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 1929 என்ற இலக்கத்திற்கே இந்த முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஒரு சம்பவம் தொடர்பில் முதலில் கிடைக்கின்ற முறைபாட்டிற்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் ஏனைய முறைபாடுகளை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ரஜி­னி­­யுடன் சரத்குமார் நடிக்க மறுத்தது ஏன்?

sarathkumar

பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் சரத்குமார். சினிமா, அரசியல், சமூகப் பணிகள் என்று எப் போதுமே தன்னை எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு சித்தெறும்பு மாதிரி சுறுசுறுவென இருப்பார்.

மகளுக்கு திருமணம் முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் ரிலாக்ஸாக இருந்தவரிடம் ரொம்பநாளா சினிமாவில் காணோமே என்று கேட்­ட­தற்­கு,

“உண்மைதான். பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கெப் விழுந்திடிச்சி. அரசியலில் எந்தளவுக்கு தீவிரமா இருக்கேனோ, அதே அளவு சினிமாவிலும் இருக்கணும்னு நினைக்கிறேன்.

எனக்கு அடையாளம் கொடுத்த துறை இதுதான். இப்பவும் வாரத்துக்கு ஒருத்தராவது வந்து என்னிடம் கதை சொல்லிட்டு போறாங்க. வாழ்க்கையில் உயர்வு, தாழ்வெல்லாம் சகஜம். அரசனிலிருந்து ஆண்டி வரைக்கும் அப்படிதான். சைக்கிள்ல ஒரு பெடல் மேலே போறப்போ இன்னொண்ணு இறங்கினாதான் வண்டி ஓடும்.

நான் கொஞ்ச நாள் சைக்கிளே ஓட்டாம இறங்கிட்டேன். இப்போ மறுபடியும் வந்துட்டேன். முன்னைவிட வேகமா சைக்கிள் ஓட்டப் போறேன். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து முழுவீச்சில் நடிக்கப் போறேன்.

இப்போ ஜி.வி.பிரகாஷோடு இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நடிக்கிறேன். சண்முகம் முத்துசாமி டைரக்‌ஷன். தம்பி ராமையா, மந்த்ரா பேடியெல்லாம் நடிக்கிறாங்க. தாடி, மீசை கெட்டப்பில் வர்றேன்.

இளம் தலைமுறை நடிகர்களோடு இணைந்து நடிப்பது டபுள் உற்சாகத்தை கொடுக்குது. கன்னடத்தில் புனித்ராஜ்குமாரோடு இணைந்து ‘ராஜகுமாரா’ன்னு ஒரு படம் பண்ணியிருக்கேன்.

அது ரிலீஸ் ஆகப்போவுது. கன்னடத்தில் நானே சொந்தக்குரலில் பேசி நடிக்கிறேன். எந்த மொழியில் நடிச்சாலும் என்னோட குரலிலேயே பேசணும்னுதான் முயற்சிப்பேன். சொந்தப் படம் ஒண்ணும் எடுக்க பேசிக்கிட்டிருக்கேன். அதுதவிர்த்து வேறு சில அதிரடியான அறிவிப்புகள் வரும். என்­கி­றார்.

ரஜி­னி­யுடன் 2.0 படத்தில் நடிக்க சரத்­குமார் மறுத்­து­விட்­ட­தாக செய்­திகள் வெளியாகி­யி­ருந்­தன. அது பற்றி கேட்­ட­போ­து “அக்‌ஷய்குமாரை அழைப்பதற்கு முன்பாக ஷங்கர் என்னைத்தான் அழைத்தார்.

‘சூரியன்’ படம் எடுத்த காலத்திலிருந்தே இருபத்தைந்து ஆண்டு காலமா அவர் எனக்கு நண்பர்தான். நடிக்க மறுத்தேன்னு சொல்லக்கூடாது. வெளிப்படையா சொல்ல முடியாத சில காரணங்களால் என்னால் அதில் பங்கேற்க முடியலைன்னுதான் சொல்லணும்.

ஒரு வேலை விடயமா லண்டன் வரை போயிருந்தேன். அங்கே ரஜினி இருந்தார். மரியாதை நிமித்தமா சந்திச்சி பேசினேன். ஏற்கனவே ‘கோச்சடையான்’ படத்துக்காக அவரோடு பணியாற்றி இருக்கிறேன். மீண்டும் இருவரும் சேர்ந்து வேலை பார்க்கிறதை குறித்து பேசினோம் என்­கி­றார்.