தரமற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் டெட்டு எனப்படும் பச்சைக்குத்துவதினால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று விதமாக இந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பெரும்பாலும் இந்த தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒருவருக்கு பச்சைகுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் என இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.
வவுனியாவில் குளவி கொட்டி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – கற்பகபுரம் இரண்டாம் ஒழுங்கையிலுள்ள ஒரு வீட்டின் மாமரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அவ்விடத்திலிருந்த வயோதிபர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அவரைக் காப்பாற்ற அங்கிருந்தவர்கள் சென்றபோது அவர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கெரவிப்பு நிகழ்வு இன்று(25.09.2016) காலை 9 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் செல்வன் சி.சிவகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
-2008 OL மாணவர்கள்-
வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தின் வைரவிழா இன்று(24.09.2016) காலை 9.30 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி M.Aமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் G.Tலிங்கநாதன் அவர்களும், கெளரவ விருந்தினராக M.இராதாகிருஸ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரலானோர் கலந்து கொண்டார்கள்.
இவ் நிகழ்வில் பிரம்மம் எனும் மலர் வெளியீடும், பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த Inocencia என்ற சிறுமியின் சடலம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.
தேவாலயத்தில் கூட்டம் நடைபெறும் வேளையில் நபர் ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ படம் எடுத்துள்ளார்.
அப்போது, சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்து பார்த்ததும் அந்நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
இது மூடநம்பிக்கை என சிலர் கருத்து தெரிவித்தாலும், சிறுமியின் சடலம் எதையோ உணர்த்த தனது கண்களை திறந்துள்ளது என சிலர் நம்புகின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது, ஏசுநாதர் மீது கொண்டுள்ள பக்தியால் கிறித்துவ கூட்டம் நடத்த தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை மறுத்துள்ளார்.
எனினும், தந்தையின் எதிர்ப்பை மீறி சிறுமி கூட்டம் நடத்தியதால் ஆத்திரம் ஆன தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஏசுநாதர் மீதுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த Guadalajara தேவாலய குருக்கள் சிறுமியின் உடலை கொண்டு வந்து அழுகாமல் இருக்க மெழுகு வஸ்த்துக்களை பூசி இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானதும் அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஷ்புக் இருந்து வருகிறது.
பேஷ்புக் சமூக வலைத்தளத்தை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஷ்புக் சமூக வலைத்தளத்தை தற்போது உலக முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 115 கோடி பேர் பேஷ்புக் வலைத்தளத்திற்குள் வந்து செல்கின்றனர்.
எவ்வாறாயினும் 2004ம் ஆண்டு முதல் இதுவரை பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்திய சுமார் 4 கோடி பேர் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு பேஷ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் 428 பேரில் ஒருவர் மரணிப்பதாகவும் தினமும் 10 ஆயிரத்து 273 பேர் இறப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், ஒரு மாதத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 500 இறப்பதாக கூறப்படுகிறது.இந்த இறப்பு வீதம் காரணமாக 2065ம் ஆண்டளவில் உலகில் பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவோரை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2065ம் ஆண்டில் உலகில் மிகப் பெரிய மரண நினைவுச் சின்ன இணைப்புகள் பேஷ்புக்கில் குவியும் என கூறப்படுகிறது.
தரவுகளை அழிக்காது அப்படியே வைத்திருப்பது என பேஷ்புக் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சில மரணங்களுடன் பேஷ்புக் சமூக வலைத்தளம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.
பேஷ்புக் ஊடாக ஏற்படும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு போவது மற்றும் பேஷ்புக் ஊடாக நடக்கும் குற்றச் செயல்கள் இந்த மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு நடத்திய குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
ஹிக்கடுவை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து தூக்கிலிட்டு உயிரிழந்தவாறு இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (23.09) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் கோனபினுவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர் நேற்று விடுதிக்கு வந்துள்ள நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விடுதி ஊழியர் பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் தட்டு இல்லாததால் வெறும் தரையில் நோயாளி பெண்ணுக்கு சோறு போட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எலும்பு முறிவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்மதி தேவி என்ற பெண் தன் கை எலும்பு முறிவு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு பசிக்கவே அங்குள்ள ஊழியர்களிடம் சாப்பாடு கேட்டுள்ளார். முதலில் அதை அலட்சியப்படுத்திய அவர்கள் பின்னர் சாப்பாடு பரிமாற தட்டு இல்லை வெறும் தரையில் போட்டால் சாப்பிடுகிறாயா என கேட்டுள்ளனர்.
தான் அவமதிக்கப்படுகிறோம் என்பதை கூட உணராத அந்த ஏழை பெண் தரையில் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த அருகில் இருந்த சிலர் அதை படம் பிடித்து இணையத்தில் விட்டுள்ளனர்.
இந்த கொடும் செயல் பற்றி மருத்துவமனை டீன் ஷெர்வால் கூறுகையில், நாங்கள் நேயாளிகளுக்கு தட்டில் தான் சாப்பாடு தருவோம்.
ஆனால் இந்த குற்றசாட்டை பற்றி விசாரித்து வருகிறோம், இது நிரூபிக்கபட்டால் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒடிசாவில் மருத்துவமனை அம்புலன்ஸ் வழங்காததால் தன் மனைவி சடலத்தை கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒராய் ரயில் நிலையத்துக்கு தினமும் மாலை சென்றால் ஒரு பள்ளி சிறுமி அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டும், எழுதி கொண்டும் இருக்கும் காட்சியை காணலாம்.
அந்த சிறுமியின் பெயர் திவ்யா, அந்த ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அவர்கள் வீட்டில் மின்சார வசதியே கிடையாது. இந்த கடினமான சூழ்நிலையிலும் அவர் கல்வி படிப்பு மீது வைத்துள்ள பற்று மிக பெரியதாக இருக்கிறது.
வீட்டில் மின்சாரம் இல்லை என்பதால் மாலை சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் ரயில் நிலையத்துக்கு அந்த சிறுமி வந்து விடுகிறார்.
அங்கு டிக்கெட் கவுண்டர் அருகில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் தன் வீட்டு பாடங்களை எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்தியா 70வது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாடி வரும் வேளையில் இன்னும் இவரை போல பல திவ்யாக்கள் நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் இன்றி, தரமான கல்வியை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் லட்சுமி யாதவ். இவர் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி.
படிப்பில் கெட்டிகாரரான இவர் M.Phil என்ற முதுநிலை பட்டத்தை தத்துவத்திலும், LLM என்ற முதுநிலை பட்டம் என இரண்டு பட்ட படிப்பை முடித்த பட்டதாரி ஆவார்.
இந்நிலையில் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலையில் 3 சதவீத ஒதுக்கீடு என்ற அரசின் அறிவிப்பை நம்பி அந்த வேலைக்காக பல நாட்களாக காத்திருக்கிறார். அவர் எதிர்பார்க்கும் அரசு வேலை அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்
அதில், நான் எதிர்பார்க்கும் அரசு வேலை எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. நான் வாழ தான் வழி இல்லை, நான் என் உயிரை மாய்த்து சாவதற்காவது எனக்கு அனுமதி தாருங்கள் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கடிதத்தை தன் சொந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகானுக்கும் அவர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
13 வயதான சிறுமி ஒருவரை பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 12 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குளியாப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
13 வயதான சிறுமியை காட்டுப் பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணம் கொடுத்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டி மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர். கெக்குலாகொட வௌகம பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுவனின் தந்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், தாய் வெளிநாட்டில் பணியாற்றுவதாகவும் சிறுவன் அதிகளவு ஆபாசபடங்களை பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குவதும் சிகண்டி முனிவரினால் அருளப் பெற்றதுமான சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தினை தரிசிப்பதற்காக கொரியா நாட்டு யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் இந்து கலாசார முறையிலான உடை(சேலை) யுடன் வந்து நேற்று இரவு வழிபட்ட சம்பவமொன்று அனைத்து இந்து பக்தர்களையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தள்ளது.
மிகவும் அழகான முறையில் சேலை கட்டி வந்த யுவதிகள் சித்தாண்டியில் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ள முச்சந்தி விநாயகனை முதலில் வழிபட்டதுடன் பின்னர் சித்தாண்டி கந்தனை வழிபட்டுச் சென்றனர்.
வழிபாட்டுக்கு வந்த கொரியா நாட்டு யுவதிகள் தமிழ் மொழியில் ‘வணக்கம், எப்படி சுகம், நல்லம், வாங்க’ போன்ற பல நடைமுறை தமிழ் சொற்களை, தங்களைச் சந்தித்த மக்களுடன் பேசியதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்து பக்தர்கள் கொரியா நாட்டு யுவதிகளின் கலாச்சாரப் பண்பை பாராட்டியதுடன், அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுப்பதற்கும் தவறவில்லை. படம் எடுப்பதற்காக முட்டிமோதி படங்களை எடுத்துச் சென்றனர்.
கடந்த காலங்களை விட அண்மைய காலங்களில் மேற்கத்தைய நாட்டு மக்கள் இந்து மத வழிபாடுகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றமையை அன்றாடம் அவதானிக்க கூடியதாகவுள்ளது.