பறவை இனம் ஒன்று திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போவதாக அகுரஸ்ஸ மலிதுவ பங்கம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேசத்தில் மரக் கிளைகளில் பறக்கமுடியாமல் அமர்ந்து இருக்கும் இந்தப் பறவைகள் திடீரென கீழே விழுந்து இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பறவை இனத்துக்கு நோய் ஏற்பட்டு உயிரிழக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளி யிட்டுள்ளனர்.உயிரிழந்த பறவைகள் நீரில் விழுவதாலும், வயல்கீரை வகைகளை மக்கள் உண்பதாலும் தமக்கு நோய் ஏற்படலாம் என பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பறவை இனம் திடீரென உயிரிழப்பது தொடர்பில் அறிய இதுவரை வனவிலங்கு அதிகார சபையின் எந்த அதிகாரிகளும் வரவில்லை எனவும் இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுத்தமான குடிநீர் இல்லாதவர்கள் 117 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலையினால் அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை எடுத்துச் சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மதுபோதையில் வந்த வாகன ஓட்டியால் நேர்ந்த விபத்தில் கணவன் மற்றும் குழந்தையை பறிகொடுத்த இளம் பெண் வேறு எவருக்கும் இந்த நிலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருந்து வரும் 24 வயதான நிக்கி குரேரோ தமது கணவருடன் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது கணவன் பாபியன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த 2 நாட்கள் கடந்த நிலையில் கர்ப்பமாகி 19 வாரம் மட்டுமேயான குழந்தையை இழந்துள்ளார்.
இந்த நிலையில் சமூகவலைப்பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர், மது போதையில் வாகனம் செலுத்துபவர்களே, அடுத்தவர் வாழ்க்கையை சீர்குலைப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி தமது கணவர் பாபியனுடன் சான் மார்க்கோஸ் நெடுஞ்சாலை வழியே தங்கள் வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது 21 வயதான பல்கலை மாணவியின் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இந்த தம்பதியின் வாகனம் மீது மோதியுள்ளது. இதில் பாபியன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் இறந்த தமது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், உங்கள் சுதந்திரத்தில் சிக்கலை ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
அதிக மதுபோதை என்றால் உங்கள் நண்பர்களை வாகனத்தை செலுத்த அனுமதியுங்கள். மட்டுமல்ல வேறு எவரையாவது உதவிக்கு அழையுங்கள், உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல அடுத்தவர் வாழ்க்கையையும் சீர்குலைக்க வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் நோக்கம் இனி அதிக மதுபோதையின் தீமை குறித்து வெளிப்படையாக அறிவித்தலாகவே இருக்கட்டும். காரணம் எவரேனும் ஒருவருக்கு தினசரி நான் படும் அவஸ்தைகள் இந்த வலி சென்று சேர வாய்ப்பு உண்டு என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பெண் வேடமிட்டு 3 ஆண்டுகளாக பொலிஸ் துறையை ஏமாற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் மோசடி தொழில் செய்து வருபவர் அவினாஷ். இவர் மது கடத்தல் மற்றும் போலி அரசாங்க ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் வரை அனைத்து சமூகவிரோத செயல்களையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பொலிசாரின் பிடியில் சிக்காமல் மர்மமான முறையிலேயே இவரது நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அவினாஷ் குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது மோனிக்கா என்ற பெண் என்பதும் அவினாஷ் அல்ல எனவும் பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்தன.
இதனிடையே குறிப்பிட்ட நபரின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு 5 போத்தல் மது, மடிக் கணணி, அரசாங்க முத்திரைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.
மட்டுமின்றி மோனிகா என்ற பெயரில் பெண்கள் உடை அணிந்து அவினாஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பாலியல் வீடியோக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தும்கூரில் பள்ளியில் படித்து வரும் சிறுமியை,அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த சிறுமியின் சகோதரன்,பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நபரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடந்துள்ளார்.
நகைச்சவை நடிகர் கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சந்திரா என்ற அவர் கூறியுள்ளதாவது, நான், கள்ளன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளேன்.
இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. என்னை பற்றியும் தவறான செய்திகளை கஞ்சா கருப்பு கூறி வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு, சமீபத்தில் ஒரு புகார் கூறினார். அதில், தன் முன்னாள் மேலாளர் வி.கே.சுந்தரும், அவரது மனைவியும் இயக்குனருமான சந்திராவும் சேர்ந்து, நான்கு கோடி ரூபாயை ஏமாற்றி பறித்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்துள்ளதால் விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மணலியை சேர்ந்தவர் வேதகிரி (65) அவருடைய மனைவி ஜோதி (50) இவர்களுக்கு ஷூபா (26) ஜெபகனி (24) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
வேதகிரிக்கு கண் பார்வை பிரச்சனை பல நாட்களாகவே இருந்து வந்துள்ளது. பணம் இல்லாததால் சிகிச்சை பெறாமலே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த ஷீபாவுக்கு திடிரென மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வீட்டில் தங்காமல் அருகில் உள்ள தேவாலயத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தன் கண்பார்வைக்கும் மகள் மனநிலை பாதிப்புக்கும் மருத்துவம் பார்க்க பணமில்லையே என வேதகிரி மிகுந்த கவலையில் இருந்துள்ளார். மேலும் தன் இளைய மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற வருத்ததிலும் வேதகிரியும், ஜோதியும் இருந்துள்ளனர்.
இந்த மன உளைச்சல் அவர்களுக்குள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தூண்டியிருக்கிறது.
இநிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்த மண்னெண்யையை தங்கள் மேல் ஊற்றி கொண்டு வேதகிரி,ஜோதி,ஜெபககனி ஆகிய மூவரும் தீவைத்து கொண்டனர். அவர்கள் அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து பார்த்த போது மூவரும் தீயில் கருகி இறந்திருந்தனர்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள சிகரட் பிரியர்களுக்கு சுகாதார அமைச்சு ஓர் கசப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் சிகரட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டுள்ளதால் சிகரட் ஒன்றிற்கான விலை ஐந்து ரூபா அதிகரிக்கப்பட்டது. 35 ரூபாவாக உள்ள சிகரட் 40 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனால் சிகரட்டின் விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், கைவிலங்கிடப்பட்ட நிலையிலும் பொலிஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது.
இண்டியானா மாநிலத்திலுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன் (28) எனும் இளைஞரை கொள்ளைக் குற்றச்சாட்டின் காரணமாக பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதன் பின்னர், கொடி ட்ரையோனின் கைகளை அவரின் முதுக்குப் பின்னால் வைத்து கைவிலங்கிட்டு, பொலிஸ் ரோந் துக் காரின் பின்புற ஆசனத்தில் ஏற்றினர்.
அதன்பின் அவரை காரில் தனியாக விட்டுவிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பால் சென்றபோது, காருக்குள் முன்புற, பின்புற ஆசனங்களுக்கு இடையிலுள்ள உலோகத் தடுப்பை எப்படியோ உடைத்த கொடி ட்ரையோன் அந்த காரை செலுத்திச் சென்றார் என டெரே ஹோட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜி.பி.எஸ். சாதனத்தின் உதவி யுடன் மேற்படி காரை பொலிஸார் கண்டுபிடித்தனர். அக்காரை பொலிஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தபோது, கொடி ட்ரையோன் பல வாகனங்களை மோதித்தள்ளினார். இறுதியில் அவரை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.
தமிழில் சூர்யாவுடன் சிங்கம் 3, கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு, தெலுங்கில் பிரேமம் மற்றும் பவன் கல்யாண் இயக்கி நடிக்கும் கட்டமராயுடு ஆகிய படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இந்நிலையில் இவர் ஹிந்தி நடிகரான ரன்பீர் கபூருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் மும்பையின் புறநகர் பகுதி ஒன்றில் டேட்டிங்கில் ஈடுபட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் ஒரு பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றிற்கான விளம்பர படத்தில் நடிக்கும் போது இருவர்களும் நெருக்கமானார்கள் என்று தெரிவித்தனர்.
இதனிடையே நடிகையின் தந்தையுடன் இருக்கும் நடிகை கௌதமி, இதுகுறித்து ஸ்ருதியிடம் விளக்கம் கேட்டபோது தான் இவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன என்றும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இது குறித்து ஸ்ருதிஹாசனின் நெருக்கமானவர்களிடம் விசாரிக்கும் போது, இதில் உண்மையில்லை. அவர் தந்தையின் உடல் நலத்தின் மீது தான் அக்கறை காட்டி வருகிறார். சபாஷ் நாயுடு படம் முடியாததால் அவர் இரண்டு படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பை இழந்தார்.
இதன் மூலம் அவருக்கு சில கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பில் பங்குபற்றி நடிக்கவே நேரம் போதாதிருக்கும் போது ரன்பீருடன் டேட்டிங் என்று செய்தி வெளியாவதில் உண்மையில்லை. இதெல்லாம் மும்பை திரையுலகின் வணிக தந்திரங்களுள் ஒன்று என்று அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானம் இன்று(25.09.2016) காலை 7.30 தொடக்கம் 11 மணிவரை பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 3000க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், வவுனியா பொலிஸ், வவுனியா நகரசபை மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புடன் அதிபர் T.அமிர்தலிங்கம் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று பாடசாலை சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டது.
இச் சிரமதான அழைப்பை ஏற்று இந்த சிரமதான நடவடிக்கையில் பங்கேற்று பாடசாலை மற்றும் சுற்றாடலை அழகு படுத்தும் செயல்த்திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கையில் கைகோர்த்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
ஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கமான கலாச்சார சமநிலை காரணமாக ஜப்பானியர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக கார்டின் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான மியகோ தகசு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜப்பானியர்களை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், ஜப்பான் – இலங்கை திருமண சேவையை ஆரம்பிக்க தமது நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பானில் உள்ள பிரைடல் எலலைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கார்டின் மெரேஜ் நிறுவனம் டோக்கியோவில் இயங்கி வருகிறது.
கிளிநொச்சி, சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்று விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள், தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் அடங்கிய குழுவினர் குண்டை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு, 6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி ஏ9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய, தான் கல்விகற்ற பாடசாலையான மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரிக்கு பாடசாலை சீருடையில் இன்று சென்றிருந்தார்.
பழைய மாணவர்களுக்கான நிகழ்வு மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில் இன்று இடம்பெறுகின்றமையடுத்தே சனத் ஜயசூரிய பாடசாலை சீருடையில் சென்றுள்ளார்.