54 ஆண்டுகளாக குகையில் வாழும் சீனத் தம்பதி!!(படங்கள்)

cave_couple

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) தம்பதியர்.

திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தனர். “வறுமை, எங்களுக்கு வீடு இல்லை, வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கெனவே மூன்று குடும்பத்தினர் இங்கே வசித்து வந்தனர். நாங்களும் ஒரு பகுதியில் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். 4 குழந்தைகள் பிறந்தனர். சில ஆண்டுகளில் மற்ற குடும்பத்தினர் நகருக்குள் குடிபெயர்ந்துவிட்டனர்.

மொத்த குகையிலும் நாங்கள் மட்டுமே வசித்தோம். நானும் மனைவியும் கடுமையாக உழைப்போம். குகைக்கு மேலே எங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்களை விளைவித்துக் கொண்டோம். குழந்தைகள் வளர்ந்தனர். நகருக்குள் சென்றுவிடுவோம் என்றனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த குகையை விட்டு, நகருக்குள் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. குழந்தைகள் திருமணம் செய்துகொண்டு நகருக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் யாராவது அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துச் செல்வார்கள்.

இன்று தூய்மையான தண்ணீர், மின்வசதி போன்றவையும் எங்கள் குகை வீட்டில் இருக்கின்றன. மகன்களோ, பேரன், பேத்திகளோ இல்லாத நேரங்களில்தான் நாங்கள் தனிமையை உணர்கிறோம். மனிதர்களுக்காக ஏங்குகிறோம். மற்றபடி எந்தக் குறையும் இல்லை.

மூன்று படுக்கை அறைகள், சமையலறை, நடுக்கூடம் என்று வசதியாக இருக்கிறது குகை. கோடைகாலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்காலத்தில் இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். நாள் முழுவதும் வேலை, ஆரோக்கியமான உணவு என்று வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பெரும்பாலான வாழ்க்கை இந்தக் குகையிலேயே கழிந்துவிட்டது. இனி எங்கும் செல்ல வேண்டியதில்லை” என்கிறார் லியாங் ஜிஃபு.

இவர்களைப் பற்றிய செய்தி சீன ஊடகங்களில் வலம் வருகிறது.

1 2 3 4 5 6

குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தை!!

baby

கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆலுவாவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி திவ்யா.

இவர்களுக்கு நிரஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் நிரஞ்சனாவை அவரது தாயார் வீட்டின் பின்பகுதியில் வைத்து குளிப்பாட்டுவார்.

எவர்சில்வர் பானையில் தண்ணீரை கொண்டு வந்து அதை குழந்தையின் தலையில் ஊற்றி குளிப்பாட்டுவது வழக்கம்.

நேற்றும் இதுபோல குழந்தையை குளிப்பாட்ட திவ்யா பானையில் தண்ணீர் எடுத்து வந்தார். அதனை வீட்டின் பின்பகுதியில் வைத்து விட்டு குழந்தையை குளிப்பாட்ட அழைத்துச் சென்றார்.

பானையின் அருகே குழந்தையை அமர்த்தி விட்டு சமையல் அறைக்கு சென்றார். அவர், திரும்பி வருவதற்குள் குறும்புக்கார குழந்தை பானைக்குள் சென்று அமர்ந்து கொண்டது.

பானைக்குள் குழந்தை அமர்ந்திருப்பதை முதலில் ரசித்த தாயார், பின்னர் குழந்தையை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் குழந்தையின் இடுப்பு பகுதி பானையின் வளைவில் சிக்கிக் கொண்டது.

இதனால் குழந்தையை பானையில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. குழந்தையை இழுத்து பார்த்ததில் அதற்கு உடல் வலி ஏற்பட்டு குழந்தை அலறி துடித்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

குழந்தையின் நிலை கண்டு பதறிப்போன அவர்கள் ஆலப்புழா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர்.

பானையை ‘கட்டர்’ மூலம் ஒரு புறமாக வெட்டி அதற்குள் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர். வெளியே வந்த குழந்தை அழுகையை நிறுத்தி பெற்றோரை பார்த்து சிரித்தது. ஒருசில மணி நேரத்தில் தங்களை பதறவைத்த குழந்தை சிரித்ததும் பெற்றோரும் தங்களுக்கு ஏற்பட்ட இன்னலை மறந்து அவர்களும் மகிழ்ந்தனர்.

இடம் மாறுகிறது ஆட்பதிவுத் திணைக்களம்!!

dept

எதிர்வரும் 23 மற்றும் 26ம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடம்பெறாது என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்பட இருப்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி அந்த திணைக்களம் சுஹுருபாய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 27ம் திகதி முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

வவுனியா பூவரசம்குளத்தில் ஏற்பட்ட தீப்பரம்பலினால் காடுகளுக்கு சேதம்!

forest8

வவுனியா பூவரசம்குளம் பகுதியில் உள்ள காட்டுபிரதேசத்தில் ஏற்பட்ட தீ பரம்பலினால் 20 ஏக்கர் பரப்பிலான காட்டுபிரதேசம் தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (21.09.2016) புதன்கிழமை நண்பகல் வேளையில் ஏற்பட்ட தீப்பரம்பல் தொடர்பாக பிரதேச வாசிகளால் வேளான்குளத்தில்  உள்ள இராணுவமுகாமுக்கு தகவல் தெரிவிக்கபட்டு கடும் சிரமத்தின் மத்தியில் இராணுவத்தினர் தம்முடைய தண்ணீர் பவுசர்களை நகர்த்தி மேற்படி தீயினை பிற்பகல் நான்கு மணியளவில் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். (தி)

 

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் வெடிபொருட்கள் மீட்பு!!

 
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் வளாகத்தில் துப்பாக்கி வைக்கும் இடுப்புப்பட்டி உட்பட தொலைபேசி சார்ஜர் என்பன இன்று(22.09.2016) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்ததாரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி வைக்கும் இடுப்புப்பட்டி மற்றும் தொலைபேசி சார்ஜர் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1 02 2 4 5 6

ஆசையை நிறைவேற்றாத பிள்ளைகள் : தந்தையின் அதிர்ச்சிகர முடிவு!!

man

தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காணமுடியாது மன உளைச்சலுக்கு உள்ளான 71 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மஹவல ரதலவெவ பிரதேசத்தை சேர்ந்த இவர், தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தனது பிள்ளைகளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் உங்களை பார்க்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் கோரியுள்ளார்.

இதனையடுத்து, ஹொரனை பகுதியில் வசித்து வந்த வந்த மகன் ஒருவர், தந்தையை காண சென்றுள்ளார். இதன் போது தனது பேரப்பிள்ளைகளை காண ஆசையாக இருப்பதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த ஆசை நிறைவேறாத காரணத்தினால் குறித்த நபர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!!

sucide

இலங்கையில் 16 – 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தற்கொலை செய்துக் கொள்வது இலங்கையின் பிரதான சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினை என்று கூறுவதில் தவறில்லை. ஏன் என்றால் இலங்கையில் 2015ஆம் ஆண்டில் தற்கொலையின் மூலம் மாத்திரம் 3051 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாம் டெங்கு மற்றும் புற்று நோய் குறித்து பேசுகின்றோம். அதற்காக மாவட்ட குழுக்கள் உள்ளன. அதற்கு அவசியமான செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

டெங்கு நோயினால் வருடத்தில் 150 உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. எலி காய்ச்சல் காரணமாக 100 பேர் உயிரிழக்கின்றார்கள். எனினும் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்றவற்றை பேசும் அளவில் தற்கொலை குறித்து பேசுவதில்லை. எனினும் கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் வருடமொன்றுக்கு தற்கொலையின் காரணமாக இலங்கையில் உயிரிழக்கின்றனர்.

இலங்கையில் தற்கொலைக்கு முயற்சிப்பது தொடர்பில் தரவுகள் சேர்க்கப்படாது. எனினும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒரு நாட்டில், பிரதேசங்களில் தற்கொலைகள் எத்தனை இடம்பெறுகின்றதோ அது போன்று 10 முதல் 30 வரை தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடத்திற்கு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் எண்ணிக்கை கிட்டத்த 10 ஆயிரமாகும்.

இலங்கையில் தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பவர்களுக்குள் இரண்டு விசேட அறிகுறிகள் காணப்படுகின்றது. ஒன்று குறைந்த வயதுடையவர்கள், அதாவது 15 முதல் 25 வயதுடையவர்களே தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். அதேபோல் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களில் பெரும்பான்மையினர் பெண்களாகும்.

பொதுவாக உலகின் ஏனைய நாட்டை சேர்ந்த ஆண்களே தற்கொலை செய்துக் கொள்கின்றனர். எனினும் இலங்கையில் மாற்றம் ஒன்றை காண முடிகின்றது.

இந்த தற்கொலையின் பிரதான காரணம், குடும்பத்தின் நெருங்கியவர்களுடன், அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் அல்லது காதலன் காதலியுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற மோதல்களே காரணமாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட்ஸ் அப்பின் புதிய வசதி!!

whatsapp

வட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.

வட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில் குரூப் சாட் (Group chat ) செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.

மேலும் வட்ஸ் அப் குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து டக் (Tag) செய்யமுடிவதனால் எமக்கு அவசியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். அதுமட்டுமல்லாது நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட தமிங்க பிரசாத்!!

damikka-prasad

தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிங்க பிரசாத். இவர் கடந்த சில மாதங்களாக தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் அவரின் தோள்ப்பட்டை காயத்திற்கு அறுவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு ஆவலாக இருக்கிறேன். சில மணி நேரம் மட்டுமே உள்ளது. உங்களது பிராத்தனைகள் வேண்டும் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

3 வயது குழந்தையை குளத்தில் வீசி கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

dead

மெக்சிகோவில் 3 வயது குழந்தையை ஹொட்டல் குளத்தில் தொடர்து வீசி அச்சுறுத்திய நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மெக்சிகோவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட ஹொட்டலின் கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஜோஸ் டேவிட் என்ற அந்த நபர் தமது மனைவியின் முதல் தாரத்தின் குழந்தையை குளத்தில் வீசி அச்சுறுத்தியுள்ளார். அந்த குழந்தை பயத்தில் அலறியுள்ளதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குளத்தில் வீசி விளையாடியுள்ளார்.

இச்சம்பவம் நடக்கும்போது குழந்தையின் தாயார் அந்த ஹொட்டலில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த குளத்தில் இருந்து வெளியேற பல முறை அந்த குழந்தை முயன்ற போதும் அந்த நபர் விடவே இல்லை, ஒரு கட்டத்தில் குழந்தையை நீருக்குள் அமிழ்த்தி அதற்கு மூச்சு முட்டும் வரையில் நடந்துள்ளார்.

மட்டுமின்றி இவரின் இந்த நடத்தைகளை சுற்றும் இருந்தவர்கள் எவரும் கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அந்த அப்பாவி குழந்தையை காப்பாற்றவும் முயலவில்லை.

இதனிடையே குழந்தையை காணவில்லை என தேடிய அதன் தாயாருக்கு குழந்தையின் இறந்த உடலை மட்டுமே மீட்க முடிந்தது. தமது கணவர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று தாம் கனவிலும் கருதவில்லை என கூறியுள்ள அந்த பெண்மணி மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது குறிப்பிட்ட நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த வீடியோ காட்சிகளை பார்த்த பின்னர் நீதிபதி, குறிப்பிட்ட நபருக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என கருதி 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

இதனிடையே குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!

2-25

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

தொழிலதிபர் வாங் ஜெயின்லின் 28 வயது மகனான வாங் சிகாங்னே தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்ற நாய்க்கு எட்டு ஐ-போன் 7-களை பரிசாக அளித்துள்ளார்.

சிகாங் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில், கோகோ அமர்ந்த நிலையில் அதனைச் சுற்றி எட்டு ஐ- போன் 7-கள் கிடக்கிறது.

இந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் கோகோ மற்றும் அதன் உரிமையாளர் சீனா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர்.

சீனாவின் பணக்கார நாய் என அந்நாட்டு செய்திதாள்களில் எல்லாம் வந்து கோகோவின் பெயர் வெளியாகியுள்ளது.

வான் சிகாங் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஆப்பிள் வாட்ச் இரண்டை கோகோவுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார் என்பது நினைவுக் கூரதக்கது.

1  3 4 5

திருமணத்திற்கு மறுத்த பெண்ணை மாடியிலிலிருந்து தூக்கி வீசிய இளைஞர்!!

lady

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 21 வயது இளம் பெண்ணை மாடியிலிருந்து தூக்கி வீசி படுகாயப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இந்த கொடூரச் செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளார். தற்போது அப்பெண் படுகாயத்துடன், கை, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியின் மங்கள்பூரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை அப்பெண் வசிக்கும் அவந்திகா என்கிளேவ் குடியிருப்புக்கு இளைஞர் அமித் வந்துள்ளார்.

28 வயதான இவர், அப்பெண்ண ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்த அமித், கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே போனார். அவரைப் பார்த்ததும் அப்பெண்ணின் தாயார், சகோதரி ஆகியோர் சத்தம் போட்டு வெளியே போகுமாறு கூறினர்.

ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண்ணைப் பார்த்து என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமித், அப்பெண்ணை வீட்டின் பால்கனியிலிருந்து தூக்கி கீழே போட்டு விட்டார்.

உடனடியாக அப்பெண்ணை பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால், இடுப்பு ஆகியவை முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. அமித்தை அப்பகுதியினர் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து அமித் விசாரணை அதிகாரிகளிடம் கூறுகையில் அப்பெண் என்னிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். திருப்பித் தரவில்லை. அதனால்தான் கோபத்தில் இப்படிச் செய்து விட்டேன் என்று கூறினாராம்.

பேஸ்புக் மூலமாக இப்பெண்ணுடன் 2 வருடங்களுக்கு முன்பு நட்பாகியுள்ளார் அமித். இருவருக்கும் இடையே காதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் தாயாருக்குத் தெரிய வந்தது. அவர் விசாரித்துப் பார்த்ததில் அமித் வேலையில்லாதவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது தாயாரை மீறி எதுவும் செய்ய விரும்பவில்லை என்று அமித்திடம் அப்பெண்ணும் கூறி விட்டார். இதனால்தான் கோபத்தில் அமித் இப்படி நடந்து கொண்டதாகவும் கூற்படுகிறது.

ஆனால் இந்தக் காதல் விவகாரத்தை மறைத்து பண விவகாரம் என்று அமித் பொய் சொல்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் கூறுகின்றனர்.

மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரும் தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

mother

மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி கோவையை சேர்ந்த மணிமேகலை என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், சுக்ரவார்பேட் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருடைய 18 வயதான மகன் ஜெய்கணேஷ், மூளை வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், தொடர்ந்து மகனை பராமரிக்க முடியாததன் காரணமாக தன் மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி மணிமேகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து மணிமேகலை கூறியதாவது, எனது மகன் ஜெய்கணேஷ் 3 வயதில் மூளை காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஜெய்கணேஷ் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். நள்ளிரவில் கூச்சல் போடுகிறான். இதனால் மற்ற வீடுகளில் உள்ள குழந்தைகள் பயப்படுகிறார்கள்.

இதனால் நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே என்னுடைய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் 2436 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இதுவரையில் 394 பேர் மரணம்!!

aids

நாடாளவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 394 பேர் மரணடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் எண்ணிக்கை எத்தனை?, இவர்களில் எயிட்ஸ் நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை எத்தனை?, கடந்த ஐந்து வருடங்களில் மரணித்த ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு?, இதுவரையில் மரணித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை?, பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட் காலத்தை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை எவ்வளவு? எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என புத்திக பதிரண கேள்வியெழுப்பினார். அமைச்சர் ராஜித சேனாராத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாடாளவிய ரீதியில் 631 பேர் எயிட்ஸ் நோயாளர்களென அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் 394 பேர் மரணித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் 32 பேரும், 2013 இல் 30 பேரும், 2013 இல் 27 பேரும், 2014 இல் 26 பேரும் 2015 இல் 31 பேரும் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச்செய்வதற்கு மருத்துவ மட்டத்தில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எச்.ஐ.வி. பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் சேர்க்கப்படும்போதும் அரச சேவைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும்போதும் எச்.ஐ.வி. சோதனை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளளது. இதேபோன்று தான் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகள், கர்ப்பணிப்பெண்கள் ஆகியோரையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு அற்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் தெற்காசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்றார்.

14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை!!

jail

14 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய நப­ரொ­ருவர் குற்றவாளியாகக் காணப்­பட்­ட­தை­ய­டுத்து குளி­யாப்­பிட்­டி உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கிஹான் எச். குல­துங்க 10 வருட கடூ­ழிய சிறைத்தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்தார். சிறைத்தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 25,000 ரூபா அப­ரா­தமும் பாதிக்­கப்­பட்ட யுவ­திக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கும்­ப­டியும் நீதி­ய­ரசர் உத்­த­ர­விட்டார்.

இதற்கும் மேல­தி­க­மாக முத­லா­வது குற்­றச்­சாட்­டுக்கு இரண்டு வருட கடூ­ழியச் சிறைத் தண்­ட­னையும் 5000 ரூபா அப­ரா­தமும் விதித்த நீதி­ய­ரசர், சிறைத் தண்­ட­னை­களை ஒரே­ய­டி­யாக அனு­ப­விக்க வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்டார்.

குளி­யாப்­பிட்­டியைச் சேர்ந்த ஆர்.கே. ஜயசேகர என்ற அலவ்வே மாமா என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.

குவைத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்!!

gas

குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது.

இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.

இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கள் தங்­கி­யி­ருந்த அறை­யி­லுள்ள சமை யல் எரி­வாயு சிலிண்டர் திடீரென வெடித்தபோது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.