ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி?

ban

பங்காளதேஷில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு ஆசைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர். பொதுமக்களும் இதில் உள்ள ஆபத்தைப்பற்றி கவலைப்படாமல், எப்படியாவது அக்கரைக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற அவசரத்தில் இதுபோன்ற படகுகளில் ஏறி, உயிருக்கு உலை வைத்துக் கொள்கின்றனர்.

அவ்வகையில், பங்காளதேஷில் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த சுமார் 80 பேர் இன்று ஒரு படகில் ஏறி சந்தியா ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆட்களை ஏற்றிவந்த அந்தப் படகு, ஆற்றின் நடுவே நிலைதடுமாறி நீருக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய சிலர் சிரமப்பட்டு, நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், முப்பதுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்றுவரும் நிலையில் படகு மூழ்கி பலமணி நேரம் ஆனதால் தண்ணீருக்குள் மூழ்கிய பலர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

பங்காளதேஷில் இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் படகுகள் கவிழும் விபத்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் மத்தியப் பகுதியில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஒருபடகு ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 69 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது!!

Del6268254

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மது அருந்தி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

car

வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

arivithal

வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும்,

தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணிவரையும் 21.09.2016 முதல் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்பதை பிரதேச மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்டப் பொறியியலாளர் அறியத்தருகின்றார்.

img_2587

வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீரின்றி நோயாளர் அவதி!!

vavuniya_hospital

வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீர் பெறுவதற்கான வசதிகள் இன்றி நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பொது வைத்தியசாலையானது வவுனியா மாவட்டத்து மக்கள் மட்டுமல் வன்னிக்கான அனைத்து மக்களும் சிகிச்சை பெற்றுச் செல்லும் தள வைத்தியசாலையாக இருப்பதுடன் மாகாண வைத்திசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் குடிக்க நீரின்றி பணம் செலுத்தி தண்ணிர் பெற்று வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் கடந்த (25.02.2015) அன்று தியாகி அறக்கட்டளை நிறுவனத்தினால் 37 இலட்சம் ரூபா செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்ட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் வைத்தியசாலையின் நீர்ப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த சுத்திகரிப்பு நிலையம் செயற்படவில்லையென தெரியவருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்..

நோயாளர்கள் மாத்திரமின்றி ஊழியர்களும் குடிநீரின்றி அவதிப்படுவதாகவும் குடிநீர் வழங்கியாக செயற்பட்டு வந்த குழாய்கள் பழுதடைந்துள்ள நிலையில் அதை திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை இதன் காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட தரமற்ற நீரை வாங்கிப் பருகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பணமில்லாத ஏழை மக்கள் குடி நீருக்கு பெரும் அவதிப்படுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளத்தில் வயல்களுக்கு தீ வைப்பதால் கால்நடைகளும் இயற்கை வளமும் பாதிப்பு!!

 
வவுனியா கனகராயன்குளம் பழைய கண்டிவீதியில் அமைத்துள்ள வயல் பகுதியில் தற்போது நெல் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில் வயல்களுக்கு ஒருசிலர் தீயிட்டு வருகின்றனர்.

இவ்வாறு வயல்களுக்கு தீயிடுவதால் மேச்சல் தரையின்றி கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்வோர் கால்நடைகளை இறைச்சிக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அல்லது கால்நடைகள் மேச்சல் இன்றி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரசாங்கம் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை இவ் வயல்களுக்கு வியசாயிகள் பயன்படுத்துவதாகவும், இவ்வாறு வயல்களுக்கு தீவைப்பதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு இயற்கை உரங்கள் இல்லாது போவதாகவும் கவலை தெரிவிக்கும் இம் மக்கள் இதனை உரியவர்கள் கவனத்திலெடுத்து இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-தவனீ-

1 14408781_1155298504559863_607206982_n 14408969_1155298427893204_1353953357_n 14429344_1155298487893198_916674160_n 14429450_1155298494559864_1255187932_n 14445428_1155298484559865_1524672537_n 14445463_1155298474559866_1307989161_n 14445547_1155300077893039_1725672995_n 14445623_1155298467893200_1924686502_n 14445839_1155300071226373_907880922_n 14454697_1155298431226537_48641016_n

வவுனியா கள்ளிக்குளம் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பா.சத்தியலிங்கம்!!

 
வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். கடந்த 19.09.2016 அன்று கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது..

1977ம் ஆண்டுகளிலிலேயே இடம்பெயர்வை சந்தித்த எல்லைப்புறக்கிராமமான கள்ளிக்குளம் பழமையான கிராமமாகும். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் 1990களில் அங்குள்ள மக்கள் முற்றாக இடம்பெயர நேரிட்டது. இதன்பின்னர் 2010ல் மக்கள் மீள்குடியேறியுள்ளனர். 1990களில் 45 குடும்பங்கள் வாழ்ந்துவந்துள்ள நிலையில் தற்போது 212 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இவர்களுக்கான அரை நிரந்தர வீடுகள், மலசலகூடங்கள், கிணறுகள் அரசசார்பற்ற நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் சில அடிப்படை வசதிகள் இதுவரை செய்யப்படாதுள்ளமை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக வீதி அபிவிருத்தி, குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்வாதார வசதிகள்; போன்றன அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சனைகள் இந்தக்கிராமத்தில் மட்டுமல்ல. வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் உள்ளது. 30 வருட கொடிய யுத்தம் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகள் மக்களின் வாழ்வியலை சிதைத்துள்ளது. படிப்படியாகவே மக்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியும்.

வவுனியா பிரதேச செயலகம் உங்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்து அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றார்கள். அரசாங்க அதிகாரிகளால் அனைத்தையுமே உடனடியாக செய்து விடமுடியாது. அவர்களுக்கும் சில வரையறைகள் உள்ளன. உங்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட உங்களின் பிரதிநிதிகள் நாங்கள். உங்களின் பிரச்சனைகளை தீர்க்க எங்களால் முடிந்தவற்றை செய்ய ஆவலாயுள்ளோம்.

முதற்கட்டமாக சிறுநீரக நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுத்தமான வடிகட்டிய குடிநீர்வழங்கல், மின்சார இணைப்பை விரிபுபடுத்தல், வீட்டுத்தோட்டச்செய்கை மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் என்பன தொடர்பில் உடனடி கவனம் செலுத்துவதாக வடக்கு சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், கள்ளிக்குளம் கிராம அலுவலர் அமலதாஸ், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ராமதாஸ் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1 k1 k2 k3 k4

தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்!!

mobile

தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Huawei ஸ்மார்ட்ஃபோன் ஒன்றின் மூலமாக நபர் ஒருவரின் உயிர் பாதுகாக்கப்பட்டிருப்பது இது முதலாவது சந்தர்ப்பமல்ல. கடந்த ஆண்டும் கோதமாலாவைச் சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் உயிரை Huawei P7 பாதுகாத்திருந்தது.

கென்யாவில் ஆய்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் தமது Media Pad ஐ பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்திலிருந்து உயிர் பிழைத்திருந்தார்.

இதுபோன்ற செய்திகள் iPhone கள் மற்றும் சம்சங் கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் வெளியாகியுள்ளன. இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த கையடக்க தொலைபேசிகள் வலிமையானவை என்பதுடன் குண்டு துளைக்காத திறன் வாய்ந்தனவாகவும் அமைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது.

இன்றைய காலகட்டத்தில் துப்பாக்கிச்சன்னங்களை கையடக்க தொலைபேசிகள் தடுப்பது என்பது அதிர்ஷ்டவசமான சம்பவங்களாக அமைந்திருந்த போதிலும் Huawei போன்ற ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றிரூபவ் தமது உற்பத்தி மற்றும் தர கட்டுப்பாடுகள் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தக நாமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால், 100 மில்லியனுக்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளை 170க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற உலகின் முதல் மூன்று சிறந்த கையடக்க தொலைபேசி வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

தனது உற்பத்திகளின் தரம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான Huawei இடம் பரிசோதனை ஆய்வுகள் காணப்படுவதுடன் துறையின் முன்னணி பரிசோதனை ஆய்வுகூடங்களுடன் கைகோர்த்துள்ளது.

Huawei நுகர்வோர் வியாபார பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் யு கருத்துத்தெரிவிக்கையில்,

“Huawei ஐ பொறுத்தமட்டில் தரம் என்பது நெறிமை மற்றும் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. எமது உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்வதற்கு முறையான மேற்பார்வை அம்சங்களை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.

ஒருதலைக்காதலால் பெண்ணை 22 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞர்!! (காணொளி)

murder

இளம்பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரால் 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வடக்கு டில்லியில் அமைந்துள்ள புராரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக பணிபுரிந்துவரும் 21 வயதுடைய இளம் பெண்ணான கருணா வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது சுரேந்தர் சிங் என்ற இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த கருணாவை அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருணாவை கத்தியால் குத்தி தப்பிச் சென்ற சுரேந்திர சிங்கை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தக் கொலை தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

“கொலை செய்யப்பட்ட கருணா தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே கருணாவை சுரேந்தர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இது குறித்து கருணாவின் குடும்பத்தார் 5 மாதங்களுக்கு முன்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் இரு குடும்பத்தாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதையடுத்து சமாதானம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் சுரேந்தர் கருணாவை பின் தொடர்ந்து அவரை கொலை செய்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தலைகளைக் கொண்ட பசுக்கன்று!!

c1

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பசுவொன்று இரு தலை களைக் கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இரு தலைகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு காணப்படுகின்றன.

நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு வாய்களைக் கொண்ட இக் கன்றை பார்வையிடுவதற்கு பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்டான் மெக்கபின் என்பவரின் பண்ணையிலேயே இக் கன்று பிறந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்டான் மெக்கபின் கூறுகையில, கடந்த வெள்ளிக் கிழமை தனது பண்ணைக்குச் சென்றபோது, இக் கன்றை முதலில் கண்டபோது ஒரே மாதிரியான இரட்டைக் கன்றுகள் அருகருகே உள் ளன என தான் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

“அது இரு தலைகளைக் கொண்ட கன்றுக்குட்டி என அறிந்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தேன். இக் கன்று உயிர்வாழ்வது அதன் அதிஷ் டமாகும். எமது ஐந்து வயது மகள் கென்லீ, இக் கன்றுக்கு லக்கி என பெயரிட்டுள்ளாள்” எனவும் அவர் கூறினார்.

எனினும், இக் கன்று சில பிரச்சினைகளையும் கொண்டுள்ளது. அதன் நடுப் பகுதியிலுள்ள இரு கண்கள் இமைப்பதில்லை.

அத்துடன் இக் கன்று எழுந்து நடக்க முயற்சிக்கும்போது, வட்டமாக நடந்துவிட்டு விழுந்துவிடுகிறது எனவும் ஸ்டான் மெக்கபின் கூறியுள்ளார்.

c2

கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டால் கைது செய்ய நடவடிக்கை!!

beach

கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களைப் போடும் நபர்களைக் கைது செய்வதற்கு CCTV காட்சிகளின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கடற்கரைகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராகத் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

வருடமொன்றிற்கு கடற்கரையில் 100 மெட்ரிக்தொன் குப்பை சேர்வதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

யானை தாக்கி பெண் உயிரிழப்பு!!

dead

திருகோணமலை தோப்பூர் – தங்கபுரம் பகுதியில் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது வீட்டுக்கு அருகில் கிடந்த விளாம்பழங்களை சேகரிக்கச் சென்ற வேளையிலேயே முத்துலிங்கம் ஜானகியம்மா எனும் 65 வயதான பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தளம் ஊடாக மாத்திரமே பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்!!

Internet address

 

பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை இணையத்தளம் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா இதனைக் கூறினார்.

தபால் மூலம் பதிவு செய்துகொள்வதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறை தொடர்பில் மாணவர் கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!

 
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர்.

சிலிக்கன் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் கனடாவின் 150 ஆவது ஆண்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை முத்திரை குத்தப்பட்டுள்ளது.

1.178 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசியக் கொடியை வெறும் கண்களால் காண முடியாது. எலக்ட்ரான் நுண்ணோக்கி உதவியுடனேயே பார்த்து இரசிக்க முடியும்.

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

f1 f2 f3

தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்கள்!!

daughter

காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களில் எஸ்.கே.வித்யார்த்தி என்பவரும் ஒருவர். அவர் பீகார் மாநிலம் கயா மாவட்டம் பக்னாரி கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு மனைவியும், 3 மகள்களும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

மகள்கள் ஆர்த்தி 8-ம் வகுப்பிலும், அன்ஷு 6-ம் வகுப்பிலும், அன்ஷிகா 2-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். கயாவில் உள்ள டி.ஏ.வி. பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்து வரும் அவர்களுக்கு நேற்று தேர்வு நாள் ஆகும்.

தந்தையை பறிகொடுத்த துக்கத்துக்கிடையே அவர்கள் பள்ளிச்சீருடையில் தேர்வு எழுத வந்தனர். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. அக்காட்சி, அனைவரது நெஞ்சையும் உருக்கும்வகையில் இருந்ததாக பள்ளி முதல்வர் ஜனா தெரிவித்தார்.

தங்கள் தந்தையை கடைசியாக கடந்த மாதம் பார்த்ததாகவும், நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியதாகவும், அவரது கனவை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் என்றும் 3 மகள்களும் தெரிவித்தனர். அவர்களின் கல்விச்செலவுக்கு உதவுவதாக பள்ளி இயக்குனர் அறிவித்தார். ராணுவ வீரர் வித்யார்த்தி மறைவுக்கு அப்பள்ளியில் நேற்று இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

எப்படிபட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? இதோ ரகசியம்!!

Close up portrait of serious man rubbing beard

எப்படிபட்ட ஆண்களை பெண்கள் விரும்புவர்கள் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால உறவுக்கு தாடியுள்ள ஆண்களையே அதிக பெணகள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.தாடியுள்ள ஆண்கள் ஈர்க்கும் வகையில் இருந்தாலும், நீண்ட கால உறவுக்கு எவ்வித அச்சமுமின்றி ஒரு விஷயத்தை நேரடியாக கையாளும் தன்மை அவர்களிடம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பெண்கள் தாடியுள்ள ஆண்களை கவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து பார்நேபி டிக்ஸன் என்பவர் தலைமயிலான குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. இந்த ஆய்வில், கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஆண்களின் முகத்தில் மார்பிங் செய்து பல்வேறு வகையில் முகத்தில் முடி வைத்து வடிவமைத்துள்ளனர்.

கிளீன் ஷேவ், குறுந்தாடி, அடர்ந்த தாடி, தாடையில் முடி, காதோரம் உள்ளிட்ட இடங்களில் முடி வைத்து பல பெண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதனடிப்படையில் முகத்தில் தாடி வைத்திருந்த ஆண்கள் மிகவும் ஈர்ப்புள்ளவர்கள் என்றும், நீண்ட கால உறவுக்கு சிறந்தவர்கள் என்றும் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதல் உறவோ, பாலியல் உறவோ, பெண்களின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வகிப்பதாகவும், அவர்களது தேர்வு சில கோட்பாடுகளை கொண்டிருக்கும் என்பதால் அவர்களது தேர்வில் உண்மை தன்மை இருக்கும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படங்கள் கிடைக்காத வருத்தத்தில் சமந்தா!!

samantha

இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதனாலேயே தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் சமந்தா ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சமந்தாவோ, கோலிவுட்டில் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்காததாலேயே எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனக்கு நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு ஏற்ற மாதிரியான கதை அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

சமந்தா, இப்போதைக்கு தனது கைவசம் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படவுலகிலும் இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த சமந்தா, அங்கேயும் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமந்தா கோலிவுட்டில் தனக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.