தனுஷ் உடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்!!

saalaa120116_1t

இறுதிச் சுற்று’படத்தில் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங், தனுஷுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.விஜய் சேதுபதி -ரித்திகா சிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆண்டவன் கட்டளை’. இந்த படத்தில் ரித்திகா சிங் பத்திரிகை நிருபராகவும், கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடும் இளைஞனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ”ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.

இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. படப்பிடிப்பில் மற்றவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல எனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருக்கிறார். விரைவில் தமிழ்பேச கற்றுக்கொள்வேன். முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இனி எந்த வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.

தமிழில் தனுஷ் பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசை. நான் ஜோதிகாவின் ரசிகை. அவரது நடிப்யை மிகவும் ரசிப்பேன். தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு படம் தான் நடித்திருக்கிறேன். என்றாலும் என்னை மிகவும் பாராட்டுகிறார்கள். முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மிகவும் உதவினார். நடிப்பு திறமையை கற்று வருகிறேன். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்வதை செய்கிறேன். அடுத்து பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறேன். தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த சோகம்- வருத்தப்பட்ட நடிகர்!!

keerthi-suresh-11-keerthy-suresh-latest-photos-cs-26
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் படத்தை பற்றி பேசும்போது, படத்தில் கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து இழுக்கும் ஒரு காட்சி இருந்தது.

அந்த காட்சி கண்டிப்பாக கீர்த்தி சுரேஷுக்கு வலியை தரும் என்று தோன்றியது. இயக்குனர் என்னிடம் சொன்ன போது, நான் கீர்த்தி சுரேஷிடம், கண்டிப்பாக உங்களுக்கு வலிக்கும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினேன்.ஆனால் கீர்த்தி எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் காட்சியை நன்றாக எடுத்து முடிப்போம் என்று கூறினார் என்றார்.

இனி ஒவ்வொரு நபருக்கும் மாதாந்தம் 75000 ரூபா வருமானம்!!

daya-gamage

ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிற்கே எடுத்துக் காட்டாக இலங்கை – ஒபாமா!!

Obama

தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை கூறியுள்ளார்.

மாறிவரும் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஒபாமா இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கனடாவின் பிரதமர் Justin Trudo,அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull மற்றும் பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sherif ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைனையும் மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று மைத்திரிபால சிறிசேன உரையாடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தரம் இல்லாமல் உயர்தரம் கற்பதற்கு அரிய வாய்ப்பு!!

bribary1
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் கல்விப்பொதுத்தராதர உயர்தரக்கல்வியை தொடர்வதற்கு கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைப்பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.இதன்மூலம் சாதாரணத்தரத்தில் தோல்விக்கண்டவர்களும் தமக்கு விருப்பமான பாடத்திட்டம் ஒன்றை உயர்தரத்தில் பயிலமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை காரணமாக, சாதாரணத்தரத்தில் தோல்விக்கண்டவர்களின் திறமைகளுக்கு இடம்தரமுடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

யாழில் காதல் ஆசை காட்டி சிறுமி கூட்டாக துஷ்பிரயோகம்!!

abu

யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்வேன் எனச் சிறுமியை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நடந்த விடயத்தை சிறுமி, தனது தாயாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, தாயார் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டையடுத்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லையெனவும், பொய்யான முறைப்பாடு எனத் தெரிவித்தும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த விடயத்தைச் சமூக ஆர்வலர் ஒருவர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர்கள், இன்று கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோகமயமான கல்குடா : தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்!!

m2

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் கல்குடாவில் இடம்பெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் நேற்று ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன.

நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.

இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தந்தை வே.சண்முகம், தாய் யோகலட்சுமி, மகன்களான சுரேஷ் மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது. கல்குடா பொது மயானத்தில் நால்வரின் சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன.

m3 m4 m5 m6 m7

விமானியின் தவறான செய்கையால் 2 மணி நேரமாக அவதிக்குள்ளான பயணிகள்!!

flight

சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, ‘அலாரத்தை’ பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் மணிலா நகருக்கு, நேற்று காலை, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.

மணிலாவை விமானம் நெருங்கிய போது, மணிலா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, சவுதி விமானத்திலிருந்து, அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் அலாரத்தின் சத்தம் கேட்டது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சவுதி விமானம் கடத்தப்பட்டுள்ளதாக அச்சம் அடைந்தனர்.

மணிலா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தையும் பயணிகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மணிலா விமான நிலையத்தில், சவுதி விமானம் தரையிறங்கியது. விமானத்திலிருந்து பயணிகள் இறங்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

விமானம் கடத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும், அலாரத்தை, பைலட், தவறுதலாக அழுத்தியது தெரியவந்தது.

இதனால், விமானம் கடத்தப்படவில்லை என்பதை அறிந்து, மணிலா விமான நிலைய அதிகாரிகள் பெருமூச்சு விட்டனர்.

இரண்டு மணி நேரத்துக்கு பின், விமானத்திலிருந்து இறங்க, பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பேஸ்புக் பாவனையாளர்கள் மரணம்!!

fb

ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (Source: Theloop)

இது தவிர பேஸ்புக் குறித்த மேலும் சில புள்ளிவிபரங்கள், உலகெங்கும் 1.71 பில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் பயன்படுத்தும் அதேநேரம் 1.13 பில்லியன் பேர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர்.(Source: Facebook as of 7/27/16)

பேஸ்புக்கில் 83 மில்லியன் Fake Profiles-போலிக்கணக்குகள் உள்ளன.(Source: CNN) தினமும் 300 மில்லியன் போட்டோக்கள் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன.(Source: Gizmodo)

18 -24 வயதான பேஸ்புக் பாவனையாளர்களில் 50 வீதமானவர்கள் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை தமது பேஸ்புக்கைப் பார்வையிடுவதுதான்.(Source: The Social Skinny)

பேஸ்புக்கில் ஒவ்வொரு நிமிடமும் 510 Comments பதிவிடப்படும் அதேநேரம் 293,000 Status Update செய்யப்படுகின்றன.(Source: The Social Skinny)

ஒப்பீட்டளவில் அதிகளவானோர் பிற்பகல் 1 – 3 மணிவரையான காலப்பகுதிக்குள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். (Source: Bit.ly blog)

பலர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிக நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுகின்றனர். (Source: Bit.ly blog)

இந்தப் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 10 பேஸ்புக் பாவனையாளர்கள் மரணித்திருப்பார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

இந்த வயரைக் கடித்து தான் தற்கொலை செய்துகொண்டாரா ராம்குமார்?

ramkumar

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் முறைப்படு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவில் ராம்குமாரின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

சிறையில் சுவரினுள் பதிக்கப்பட்ட மின் வயரை கடித்து ராம்குமார் எப்படி இறந்திருப்பார் என்ற சந்தேகம் முன்வைக்கப்படும் நிலையில், சிறையில் ராம்குமார் மின் வயரை கடித்த இடத்தை குறிப்பிடும் வகையில், ஸ்விட்ச் பாக்ஸ் படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஸ்விட்ச் பாக்ஸ் வயரை கடித்து தான் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின் வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை. அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார்.

அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தாலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான காயங்களும் ராம்குமாரின் உடலில் இல்லை. எனவே இந்த ஒயரை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை என்பதற்கு பிரேத பரிசோதனையில் தான் விடை கிடைக்கும். இந்த புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் வினவினோம்.

குறித்த புகைப்படம் எப்படி வெளியானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ராம்குமார் தற்கொலை செய்தது உண்மை. இதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என கருத்து வெளியிட்டுள்ளனர்.

-விகடன்-

ramkumar1 ramkumar2

பேருந்தினுள் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு 25 பேர் காயம்!!

bus

ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் 6 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் தென்கானல் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சிசுமந்திர் எனும் பகுதியில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பேருந்தின் ஓட்டுநர் முக்கிய சாலையில் இருந்து சற்று விலகி அருகில் உள்ள செம்மண் சாலை வழியாக பேருந்தை செலுத்தியுள்ளார்.

அப்போது அந்த சாலை ஓரத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்சார கம்பி ஒன்று திடீரென்று அறுந்து பேருந்தின் மீது விழுந்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்த 45 பயணிகளில் 6 பேர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தானது கட்டக்கில் இருந்து காமாக்‌ஷ்ய நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

சம்பவயிடத்திடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைசர் நவின் பட்நாயக் அறிவித்துள்ளார்.

கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற பாசக்கார கணவர் : நெஞ்சை உருகவைக்கும் காரணம்!!

husband

ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணயாக இருக்கும் மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் பங்காரி பிரஷ்க என்ற பெண். கர்ப்பிணியாக இருக்கும் பிரஷ்கவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனே சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல அங்கன்வாடி தொழிலாளர்கள் தொடர்ந்து 108 சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு மணிநேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ் நோயாளி இருக்கும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் வந்துள்ளது.

இந்நிலையில், பங்காரி பிரஷ்க விசிக்கும் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வராததை அடுத்து, அவரின் கணவர் சம்பாரு பிரஷக் சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் பங்காரி பிரஷ்கவை தோள்பட்டையில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளார்.

இச்சம்பவம் புகைப்படத்துடன் வெளியாகி அம்மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆண்களை ஏமாற்றி மணம் புரிந்த கல்யாண ராணி : கதறும் கணவன்கள்!!

wedding

பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு கே.ஜி.ஹல்லி அருகேயுள்ள சாராய்பாளையாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் யாஸ்மின் பானு (38) என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவரின் சொத்தை அபகரிக்க ஆசைபட்ட யாஸ்மீன் இம்ரானிடம் ரொக்கமாக பல லட்ச ரூபாய் பெற்று கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இம்ரானை விட்டு பிரிந்து சென்று பல தொழிலதிபர்களை தன் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, இம்ரான் கே.ஜி.ஹல்லி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் மனைவி யாஸ்மீன் என்னை திருமணம் செய்து எமாற்றி விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், சில புகைப்பட ஆதாரங்களை வெளியியிட்டு விடுவேன் என என்னை மிரட்டி பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இது தவிர, எனக்கு அடுத்ததாக, அப்சல் என்பவரை திருமணம் செய்தார். அவரிடமும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து, 3வதாக சையத் சேக் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசீப், 6வதாக சோயப் என 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு, கல்யாண ராணியாக ஏமாற்றும் எனது மனைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, யாஸ்மின் வலையில் சிக்கிய சோயப் மற்றும் அப்சல் என்பவர்கள் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார்களை ஏற்றுக்கொண்ட பொலிசார், யாஸ்மின் மீது மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றததில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி!!

c1

இங்­கி­லாந்தில் நேற்­று ­முன்­தினம் கட­லுக்கு மத்­தியில் கிரிக்கெட் போட்­டி யொன்று நடத்­தப்­பட்­டது. இங்­கி­லாந்து பிர­தான நிலப்­ப­ரப்­புக்கும் இங்­கி­லாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடை­யி­லான கடற்­ப­கு­தி­யி­லுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடை­பெற்­றது.

ஐலன்ட் செய்லிங் கிளப் மற்றும் ரோயல் சதர்ன் யாட்ச் கிளப் ஆகிய அணிகள் இப்போட்­டியில் மோதின. 50 நிமி­டங்கள் நீடித்த இப்போட்­டியில் ஐலன்ட் செய்லிங் கிளப் அணி வெற்­றி­யீட்­டி­யது.

கோடைப் பரு­வத்தில் இக்­ க­டற்­ப­கு­தியில் நீர் வற்­று­வதால் வெளிக்கி­ளம்பும் மணல் திட்­டு­களில் வரு­டாந்தம் இக்­ கி­ரிக்கெட் போட்டி நடை ­பெ­று­கி­றது. 1950களி­லி­ருந்து இப் ­போட்டி நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போட்­டி­யா­ளர்­களும் பார்­வை­யா­ளர்­களும் பட­குகள் மூலம் மேற்­படி மணல் திட்டுக்களை வந்­த­டைந்­தமை குறிப்பிடத்தக்கது. களத் தடுப்பாளர்கள் பலர் நீரில் நின்றுகொண்டு களத் தடுப்பில் ஈடுபட்டனர்.

c2

இலங்கையில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்களில் சிறுவர்களே அதிகம் பாதிப்பு!!

abuse

இலங்­கையில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களில் அதி­க­மாக சிறு­வர்­களே பாதிக்­கப்­ப­டு­வ­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் திணைக்­கள சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் மனோஜ் சம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களைப் பார்க்கும் போது 90 சத­வீத துஷ்பி­ர­யோ­க­ சம்­ப­வங்கள் சிறு­வரின் உற­வி­னர்கள் அல்­லது அய­ல­வர்­களால் இடம்பெ­று­வ­தா­கவும் மனோஜ் சம­ர­சே­கர தெரி­வித்தார்.

நாட்டில் இடம்­பெறும் அதி­க­மான துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களில் அதி­க­மா­னவை பொலிஸ் நிலை­யத்­துக்கோ அல்­லது வேறு பொறுப்பான நிறுவனத்துக்கோ அறிவிக்கப்படுவதில்லை என்றும்அவர் தெரிவித்தார்.

100 ஆவது தடவையாக சத்திர சிகிச்சைக்குள்ளான பாகிஸ்தான் யுவதி!!

People using virtual reality technology will be able to watch the operation like they are in the room

பாகிஸ்­தானைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது வாழ்க்­கையில் நூறு தட­வை­யாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்­டுள்ளார். 25 வய­தான பௌஸியா யூசுப், இந்த யுவ­தியின் 100 ஆவது சத்­தி­ர­சி­கிச்சை லாகூர் நக­ரி­லுள்ள ஷேக் ஸயீட் வைத்­தி­யசா­லையில் அண்மையில் நடத்­தப்­பட்­டது.

இவர் சிறு வய­தி­லி­ருந்து “பைப்­ரோ­மேட்­டோசஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். “நான் இன்னும் பல சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொள்­வ­தற்கும் தயார். ஆனால், எனது இடது கையை துண்­டிப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்டேன்” என பௌஸியா யூசுப் தெரி­வித்­துள்ளார்.

இவரின் இடது கையா­னது “பைப்­ரோ­மேட்­டோசஸ்” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது. “இந்நோய் உடலின் ஏனைய பாகங்களுக்குப் பர­வு­வதை தடுப்­ப­தற்­காக எனது இடது கையை துண்­டிக்க வேண்டும் என மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால், கையில்­லாமல் வாழ்­வ­தை­விட நான் இறப்­ப­தற்குத் தயார். வாழ்க்­கையில் நான் ஒரு போராளி. ஆனால், கையில்­லாமல் நான் வாழ விரும்­ப­வில்லை” என பௌஸியா யூசுப் கூறு­கிறார்.

“8 வயதில் எனக்கு முதல் தட­வை­யாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது. வைத்தியசாலைகள், குறிப்­பாக ஷேக் ஸயீட் வைத்­தி­ய­சாலை, எனது இரண்­டா­வது வீடு போன்­ற­தாகும். இவ்­ வைத்­தி­ய­சா­லையில் எனக்குப் பலர் நண்­பர்­க­ளாகி விட்­டனர். அவர்கள் என் மீது அதிக அக்­கறை காட்­டு­கின்­றனர்” என அவர் தெரி­வித்­துள்ளார்.

5 பிள்ளைக் கொண்ட குடும்­பத்தில் இரண்­டா­வ­தாகப் பிறந்­தவர் பௌஸியா. இவரின் குடும்­பத்தில் ஏனைய பலரும் பல நோய்­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னராம்.

“எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் மாதாந்தம் 15,000 பாகிஸ்தான் ரூபா (சுமார் 21 இலட்சம் இலங்கை ரூபா) மருத்­து­வத்­து­வத்­துக்­காக செலவாகுகிறது. இவ் விடயத்தில் எமக்கு உதவும் நன்கொடை யாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” எனவும் பௌஸியா யூசுப் தெரிவித்துள்ளார்.