கம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை : குறைந்த விலையில் வித்தியாசமான அனுபவம்!!

31

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது.

பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும் இவ்வகை ரயில்கள் சென்று வருகின்றன.

பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, ஒருகட்டத்தில் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டது. அந்தப் பாதையில்தான் மூங்கில் ரயில்கள் சென்று வருகின்றன.

மூங்கில்களை வரிசையாக வைத்து மிதவை போலக் கட்டுகிறார்கள். இரு பக்கங்களிலும் இரும்புச் சக்கரங்களை இணைக்கின்றனர்.

முன் பகுதியில் சிறிய மோட்டார் ஒன்றை வைத்துவிட்டால் ரயில் தயார். மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது.

எதிரில் இன்னொரு மூங்கில் ரயில் வந்தால், எந்த ரயிலில் குறைவான ஆட்களும் பொருட்களும் இருக்கின்றனவோ, அந்த ரயிலைத் தூக்கி, நிலத்தில் இறக்கி வைத்து விடுகிறார்கள்.

எதிரில் வந்த ரயில் கடந்த பிறகு, மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, இந்த ரயில் பயணத்தைத் தொடர்கிறார்கள். ரயில் கட்டணம் குறைவாக இருக்கும். எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம்.

இரு சக்கர வாகனம், விறகுகள், நெல் மூட்டைகள், கால்நடைகள் என்று ஏகப்பட்ட சரக்குகளையும் இந்த மூங்கில் ரயில்கள் சுமந்து செல்கின்றன.

மூங்கில் பெட்டிகள் அடிக்கடி உடைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் உடனே சரி செய்துவிடுவார்கள்.

கம்போடியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, மூங்கில் ரயில் மிகவும் பிரபலமடைந்தது. புதிய ரயில் பாதைகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் இயங்கி வந்த மூங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இன்று பட்டாம்பாங் பகுதிகளைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்வதாலும் வசதியாக இல்லாததாலும் எல்லோரும் பயன்படுத்துவதில்லை.

ஆனால், சுற்றுலாப் பயணிகள் மூங்கில் ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.

32 33 34 35 36 37

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி களனி கங்கையில் குதித்தவர் உயிரிழப்பு!!

dead

அவிசாவளை – குடாகம பகுதியில் பொலிஸாரிடம் இருந்து தப்பி, களனி கங்கையில் குதித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று காலை உயிரிழந்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போதே அவர் களனி கங்கையில் குதித்துள்ளார்.

களனி கங்கையில் சட்டவிரோதமாக சிலர் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று முன்தினம் (19.09) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடுவதற்கு முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் களனி கங்கையில் குதித்துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் சந்தேகநபரைக் காப்பாற்றி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எவ்வாறாயினும், அந்நபர் உயிரிழந்தார்.

நடிகையின் தங்கை சுட்டுக்கொலை!!

a1

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ரொட்ரிகோ டுடேர்டெ, போதை பொருளுக்கு அடிமையானவர்களை கொலை செய்ய சொல்லி பொதுவெளியில் பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில், மரியா அரோரா மொய்னிஹன் (45) என்ற போதை பொருள் விநியோகிப்பாளர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர், நடிகை, மாடல், மற்றும் தொழிலதிபரான மாரிட்டோனொ பெர்னாண்டஸ் (47) தங்கை. மேலும், இவது தந்தை, லார்ட் மொய்னிஹன், மரணம் அடையும் வரை, விபச்சார விடுதி மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்.

மரியாவின் இறந்த உடல் அருகே ஒரு அட்டையில், ”இவர் பிரபலங்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்பவர்” என்று எழுதப்பட்டிருந்தது.

இறந்த, மரியா, பிப்ரவரி 2013, சட்டவிரோத போதை பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, பின் பிணையில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

a2

கையடக்கத்தொலைபேசியினை மீட்க கழிவறையில் கைவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

11

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மது போதையில் கழிவறைக்கு சென்று கழிவறையில் வைத்து தனது கைய்க்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது கைதவறி கையக்கத்தொலைபேசி கழிவறையினுள் விழுந்துள்ளது. போதையில் இருந்த அவர் தனது கையடக்கத்தொலைபேசியினை எடுக்க போராடியுள்ளார்.

தனது இடது கையை கழிவறையினுள் விட்டு கையடக்கத்தொலைபேசியினை எடுக்க முயற்சித்துள்ளார். அச்சமயத்தில் அவரின் கை கழிவறையில் மாட்டி கொண்டுள்ளது. தனது கையை வெளியே எடுக்க இரவு முழுவது அவர் முயற்சி செய்து உள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் உதவி கோரி கத்தியுள்ளார்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து கழிவறையை உடைத்து இளைஞனை மீட்டுள்ளனர்.

12

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் : ஆரம்பித்து வைத்தார் சங்கா!!(படங்கள்)

 
இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21.09) ஆரம்பமாகவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம்,போன்ற பகுதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

இப்போட்டியில் 16 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி பங்கேற்கும் இந்த போட்டியின் இறுதி போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த முரளி கிண்ண தொடராரை இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8

ஹம்பாந்தோட்டை இளைஞனின் அக்காவும் அண்ணனும் கைது!!

arrested

அண்மையில் ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனின் அக்காவும் அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய பின்னர், சட்டரீதியான தண்டனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சந்தேக நபரை வைத்திருத்தல், பாதுகாப்பளித்தல், அரச ஊழியர்களுக்கு பொய் வாக்குமூலம் வழங்கல் போன்ற குற்றச்சாட்டுக்களில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காளை வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 05ம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது காணாமல் போயிருந்த 20 வயதுடைய கயாசன் என்ற இளைஞர், திக்குவல்லை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்து இருந்த போது, விகாரையின் தேரரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, தேரரின் உதவியுடன் இளைஞர் பொலிஸில் சரணடைந்திருந்தார்.

8 ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசிகளை நாய்க்காக வாங்கிய நபர்!!

 
சீனாவின் மிகப் பெரிய செல்வந்தரான வாங் நியன்லின்னின் மகனான வாங் சிகொங் (28 வயது) தனது செல்லப் பிராணியான நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத் தொலைபேசிகள் எட்டை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொகோ என்ற அந்த நாய்க்காக வாங் சிகொங்கால் வாங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 800 அமெரிக்க டொலராகும்.

வாங் நியன்லின்னின் சொத்தின் பெறுமதி 23 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 2 3 4 5

இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் செல்லும் வாய்ப்பு!!

gra

இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இதன் தலைவர் மொஹான் த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் ஏன் வாழ வேண்டும்? சிறையிலேயே சாகின்றேன் : பேரறிவாளன்!!

perarivaalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13ம் திகதி பேரறிவாளனை ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினார்.

இதில் பேரறிவாளனுக்கு கை, கால் மற்றும் தலைப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் தன் மகனை பரோலில் விட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு சென்று மனு கொடுத்தார்.

இதற்கிடையே மருத்துவ சிகிச்சை முடிந்து பேரறிவாளன் சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் கூறுகையில், ஏழு பேரும் ஒன்றாக விடுதலையாக வேண்டும் என நம்பிக்கையோடு பேரறிவாளன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நம்மை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு உறுதியாக இருந்தாலும், அரசுக்கு எதிரான வழக்குகளால் தாமதம் ஏற்படுகிறது.

எனவே அரசுக்கு எதிரான வழக்குகள் வேண்டாம் என்பதுதான் பேரறிவாளனின் கருத்தாக இருக்கிறது, இதைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளனர்.

கைதி ராஜேஷ் கண்ணாவிடம், உனக்கு எதிராக சிறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதே பேரறிவாளன்தான் என அவரைத் தூண்டிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே பேரறிவாளன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

நண்பர்களே இப்படி செய்வார்களா? எதற்காக நான் உயிருடன் இருக்க வேண்டும்? சிறையிலே செத்துப் போய்விடுகிறேன் என கதறி அழுகிறார்.

நரம்பு, மூட்டு பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆனால் தற்போது பேரறிவாளன் அதைதான் எடுத்துக் கொள்கிறார், இதனால் என்ன விளைவுகள் ஏற்படுமோ தெரியவில்லை என பதட்டத்துடன் கூறியுள்ளார்.

டுவிட்டர் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

twitter

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இனிமேல் எமது கருத்துக்களை 140 எழுத்துக்களில் மேலும் விபரமாக பதிவிடலாம்.

அதாவது, டுவிட்டர் வழங்கியுள்ள புதிய அறிவிப்பின் அடிப்படையில் இனிமேல் நாம் பதிவிடும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கணக்கெடுப்புகள் ஆகியவை பதிவிடப்படும் எழுத்துக்களுக்கான மொத்த எண்ணிக்கையில் கணக்கிடப்படமாட்டாது.

Say more about what’s happening! Rolling out now: photos, videos, GIFs, polls, and Quote Tweets no longer count toward your 140 characters. pic.twitter.com/I9pUC0NdZC

— Twitter (@twitter) September 19, 2016

அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்த பெண்!!

lady

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ், முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

மருத்துவ ஆணையம் அவர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நிறைவேறிய ஐக்கிய அரபு நாட்டின் மருத்துவ பொறுப்பு சட்டம், மருத்துவ காரணங்களுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அனுமதிக்கிறது.

வவுனியா பெரிய கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டுக் கழகம் நடத்திய விளையாட்டுப் போட்டி!!

 
வவுனியா பெரிய கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன் மற்றும் வடமாகாண சபை உறுப்பிர்களான G.T.லிங்கநாதன், செந்திலநாதன் மயூரன், பெரிய கோமரசன்குளம் பங்குத் தந்தை மற்றும் பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் பூலோகசிங்கம், பிரபல சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் ஆகியோர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டார்கள்.

1 2 3

பேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய இளைஞர் : எப்படி?

fb_1461217601_800x420
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. தனது பேஸ்புக் பக்கத்தை பாதுகாக்க அந்நிறுவனம் பவுண்டி புரோகிராம் என்ற குறைகளை சுட்டிக்காட்டும் திட்டத்தை செயல்படுத்தியது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஹேக்கர்கள் கலந்து கொண்டு பேஸ்புக் பக்கத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பரிசுகளை பெற்றுச்செல்வர். அதுபோல இத்திட்டத்தில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அருண்(20), பலமுறை பங்கேற்று 30 லட்சம் ரூபாய் வரை வென்றுள்ளார்.

தற்போது மீண்டும் இவர் பேஸ்புக் பக்கத்தை 10 நிமிடங்களில் ஹெக்செய்து விடலாம் என நிரூபித்து காட்டியுள்ளார். இதனால் இவருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது.

ஹீரோயினாகிறார் சூர்யா-ஜோதிகாவின் மகள்!!

surya-jyothika-latest-photos-600x398
சூர்யா-ஜோதிகா ஆகியோரின் மகள் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். தலைப்பை பார்த்துவிட்டு அவர்களின் ரியல் மகள் என நினைத்துவிடவேண்டாம், ஹீரோயினாகப்போவது அவர்களின் ரீல் மகள்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரியா சர்மா, நாயகியாக அறிமுகமாகும் நிர்மலா கான்வென்ட் என்ற படம் சென்ற வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.

சமந்தாவின் திருமணம் இப்படி நடைபெறவுள்ளதா? ஆச்சரியத்தில் கொலிவுட்!!

samanthamarriagefilmibeat-15-1468553355
சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பது எல்லோரும் அறிந்ததே. நாகர்ஜுன் குடும்பத்துடன் இவர் திருமண வரவேற்பிற்கு செல்வது, அமலாவுடன் ஜாக்கிங் செல்வது என பல புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில் இவரின் திருமணம் விரைவில் நடக்கவிருக்க, சமந்தாவின் வீட்டில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று கூறுகிறார்களாம்.

நாகர்ஜுன் வீட்டில் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என கூற, இரண்டு முறையிலும் சென்னை மற்றும் ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளதாம்.சமந்தா திருமணத்திற்கு பிறகு 90% நடிக்க மாட்டார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவிலேயே இதை செய்த முதல் பெண் சௌந்தர்யா தான்!!

soundarya-rajinikanth
சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார், இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள்.

இவருக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது, சௌந்தர்யாவை ரஜினியின் மகளாக தான் பலருக்கும் தெரியும்.ஆனால், அவர் பல படங்களில் அனிமேஷன் பணிகளை செய்துள்ளார், இந்தியாவிலேயே மோசன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தில் படம் எடுத்த முதல் பெண் சௌந்தர்யா தான்.