வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இராஜகோபுர மகா கும்பாபிசேக அறிவித்தல்!!(காணொளி)

ஈழவள  மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கு   நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் இருபத்து மூன்றாம் நாள் (08.09.2016) வியாழகிழமை காலை 6.50 முதல் 8.40 மணிவரையுள்ள கன்னி லக்கினமும் அனுஷ நட்சத்திரமும்  பூர்வபட்ச சப்தமியும் சித்தயோகமும் கூடிய சுப புண்ணிய வேளையில் விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும் நடைபெரும் வகையில் விநாயகபெருமான் திருவருள்பாலித்துள்ளார்.

 

எனவே அடியார்கள் அனைவரும் இறை சிந்தனையுடன் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து பேரருள்பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.

 

கும்பாபிசேக  நிகழ்வுகள் யாவும் ஓம் TV ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்!

NOTICE NOTICE1 NOTICE3 NOTICE4 NOTICE5

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் !(படங்கள்)

யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா நேற்று 04.092016 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பான முறையில் இடம்பெற்றது.

01 06 07 08 09 10 13 15 17 14182177_1260184400680643_1352306649_n 14182666_1260184437347306_450611937_n 14218106_1260184507347299_1414457856_n 14218203_1260184427347307_106162875_n 14232561_1139980739373773_1345927044895621594_n 14233188_1139980426040471_8412610244162270615_n 14233250_1139980892707091_3549924996927978252_n 14238368_1139980986040415_2170843809317660998_n 14248922_1260184494013967_1609532537_n 14249029_1260184467347303_1162790817_n 14249098_1260184424013974_1226047916_n 14249150_1260184407347309_1861771328_n 14256277_1260184457347304_1553608811_n

பிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படி?

Wedding

ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க தவறுதல் அல்லது ஜாதகம் தொலைந்துப் போவதால் அவர்களது பிறந்த நாளின் பொதுப் பலனை வைத்து பெண் பார்பார்கள்.

இந்த பிறந்த நாள் வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. எப்படி ஜாதகத்திற்கு என்று தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அவ்வாறே பிறந்த தேதியை வைத்து பார்ப்பதற்கும் பொது பலன்கள் மற்றும் பொருத்தங்கள் இருக்கின்றன.

இந்த திகத்தியில் பிறந்தவர் எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், இருக்காது என்ற பலன் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்.

1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள்

1,10,19,28 ம் திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1ஆம் எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 1, 10, 19, 28 திகதிகளும், 6, 15, 24 திகதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும்திகதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும்.

2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்கள்

2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ம் திகதி பிறந்த பெண் மிகவும் சிறந்தவள் என்ற கருது நிலவுகிறது. 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பிறகு வாழ்வே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்,இவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டிருப்பார்கள். நல்ல வழித் துணையாகவும் அமைவாள். 2,11,20,29 ம் திகதியில் பிறந்தவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 திகதிகளும், மற்றும் 1, 6, 7 என்ற கூட்டு எண்ணாக வரும் நாட்களிலும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

3,12,21,30 ம் திகதியில் பிறந்தவர்கள்

3,12,21,30 ம் திகதியில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். 2ஆம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம், இவர்கள் உங்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் திகதியில் பிறந்தவர்கள்

4,13,22,31 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும். மற்றும் 5, 6 எண்களில் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். மேலும் 4ம் திகதியில் பிறந்த ஆண்கள், 6ஆம் திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1, 6 எண்ணாக வரும் திகதிகளில் செய்துக் கொண்டால் திருமண வாழ்க்கை இன்பமையமாக அமையும்.

5,14,23 ம் திகதியில் பிறந்தவர்கள்

5,14,23 ம் திகதியில் பிறந்தவர்கக்கு காதல் மீது அதிக மோகம் இருக்கும். தைரியமாக காதலில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய திகதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் திகதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

6,15,24 ம் திகதியில் பிறந்தவர்கள்

6,15,24 ம் திகதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும். 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிடுவது நல்லது. மற்றும் திருமண நாளை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய திகதிகள் அல்லது 1, 6, 9 போன்ற கூட்டு எண் வரும் நாட்களில் செய்துக் கொண்டால் நல்ல நன்மை பெறலாம்.

7,16,25 ம் திகதியில் பிறந்தவர்கள்

7,16,25 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8ம் திகதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.

8,17,26 ம் திகதியில் பிறந்தவர்கள்

8,17,26 ம் திகதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம்செய்துக் கொள்ளலாம். 2, 7 மற்றும் 8ஆம் என்னில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. 9ஆம் திகதியில் பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள முயல்வார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் இல்வாழ்க்கை செழிக்கும்.

9,18,27 ம் திகதியில் பிறந்தவர்கள்

9,18,27 ம் திகதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த நாட்டமும், முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் அதிகம். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால் திருமண வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு. 3, 6, 9, 1 ஆகிய நாட்களில் திருமணம் செய்துக் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய வன்னி பட்டறை!!

 
வவுனியா வன்னி பட்டறை சமூக அமைப்பினரின் தொடர்பகத்தில் யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்க கனடாவில் வசிக்கும் நிரஞ்சனி சந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

யுத்தத்தினால் கணவனை இழந்து பிள்ளைகள், வறுமமைக்கோடு காரணமாக கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளாதிருக்கும் மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழ்ஙகிவைக்கப்பட்டது.

தமிழ் விருட்சம் சமூக அமைப்பின் தலைவர் திரு.திருமதி சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பொருளாலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு தாலிக்குளம், மகாறம்பைக்குளம், பாரதிபுரம், வேப்பங்குளம், வீரபுரம், மதகுவைத்தகுளம் போன்ற பகுதியிலிருந்து பெற்றோருடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

1 P1210246 P1210249 P1210250 P1210254 P1210256 P1210261 P1210263

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய சப்பர வெள்ளோட்டம்!!

 
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்று (05.09.2016) திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நரசிங்கர் லஷ்மி சமேதராக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேவேளை வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா நேற்றுமுன்தினம் (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

வரும் 10.09.2016 சனிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும், 11.09.2016 ஞாற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும், 12.09.2016 திங்கட்கிழமை தேர்திருவிழாவும், 13.09.2016 செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

1 14183965_1001184513323604_58953928815125611_n 14192165_1001183329990389_5068411429272274926_n 14192577_1581055292200111_210039785544989234_n 14192779_1001183609990361_4221187615572893984_n 14199392_1001183886657000_8510207990002108274_n 14218028_1811993605751224_1243120301_n 14218201_1811993485751236_1816806517_n 14248827_1811993549084563_119816634_n 14249050_1811993565751228_1512542036_n 14249345_1811993402417911_577643274_n 14256445_1811993369084581_1380077715_n 14264937_1001184369990285_2648403123317831_n 14269714_1811993599084558_1825193122_n 14281374_1811993372417914_1508161161_n

வன்னியில் இடம்பெற்ற விபத்துக்களில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

 
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன் உட்புகுந்து தொங்கிய நிலையில் பலியாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச் சம்பவத்தில் பலியான இளைஞன் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று மாலை மல்லாவியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

உந்துருளியில் வேகமாக சென்றபோது உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த இளைஞன் மின்சார கம்பத்துடன் மோதுண்டு இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

D1 D2

தீக்குளித்த இலங்கை அகதி பலி!!

Fire

வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கு 45 வயதான ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி 26 வயதான துஷாந்தினி வசித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி துஷாந்தினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன் போது அதே முகாமில் வசிக்கும் அவரது உறவினரான தயாபரன், துஷாந்தினியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், தயாபரனிடம் இருந்து தப்பிக்க, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் துஷாந்தினி.

இதனையடுத்து, ஆபத்தான நிலையில் சென்னை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாலாஜாபேட்டை பொலிஸார் தயாபரனை கைது செய்துள்ளனர். உயிரிழந்த துஷாந்தினிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வானில் தோன்றிய பிள்ளையார் : மட்டக்களப்பில் சம்பவம்!!

 
நேற்று இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில் பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

G G1

8 மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள்!!

Facebook

கடந்த 8 மாதங்களுக்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகஇலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழையும் சம்பவங்கள் தொடர்பாகஅதிகம் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப்பிரிவின்பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள்சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இணையங்களுக்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து அதன் தகவல்களைமாற்றியுள்ளமை தொடர்பில் 6 முறைப்பாடுகள் இந்த வருடத்திற்குள்கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இணையம் ஊடாக நிதி மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பாகவும் இதுவரை 5முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் படுதோல்வி : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

Cri

ஒருநாள் தொடரில் மோசமாக தொடரை பறி கொடுத்த இலங்கை அணி, T20 தொடரில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணியை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

இதில் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டில்ஷான் இடம்பெற்றுள்ளார். இவர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார்.

மேலும், சிறிவர்த்தனே, திசர பெரேரா ஆகியோரும் இந்த அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்யூஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், சந்திமால் தலைவராக செயல்படவுள்ளார்

இலங்கை T20 அணி

குசால் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால் (அணித்தலைவர்), திலகரட்ன தில்ஷான், தனஞ்சய டி சில்வா, சாமர கபுகெதர, சச்சித்ர பத்திரன, மிலிந்த சிறிவர்த்தனே, சுரங்க லக்மால், திசர பெரேரா, சச்சித்ர சேனாநாயக்க, சீகுகே பிரசன்ன, தசுன் சானக, கசுன் ராஜித.

மாடுகள், எருமைகளுக்கான ஓட்டப் போட்டி!!

 
இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் மாடுகள் மற்றும் எரு­மை­க­ளுக்­கான ஓட்டப் போட்­டிகள் அண்மையில் நடை­பெற்­றது. அலங்­க­ரிக்­கப்­பட்ட பல மாடு­களும் எரு­மை­களும் இப்­ போட்­டி­களில் பங்­கு­பற்­றின.

மாகேபுங் எனும் இவ்­ வி­ளை­யாட்டு விழா பாலி தீவி­லுள்ள மேற்கு ஜெம்ப்­ரானா மாவட்­டத்தில் இரு விவ­சாய சமூ­கங்­களால் பாரம் பரியமாக நடத்தப்படுகிறது.

M1 M2 M3 'M4 M5

திரு­ம­ணத்­துக்­காக ஏ.ரீ.எம் நிலை­யத்தில் கொள்­ளை­ய­டித்த இளை­ஞன் சிறை­யில்!!

Kollai

திரு­ம­ணத்­துக்­காக கொள்­ளை­ய­டித்த புது­மாப்­பிள்ளை மற்றும் அவ­ரது நண்­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சென்னை பாரி­முனை பகு­தியில் கடந்த வாரம் ஏ.ரீ.எம். நிலை­யங்­க­ளுக்கு பணத்தை நிரப்ப சென்ற வேன், பணத்­துடன் கடத்­தப்­பட்­டது. அதி­ர­டி­யாக பூக்­கடை துணை கமி­ஷனர் ஜெயக்­குமார் தலை­மை­யி­லான பொலிஸ் குழு கள­மி­றங்கி வேன் சாரதி ராஜேஷ், அவ­ரது நண்பர் லிங்கம் ஆகி­யோரை கைது செய்­தது.

அய­னா­வ­ரத்தில் உள்ள தனியார் நிறு­வனம் மூலம் ஏ.ரீ.எம் நிலை­யங்­க­ளுக்கு பணம் நிரப்­பப்­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வனம் மூலம் பாரி­மு­னையில் உள்ள ஏ.ரீ.எம் நிலை­யங்­க­ளுக்கு கடந்த வாரம் கொண்டு வரப்­பட்­டது. 50 இலட்­சத்­துக்கும் அதி­க­மான பணம் வேனில் இருந்­துள்­ளது.

குறு­கிய சந்தில் இருந்த ஏ.ரீ.எம் நிலை­யத்­துக்கு வேன் செல்ல முடி­யா­ததால் வீதியில் வேனை நிறுத்­தினர். பின்னர் பலத்த பாது­காப்­புடன் பணம் ஏ.ரீ.எம் நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இந்த சம­யத்தில் பெரம்­பூரை சேர்ந்த சாரதி ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்­தி­ருந்­துள்ளார். அப்போது அவ­ருக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­துள்­ளது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசி­யுள்ளார்.

இந்த சம­யத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர்கள், அங்­கி­ருந்து சென்­றுள்­ளனர்.
ராஜேஷும் திருடன், திருடன் என்று சத்தம் போட்­டுள்ளார். இதை­ய­டுத்து பாது­கா­வ­லர்கள் அங்கு விரைந்­துள்­ளனர். இது­கு­றித்து வடக்கு கடற்­கரை பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உட­ன­டி­யாக வேன் இலக்கம் மற்றும் அடை­யாளம் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் தெரி­விக்­கப்­பட்டு பாது­காப்பு நட­வ­டிக்கை பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம­யத்தில் ராய­புரம் பகு­தியில் வேன் மட்டும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளது. வேனை பறிமுதல் செய்த பொலிஸார், தொடர்ந்து பணம் கொண்டு சென்ற நிறு­வன ஊழி­யர்­க­ளிடம் விசா­ரணை செய்தனர்.

அப்­போது சாரதி ராஜேஷ் மீது சந்­தேகம் ஏற்­பட்­டது. அவ­ரிடம் தனி­யாக பொலிஸார் விசா­ரணை செய்­துள்­ளனர். அவ­ரது செல்­போ­னுக்கு வந்த அழைப்­பு­க­ளையும் பொலிஸார் ஆய்வு செய்­தனர்.

அப்­போ­துதான் கொள்­ளை­ய­டிக்க திட்டம் திட்­டி­யதே ராஜேஷ் என்­பது பொலி­ஸா­ருக்கு தெரியவந்தது. உட­ன­டி­யாக ராஜேஷை பொலிஸார் கைது செய்­தனர்.

தொடர்ந்து வேனைக் கடத்­திய ராஜேஷின் நண்­ப­ரான வியா­சர்­பா­டியை சேர்ந்த லிங்­கத்­தையும் பொலிஸார் கைது செய்து இரு­வ­ரி­ட­மி­ருந்து 26 இலட்சம் ரூபாயை மீட்­டனர்.

இது­கு­றித்து பொலிஸ் அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “கைதான ராஜேஷ், பணம் நிரப்பும் நிறுவ­னத்தில் ஏற்­க­னவே வேலை­பார்த்­தவர். இப்­போது சொந்­த­மாக வேன் ஓட்டி வரு­கிறார்.

பணம் சப்ளை செய்யும் நிறு­வ­னத்தில் சாரதி இல்­லாத சம­யத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்­படி தான் நேற்றும் வேலைக்கு சென்­றுள்ளார். ராஜேஷின் சொந்த ஊர் திரு­வள்ளூர் மாவட்டம். 8ஆம் தரம் வரை படித்த அவ­ருக்கு வேன் வாங்­கி­யதில் 4 இலட்சம் ரூபா கடன் உள்­ளது.

மேலும், நேற்று முன்­தினம் சிறு­னி­யத்தில் அவ­ருக்கு திரு­மணம் நடக்­க­வி­ருந்­தது. திரு­ம­ணத்­துக்கு தேவை­யான பணமும் கையில் இல்லை. இந்த சம­யத்தில் இலட்­சக்­க­ணக்­கான பணத்தை பார்த்தவுடன், லிங்­கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணம் நடக்க இருந்­த புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

இலங்கை உயர்ஸ்­தா­னிகர் மீது தாக்­குதல் : மலேஷிய பொலிஸாரால் ஐவர் கைது!!

Attack

கோலா­லம்­பூ­ர் சர்­வதேச விமான நிலை­யத்தில் மலே­ஷி­யா­வுக்­கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்­ரா ஹிம் அன்சார் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் ஐவரைக் கைது செய்துள்ளதாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தினம் விமான நிலை­யத்தில் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளான உயர்ஸ்­தா­னிகர் அன்சார், கோலா­லம் பூர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரும் நிலை­யி­லேயே தாக்­கு­த­லுடன் தொடர்­புடைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மலே­ஷிய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­­மை அதி­காரி டத்­­தோ முஹம்மத் அத்னான் அப்துல்லாஹ் மேற்­படி சம்­பவம் தொடர்பில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் கைத செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய மேல­திக விப­­ர­ங்­களை அவர் ஊட­கங்­க­ளுக்கு தெரிவிக்க மறுத்­து­விட்­டார்.

இதே­வேளை மேற்­படி தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் பலத்த கண்­ட­னத்­தை வெளியிட்­டுள்ள இலங்கை வெளிவிவ­கார அமைச்சு, கொழும்­பி­லுள்ள மலே­சிய உயர்ஸ்­தா­னி­கரை அழைத்து அதிருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இச் சம்­பவம் தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­வா­ளிகள் சட்டத்தின் முன் நிறு­த்­தப்­பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்­துள்­ளது.

நேற்­றைய தினம் கொழும்­பி­லுள்ள மலே­சிய உயர்ஸ்­தா­னி­கரை நேரில் அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள வெளிவகார அமைச்சின் செய­லாளர், விரும்­பத்­த­காத இச் சம்­பவம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­­­யுள்­ளார்.

மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு சென்­றி­ருந்த அமைச்சர் தயா கம­கேவை வழி­ய­னுப்பும் பொருட்டு மலே­­சி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் நேற்று முன்­தினம் மாலை கோலா­லம்பூர் சர்­வ­தேச விமான நிலையத்­துக்குச் சென்ற சம­யமே அங்கு குழு­மி­யி­ருந்த ஒரு குழு­வினர் அவ­ர் மீது கடு­மை­யான தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர்.

இச் சம்­பவம் தொடர்­பான சி.சி.ரி.வி. காணொ­ளியும் மலே­சிய ஊட­கங்­களில் நேற்று வெளியிடப்பட்டுள்­ள­து.

மஞ்சள் நிற மேலாடை அணிந்­தி­ருக்கும் உயர்ஸ்­தா­னி­கர் அன்­சாரை துரத்தி வரும் 5க்கும் மேற்பட்டோர் அடங்­கிய குழு­வினர் அவரை வழி­ம­றித்து சர­மா­ரி­யாக தாக்­குதல் நடாத்தும் காட்சி சி.சி.ரி.வி.யில் தெளிவா­கப் பதி­வா­­கி­யுள்­ளது.

உயர்ஸ்­தா­னிகரை நோக்கி கடு­மை­யான வார்த்­தை­களைப் பிர­யோ­­கித்­த­வாறே அவ­ரது முக­த்­திலும் தலை­யிலும் ஐவர் ஒரே சம­யத்தில் தாக்­குதல் நடத்தும் காட்­சியும் மற்­றொ­ருவர் உயர்ஸ்தானிகரின் வயிற்றுப் பகு­தியில் கால்­களால் உதைக்கும் காட்­சியும் அதில் பதிவாகியுள்ளது.

அதே சமயம் அவ்­வி­டத்­துக்கு வரும் விமான நிலைய பாதுகாப்பு அதி­கா­ரி­களும் உயர்ஸ்­தா­னி­கரின் உத­வி­யா­ளர்­களும் அவரை தாக்­கு­தல்­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து மீட்டு அழைத்துச் செல்லும் காட்­சியும் அதில் பதி­வா­­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­­து.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : 8 பேருக்கு விளக்கமறியல்!!

Sulaiman

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கொலைச் சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

48 மணி நேர தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் எட்டு பேரும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குரித்த சந்தேக நபர்கள் தொடர்பில் அடையாள அணிவகுப்பினை நடாத்த பொலிஸார் மன்ரை கோரியுள்ள்Kஅ நிலையில் கைதனோரின் அடையாளத்தை வெளிக்கடடாது அவர்களை முழுமையாக மறைத்த நிலையில் மன்றில் ஆஜர் செய்யவும் மீள அவர்களை சிறைக்கு கொண்டு செல்லவும் நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் பயன்படுத்திய தொலைபேசியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்ப்வம் இடம்பெறும் போது சந்தேக நபர்கள் சிலர் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவையும் நீதிமன்றில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட ஏற்கனவே பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய மட்டக்குளி பகுதியின் வாடகைக் கார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்ப்ட்ட டொயாடோ ரக கார் மற்றும் 8 ஆவது சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய கடுகண்னாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கொலைக்கு பயன்படுத்தப்ப்ட்ட கத்தி ஆகியனவும் மன்ரில் வழக்குப் பொருளாக சமர்பிக்கப்பட்டுள்ளன.

பிரிக்க முடியாத புலி சிங்க நட்பு : வியப்பில் மக்கள்!!(படங்கள்)

 
பொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது. ஆனால் இந்த புகைப்படங்கள் அவற்றை பொய்யாகியுள்ளது.

ஜப்பானின் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்த சிங்கம் மற்றும் புலி குட்டிகள் இரண்டும் இணைப்பிரியாத நண்பர்கள் ஆகியுள்ளது. இது அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1 2 3 4 5 6 7

சிறுவனின் முகத்தில் சுடுநீரை ஊற்றிய சித்தி!!

Boy

7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது ) எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார். இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறித்த சிறுவனுக்கு தனது தந்தை இரண்டாவதாக திருமணம் முடித்த பெண்ணே இவ்வாறு சுடுநீரை ஊற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை கைது செய்யும் நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.