100 வயதில் 81 பேர் : விசித்திர கிராமத்தின் ரகசியம் என்ன?

Age

இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் மொத்த மக்கள் தொகையானது வெறும் 700 எண்ணிக்கைதான். ஆனால் இந்த கிராமத்தில் சதம் கண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வருபவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்குள்ளவர்களின் உணவு பழக்க வழக்கமே நீண்ட ஆயுளுடன் இங்குள்ள மக்கள் வாழ்வதற்கு முதல் முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அந்தரங்க வாழ்க்கையிலும் இவர்கள் சிறந்து விளங்கியுள்ளதும் நீண்ட ஆயுள் வாழ்வதற்கு காரணம் என கூறுகின்றனர்.

ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் வாழும் முதியவர்கள் இருதய நோயினாலும், உளவியல் பிரச்னைகளாலும், வயது தொடர்பான பல இன்னல்களிலும் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த குட்டி கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் தள்ளாத வயதிலும் பெருமகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆலிவ் ஆயில், காய்கறிகள், மீன் மற்றும் பழ வகைகளையே விரும்பி உண்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் மீன் உணவை விரும்பி எடுத்துக்கொள்கின்றனர். மட்டுமின்றி எவ்வித ரசாயன கலவையும் சேர்க்காத இயற்கையான பழ வகைகள் மற்றும் காய்கறிகளையே பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலானவர்கள் அவர்களின் வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறி பழங்களை மட்டுமே உணவாக பயன்படுத்துகின்றனர். இறைச்சி உணவுகளை கூட அவர்களே சொந்தமாக தங்கள் குடியிருப்பில் பராமரிக்கின்றனர்.

இந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் ரசாயன தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாக தொன்று தொட்டே பராமரித்தும் வருகின்றனர்.

சிலர், இங்குள்ளவர்களின் ஜீன்களில் நீண்ட ஆயுள் வாழும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் rosemary என்ற மருத்துவ குணம் நிறைந்த தழையை அதிகம் எடுத்துக்கொள்வதால் இவர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதாகவும் கூறுகின்றனர் சிலர்.

இறந்துபோன 2 வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் வடித்த தாய் : தொடரும் அவலம்!!

Dead Mother

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தாய் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேசம் பக்பத் மாவட்டத்தை சேர்ந்த இம்ரானா என்பவர், உடல்நிலை சரியில்லாத தனது மகளை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அங்கு சென்றபின்னர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் இம்ரானா தனது மகளின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அம்புலன்ஸ் வசதி வேண்டுமென்று கேட்டுள்ளார்.

இதற்கு மருத்துவமனை அதிகாரிகள் வெளிமாவட்டத்திற்கு அம்புலன்ஸ் வசதி கொடுக்க முடியாது. நீங்கள் தனியார் அம்புலன்ஸை அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இம்ரானா தனியார் அம்புலன்ஸை கேட்டுள்ளார். ஆனால் தனியார் அம்புலன்ஸ் ஓட்டுநரோ 1,500 ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியதால் கையில் பணம் இல்லாத இம்ரானா செய்வதறியாது திகைத்து மருத்துவமனை வாசலிலே தன் மகளை கட்டிக் கொண்டு விடிய விடிய கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் காலையில் சமூக சேவகர்கள் சிலர் நிலைமையை அறிந்து அவருக்கு பண உதவி அளித்ததன் பின்பு மகளின் உடலை இம்ரானா வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் ஸ்டெச்சர் வசதி கூட இல்லாமல், மகனை தோளில் தூக்கிக் கொண்டு தந்தை ஒருவர் வேறு வார்டுக்கு ஓடிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தம்பான ஆதிவாசி ஒருவர் கைது!!

Arrest

கண்டியில் 14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தம்பான ஆதிவாசி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் முறைப்பாட்டிற்கு அமைய கண்டி பொலிஸ் நிலையத்தின் மகளீர் மற்றும் சிறுவர் பணியகம் சந்தேகநபரான ஆதிவாசியை கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குறித்த ஆதிவாசிக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காலப்பகுதிக்குள் இடைகிடையே சிறுவனை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சிரியாவில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 30 இற்கும் மேற்பட்டோர் பலி!!

Sriya

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியங்களில் நடைபெற்றுள்ள தொடர் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் முக்கிய விமானத்தளம் அமைந்திருக்கும் கடற்கரை நகரமான தார்ட்டூஸில் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அங்கு மட்டும் 30 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பெரும்பாலனாவர்கள் முன்னர் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்த மீட்புதவி பணியாளர்கள்.

ஹோம்ஸில் இருந்த அரச படையின் சோதனைச் சாவடி ஒன்றில் இன்னொரு கார் குண்டு வெடித்ததில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியா அரசாலும், குர்து படையினராலும் இரண்டு பிரிவாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட கிழக்கில் இருக்கின்ற ஹசாக்கா நகரில், ஐந்து பேர் கொல்லப்பட்டுள்னர்.

நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்!!

Wedding

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுஜிபாலா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து டைரக்டர் பி.சி. அன்பழகன் இயக்கிய ´அய்யாவழி´ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் ´முத்துக்குமுத்தாக´, ´சந்திரமுகி´, ´கோரிபாளையம்´ போன்ற பல படங்களில் சுஜிபாலா நடித்தார். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

நடிகை சுஜிபாலாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊட்டியை சேர்ந்த பிரனேஷ் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து விட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

நடிகை சுஜிபாலா- பிரனேஷ் திருமணம் இன்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடந்தது. நடிகை சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார். மணமகன் பிரனேஷ் கோட்-சூட் அணிந்திருந்தார்.

பங்கு தந்தை லியோன் கென்சன் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகை சுஜிபாலா கழுத்தில் பிரனேஷ் தாலி கட்டியதும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

சிறுமிகள் உள்பட 6 பெண்கள் குளத்தில் மூழ்கி மரணம்!!

Dead

மராட்டிய மாநிலத்தில் குளத்தில் பூஜை செய்த சிறுமிகள் உள்பட 6 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஹிங்கானா தாலுகாவில் தேவ்ளி-சாவங்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குவதையொட்டி விரதம் மேற்கொண்டு வந்தனர். இவ்வாறு விரதம் இருந்த அந்த பகுதியை சேர்ந்த மந்தாதாயி நாகோசே (வயது45), பிரியா ராவுத் (17), ஜானவி (13), பூஜா ரத்தன் (17), பூனம் துல்சிராம் (18), பிரனாலி ராவுத் (16) ஆகியோர் சம்பவத்தன்று அங்குள்ள குளத்திற்கு பூஜை செய்ய சென்றனர்.

அவர்கள் 6 பேரும் குளத்தின் கரையில் பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் 4 பெண்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். பின்னர் ஒருவர்பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் குளித்து கொண்டிருந்த மற்ற 2 பேர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த கிராம மக்கள் குளத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி 6 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டொக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் 6 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகள் உள்பட 6 பெண்கள் பலியானது அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை T20 குழாமில் பாரிய மாற்றங்கள்!!

SL

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி நாளை கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

2ஆவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 4ஆவது போட்டியின் போது எஞ்சலோ மெதிவ்ஸ் பின்கால் தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு 1 மாத கால ஒய்வு அவசியம் என வைத்திய நிபுணர்கள் கூறி உள்ள நிலையில் தான் அணியின் தலைமை பதவி தினேஷ் சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டி20 போட்டிகள் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணிக்காக விளையாடும் இறுதி தொடராக அமைய உள்ள நிலையில் இலங்கை அணிக்கு மிலிந்த சிறிவர்தன மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்ட திஸர பெரேரா, இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் கலக்கிய கசுன் ரஜித மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி சார்பாக இடம் பிடித்து இருந்த தனுஷ்க குணதிலக, எஞ்சலோ பெரேரா, உபுல் தரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, லஹிரு குமார, அமில அபோன்சோ மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் இந்த டி20 குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 குழாமில் இடம் பெற்று இருந்த சமிந்த பண்டார, பர்வீஸ் மஹ்ரூப், ரமித் ரம்புக்வெல்ல, நுவான் பிரதீப் ஆகியோரும் இந்த குழாமில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இலங்கை டி20 குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), திலகரத்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, சாமர கபுகெதர , திஸர பெரேரா, தசுன் சானக, சச்சித் பத்திரண, சீக்குகே பிரசன்னா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, சசித்ர சேனாநாயக்க.

ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியுமா?

Internet

இணையத்தளம் என்பது சம காலத்தில் அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த இணைய வலையமைப்பின் ஊடாக உலகளவில் நாள்தோறும் பாரிய அளவு தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

இந் நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பாடல் சேவையினை வழங்கும் முன்னணி நிறுவனமான AT&T உலகளவில் எவ்வாறு தரவுப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பான புகைப்படம் ஒன்றினையும், தரவுகளின் கொள்ளளவினையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 49 பீட்டா பைட் (49 Petabytes அல்லது 49,000,000 Gigabytes) அளவிலான தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

உலகிலேயே மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்த தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் AT&T நிறுவனம் மேற்கொண்ட பிரத்தியேக ஆய்வின் அடிப்படையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கண்ட தகவல்களை உள்ளடக்கிய வீடியோ ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தவமிருக்கும் பிக்குவுக்கு தானம் வழங்கும் யானைகள் : மனதை நெகிழவைக்கும் காட்சிகள்!!

 
காட்டில் தவத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கும் காட்டு யானைக் கூட்டம் ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஆன்மீகத்திற்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய இணைப்பை இல்லாமல் செய்து விட முடியாது என்பதை காட்டும் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு நடந்திருந்தாலும் இந்த பிக்குவிற்கு யானைகள் தானம் வழங்கும் இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

E1 E2 E3

தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!

D1

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது.

கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்காலிக குடியிருப்பிலே தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் மரணம் தொடர்பிலான காரணங்கள் தெரியவில்லையென்றும் இச்சம்பவம்தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

D2

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி கோவிலில் அமுதசுரபி அன்னதான மண்டபம் திறப்பு!(படங்கள்)

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென  நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி எனும் அன்னதானமடம் கடந்த 02.09.2016 வெள்ளிகிழமையன்று   திறந்து  வைக்கபட்டது .

சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் அவர்களின்  நிதிதவியில்  நிர்மாணிக்கப்பட்ட  அமுதசுரபி  அன்னதான  மண்டபத்தை   வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து  திறந்து வைத்தனர்.

13625393_1072133472835113_3252187256828260491_n 14183742_1072133306168463_5515607347699197115_n 14199487_1072133252835135_6017372314956720035_n 14212074_1072133179501809_8867367509882238370_n 14212188_1070168959698231_2988989217819463927_n 14224944_1070169586364835_5979460608896325054_n 14232661_1072133389501788_3680969152581363085_n 14233191_1072133152835145_5717202635036192832_n 14233254_1072133209501806_2789979976297335636_n 14238155_1072133342835126_7906410738085772957_n 14238155_1072133419501785_8185737255206851440_n

வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா சேமமடு படிவம் 1  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா நேற்று 04.09.2016ஞாயிற்றுக்கிழமை எழுமணி முதல்   ஒன்பது மணிவரையான  சுப முகூர்த்த வேளையில்  பிரதிஸ்டகுரு சிவஸ்ரீ இராமநாத பத்மகுமார குருக்கள்  தலைமையில். இடம்பெற்றது..

14100510_1216669025063786_2618299491437593994_n 14183816_1216669488397073_4505715474445332784_n 14184467_1216668308397191_3504442423920367575_n (1) 14192115_1216668705063818_7248127355500329591_n 14211953_1216669268397095_5391836251403171718_n 14212673_1216668848397137_1864509348713337339_n 14224689_1216668355063853_512585196673218793_n 14233086_2020799971479721_1339799670522598008_n 14233087_1216668571730498_5459789350136517811_n 14264051_1216668418397180_3651870373038643998_n 14265092_1216668471730508_4526467015509056731_n

வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற   எண்ணெய்காப்பு  நிகழ்வு!(படங்கள்)

வவுனியா சேமமடு படிவம் 1  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழாவை முன்னிட்டு   03.09.2016 சனிக்கிழமை  எண்ணெய் காப்பு இடம்பெற்றது . இதில்  ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

14102690_2020536544839397_4925676274848587099_n 14141872_851277738340656_8989205097230188318_n 14141970_851261921675571_5747719349686219535_n 14183823_851872954947801_596451962313680339_n 14184277_284009921980490_1907750648133289748_n 14184467_1216668308397191_3504442423920367575_n 14192009_284009818647167_6429781283184403951_n 14192030_851870898281340_4275367755547598861_n 14199703_283684102013072_2913787770523153487_n 14202484_851277461674017_5808480682369411291_n 14202594_851261968342233_2942134723146627110_n 14202667_851261988342231_145566687526104889_n 14202672_851870488281381_1160263650041182596_n 14202748_851277785007318_4537069090200592948_n 14211963_284009931980489_6351826430979216194_n 14212053_851871111614652_8572249712605500042_n 14212127_2020536588172726_5376717180732598226_n 14222169_2020536718172713_3489542594559319887_n 14222187_851870511614712_501156600359642979_n 14224745_2020536508172734_3460128310168528729_n 14224860_284009991980483_697679083810735363_n 14225349_851872858281144_1013611332297931995_n 14225483_851262045008892_3510964497787987142_n 14232437_851277941673969_4481764651671230591_n 14232471_283684012013081_7983950630218106876_n 14238176_284009761980506_8805685699072310227_n

 

 

யாழில் ஆலய வழிபாடு நிகழ்த்திய கண்டியிலிருந்து வந்த யானை !!(படங்கள்)

யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில்  நேற்று இடம்பெற்ற  மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து  நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட  யானை  யாழ்நநகரில்  உள்ள    நல்லூர் கந்தசுவாமி கோவில்  மற்றும்  வீரமாகாளி அம்மன் கோவில்  என்பவற்றில்   வழிபாடு  செய்து   திருவெண்காட்டை  வந்தடைந்தது..

14199382_771643512978260_2442411854620283126_n 14202744_771643419644936_6880165429024923850_n 14222117_771643416311603_5208158965393367213_n 14224744_771643462978265_533264770441288284_n 14233196_771643456311599_5788600638083972435_n 14233205_771643506311594_7442837100633150248_n 14237707_771643496311595_1049298645836161172_n 14238244_771643559644922_2364853764696610413_n

10 திருமணப் பொருத்தங்களும் எவை என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!!

Poruththam

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். இனி, 10 பொருத்தம் என்றால் என்ன? மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்…

தினப் பொருத்தம் தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம்

ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப – துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

பூமியே பாறையாக மாறிவிடும் : நிபுணர்களின் திடுக்கிடும் தகவல்கள்!!

Earth

இன்றைய காலகட்டத்தில் இருப்பது போன்ற சூழல் நீடித்தால் 2050ம் ஆண்டுக்குள் பாதி உயிரினங்களே இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சூழலியல் நிபுணராக ரீஸ் ஹால்டர் என்பவர் கூறுகையில், பூமியை மனிதர்கள் மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.
இந்த நிலை நீடித்தால் இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமியே ஒரு பாறை போன்று மாறிவிடும்.

இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும்.
இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

காலநிலைகளில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும், இதற்கு காரணம் அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றுவது தான். கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம்.

இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும்.

அதாவது பூமியில் பாதி உயிரினங்களே இருக்காது, இதை சரிசெய்ய நாம் இயற்கையை காப்பாற்ற வேண்டும். இயற்கையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.