இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்புக்கு 263 ஓட்டங்களைப் பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்படி, அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆட்டமிழக்காமல் மெக்ஸ்வெல் 145 ஓட்டங்களையும், ஹெட் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கை சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்றுக் கொண்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு 6 விக்கட்ட இழப்பிற்கு 260 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 264 ஓட்டங்களை நோக்கி களம் இறங்கிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அணி சார்பாக அதிக பட்சமாக தினேஷ் சந்திமால் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அமலாபால் அவருடைய கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் ஒரு பேட்டியில் அமலாபால், தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன், உண்மையான மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவது இல்லை, நமக்குள் தான் உள்ளது.
இஷா மையத்தில் கற்றுக் கொண்ட யோகா செய்து வருகிறேன். அது என் மனம் மற்றும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
எனக்கு என் சகோதரர் அபிஜித் பால் தான் மிகவும் ஆதரவாக உள்ளார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடனும் இருக்க முடியாது, அதே சமயம் அவர் இல்லாமலும் வாழ முடியாது என கூறியுள்ளார்.
யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கி நேற்று (06.09.2016) இரவு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான பேருந்தொன்றில் வவுனியா இளைஞனான அன்ரனி ரெக்சன் (26) பயணித்துக்கொண்டிருந்த வேளையில் பளை பிரதேசத்தை அண்மிக்கும் வேளையில் மற்றுமொரு தனியார் பேருந்தொன்றுடன் போட்டிக்கு அதிவேகமாக பயணிப்பதை அவதானித்த இளைஞன் அப்பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டவேளை இந்த பேருந்தை குறுக்கிட்ட மற்றைய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட இவ் இளைஞனை இரும்புக் கம்பியினாலும் கூறிய ஆயுதத்தினாலும் தாக்கிவிட்டு தப்பித்துள்ளனர்
அத்துடன் சுதாகரித்துக்கொண்ட இளைஞனின் நண்பர்கள் வவுனியாவில் வைத்து குறித்த பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து பொலிஸாரின் உதவியுடன் வழிமறித்து இளைஞனை தாக்கிய சாரதி மற்றும் நடத்துனரை உடனடியாக கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் மற்றும் கூறிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞன் வவுனியா பொதுவைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.
வங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை பார்க்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விதார்த், எதிர்வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் உன்னிப்பாக கவனித்தபடி செல்கிறார்.
இந்நிலையில், பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், இதற்காக ஒரு வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்கிறார். அவர், கண் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் இதற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் என்றும் கூறுகிறார். பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கையில், எதிர்வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார்.
ஏற்கனவே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ரகுமான் வீட்டில் இருக்கிறார். விதார்த் சென்று கதவைத் தட்டி விசாரித்தபோது ஐஸ்வர்யா இறந்தது தெரியவருகிறது. விதார்த்தைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ரகுமான், தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். விதார்த்தும் உதவி செய்வதாக கூறிவிட்டு செல்கிறார்.
பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில், ரகுமானை தனியாக சந்தித்த விதார்த், தன்னுடைய கண் சிகிச்சைக்கு பணம் கேட்கிறார். அவரும் கேட்ட பணத்தை கொடுக்கிறார். இதுதான் சமயம் என்று மருத்துவமனை நிர்வாகம் மேலும் பணம் கேட்கிறது. அதன்பின்னர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துபோகும் மற்றொரு இளைஞர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பணம் வாங்குகிறார்.
இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கறந்த விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா? ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்க என்ன காரணம்? கொலையாளி யார்? என்பதே மீதிக் கதை.
நாயகன் விதார்த்திற்கு யதார்த்தமான கதாபாத்திரம். பார்வைக் கோளாறை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சி, சுயநலத்திற்காக மனசாட்சியை மீறி இரண்டு பேரை பலிகடாவாக்கி அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். படம் முழுக்க அவரது கரக்டர் பேசுகிறது.
நடுத்தர குடும்பத்து பெண்ணாக வரும் நாயகி பூஜாவுக்கு ஆடம்பரம் இல்லாத கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு அழுத்தமான கதாபாத்திரம் ஐஸ்வரியா ராஜேஷ். இடைவேளைக்குப் பிறகே அவருக்கு டயலாக் வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்.
பிரச்சனையில் சிக்கி வெளியே வருவதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்யும் தொழிலதிபராக வரும் ரகுமான், விதார்த்துக்கு பக்கபலமான கரக்டரில் வரும் நாசர், குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.
‘காக்கா முட்டை’ படத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரில் கலந்த கிரைம் படத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன். ஒளிப்பதிவிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. பாடல்கள் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒருவருக்கு தனது கையடக்க தொலைபேசியானது மிக முக்கியமான இயந்திரமாகும். நவீனகாலத்தில் இத்தகைய கையடக்க தொலைபேசிகள் தொலைந்து விடும் சந்தர்ப்பத்தில் அதனை விரைவில் துல்லியமாக கண்டுபிடிக்க வழிகள் உண்டு.
Iphoneகளுக்கு பிரத்தியேக வழிகள் இருப்பதுடன் Android இயங்குதளம் கொண்ட தொலைபேசிகளுக்கும் சிறந்த வழிமுறைகள் உண்டு.
முதலில் உங்களுக்கு ஒரு வலுவான மின்னஞ்சல் முகவரி அவசியம். அதனை Google / Gmail மூலமாகவோ அல்லது வேறு மின்னஞ்சல் சேவை மூலமாகவோ உருவாக்கி கொள்ளலாம்.
அதன் பின்னர் உங்கள் கையடக்க தொலைபேசியில் “Phone Tracker” அல்லது அதனை ஒத்த ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
அதன் பதிவின்போது உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், அவற்றில் மின்னஞ்சல் முகவரியும் ஒன்று.
அவை எல்லாவற்றையும் முறையாக நிரப்பிய பின்னர், உங்கள் மடிக்கணனி அல்லது வேறு கணனிக்கு சென்று Google தேடல் பொறியில் “Find my Phone” என்ற சொற்றொடரை தேடச் செய்யும் பொழுது, உங்களுக்கு ஒருவரைபடம் தெரியும்.
அந்த வரைபடத்தில் ஏற்கெனவே நீங்கள் உங்கள் கைடக்க தொலைபேசியில் பதிந்த உங்கள் தொலைபேசி தகவல்களின் அடிப்படையில் தொலைபேசியின் இருப்பிடத்தை அறியலாம்.
மேலும் அந்த சுற்று வட்டத்திற்குள் உள்ள ஏனைய தொலைபேசிகருவிகளையும் அதுகாட்டும். ஆனால் அவற்றை கட்டுப்படுத்த முறையான தகவல் பதிவு அவசியம்.
இவ்வாறு தகவல்கள் மற்றும் வரைபடம் தெரிந்ததும் தொலைபேசியில் ஒருஒலியை ஒலிக்க செய்யலாம்.
ஒலியை ஒலிக்கச் செய்வதன் மூலம் தொலைபேசி–கணனிவலையமைப்பு வேலை செய்கிறதா என்று பார்க்கலாம் அல்லது LOCK செய்யலாம்.
LOCK செய்தால் அந்த தொலைபேசியை அதன் பின்னர் இயக்க முடியாது. அதனை விடுத்து ERASE செய்யலாம். அவ்வாறுசெய்தால் அந்த தொலைபேசியை முழுமையாக செயலிழக்க செயயமுடியும்.
நீங்கள் முறையாக பதிந்து அடையாளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இவையெல்லாவற்றையும் செய்ய முடியும். இது ஒரு பாதுகாப்பான வழிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால் அந்த நபருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால் 7500 ரூபா அபராதத்துடன் கடும் வேலையுடன் கூடிய 13 வருட சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
லிஹிரியாகம கிழக்கு கஹடவில பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
2008ஆம் ஆண்டு மாராவில கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை பலவந்தமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
துஷ்பிரயோகத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு பெண்ணின் மகன் மாராவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுமுறை விடுதி ஒன்றை நடாத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ஜேர்மனியிலிருந்து வந்துள்ள குறித்த வயோதிபப் பெண் தனது மகனின் ஹோட்டலில் நான்கு வருடங்களாக தங்கியிருந்துள்ளார்.
இச் சம்பவம் இடம்பெற்ற தினம் இரவு 12.30 மணியளவில் தான் தனது அறையில் உறக்கத்தில் இருந்த போது உடனே அறையின் கதவைத் திறக்குமாறு கூறப்பட்ட சத்தம் கேட்டு கண்விழித்து அறையின் வெளியில் வந்ததாகவும், அதன் போது பிரதிவாதிகள் இருவரும் மேலும் சிலருடன் பலவந்தமாக தனது அறையின் உள்ளே நுழைந்து தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு அறையிலிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றை கொள்ளயைிட்டுக் கொண்டு தப்பிச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது முதலாவது பிரதிவாதி தான் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு இரண்டாவது பிரதிவாதி தான் குற்றவாளி என தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் வழக்கின் தீர்ப்பை தெரிவிக்கும் முன்னர் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணின் வயதை கருத்திற் கொண்டதாகவும், இதன் ஊடாக சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வது முக்கியமானது என்பதால் இந்த தண்டனையை வழங்கியதாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
விதிக்கப்பட்ட அபராத தொகையினைச் செலுத்த தவறின் அதற்காக ஆறு மாத இலகு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதேவேளை, வழக்கின் முதலாவது பிரதிவாதி தொடர்பிலான விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகம்- கர்நாடகா மத்தியில் மிகப்பெரிய பஞ்சாயத்தாக இருக்கும் காவேரி நதி நீர் பிரச்சனை பற்றி தனக்கு அவ்வளவாக தெரியாது என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் மகளிர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த அவர் மேலும் கூறுகையில், விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் படும் பிரச்சனைகள் என எதையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மெளனம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
காவேரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாதது குறித்து தனக்கு அவ்வளவாக தெரியாத என கூறிய நக்மா, சென்னையில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது கர்நாடகா அரசு உதவி செய்ததாக குறிப்பிட்டார்.
அப்படியெல்லாம் உதவி செய்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் என்றும், அதை பற்றி முழுமையாக அம்மாநில அரசு தான் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளம் குழந்தையை அவரது அத்தையே மருத்துவமனையின் மாடியிலிருந்து தூக்கி வீசியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் கான்பூர் ஷியாம் மருத்துவமனையில் சரிதா என்ற பெண் தன் நாத்தனாரின் குழந்தையை கவனித்து வந்துள்ளார்.
திடீரென இவர் நேற்று முன்தினம் குழந்தையை காணவில்லை என அலறியுள்ளார்.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மருத்துவமனை ஊழியர்களும் குழந்தையை தேடினர்.
அப்போது பச்சிளம் குழந்தையின் சத்தம் கேட்டது, ஓடிச்சென்று பார்த்த போது குரங்குகள் வராமல் இருக்க போடப்பட்ட கம்பி வலையில் சிக்கியிருந்தது தெரியவந்தது.
காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து சிசிடிவி கமெராவை ஆய்வு செய்து பார்த்த போது, குழந்தையுடன் சென்ற சரிதா வெறும் கையுடன் திரும்பி வந்தது பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனக்கு மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால், பொறாமையில் இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார், தற்போது சரிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆக்ராவில் சிறுவர்கள் நான்கு பேர் 40 அடி உயர பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குறித்து வீடியோவில், 9 முதல் 12 வயதுடைய நான்கு சிறுவர்கள், தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்திருக்கும் 20 அடி உயர இரும்பு கிரில் வேலி மீது ஏறி தங்கள் உயிரை பணயம் வைத்து 40 அடி கீழே ஓடும் யமுளை ஆற்றில் குதிக்கின்றனர்.
எனினும், நான்கு பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என நம்பப்படுகிறது. குதிப்பதை பார்க்கும் பொழுது அவரகள் வழக்கமாக குதித்து பழகியவர்கள் என தெரிகிறது.
ஆனால், இதுவரை சம்பவம் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வலர்களுடன் கைகோர்த்து தன் பயனாளிகளுக்காக சில உத்திகளைக் கையாளவுள்ளது.
இதன்படி, ஃபேஸ்புக் கண்காணிப்பாளர்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர்.
அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும். தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக்கின் ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைகள் மேலாளர் ஜூலி டீ பெய்லியன்கோர்ட்,
”மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். அதனால் தான் அவர்கள் துயரத்தில் இருக்கும்போது நண்பர்களையும், குடும்பத்தையும் அணுகுகிறோம். இதற்கு சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் உளரீதியான ஆதரவைத் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது 5ஆவது சந்தேகநபர், நீதவானிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என நீதவான் எம்.எம்.ரியாள் குறிப்பிட்டார்.
அத்தோடு, வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை தமக்கு வாசித்துக் காட்டவேண்டுமென மூன்றாவது சந்தேகநபரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கு தொடர்பான அனைத்து விடயங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு அதுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் அவரது 97 ஆவது வயதில் நேற்று (05) காலமானார்.
1947 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடப்பட்டது.
லிண்ட்சே தன்னுடைய காலத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
1947 ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் டக்கேட் அறிமுகமானார், முதல் இன்னிங்சில் 37 ஓவர்கள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தன்னுடைய மொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 19 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார், அதில் இரண்டு முறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கடற்கரை நகரமான டார்டஸ்சில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அந்த நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் குண்டு வெடிப்பில் சிக்கி தீக்கிரையாகின.
இதனால் சம்பவ இடத்திலேயே பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
அந்த பகுதியில் ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மற்றொரு கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
அடுத்தடுத்து நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் சிக்கி 33 பேர் உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் ஹோம்ஸ் நகரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கட்டிடம் ஒன்றின் மீது மோதி வெடிக்க செய்தனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹசாக்கஸ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பில்(65). நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடந்த இவருடைய மனைவி நஜோ பாய் திடீரென காலமானார்.
மனைவியின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டில் உள்ள ஊழியர்கள் 2,500 ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதீசிடம் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது.
இதனால், தகனம் செய்ய மறுத்த ஊழியர்கள் மனைவியின் உடலை ஆற்றில் எறிந்து விடுவாறு அறிவுரை கூறியுள்ளனர். அப்பகுதியில் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாத ஏழைகள் இறந்தவர்களின் உடலை ஆற்றில் எறிந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் தனது மனைவியின் உடலை முறையாக தகனம் செய்ய வேண்டும் என ஜகதீஷ் பில் உறுதியாக இருந்துள்ளார். இதனால், ஊழியர்கள் கூறிய யோசனையை ஏற்க அவர் மனம் மறுத்துவிட்டது.
இதையடுத்து ஜெகதீஷ் தானாகவே மனைவிக்கு தகனம் செய்வதற்கு சுடுகாட்டின் அருகே ஏற்பாடுகள் செய்தார். ஊர்மக்களின் மூலம் தகவல் அறிந்த அப்பகுதி தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் தனது சொந்த பணத்தில் ஜெகதீஷ் பில்லுக்கு 1,500 ரூபாய் நிதியுதவி அளித்தார்.
ஜெகதீஷ் தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொண்டு மரக்கட்டைகள் வாங்கினார்.
உடலை எரியூட்டுவதற்கு மரக்கட்டைகள் போதுமாகவில்லை. இதன்காரணமாக, அப்பகுதியில் கிடந்த குப்பை காகிதங்கள், டயர்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து மனைவியின் உடலுக்கு எரியூட்டினார்.
யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு பேரையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி, யாழ் மேல் நீதிமன்றத்தி;ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதற் தடவையாக இன்று (06) செவ்வாய்க்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இம்மாதம் 20 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, 6 பேருக்கும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், 16 பேர் சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு இன்று (06) செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு கொள்ளப்பட்டபோது,
இந்த நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அனைத்து வழக்குகளினதும் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவருடைய பணிப்புரைக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்தக் கோவைகள் இன்னும் அங்கிருந்து திரும்பி வராத காரணத்தினால் இந்த வழக்கை வேறு ஒரு திகதிக்கு ஒத்தி வைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தயா மாஸ்டர் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.