யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள், திரைப்படங்களை பதிவேற்றம் செய்தால் தண்டனை!!

youtube

யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை கசியவிடுபவர்களின் விபரங்களை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூடியூப்பில் எங்கள் நிறுவனத்தை அவதூறு செய்யும் வகையில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த வீடியோவை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதை தடை செய்வதோடு மட்டுமில்லாமல், பதிவேற்றம் செய்தவர்களின் விபரங்களையும் அளிக்குமாறு உத்திரவிட்டது.

இதற்கு கூகுள் நிறுவனம் சார்பில், இந்தியாவில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களுக்கு தான் தடை செய்ய இந்த நீதி மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. பிற நாடுகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை தடை செய்வதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, அது அந்நாட்டை சேர்ந்த நீதிமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. அதன் காரணமாக இந்த வீடியோவை தடை விதிக்கமுடியாது என தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்டவர்கள் கோரினால் கூகுள் நிறுவனம், நிறுவனக் கொள்கையை காரணம் காட்டி விபரங்களை தர மறுப்பதை ஏற்க முடியாது. தவறான வீடியோ பதிவேற்றம் செய்தவர்கள், வெளிநாடுகளில் இருந்தாலும் முழுமையாக தகவல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் யூடியூப்பில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக கசியவிடுவது, பெண்கள் பற்றிய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களின் விவரங்களை கேட்டறியும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

இதனால் தேவையற்ற வீடியோக்கள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இது சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது.

என்மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயார் : நடிகர் நெப்போலியன்!!

Napoleon

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் தருணத்தில் என் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன் என முன்னால் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலின் போது பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் மற்றும் முன்னாள் எம்.பி அழகிரி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு நேற்று பண்ருட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.பி அழகிரி, நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறியதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தினை மேற்கொண்டேன். ஆனால் பொலிசார் அறிவித்த இடத்தை விட்டு வேறு இடத்தில் பிரச்சாரம் செய்ததாக என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கினை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

உலகமே வியக்கும் அப்பிள் ஐபோன் : அடுத்த பதிப்பின் சிறப்பம்சங்கள்!!

iPhone-7

ஸ்மார்ட்போன் உலகின் ஜம்பவான் என்றால் அது அப்பிள் நிறுவனம் தான். தங்களுடைய அடுத்த தயாரிப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை பரம ரகசியமாக கட்டிக்காப்பது அப்பிளின் மரபு.

நாளை (செப்ரெம்பர் 7ஆம் திகதி) சான் பிரான்ஸிஸ்கோ நகரில் அப்பிள் நிறுவனத்தின் மாநாடு நடக்கவிருக்கிறது.

அதில் எத்தகைய தயாரிப்புகள் வெளிவருமென பலரும் ஊகம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

பெரும்பாலும் ஐபோன்-7, ஐபோன்-7பிளஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என பலரும் ஊகம் கூறுகிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் பற்றிய ஊகம் ஒருபுறம் இருக்க, அவற்றின் சிறப்பு அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்வதற்கும் பலத்த போட்டி.

ஐபோன்கள் அறிமுகமாகும் முன்னர் அவை பற்றி ஊகம் தெரிவிப்பதில் கில்லாடி KGI Securities நிறுவனத்தைச் சேர்ந்த பகுப்பாய்வாளர் மிங்-ச்சி குவோ.
தண்ணீர் புகாத வசதி (Water Resistant)

சம்சங், சோனி நிறுவனங்கள் தண்ணீருக்குள் விழுந்தாலும் பாதிக்கப்படாத ஸ்மார்ட்போன்களை தயாரித்துள்ளன.

அந்த விடயத்தில் அப்பிள் நிறுவனம் அக்கறை காண்பித்ததில்லை. அதன் புதிய தொலைபேசிகள் தண்ணீர் புகாத வசதிகளைக் கொண்டிருக்கும் என்கிறார் மிங்-ச்சி.

நீர்மட்டத்தில் இருந்து மூன்று அடிவரை உள்ளே சென்றாலும், எதுவித பாதிப்பும் இல்லாத வகையில் புதிய போன்கள் அமைந்திருக்கும் என்பது அவரது கணிப்பு.

ஹெட்போன் (Headphone) புரட்சி

ஸ்மார்ட்போனும் ஹெட்போனும் இணை பிரியா நண்பர்கள். ஸ்மார்ட்போனில் உள்ள 3.5மிமி அளவிலான துளையில் ஹெட்போனை செலுத்தி இசை கேட்பது இனிய அனுபவம்.

ஐபோன்-7, ஐபோன்-7பிளஸ் போன்களில் 3.5மிமி துளை இருக்காது என்கிறார் துறை சார்ந்த நிபுணர்கள்.

இந்தத் துளையின் மூலம் கேட்கும் இசை ‘Analog’ வடிவத்தை சேர்ந்தது. எல்லாமே Digital-லான உலகில் இன்னமும் Analog தேவையா என அப்பிள் கருதியிருக்கலாம்.

Analog ஹெட்போனுக்கு பதிலாக Lightening Connector அல்லது ப்ளுடூத் ஹெட்போன் மூலம் மிகச்சிறப்பான ஒலித்தெளிவுடன் எதையும் கேட்க முடியும்.

மொத்தத்தில் Analog-க்கு முற்றுப்புள்ளி வைத்து Digital ஒலி நோக்கிய பாதையில் அப்பிள் நிறுவனம் காலடி எடுத்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 மாதக் குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது!!

Mother

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை!!

Elections-Commissioner-Mahinda-Deshapriya

புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிராம சேவை பிரிவு ஒன்று காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்தப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது, பின்னர் அசோக பீரிஸ் தலைமையில் நடத்தப்பட்ட எல்லை நிர்ணய நடவடிக்கைகளின் போது கிராம சேவை பிரிவு காணாமல் போயுள்ளது.

தேர்தல் நடத்தப்படாமையுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.

கிராம சேவை பிரிவு ஒன்று காணாமல் போன விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

Fathers Day

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில், உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், டஸ்மின் பஹார் தனது 3 வயது மகளுடன் சமீபத்தில் தனியாகச் சென்று வேறு வீட்டில் குடியேறினார்.

குடும்ப வன்முறையே தனது பிரிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் தனது மகளை தேவ் பிள்ளையைச் சந்திப்பதற்காக Smithfield உள்ள வீட்டிற்கு டஸ்மின் பஹார் அழைத்துச் சென்றிருந்தார்.

இதன் பின்னர் நடந்த ஏதோவொரு சம்பவத்தினால் தம்பதி இருவரும் உயிரிழந்துவிட அவர்களது மகள் தனது பெற்றோருக்கருகில் படுத்து உறங்கிவிட்டாள்.

இந்தநிலையில் குறித்த வீட்டிற்கு வந்த தேவ் பிள்ளையின் உறவினர் ஒருவர் குழந்தையையும் மீட்டு காவல்துறைக்கும் அறிவித்திருந்தார்.

இவர்களில் யாரோ ஒருவர் மற்றவரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் தேவ் பிள்ளை தனது மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன் டஸ்மின் பஹாரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் நிச்சயம் அவர்தான் இந்தக் கொலையைச் செய்துவிட்டு தானும் உயிரிழந்திருக்கலாம் என டஸ்மினின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்ட குழந்தையை டஸ்மின் பஹாரின் சகோதரி பொறுப்பேற்கவுள்ளார்.

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!!

J2

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியின் போது இம்மாணவி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

J1

குழந்தையா பொம்மையா? குழப்பத்தில் முதியவர் செய்த செயல் : செய்துசெய்த பொலிசார்!!

Baby

இங்கிலாந்தில் பொம்மை என நினைத்து குழந்தையின் முகத்தில் குத்துவிட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Baguley நகரை சேர்ந்த Amy Duckers என்ற பெண், பிறந்து சில வாரங்களே ஆன தனது குழந்தையை தூக்கிகொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 63 வயது முதியவர், தாயின் கையில் இருந்த குழந்தையை நன்றாக பார்த்துள்ளார். அதன்பின்னர் அதனை பொம்மை என நினைத்து அதன் அருகில் சென்று முகத்தில் ஒரு குத்து விட்டுள்ளார்.

முதியவரின் இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த தாயார், குழந்தைக்கு முதலுதவி அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து பொலிசிலும் புகார் அளித்ததையடுத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற பொலிசார், குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக முதியவரை கைது செய்துள்ளனர். தான் பொம்மை என நினைத்து தவறுதலாக குழந்தையை தாக்கிவிட்டேன் என முதியவர் கூறியபோதும், இதனை ஏற்க மறுத்த பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கூறியதாவது, எனது குழந்தை Elsie Rose பிறக்கும்போது 2.72 கிலோ கிராம் எடையுடன், உடல்நலக்குறைவோடு தான் பிறந்தாள். அவளது தோற்றம் பார்ப்பதற்கு பொம்மை போன்று இருப்பதன் காரணத்தால் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வெள்ளைக்காரர்கள்!!

White

சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசித்தது சென்றமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டவர்கள் வருவதன் மூலம் எமது தமிழ் கலாச்சாரத்தையும் இந்து மதத்தின் சிறப்பையும் எந்த அளவுக்கு அறிந்துள்ளார்கள் என்பதையும் மதிக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.

அத்துடன், தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வகையிலும் இவர்களின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

T1 T2

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!

Ground

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் புதிய கிரிக்கெட் மைதானங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளது.

கிரிக்கெட் மைதானங்களை அமைப்பதற்கான அவதானம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு கிரிக்கெட் நிறைவேற்று குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு மைதானத்தை அமைப்பதற்கான செலவு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், முதலில் சாதாரண கிரிக்கெட் மைதானமாக அமைக்க தீர்மானித்துள்ள குறித்த இரண்டு மைதானங்களும் பின்னர் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை பொலன்னறுவையில் அமைக்கப்படவுள்ள மைதானத்திற்கு தேவையான திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மைதானத்திற்கு பொருத்தமான இடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தட்டான்குளம் குளத்துநீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் : மக்கள் பாதிப்பு!!

 
செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமான தட்டான்குளம் பகுதியில் அமைந்திருக்கும் தட்டான்குளம் என அழைக்கப்படும் குளம் சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

அக் குத்தகைதாரர்கள் குளத்து நீரை வெளியேற்றி மீன்களை பிடித்துவருவதால்
அக்கிராமக் கிணறுகள் வற்றி வருவதோடு ஆடு மாடு போன்ற கால்நடைகள்
நீரின்றி அவதிக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக்கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் இலாபத்திற்காக குளத்து நீரை வெளியேற்றி பாதிப்படைய வைத்தமை மக்களிடயே பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

14218337_1353999597963094_953168849_n 14218610_1353999844629736_1633971380_n 14256667_1353999701296417_698693460_n 14269720_1353999427963111_1980961194_n 14269731_1353999457963108_618486709_n

இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்பிக்கும் இந்து மாணவி!!

hindu

உத்திர பிரதேசத்தில் 18 வயது மாணவி ஒருவர், இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் கற்றுத்தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் உள்ள சஞ்சை பகுதியை சேர்ந்தவர் பூஜா குஷ்வாகா(18). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாலை நேரத்தில் இவரிடம் 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகள் குரான் பயின்று வருகின்றனர். இதற்கு அக்குழந்தைகளின் பெற்றோர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று பார்க்காமல், தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கின்றனர்.

இது குறித்து குஷ்வாகா கூறுகையில், இஸ்லாமியர் ஒருவர் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த பெண் தான் சங்கீதா பேகம். இவர் இந்த பகுதியில் குரான் வகுப்புக்களை பயிற்றுவித்து வந்தார். அவரிடம் தானும் சென்று குரான் படித்தேன்.

குரான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் விரைவாக கற்றுத் தெரிந்து கொண்டேன். தற்போது சங்கீதா பேகத்தால் குரான் வகுப்புகளை சில பிரச்னைகளால் நடத்த முடியவில்லை.

அதனால் தற்போது அதை நான் செய்து வருகிறேன். இங்கு பெரும்பாலான சிறுவர்கள் ஏழை குடும்பத்தைச் சார்ந்த சிறுவர்கள் என்பதால் அவர்களால் பணம் செலுத்த இயலாது, அவ்வாறு அவர்கள் கொடுத்தாலும் தான் பணம் பெறுவது இல்லை என கூறினார்.

தற்போது சிறுவர்களுக்கு சிறப்பாக குரான்களை கற்றுத் தருகிறேன். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள் எனவும் கூறினார்.

Kuran

சவுதிக்குப் பணிப் பெண்ணாக சென்றவர் மீது எஜமானர்களும் முகவரும் தாக்கி சித்திரவதை செய்த அவலம்!!

Saudi

சவுதிக்குப் பணிப் பெண்­ணாக சென்ற ஒருவர் வீட்டு எஜ­மா­னர்­களாலும் வெளி­நாட்டு வேலைவாய்ப்பு நிறு­வன அதி­கா­ரி­யாலும் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று திரும்­பி­யதன் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று முன்­தினம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

உடப்­பு­சல்­லாவ லக்­கிலேண்ட் குரூப் கொண்­ட­கொல தோட்­டத்தைச் சேர்ந்த தொழி­லா­ளி­யான கந்தை­யா­கலைச் செல்வி (43) என்ற நான்கு குழந்­தை­களின் தாய்க்கே இவ் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிப்­புக்­குள்­ளான பெண் இவ்­வ­ருடம் ஜூலை 5 ஆம் திகதி சவு­திக்கு வெளி­நாட்டு முகவர் நிலையம் மூல­மாக பணிப்­பெண்­ணாக அனுப்­பப்­பட்டார்.

றியாத் வீடொன்றில் தொழி­லுக்­காக இணைந்த அன்­றைய தினமே இரவே இவர் அவ்­வீட்டு எஜமானியால் அவரின் தங்­கையின் மதினா வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ளார்.

அவ்­வீட்டில் தொழில்­பு­ரிந்த நிலையில் இவர் கடு­மை­யான சிறுநீர் அதி­க­போக்கு நோயினால் பெரிதும் பாதிப்­ப­டைந்­துள்ளார்.  இதே­வேளை, இவ­ருக்கு றியாதின் அடை­யாள அட்டை இல்லாமை­யினால் மருத்­து­வர்கள் சிகிச்சை வழங்க மறுத்து விட்­டனர். இதனால் இவர் மீண்டும் றியாத் வீட்­டுக்கே அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் வீட்டு எஜ­மானி இவரை வேலைக்கு வழங்­கிய வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறுவனத்­துக்கு அழைத்து சென்­றுள்ளார்.

அங்­கு­வைத்து அந்­நி­று­வன அதி­காரி குறித்த பெண்ணை தாக்கி அறை ஒன்றில் அடைத்து வைத்துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணை எஜமானியிடம் இவர் ஒப்படைக்க வீட்டுக்கு அழைத்து சென்று கணவனும் மனைவியும் இவரை தாக்கி சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

14 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவன் கைது!!

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

14 வய­தான தனது காத­லியை நண்­ப­ரொ­ரு­வரின் வீட்­டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக 15 வய­தான பாட­சாலை மாணவன் ஒரு­வரை மொன­ரா­கலை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

வல்­லு­ற­வுக்­குட்­பட்ட மாணவி மொன­ரா­கலை நக­ரி­லுள்ள பாட­சாலை ஒன்றில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயில்­வ­தா­கவும் சந்­தேக நப­ரான மாணவன் 10 ஆம் ஆண்டில் கல்வி பயில்­வ­தா­கவும் பொலிஸ் விசா­ர­ணையில் தெரியவந்­துள்­ளது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் கதிர்­காமம் சென்­ற­போது இரு­வரும் அறி­மு­க­மா­ன­தா­கவும் மாணவியை மெத­க­ம­யி­லுள்ள நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் தங்­கி­யி­ருந்து இரு­வரும் கணவன் – மனைவியாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பெண்களின் தலைமுடியை வெட்டி விற்பனை செய்துவந்த வினோத திருடன்!!

Thirudan

கரூர் தான்தோணிமலையில் உள்ள ஒரு கோவிலில் கடந்த மாதம் சாமி கும்பிட்டு விட்டு வந்த இரு பெண்களின் கூந்தலை மர்ம ஆசாமி ஒருவன் அறுத்து எடுத்து கொண்டு தப்பி சென்றான்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த கரூர் டவுன் பொலிசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். கரூர் ஈஸ்வரன் கோவிலிலும் இதுபோன்ற சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் பொலிசார் சம்பந்தபட்ட நபரை பிடிக்க ஈஸ்வரன் கோவில் பகுதியில் வலை விரித்தனர்.

அப்போது பெண்கள் இருக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியாக மர்ம மனிதர் நின்று கொண்டிருப்பதை கவனித்தனர். உடனே பொலிசார் விரைந்து சென்று அவனை மடக்கி பிடித்தனர். கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கத்தரிக்கோல் இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் கரூர் வழுக்கு பாறையை சேர்ந்த அம்புரோஸ் (வயது 35) என்றும் கோவிலுக்கு வரும் பெண்களின் கூந்தலை வெட்டி செல்வதும் உறுதியானது.

கைதான அம்புரோஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் ஒரு வருடத்திலேய கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண்களின் கூந்தலை அவர் அறுக்க தொடங்கியுள்ளார்.

துண்டிக்கப்படும் கூந்தலை அவர் ரூ. 400, 500-க்கு விற்பனை செய்ததாக பொலிசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். மனைவி பிரிந்த நிலையில் பெண்களின் கூந்தலை துண்டித்து விற்ற அம்புரோஸ் இடையில் அதனை நிறுத்தியுள்ளார். மீண்டும் கூந்தலை அறுக்க தொடங்கிய நிலையில் போலீசில் சிக்கியுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கூந்தலை அவர் அறுத்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால் சில பெண்களே பொலிசில் புகார் செய்துள்ளனர். கூந்தல் திருடன் மாட்டிக் கொண்டதால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

உள்குத்துக்காக மீன் விற்ற தினேஷ், துணி விற்ற நந்திதா!!

Dinesh

திருடன் பொலிஸ் படத்தை இயக்­கிய கார்த்திக் ராஜு இயக்­கி­யுள்ள படம் உள்­குத்து. இதில் அட்டக்கத்தி தினேஷ், நந்­திதா, ஸ்வேதா, சாயாசிங், பால சர­வணன், ஸ்ரீமன் நடித்­துள்­ளனர்.

ஜஸ்டின் பிர­பா­கரன் இசை­ய­மைத்­துள்ளார்.இந்தப் படம் நாகர்­கோவில், முட்டம் பகு­தியில் நடக்­கிற கதை. ஒரே ஷெட்­யூலில் படத்தைமுடித்து திரும்­பி­யி­ருக்­கி­றார்கள். இதன் பாடல் வெளி­யீட்டு விழா கடந்­த­வாரம் நடை­பெற்­றது.

படத்தை பற்றி இயக்­குநர் கார்த்திக் ராஜு கூறி­ய­தா­வது:வெளி உல­கத்தில் சாதா­ரண மீன் வியாபாரியாக இருக்கும் ஹீரோ மறை­வாக சில வேலை­களை செய்வார்.

அதற்­குத்தான் படத்­திற்கு ‘உள்­குத்து’ என்று பெயர் வைத்­தி­ருக்­கிறோம். மீன் வியா­பாரி கரக்டர் என்பதால் தினேஷை நிஜ­மா­கவே ஒரு மீன் கடையில் மீன் வியா­பாரம் செய்ய பயிற்சி எடுக்க வைத்தோம்.

மீன் வெட்­டு­வது தனி டெக்னிக் தவ­றினால் கையை வெட்டிக் கொள்வோம். அதனால் அவர் பயிற்சி எடுத்து நடித்தார். சண்டை காட்­சி­யில நிறைய அடி­வாங்கி வலி­யு­டன்தான் நடித்தார். படத்தில் 12 சண்டை காட்­சிகள் இருக்­கி­றது.

நந்­திதா ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் பெண்­ணாக நடிக்­கிறார். வாடிக்­கை­யா­ளர்க ளிடம் முகம் சுழிக்­காமல் சிரித்துக் கொண்டே செய்ய வேண்­டிய வேலை அதற்கும் அவ­ருக்கு பயிற்சி கொடுத்தோம்.

நாகர்­கோ­விலில் ஒரு ஜவுளி கடையில் நந்­தி­தாவை நிஜ­மா­கவே ஜவுளி விற்க வைத்து அதை மறைந்­தி­ருந்து பட­மாக்­கினோம். முதலில் அவ­ரிடம் பேரம் பேசி துணி வாங்­கி­ய­வர்கள் அதன்­பி­ற­குதான் அவர் நடிகை நந்­திதா என்­ப­தையே கண்டுபிடித்தார்கள். அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் யதார்த்தமாக இருந்தது என்றார்.