ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் : வியக்கவைத்த ஹொலிவுட் கலைஞர்!!

 
ஹொலிவுட் சினிமா எடிட்டர் பிபாஷா ஷோம், இந்தியாவில் மிகவும் ஏழ்மையில் வாழும் சிலரை சந்தித்து, இதுவரை தனது முகத்தை புகைப்படத்தில் பார்த்திராத அவர்களை படம்பிடித்து, முதன்முதலாக தனது முகத்தை படத்தில் பார்க்கவைத்து, அவர்கள் புன்முறுவல் செய்வதையும் படம்பிடித்து ரசித்துள்ளார்.

இதன்மூலம், ஏழைகளை மகிழ்விக்க பெரிய திட்டங்களும் செலவுகளும் மட்டுமல்ல, சின்னச்சின்ன விஷயங்களும் இருக்கின்றன. அவை பெரிய அளவிலான ஒரு சந்தோஷத்தை தற்காலிகமாக தரமுடியும் என உணர்த்துகிறது.

முதல் காதல், முதல் முத்தம், மறக்க முடியாதது என மெய்சிலிர்ப்பவர்கள் இன்னொன்றை மறந்து விட்டனர்.

முதல் புகைப்படம்

முதல் இரண்டைவிடவும் நமது முதல் புகைப்படத்தை, வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும்போதுதான், அதுவரை வெளிப்படாத புதிய பாவனை முகத்தில் கொப்பளிக்கிறது. அது முகத்தையே உருக்கி வரும் சிரிப்பு.

முதல் படம் எடுத்தார்

ஒடிசாவில் உள்ள 13 ம் நூற்றாண்டு காலத்து கோனார்க் சூரிய கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த ஒரு வயதான நரைத்த பிச்சைக்காரர் ஒருவரை தனது விலை உயர்வான செல்போனில் படம் எடுத்து அதை அவரிடம் பார்க்க கொடுத்தார்.

அவருடைய கைகளும் குஷ்டத்தால் சிதைந்த நிலையில் இருந்தது. அந்த நிலையிலும், தன்னுடைய முதல் புகைப்படத்தை பார்த்ததும் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நாம் சொல்வதைவிட படத்திலேயே பாருங்கள்.

அதுபோல, கொல்கத்தாவில் ஸ்வப்னா என்ற ஏழைத்தாயையும் அவருடைய 5 வயது மகனையும் படம் எடுத்துக்கொடுத்தார். அவர்கள் புற்களால் வேயப்பட்ட சிறு குடிசையில் வாழ்கின்றனர்.

அங்கு மின்சாரம், தண்ணீர் குழாய் வசதிகள் ஏதும் இல்லை. அவர்களின் புகைப்படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. அந்த பெண்ணின் திருமணத்தில் கூட போட்டோ எடுக்கவில்லை. அதனால், தன் போட்டோவை பார்த்து சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

இதுபோல, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை முதல் புகைப்படம் எடுத்து, அவர்கள் முகமலர்ச்சியை கண்டு அதில் பெரிய போதையே கொண்டார்.

நவீனங்களும் தொழில்நுட்பங்களும் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் அதன் தாக்கம் தீண்டப்படாமல் அடித்தட்டு மக்கள் இருக்கவும் செய்கின்றனர்.

இவர் படம்பிடித்த இந்த ஏழை மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான செலவில் வாழ்பவர்கள். அவர்களுக்கு உள்ள இந்த வறுமை பிரச்சினையில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வது பெரிய செலவாகும். நவீன செல்போன்கள் அவர்களுக்கு பரிட்சயம் இல்லாத விஷயம்.

அப்படி அரிதாக யாரேனும் செல்போன் வைத்திருந்தாலும் அது மிகப்பழமையான மாடல். அதில் போட்டோ எடுக்கும் வசதி இல்லாமலும் அப்படி இருந்தாலும் தெளிவற்றும் இருப்பதாக அந்த பெண்கள் கூறுகின்றனர்.

போட்டோ வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது அவர்களுடைய முதல் புகைப்படம்.

திருமணமான போது போட்டோ எடுக்காததால், இப்போது தங்கள் பிள்ளைகள் அப்பா, அம்மா திருமணத்தை கற்பனை மட்டுமே செய்துகொள்ள முடிகிறது.

அவர்களுக்கு கற்பனையை நிஜமாக்குமாறு, அப்போது திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தால் அது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். பெற்றோரின் திருமணத்தை பார்ப்பது கேமரா காலத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு. கேமரா காலத்தில் வாழ்ந்தும் அந்த வாய்ப்பை இழப்பது எவ்வளவு கொடுமை.

மாணவர்கள், இளம் வயதினர், வயதானவர்கள் என, ஆண் பெண் பாரபட்சம் இன்றி, முதல் பட தகுதிக்குரியவர்களை தானாக அணுகி படம் எடுத்துக்கொடுத்து உதவுகிறார். இதுவும் ஒருவித தானம்தான்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என அண்ணா சொன்னார். இவர்களின் வியப்பு சிரிப்பில் இறைவனை பார்த்ததற்கு ஈடான நிம்மதியை படமெடுத்த பிபாஷா ஷோம் பெற்றிருப்பார் என்பது மிகை அல்ல.

31 2 4

ஆடை சர்ச்சையில் சிக்கினார் வெள்ளி மங்கை சிந்து!!

Sindhu

ரியோ ஒலிம்பிக் போட்டியின் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பொன்சர் லின் நிங். இந்நிறுவனம் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஆனால் சிந்து வெள்ளி பதக்கம் வெல்வதற்கான ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோனக்ஸ் ஆடையை அணிந்து இருந்ததாகவும், பிற விளையாட்டு வீரர்களும் அந்நிறுவனத்தின் ஆடையை அணியவில்லை என புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக லி நிங் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர் மகேந்திர கபூர் இந்திய ஒலிம்பிக் கழகத்திடம் புகார் அளித்துள்ளார்.

தொடக்கத்தில் லி நிங் நிறுவன ஆடைகளை சிந்து அணிந்ததாகவும், பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் அதனை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு லி நிங் நிறுவனம் அளித்த ஆடை நிறங்களை சிந்து உள்ளிட்ட வீரர்கள் விரும்பாததே காரணம் என கூறப்படுகிறது.

மேலும், சிந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையே தனது ராசியான நிறமாக கருதியதால் தான் பங்கேற்ற போட்டிகளில் அந்த நிற ஆடைகளை அணிந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை : 1.92 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!!

Pool

பிரித்தானியா நாட்டில் நீச்சல் குளத்தில் 3 வயது குழந்தை மூழ்கி பலியானது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் 1.92 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Lancashire நகரில் டால்மெனி என்ற நட்சத்திர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெற்றோர் தங்களது 6 மற்றும் 3 வயது குழந்தைகளுடன் இந்த ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.

ஹொட்டலின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் குழந்தைகள் இருவரும் நீச்சல் அடித்து விளையாடியுள்ளனர். அப்போது, ஜேனி பெல் என்ற 3 வயது குழந்தை ஆழமான இடத்திற்கு சென்றதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

சுமார் 2 நிமிடங்கள் போராடியும் குழந்தையை யாரும் மீட்க வில்லை. பின்னர், ஹொட்டல் பணியாளர்கள் விரைந்து வந்து மூழ்கிய குழந்தையை கரைக்கு இழுத்து வந்தனர்.

எனினும், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

ஹொட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய குழந்தையின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, நீச்சல் குளத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என ஹொட்டல் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து 3 குழந்தை இறப்பதற்கு காரணமான ஹொட்டல் நிர்வாகம் பெற்றோருக்கு 1,00,000 பவுண்ட்(1,92,57,083 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த இந்திய பொலிஸ்!!

Indian Police Married Pakistan Girl

இந்தியாவின் ஸ்ரீநகரைச் சேர்ந்த இளம் பொலிசார் ஒருவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதில் பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல் நடந்து வரும் நிலையில், ஸ்ரீநகர் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஓவைஸ் கிலானி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத் நகரைச் சேர்ந்த பைசா கிலானியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணமக்கள் இருவருமே உறவினர்கள், ஆனால் ஒரு குடும்பம் காஷ்மீரிலும், மற்றொரு குடும்பம் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் வசித்து வந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் – முசாபராபாத் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து முசாபராபாத்தில் இருந்து மணமகளும் குடும்பத்தினரும் ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள ஹொட்டலில் நடந்த திருமணத்தில் மணமக்கள் குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் திட்டமிட்டபடி நடந்ததால் இரு குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் : கணனி அவசர கண்காணிப்புப் பிரிவு!!

Security

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல் விடுத்துள்ளது.

இதன் பொருட்டு நான்கு காரணிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்த பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இணையத்தள சேர்வர்களுக்கான இயங்குதள மென்பொருட்களை புதுப்பித்தல் மற்றும் இணையத்தளங்களை உருவாக்குபவர் எனில், அதற்குரிய மென்பொருட்களை புதுப்பித்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது இணையத்தளங்களில் வெளிநபர்கள் ஊடுருவுவதை தடுப்பதற்காக வலுவான பாதுகாப்பு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கணனி அவசர கண்காணிப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தத்தமது கணனிகளில் பயன்படுத்தும் கடவுச் சொற்களையும் ஏனையவர்களுக்கு இலகுவில் அறிந்துகொள்ள முடியாதவாறு வலுவான முறையில் மாற்றியமைப்பது சிறந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி!!

Philippine police investigators check bodies at a blast site at a night market that has left at least several people dead and wounded others in southern Davao city, Philippines late Friday Sept. 2, 2016. The powerful explosion at a night market late Friday in Philippine President Rodrigo Duterte's hometown in the southern Philippines took place amid a security alert due to a major offensive against Abu Sayyaf militants in the region, officials said. (AP Photo/Manman Dejeto)

பிலிப்பைன்ஸின் தெற்கு டவாஓ நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட டவாஓ நகர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte இன் சொந்த ஊர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்கும் தன்மை கொண்ட மோட்டார் சாதனமொன்றின் பாகமொன்றை விசாரணைக்குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து தலைநகர் மணிலா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு ஜனாதிபதி டவாஓ நகரிற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் வழமையாக செல்லும் மார்க்கோ போலோ ஹோட்டலுக்கு வெளியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 950 கோடி நிதி சேகரித்த ஹிலாரி!!

Hilari

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஓகஸ்ட் மாதம் 143 மில்லியன் டொலர் (சுமார் 2000 கோடி இலங்கை ரூபாய்) தேர்தல் நிதி திரட்டினார்.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்ததாவது,

ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதிக்காக 23 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நிதி அளித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு ஆதரவாளரும் 50 டொலர் தேர்தல் நிதி அளித்துள்ளார்.

இந்த வகையில் கடந்த ஓகஸ்ட் மாதம் மொத்தமாக 143 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டப்பட்டது. ஹிலாரியை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கச் செய்ய ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையான போட்டியை சமாளிக்கும் விதத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும்.

தேர்தலில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை வாக்குச் சாவடிகளுக்கு வரச் செய்து வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

ஹிலாரியின் வெற்றியை உறுதி செய்ய பல்வேறு பிரச்சார உத்திகளை மேற்கொள்வோம். இதற்காகப் பெரும் நிதி தேவைப்படுகிறது என்று தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்தார்.

கணவனின் துஷ்பிரயோக அச்சுறுத்தலால் மனைவி தற்கொலை முயற்சி!!

Bus

தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண் காலி – கலேகான பிரதேசத்தை சேர்ந்த 36 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் துஷ்பிரயோக அச்சுறுத்தல் தாங்கமுடியாமல் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் அந்த பெண் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த கணவருக்கு எதிராக இதற்கு முன்னர் அந்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன்போது குறித்த கணவரிடம், அந்த பெண் இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆலோசனையை மீறி அந்த கணவர் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவனை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

A1

யாழ்ப்பாணம் கண்டி வீதி பளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 5 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களும் காயமுற்ற நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

A2

கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் பொட்டு வைக்கின்றோம் : முதலமைச்சரிடம் கண்ணீர் மல்கிய பெண்கள்!!

Makkal

நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்றநம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே?என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையாழ்.பொதுநூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது நூலகத்திற்கு வெளியேகாணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்டு காணாமல்போனவர்களின் உறவினர்களைச்சந்திக்க வந்த முதலமைச்சரிடமே காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறுகேட்டுள்ளனர்.

இதன்போது உறவுகள் மேலும் கூறுகையில், காணாமல்போனவர்கள் அலுவலகம்கொழும்பில் வேண்டாம். எமக்கு கொழும்புக்கு செல்வதற்கு முடியாது. யாழ்ப்பாணத்தில்அமையுங்கள்.

மேலும் 7 வருடங்களாக நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடவில்லை. 7வருடங்களாக கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பொட்டு வைத்துக் கொண்டு திரிகிறோம்.

ஒரு விமானம் தொலைந்தால் உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால்எங்கள் உறவுகளை கண்டுபிடிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாதா? என கேள்வி எழுப்பினர்.

இதன்போது தமக்கு 6நிமிடங்களே கொடுக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அந்தநேரத்திற்குள் சகல விடயங்கள் தொடர்பாகவும் தாம் பேசியுள்ளதாக கூறிய முதலமைச்சர்இந்த விடயத்தில் தம்மை கோபிப்பதில் பயனில்லை. உங்கள் ஆதங்கம் எனக்குவிளங்குகின்றது எனக் கூறினார்.

 

யாழில் கணவனின் தாக்குதலில் மனைவி பரிதாபமாகப் பலி!!

Dead

கோப்பாய், கலையடி பிரதேசத்தில் கணவன் மேற்கொண்ட தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவியை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி, கலையடி வீதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கணவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு மயில்வாகனம் தியாகராசாவினால் உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வறியகுடும்பங்களின் வாழ்வாதரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடைநியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள தோணிகல், கூமாங்குளம், நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாலமோட்டை, கோயில்புளியங்குளம் போன்ற கிராமங்களில் உள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தில் வைத்து கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.

1 03 3 04 DSC02627 IMG_4645 IMG_4663 IMG_4665 IMG_4667 IMG_4669 IMG_4670 IMG_4673

வவுனியாவில் ‘என் பின்னால் ஒரு நிழல்’ நூல் வெளியீடு!!

 
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய “என் பின்னால் ஒரு நிழல்” எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.

இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கவிஞர் யோ.புரட்சி, கலைஞர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார், நா.பார்த்தீபன் வவுனியா தேசியக்கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் மேழிக்குமரன், கவிஞர் அல்லையூர் சி.விஜயன் மற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் சார்பாக கவிஞர் அல்லையூர் சி.விஜயனுக்கு அவரது கலைப் பணியினை வாழ்த்தி வாழ்த்துப்பா வழங்கி வைக்கப்பட்டது.

1 14124382_1156439507751386_1336986301339965942_o 14196173_1156438771084793_6405623868484435359_o 14225569_1271033319607554_623916861154897540_n 14242356_1156438891084781_2107274242147236370_o

வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் உயர் குருதி அழுத்தம் காரணமாக உயிரிழப்பு!!

Dead

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியங்குளம் சமுர்த்தி அலுவலகத்தில் பணியாற்றிய பட்டாணிச்சூர் பகுதியில் வசித்து வந்த ஹபீல் முஹம்மது இர்சாத் 38 என்ற வயதுடைய குடும்பஸ்தர் நேற்று வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இவர் நேற்றைய தினம் காலை தனது கடமைக்கு சென்றுள்ளார் சிறிது நெரத்தின் பின்னர் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வியர்வை அதிகமாக வருவதாகவும் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்குச செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

புளியங்குளம் வைத்தியசாலைக்குச் சென்றபோது வவுனியா பொது வைத்தியசாலைக்கு காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் தொடர்பு கொண்டு உறவினருக்கு வவுனியா பொது வைத்தியசாலைக்கு தனது கிளினிக் பதிவுப் புத்தகத்தினை எடுத்தவருமாறு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் 14ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர், இவர் இருதய வருத்தம் காரணமாக கிளினிக் சென்று வந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இளற்கை மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவித்து சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிரேக் பிடிக்காததால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் விபத்து!!

 
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (03.09.2016) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி(பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

1 02 2 3 4

5 வினாடிகள் ஒட்சிசன் இல்லாவிடின் என்ன நடக்கும்?

21

இந்த அண்டசராசரத்தில் அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமானது பிராணவ வாயுவாகும், இது நாம் அனைவரும் அறிந்ததே

உலகம் ஓர் சரியான நடைமுறையில் செயற்படுவதற்கு இந்த பிரணவ வாயு மிகவும் அத்தியாவசியமானது. அவ்வாறான இது வெறும் ஐந்து வினாடிகளுக்கு மட்டும் தடைபட்டால் என்ன நடக்கும்?

வெறும் ஐந்து வினாடிகள் தானே ஒன்றும் நடக்காது என்பதே உங்களுடைய அறிவுசார்ந்த பதிலாக காணப்படும். ஆனால் அவ்வாறு இல்லை என்பது தான் ஆச்சரியபடவேண்டிய விடயம்.

ஆம் இவ்வாறு தடைபடுவதனால் என்ன நடக்கும் என்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்.

புவியில் காணப்படும் அனைத்து உயிரினங்களும் அதிக வெப்பத்திற்கு ஆளாகின்றன. இதனால் மிகவும் கொடிய அளவிலான தோல் நோய்கள் ஏற்படும். குறிப்பாக தோல்புற்று நோய் ஏற்பட்டு பெறும் விளைவுகளை ஏற்படுத்தும்.

வானமானது நீலநிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றமடைந்துவிடும். இது பகல் நேரமாகவே இருந்தாலும் உங்கள் கண்களுக்கு கருப்பு நிறமாகவே காட்சிதரும்.

வானத்தில் எதாவது ஓர் விமானம் இந்த நேரத்தில் பறந்து கொண்டிருந்தால் அது கீழே விழுந்து நொருங்கிவிடும். விமானத்தில் இருப்பவர்களின் நிலையும் கவலைக்கிடம் தான்.

நம் உடம்பில் அழுத்தம் அதிகரித்து காதில் காணப்படும் அகச்செவி வெடித்து சிதரும், இது எப்படியிருக்கும்.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல கட்டிடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கொங்கிறீட் மூலம் உருவாக்கபட்ட அனைத்து கட்டிடங்களும் தூளாகி பறந்துவிடும்.
கடல் நீர் இந்த ஐந்து வினாடிகளில் சற்று வற்றியநிலைக்கு தள்ளப்படும்.
மேலும் புவியில் வாழும் உயிரினங்களின் உயிர்அணுக்களில் ஹைட்ரிஜனின் அளவு அதிகரிப்பதால் ஓர்கட்டத்தின் பின் உயிர் அணுக்கள் வெடித்து சிதரும்.

இது வெறும் ஐந்தே வினாடிகளில் ஏற்படும் விளைவுகள் தான்.