பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!

FBபேஸ்புக்கின் மெசேஞ்சர் அப்பில் (Facebook Messenger) பிடித்தவர்களுடன் உரையாடிக் கொண்டே அவர்களின் முகம் பார்த்து Video Calls பேசுவதற்கு ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக்கின் மெசேஞ்சரில் Video Calls வசதி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் Text செய்து கொண்டே Video Calls பேச முடியாது.

இந்த நிலையில் புதிய வசதியாக “instant video” என வசதி அந்த அப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிடித்தவர்களிடம் Video Calls பேசிக் கொண்டே, மற்றவர்களிடம் Text செய்து பேசிக் கொள்ள முடியும்.

பாலைவனத்தில் தங்க வேட்டையாடும் பொதுமக்கள்!!

G1

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மேற்கு ஆரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது. இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி தங்கத்தை தோண்டி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் வீடு வாங்கும் அளவுக்கு தங்கம் எடுத்துள்ளனர்.

ஆனால் மோரித்தானியா செல்வதற்கு பல வித ஆபத்துகள் இருப்பதாகவும், தங்கம் தோண்டி எடுப்பதற்கு அந்நாட்டு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாலைவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட அஹ்மத் என்பவர் தன் குடும்பத்துடன் இங்கு வந்து குடிபெயர்ந்துள்ளார். தங்கம் தோண்டுவதற்கான உரிமம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளார்.

ஒரு மாதகாலமாக தங்கியிருந்த அஹ்மத் ஆறுகிராம் தங்கம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் அவர் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தங்கம் கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

ஆனால் இதில் இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை அரசு விளக்கவேண்டும் என பலர் கோரிக்கை விடுகின்றனர். இதற்கு அதிகாரிகள் தங்கம் தோண்ட அனுமதிப்பது பலரின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

G2

நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டகார பெண் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Acci

குஜராத்தில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபடாமல் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குஜராத்தின் டாமோ பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், ஒரு பெண் ரயில் வந்து கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி தண்டாவாளத்தை கடக்க முயற்சித்தார்.

அப்போது ரயில் அதிவேகத்தில் வந்ததால் மீண்டும் பிளாட்பாரத்தின் மீது ஏற முயற்சித்தார். ஆனால் அவரால் ஏறமுடியவில்லை. நல்ல வேளையாக நூலிழையில் மற்றொருவர் அவரை தூக்கிவிட்டார்.

இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

முன்னாள் காதலனை கரம் பிடிக்க பொலிசில் காதலி நடத்திய நாடகம்!!

Love

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது பொலிசார் பாலியல் பலாத்கார வழக்கு போடுவோம் என மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லின் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவரான இவர், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பிரியாவும் முருகனை காதலித்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இவர்களின் காதலை பிரியாவின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் பிரியாவின் பெற்றோர் அவருக்கு மற்றொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் பிரியாவோ, முருகனை மறக்க முடியாமல், அவர் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

முருகனோ வேறறோருவருடன் திருமணம் ஆனதால், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பிரியா அருகில் உள்ள காவல் நிலையத்தில் முருகன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் முருகனை அழைத்து பிரியாவை திருமணம் செய்து கொள்ளும்படியும், அவ்வாறு திருமணம் செய்ய மறுத்தால் உன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு தொடர்ந்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பொலிசாரின் மிரட்டலுக்கு பயந்த முருகன் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பொலிசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாரின் மிரட்டல் காரணமாகவும், பிரியாவின் தொடர் தொந்தரவால் தான் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை : தொடரும் அவலம்!!

11

ஒடிசாவில் தனா மஜி என்பவர் அ ம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் மீண்டும் நடந்துள்ளது.

மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால் மிதாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மேலும் மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதற்காக அம்புலன்ஸ் வரவழைத்து, அவரும், அவருடைய மனைவியும் மகளை கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அச்சிறுமி இறந்து விட்டாள். அது தெரிந்தவுடன், அம்புலன்ஸ் ஓட்டுனர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு வற்புறுத்தினார்.

தினபந்துவும், அவருடைய மனைவியும் வேறு வழியின்றி மகளின் உடலை கீழே இறக்கினர். பின்னர், உடலை தோளில் சுமந்து கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கி சுமார் 6 கி.மீ தூரம் நடந்தனர்.

பல மைல் தூரம் நடந்த நிலையில், அக்காட்சியை கண்ட சிலர் வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து டிரைவர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பொலிசில் புகார் செய்துள்ளார்.

12 13

சவூதி தொழிலாளர்களுக்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கை!!

SL

சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்லும் நபர்கள் அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக தப்பிச்சென்றால், மீண்டும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது 4 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டி ஏற்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அது, சவூதி அரேபியாவில் இம்மாதம் தொடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ள புதிய தொழிற் சட்டத்திற்கு அமைவாகவாகும்.

சவூதி உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்ட குறித்த சட்டம் அந்நாட்டில் தொழில் புரியும் அனைத்து வௌிநாட்டு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , வௌிநாட்டு தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் இருந்து தப்பிச் சென்றால் , அது தொடர்பில் அதன் உரிமையாளர் முறைபாட்டொன்றை மேற்கொண்டிருந்தால் , குறித்த நபர் மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக சவூதி ரியால் 10 ஆயிரத்தினை அபராத தொகையாக செலுத்த வேண்டும். அது , இலங்கை பெறுமதி படி மூன்று இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதன் காரணமாக , தொழில் புரியும் இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு தப்பிச்செல்ல வேண்டாம் என்றும் , வீசா காலம் நிறைவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் மற்றும் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும் இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விலங்குகளை துன்புறுத்தி வந்த உணவகம் சுற்றிவளைப்பு!!

 
காலி – அஹங்கம பிரதேசத்தில் உணவகம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை கடந்த 30ஆம் திகதி சுற்றிவளைத்துள்ளனர்.

இதன் போது , கிளிகள் , நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட விலங்குகள் மீட்கப்பட்டன. மேலும் , சந்தேகநபர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A1 A2 A3

திரைக்கு வரும் முன்பே 6 சர்வதேச விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம்!!

1

வெளி­வ­ரு­வ­தற்கு முன்பே 6 சர்­வ­தேச விரு­து­களை தமிழ் படம் ஒன்று வாங்கிக் குவித்­துள்­ளது.

அருண் சிதம்­பரம் கதை, திரைக்­கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, கதா­நா­ய­க­னா­கவும் நடித்துள்ள படம் ‘கனவு வாரியம்’. இவர் ‘ஆண­ழகன்’ சிதம்­ப­ரத்தின் இளைய மகன். கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக உடற்­ப­யிற்சி கலையில் வல்­லு­ன­ராக திகழும் ‘ஆண­ழகன்’ டாக்டர். அ.சிதம்­பரம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உட்­பட தமி­ழ­கத்தின் பல பிர­ப­லங்­க­ளுக்கு உடற்­ப­யிற்சி ஆலோசகராக இருந்­தவர்.

அருண் சிதம்­பரம் அமெ­ரிக்­காவில் தனது மேற்­ப­டிப்பை (MS) முடித்­து­விட்டு புகழ்­பெற்ற வங்­கி­யான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகா­கோவில்) பணி­பு­ரிந்தார். அருண் சிதம்­பரம், இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமால் பெரிதும் பாராட்­டப்­பட்­டவர். இவரும், கார்த்திக் சிதம்பரமும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயா­ரித்­துள்­ளனர்.

தமி­ழக கிரா­மங்­களில் நில­விய மின்­வெட்டு பிரச்­சினையை மைய­மாக கொண்டு குழந்­தைகள் கொண்­டாடும் வகையில் பட­மாக்­கப்­பட்ட கமர்­ஷியல் திரைப்­படம் ‘கனவு வாரியம்’, ஜுன் 11 முதல் 19 வரை சீனாவில் நடை­பெற்ற 19 ஆவது ஷாங்காய் சர்­வ­தேச திரைப்­பட விழாவில் ரசி­கர்­களின் பேரா­த­ர­வுடன் 4 அரங்கு நிறைந்த காட்­சிகள் திரை­யி­டப்­பட்­டது.

பின்னர், ஜூலை 26 முதல் 30 வரை கொரி­யாவின் பூசான் சினிமா ஹோலில் நடை­பெற்ற ‘ஏசியன் நியூ மீடியா’ திரைப்­பட விழா­விற்கு தெரி வானது. விழா குழு­வி­னரால் இயக்­குநர் அருண் சிதம்­பரம் தென் கொரியா அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

தற்­போது ஓகஸ்ட் 24 முதல் 28 வரை ரஷ்­யாவில் நடை­பெறும் ‘இண்டர் நெஷனல் மோட்டிவேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்­டிவல் BRIDGE OF ARTS’ திரைப்­பட விழாவில் திரை­யிட தெரிவாகியிருந்தது. இத்­தி­ரைப்­பட விழாவில் பங்­கேற்க இயக்­குநர் அருண் சிதம்­பரம் ரஷ்யா சென்றுள்ளார்.

மேலும் ‘கனவு வாரியம்’ திரைப்­படம் செப்டெம்பர் 16 முதல் 23 வரை வட கொரி­யாவில் நடைபெறும் ’15 ஆவது பியாங்யாங் சர்­வ­தேச திரைப்­பட விழா­விலும்’, செப்­டெம்பர் 21 முதல் 24 வரை உக்­ரைனில் நடை­பெறும் ‘சர்­வ­தேச குழந்­தைகள் திரைப்­பட விழா­விலும்’, ஒக்­டோபர் 6 முதல் 9 வரை இத்­தா­லியில் நடை­பெறும் ’67 ஆவது மோண்­டி­கேட்­டினி திரைப்­பட விழா­விலும்’, டிசம்பர் மாதம் கென்­யாவில் நடை­பெறும் ’11ஆவது லோலா கென்யா திரைப்­பட விழா­விலும்’ திரை­யிட தெரி­வா­கி­யுள்­ளது.

இது­வரை ‘கனவு வாரியம்’ திரைப்­படம் 6 சர்­வ­தேச விரு­து­க­ளையும் 8 நாடு­களின் அங்கீகாரங்களையும் வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

‘கனவு வாரியம்’ திரைப்­படம் வென்ற விரு­துகள் வரு­மாறு,
அமெ­ரிக்­காவின் ஹூஸ்டன் நகரில் நடை­பெற்ற 49 ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்­வ­தேச திரைப்­பட விழாவில்,சிறந்த திரைப்­ப­டத்­திற்­கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்­டினம் ரெமி’ விருது

இத்­தி­ரைப்­ப­டத்தில் இடம்­பெற்­றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் சிறந்த குழந்­தைகள் பாட­லுக்­கான ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருது

49வது வேர்ல்ட் பெஸ்ட் சர்­வ­தேச திரைப்­பட விழாவில் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மிகவும் பிடித்த படத்­திற்­கான விருது

அமெ­ரிக்­காவின் ஒக்­ல­ஹோமா மாகா­ணத்தில் ‘17 ஆவது பேர் போன்ஸ் சர்­வ­தேச திரைப்­பட விழா’வில் விருது

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்ற ‘லொஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்­பட விழா’வில் விருது

மத்­திய அரசால் நடத்­தப்­படும் ‘தேசிய அறி­வியல் திரைப்­பட விழா’வில் (National Science Film Festival) சிறப்பு விருது

திரையிடப்பட்ட மேலை நாடுகளில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் குழந்தைகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

2 3 4

ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையர் ஒன்பது பேர் பங்கேற்பு!!

para olympic

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடந்­தே­றிய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவைத் தொடர்ந்து இம்­மாதம் 7 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பரா­லிம்பிக் விள­யைாட்டு விழா வில் இலங்­கையைச் சேர்ந்த 9 போட்­டி­யா­ளர்கள் பங்குபற்­ற ­வுள்­ளனர்.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றிய 9 இலங்­கை­யர்­களில் ஒரு­வரைத் தவிர்ந்த மற்றைய எண்­ம­ரி­னதும் பெறு­பே­றுகள் தரம் குன்றிக் காணப்­பட்ட நிலையில் பரா­லிம்பிக் போட்டியா­ளர்கள் சாதிக்கும் முனைப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் ரியோ நோக்கி நாளை புறப்படுகின்­றனர்.

இலங்கை அணியில் எட்டு ஆண் போட்­டி­யா­ளர்­களும் ஒரு பெண் போட்­டி­யா­ளரும் இடம்பெறுகின்றனர். பரா­லிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்­கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பாக்­கியம் அனில் பிர­சன்ன ஜய­லத்­துக்கு கிடைத்­துள்­ளது.

இவர் ரீ 42 பிரிவில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­க­ளிலும் நீளம் பாய்­த­லிலும் பங்குபற்றவுள்ளார். காமினி ஏக்­க­நா­யக்க, தினேஷ் பிரி­யன்த ஹேரத் ஆகிய இரு­வரும் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்­டி­யிலும் சம் பத் ஹெட்­டி­ஆ­ராச்சி எவ் 46 பிரிவு ஈட்டி எறிதல் போட்­டி­யிலும் பங்கு­பற்­று­கின்­றனர்.

அஜித் ஹெட்­டி­ஆ­ராச்சி ரி 44 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்­டி­க­ளிலும் இந்­திக்க சூல­தாச ரி 42 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்­டி­க­ளிலும் தங்­க­ளது ஆற்றல்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

அணியில் இடம்­பெறும் ஒரே ஒரு வீராங்­க­னை­யான அமரா இந்­து­மதி ரி 47 பிரிவு 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்றார். இவர்­க­ளை­விட சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டியில் உபாலி ராஜ­க­ரு­ணவும் வில்­லாளர் போட்­டியில் சம்பத் பண்­டா­ரவும் பங்­கேற்­கின்­றனர்.

ரியோ பரா­லிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றும் இலங்­கை­யர்கள் பதக்­கங்கள் வென்று வரு­வார்கள் என நம்­பு­வ­தாகக் குறிப்­பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை வாழ்த்தினார்.

இலங்கை பராலிம்பிக் அணியினருக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.

என் அம்மா சிவகார்த்திகேயன் ரசிகை : கீர்த்தி சுரேஸ்!!

Keerthi

தனு­ஷுடன் ‘தொடரி’, சிவ­கார்த்­தி­கே­ய­னுடன் ‘ரெமோ’, பாபி­சிம்­ஹா­வுடன் ‘பாம்­புச்­சட்டை’…இவை எல்­லா­வற்­றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. குஷி­யாக, பிஸி­யாக இருக்கும் கீர்த்தி சுரே­ஷுடன் பேசியபோது,

எப்­படி ஃபீல் பண்­ணு­றீங்க?
“இதென்ன கேள்வி? ஐ ஆம் த ஹேப்­பியஸ்ட் வுமன் ஆன் எர்த். சின்ன வய­சு­லேயே ஹீரோயின் ஆக­ணுங்­கி­ற­துதான் ஆசை, இலட்­சியம் எல்லாம். அப்பா சுரேஷ்­குமார், மலை­யா­ளத்தில் நிறையப் படங்கள் தயா­ரிச்­சவர்.

அம்மா மேன­காவை உங்­க­ளுக்கே தெரியும். எண்­ப­து­களில் தமி­ழிலும் மிகவும் பிர­ப­ல­மான நடிகை.

என்­னோட அப்பா தயா­ரிச்ச ‘பைலட்ஸ்’, ‘அச்­ச­ன­யானு எனிக்கு இஷ்டம்’, ‘குபேரன்’ போன்ற படங்­களில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடிச்சேன். ஹீரோ­யினா என்­னோட முதல் படமே மிகவும் பிரம்­மாண்­ட­மான என்ட்ரி தெரி­யுமா?

அப்­ப­டியா? அப்­ப­டி­யென்ன படம்?
ஹீரோ­யினா நான் நடிச்ச முதல் படத்­தி­லேயே ரெட்டை வேடம்தான். படம் பேரு ‘கீதாஞ்­சலி’. பிரி­யர்­தர்ஷன் டைரக்‌ஷன். மோகன்லால் ‘மணி­சித்­தி­ரத்தாள்’ படத்தில் நடிச்ச அதே கெரக்­டரில் இந்தப் படத்தில் வந்து கலக்­கி­னாரு.

2013 இல் ரிலீஸ் ஆச்சி. அகதா கிறிஸ்­டி­யோட நாவல் இன்ஸ்­பி­ரே­ஷனில் உரு­வான படம் அது.

நீங்க சிவ­கார்த்­தி­கே­ய­னோட ரசி­கையா?
என்ன அர்த்­தத்­துல கேட்­கு­றீங்­கன்னு தெரி­யலை. நானும், சிவாவும் தமிழ் சினி­மாவில் ராசி­யான ஜோடி­யா­யிட்டோம். எக்­சு­வலா எங்­கம்­மாதான் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டைய தீவிர ரசிகை.

‘ரஜி­னி­மு­ருகன்’, ‘ரெமோ’ன்னு அடுத்­த­டுத்து அவ­ரோட நான் நடிக்­கி­றது எங்­கம்­மா­வுக்கு மிகவும் சந்­தோஷம். ஷூட்­டிங்கில் நான் எப்­படி வேர்க் பண்­ணி­னேன்னு கேட்­கு­ற­தை­விட, “சிவா எப்­படி பண்­ணு­றாரு? அடுத்து என்­ன­வெல்லாம் படம் செய்யப் போறாரு?”ன்னு அவரைப் பத்­தி­யேதான் ஆர்­வத்­தோட விசா­ரிச்­சிக்­கிட்­டி­ருப்­பாங்க.

விஜய்­யோட நடிக்­க­றீங்க…
சத்­தி­யமா இதை நான் எதிர்­பார்க்­கவே இல்லை. ‘போக்­கிரி’ வெற்­றி­வி­ழா­வுக்­காக அவரு திருவனந்­த­புரம் வந்­தப்போ கூட்­டத்­தோட கூட்­டமா நின்னு ‘இளைய தள­பதி வாழ்­க’ன்னு கோஷம் போட்­டுக்­கிட்­டி­ருந்தேன்.

அவ­ரோட சேர்ந்து நடிக்கப் போறோம்னு அப்போ நினைச்­சி­ருப்­பேனா என்ன? ‘விஜய் 60’ படத்­தோட பூஜையில் அவரை நெருக்­கமா பார்த்­தப்போ எனக்கு பேச்சே வரலை. “ரஜினி முருகன் பார்த்தேன்.

‘உம்­மேல ஒரு கண்ணு’ பாட்­டுலே கலக்கி யிருக்­கீங்­க”ன்னு சொன்­னாரு. அதுக்­கப்­பு­றம்தான் அவ­ரோடு சக­ஜமா பேசி நடிக்க முடிஞ்­சது.

பெரிய ஹீரோக்­க­ளோடு பெரிய படங்­களில் நடிக்­கி­றீங்க. இத்­தனை படம் ஒரே நேரத்தில் நடிப்­பதால் கால்ஷீட் பிரச்னை வர­லையா?
தமிழில் ஒரே நேரத்தில் நாலு பெரிய படத்தில் நடிக்­கிறேன் என்­பது உண்­மைதான்.

கதை கேட்­கு­றது, சம்­பளம் பேசு­ற­துலாம் என் மெனேஜர் பர்ஃ­பெக்டா பார்த்­துக்­க­றாரு.

ஒரு படத்­தோட இன்­னொரு படத்­துக்கு டேட்ஸ் கிளாஷ் ஆகாமே மிகவும் கவ­னமா இருக்கேன். அத­னா­லேதான் இது­வரை என் மேலே கால்ஷீட் புகார் எது­வு­மில்லை.

உங்க அம்மா உங்­க­ளுக்கு ஹெல்ப் பண்­ணு­ற­தில்­லையா?
நோ நோ. அவங்க எந்த விஷ­யத்­திலும் தலை­யி­ட­ற­தில்லை. நானாதான் எல்­லாத்­தையும் அவங்­க­கிட்டே சொல்­லிக்­கிட்டே இருப்பேன்.

ரொம்ப எக்ஸ்­பீ­ரி­யன்­ஸான நடிகை என்­பதால் சினி­மாவை அவங்க நல்லா புரிஞ்சி வெச்­சி­ருக்­காங்க.

அவங்­க­ளால எனக்கு எங்­கேயும் தர்மசங்கடம் வந்துடக்கூடாதுன்னு மிக தெளிவா இருக்காங்க. என்னோட அக்காவும் கூட பொலிவூட் சினிமாவில் பெரிய ஆளுதான். ஷாருக்கானோட ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில் வேலை பார்த்தவங்க. அவங்களும்கூட.

வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்!!

 
செக் குடி­ய­ரசை சேர்ந்த பிரான்­டிசெக் ஹத்­ரவா என்­பவர், தான் வேலைக்குச் செல்­வ­தற்­காக சொந்த விமா­ன­மொன்றை தானே உரு­வாக்­கி­யுள்ளார்.

45 வய­தான ஹத்­ரவா, வனத்­து­றைக்­காக இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்றில் பணியாற்­று­கிறார்.

விமா­னங்கள் மீதும் அவ­ருக்கு ஆர்வம் அதிகம். தினமும் 14 நிமி­டங்கள் காரை செலுத்திக் கொண்டு தனது வேலைத்­த­ளத்­துக்கு செல்­வது நேர விரயம் என அவர் கரு­தினார். இந்­நி­லையில் தான் வேலைத்­த­ளத்­துக்குச் செல்­வ­தற்­காக தனது சொந்த விமா­ன­மொன்றை அவரே உரு­வாக்­கி­யுள்ளார்.

திறந்த கொக்பிட் (விமானி அறை) கொண்ட இந்த விமா­னத்தை நிர்­மா­ணிப்­பத்­றகு 3,700 யூரோ (சுமார் 6 லட்சம் ரூபா) செல­வா­கி­யதாம். அதி­க­பட்­ச­மாக மணித்­தி­யா­லத்­துக்கு 146 கிலோ­மீற்றர் (91 மைல்) வேகத்தில் இவ்­வி­மா­னத்தில் பயணம் செய்ய முடியும்.

இவ்­வி­மா­னத்தின் மூலம் வீட்­டி­லி­ருந்து தொழிற்­சா­லைக்கு செல்­வ­தற்கு 4,5 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படுவதாக பிரான்டிசெக் ஹத்ரவா தெரிவித்துள்ளார்.

F1 F2 F3

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில் விதிமுறைகள் நேற்று முதல் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

MC

விற்­பனை செய்­யப்­படும் அனைத்து தலைக்­க­வ­சங்­க­ளிலும் விபத்­தொன்றின் போது பாதிக்­கப்­படக் கூடிய இடங்கள் தொடர்பில் உல­க­ளா­விய ரீதியில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தான கீழ் காட்டப்பட்டுள்ள படத்தில் போன்ற விஞ்­ஞான ரீதி­யான பட­வி­ளக்­கத்தைக் காட்­சிப்­ப­டுத்தல், நேற்று முதலாம் திகதி முதல் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை மோட்டார் சைக்­கி­ளோட்­டிகள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

B2

இச்­சங்­கத்தின் செய­லாளர் சிரந்த அம­ர­சிங்க விடுத்த அறிக்­கை­யொன்றில், கொள்­வ­னவு செய்யும் மோட்டார் சைக்கிள் தலைக்­க­வ­சத்தில் பாது­காப்­பற்ற பகு­திகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

அதே­போல விற்­ப­னை­யா­ளர்கள் தலைக் கவ­சத்தை விற்­பனை செய்யும் போது, தலைக்­க­வசம் உரிய தரத்தில் இருத்தல், இளம் வர்ண தலைக்­க­வ­சங்­களை அணி­வதன் முக்­கி­யத்­துவம், பாரிய விபத்­தொன்றின் பின்னர் தலை­க­வ­சத்தின் பாது­காப்பு தன்­மையில் ஏற்­படும் குறை­பாடு, தலைக்கவ­சத்தின் நீண்­ட­கால பாவ­னையின் பின்னர் தளர்வு ஏற்­ப­டு­மாயின் அதனை அணி­வதை தவிர்த்தல், தலைக்­க­வ­சத்­தி­லுள்ள பாது­காப்பு பட்­டி­யினை தாடை­யுடன் இணைத்து அணி­வ­தனால், தாடைக்கு ஏற்­பட கூடிய பாது­காப்பு என்­பன தொடர்பில் கொள்­வ­ன­வா­ளர்­க­ளுக்கு கட்­டாயம் தெளிவூட்­டவும் அறி­வூட்­டவும் வேண்டும்.” என தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மோட்டார் சைக்கிள் செலுத்­துவோர் விபத்­தினால் முகத்தில் ஏற்­படக் கூடிய காயங்களுக்கு நீண்­ட­காலம் சிகிச்சை பெற்று வரு­வ­துடன் அதற்காக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Dropbox ஹெக் செய்யப்பட்டதனால் 68 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு!!

Drop Box

வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட Dropbox நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென Dropbox பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

68 மில்லியன் பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன இதை Dropbox நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2012 ஆம் ஆண்டில் திருடப்பட்டிருக்கலாம் என Dropbox சந்தேகிக்கிறது, எனவே, அதன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை புதுப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

68 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை திருடியது யார் என்ற விபரம் இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருந்தாலும், இதுவரை கணக்குகளுக்குள் ஊடுருவி எவ்வித தகவல்களும் மாற்றம் செய்யப்படவில்லை என Dropbox நிம்மதி தெரிவித்துள்ளது.

2012 இற்கு பிறகு Dropbox சேவையில் புதிதாக இணைந்து கொண்டவர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எனினும், கணக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது மாற்றிக் கொள்வது நல்லது என Dropbox குறிப்பிட்டுள்ளது.

வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம்!!

 
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமான உற்சவம் 10ம் நாளான 01.09.2016 அன்று சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

இறுதிநாளன்று அடியார்கள் பால்செம்பு, காவடி, தீச்சட்டி போன்ற நேத்திக் கடன்களை நிறைவேற்றியதோடு, 27அடி ஐயனார் சிலைக்கு அடியார்களால் பால் அபிஷேகம் நிகழ்த்தப் பட்டது.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான ஐயனார் சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீதன்-

14138414_1349693051727082_1256562641_n 14139273_1349871858375868_124635142_o 14151793_1349693385060382_1403844423_o14159673_1349693171727070_1350526066_n14171802_1349692955060425_1801643925_n14182160_1349694001726987_620824611_n14163883_1349693578393696_2093219896_o14159880_1349694068393647_1931839694_n14159758_1349692905060430_492054798_n14164045_1349693745060346_1002062743_o14182250_1349692578393796_1509075621_n 14159261_1349694341726953_1089960360_n 14159283_1349692631727124_1890216613_n  14159712_1349692835060437_1308894686_n   14159884_1349692865060434_45058926_n    14172000_1349692871727100_68133524_n   14182514_1349692751727112_1141252696_n 14182529_1349693098393744_1024611182_n 14191372_1349871715042549_1960354068_o 14193725_1349693118393742_330865849_n 14193741_1349692985060422_333017655_n 14193868_1349693001727087_1948447227_n 14194300_1349692861727101_1741223131_n  14218175_1349693935060327_1835794297_n14215171_1349693231727064_370603743_o 14215333_1349693461727041_1449258661_o 14215702_1349693651727022_751818764_o  14218410_1349693868393667_769778924_n 14233585_1349693341727053_820157385_o 14233711_1349693561727031_1475489591_o

குறட்டை விடுபவரா நீங்கள் : இதோ வந்துவிட்டது புதிய சாதனம்!!

Kurattai

குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது.

எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே சில சாதனங்களும், முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வரிசையில் தற்போது Snore Circle எனும் புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது காதில் அணியக்கூடிய புளூடூத் ஹெட்செட் போன்ற வடிவத்தைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இச் சாதனமானது குறட்டை விட ஆரம்பிக்கும்போது சிறிய அதிர்வை உண்டாக்குகின்றது. குறித்த அதிர்வானது காது எலும்புகளின் ஊடாக பயணித்து மண்டையோட்டை அடைகின்றது பின்னர் அங்கு உணர்ச்சி நரம்புகளை தூண்டி குரல் வளைக்கு சமிக்ஞையை அனுப்புகின்றது.

இந்த சமிக்ஞையானது குரல் வளையிலுள்ள தசைகளை விரிவடையச் செய்து குறட்டை சத்தத்தின் அளவை வெகுவாக குறைவடையச் செய்கின்றது.

இச் சாதனம் 2012ம் ஆண்டளவில் உருவாக்கப்பட ஆரம்பித்த போதும் தற்போதே முழுமை பெற்றுள்ளது. இதன் விலையானது 129 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Death Noodles சவால் : இருவருக்கும் நடக்கும் போட்டியை பாருங்கள் : செம வீடியோ!!

Dead Noodes chalange

இந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது. சமீபத்தில் இந்த உணவை சாப்பிட்ட பிரித்தானியா இளைஞர் ஒருவர் தற்காலிகமாக காது கேட்கும் சக்தியை இழந்தார்.

மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கும், Bird’s eye மிளகாய்யை விட 100 மடங்கும் அதிகக் காரம் கொண்ட Mampus என்ற மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

Mampus என்றால் மரணம் என்று அர்த்தமாகும். இந்நிலையில் மேற்கத்திய நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தோனேசியருடன் டெத் நூடுல்ஸ் போட்டியில் மோதி உள்ளார்.

இருவருக்கும் ஒரு தட்டில் டெத் நூடுல்ஸ் பரிமாறப்பட்டது. மேற்கத்தியர் சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது, நாவில் இருந்து நீர் வடிந்தது, கண்ணீர் பெருகியது.

இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி உணவை மீதி வைத்துவிட்டார்.

ஆனால், உள்ளுரை சேர்ந்தவரோ நிதானமாக பரிமாறப்பட்ட நூடுல்ஸ் அனைத்தையும் உண்டு போட்டியில் வெற்றிப்பெற்றார்.