வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் கொடி கொடித்தம்பத்தில் ஏற்றப்பட்டு மகோற்சவ பெருவிழா ஆரம்பமானது.
வரும் 10.09.2016 சனிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும், 11.09.2016 ஞாற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும், 12.09.2016 திங்கட்கிழமை தேர்திருவிழாவும், 13.09.2016 செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இன்று (04.09.2016) ஞாயிற்றுக்கிழமை திருதியை திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய கொடியேற்ற நன்னாளில் முன்னிரவு 8.00 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அனைவரும் வருகைதந்து நரசிங்கப்பெருமானின் அருள்பெற ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.
அமெரிக்காவில் காதலி உயிரோடு இருப்பதாக கருதி கல்லறையை உடைத்த காதலனனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் La Entrada பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர்.
கல்லறையில் அடக்கம் செய்த பகுதிக்கு சென்ற அப்பெண்ணின் காதலன், கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தமிடுவதாக கூறியுள்ளார். இதனால் அவர் பெண்ணின் குடும்பதாரிடம் சென்று உங்கள் பெண் உயிரோடு இருப்பதாகவும், தொடர்ந்து சத்தமிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மகள் உயிரோடு இருப்பதாக கருதி பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கல்லறையை உடைத்தனர். சவப்பெட்டியில் இருந்த பெண்ணை எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் இது காதலனுடைய கற்பனை என்றும் மருத்துவர்கள் கூறினர். அதன் பின் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிசடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர்.
புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மே மாதம் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், இன்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.
’ஆதரவற்றோருக்கு எல்லாம் தாயாக இருந்து அன்பு செலுத்திய அன்னைக்கு காணிக்கை’ என தனது மணல் சிற்பத்தில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுவரை 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014 ஆம் ஆண்டு நாட்டின் 4 ஆவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நாட்டில் விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காதலியை காப்பாற்றி விட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லீன்ஸ் நகரில் ரெஜினால்ட் ஹிரால்ட் என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியன்னா என்ற காதலி ஒருவரும் இருந்துள்ளார்.
ரெஜினால்டிற்கு 25 வயது ஆன நிலையிலும் அவர் இதுவரை விமானத்தில் பயணம் செய்தது இல்லை.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ரெஜினால்ட் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
ரெஜினால்டின் பிறந்த நாள் பரிசாக அவரை சிறிய ரக விமானத்தில் பயணிக்க வைக்க அவரது காதலி திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விமானம் மற்றும் விமானி ஒருவரை ஏற்பாடு செய்த பிரியன்னா, ரெஜினால்ட்டை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளார்.
நகர் முழுவதையும் சுற்றி வந்தபோது காலநிலை மோசமடைந்து கடுமையான மழை பெய்துள்ளது. நிலைமையை உணர்ந்த அவர்கள் மூவரும் விமான ஓடுதளத்திற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, திடீரென விமானத்தின் மூக்கு பகுதியை மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் விமானம் தள்ளாடியவாரு தரையை நோக்கி சென்றுள்ளது.
விமானத்திற்குள் இருந்த ரெஜினால்ட் உடனடியாக விமானத்தின் கதவினை காலால் பல முறை உதைத்து திறந்துள்ளார்.
அப்போது, விமானம் ஒரு ஏரியில் விழுவதற்கு சில வினாடிகள் முன்னாள் தனது காதலியை அவர் விமானத்திலிருந்து வெளியே தள்ளி விட்டுள்ளார்.
பிரியன்னா ஏரியில் விழுந்த அதே நேரத்தில் விமானமும் விழுந்து மூழ்கியுள்ளது.
இச்சம்பவத்தில் விமானத்திற்குள் சிக்கிய ரெஜினால்ட் மற்றும் விமானி ஆகிய இருவரும் பலியாயினர். பிரியன்னா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
விமான விபத்தில் தனது காதலியை காப்பாற்றிவிட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை சாப்பிட்ட இந்தோனேசிய நபரொருவர் சில நிமிடங்கள் செவி கேட்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தோனேசியாவில் பென் சுமாடிவிரியா என்பவர் உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை ருசி பார்த்துள்ளார்.
Mampus அல்லது death noodles எனப்படும் இந்த உணவு தற்போது உலக அளவில் மிகவும் காரமான உணவாக கருதப்படுகிறது.
இந்தோனேசியாவின் ஜக்கார்த்தாவில் மட்டும் கிடைக்கும் இந்த கார உணவு Birds eye மிளகாய் எனப்படும் கார வகை மிளகாயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த உணவை பென் சுமாடிவிரியா சுவைக்கும் முன்னதாக தனது மேல்சட்டையை கழற்றியுள்ளார். பின்னர் ஒரு சில கவளங்கள் எடுத்து சுவைத்த அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வியர்வை கொட்டியதாகவும், கண்கள் இருளடைந்து மயக்க நிலையில் சில நிமிடங்கள் இருந்ததாகவும் பின்னர் தெரிவித்துள்ளார்.
சில கவளங்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர் வாய் நிறைய ஐஸ் கட்டிகளை அள்ளிப்போட்டுள்ளார். பின்னர் குளிர்ந்த நீரை கோப்பை கணக்கில் குடித்துள்ளார். ஆனால் இவை ஒன்றும் அந்த கார உணவு தந்த தாக்கத்தை குறைக்கவில்லை என்று கூறிய பென், உடனடியா தண்ணீர் குழாயின் அடியில் தனது தலையை வைத்துக்கொண்டு தன்னால் எதையும் கேட்க முடியவில்லை என அலறியுள்ளார்.
பல மணி நேரங்கள் இதனால் அவஸ்தைக்குள்ளான அவர் இதுவரை உலகின் பல்வேறு வகையான கார உணவு வகைகளை சுவைத்துள்ளதாகவும், ஆனால் இதுபோன்ற கார உணவை வாழ்க்கையில் சுவைத்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் கடந்த 52 ஆண்டுகளாக தினமும் ஒரேநிறத்தில் உடையணிந்து வருகின்றனர்.
பிரான் மற்றும் எட் கார்கீலா இருவரும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் வார இறுதி கொண்டாட்டங்களில் இணைந்து நடனமாடி குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் மகிழ்வித்து வந்துள்ளனர்.
இதன் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து நடனமாடியதும், அதையே அவர்கள் கோவில் உள்ளிட்ட வெளியிடங்களுக்கும் அணிந்து சென்றுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் சீக்கிரத்தில் இவர்களை அடையாளம் கண்டு நலம் விசாரிக்கவும் துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பிரான் மற்றும் எட் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தும் இந்த தகவலை அவர்களது பேரன் தனது டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பிரித்தானியாவில் பொது இடத்தில் வைத்து 14 வயது சிறுமி ஒருவர் இரண்டு பெண்களால் மிக கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Birmingham அருகே உள்ள Erdington பூங்காவில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் சிரித்தபடி வேடிக்கை பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த சிறுவன் ஒருவன் குறித்த காட்சியை பதிவு செய்துள்ளான். அதை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
குறித்த வீடியோவில், எதிர்பாராதவிதமாக இரண்டு பெண்கள் வந்து, சிறுமியை கீழே தள்ளி கால்களால் உதைத்து மிக கொடூரமாக தாக்குகின்றனர். இதன்போது அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்காமல் சிரித்தபடி வேடிக்கை பார்க்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், ஏன்? எதற்காக இப்படி அடித்தார்கள்? என்று தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் திடீரென தாக்கியுள்ளனர். இந்த வகையான பெண்கள் மிக அருவருப்பானவர்கள், இந்த பெண்கள் தங்களை குறித்து வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மூத்த சகோதரி கூறுகையில், சம்பவம் குறித்து இன்னும் பொலிசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் புகார் அளிப்போம், அதற்கு முன்னால் பதிலடி கிடைக்கும் என்ற பயத்தை அவர்களுக்கு காட்ட விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று சமீபத்தில் Guiseley நகரத்தில் நடுரோட்டில் சிறுமி ஒருவரை இரண்டு பெண்கள் சேர்ந்து மிக கொடூரமாக தாக்கியது நினைவுக்கூரத்தக்கது.
பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கும் முன்னர் Essex சாலையில் சுமார் 50 வயதான பெண் ஒருவர் சாலையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத பிச்சைக்காரன் அந்த பெண்ணிடம் கை நீட்டி பிச்சை கேட்டுள்ளார்.
பரிதாபம் அடைந்த பெண் அவருக்கு ஒரு நாணயத்தை போட்டுவிட்டு அங்கிருந்து விலக முயன்றுள்ளார். ஆனால், பெண்ணை தடுத்தி நிறுத்திய அந்த பிச்சைக்காரன் மீண்டும் பணம் கேட்டு கையை நீட்டியுள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றுள்ளார். ஆனால், அப்பெண்ணை பின் தொடர்ந்த அந்த பிச்சைக்காரன் ஆட்கள் இல்லாத தனிமையான இடம் பார்த்து அப்பெண் மீது பாய்ந்துள்ளான்.
பிச்சைக்காரனின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த பெண் கடுமையாக போராடியுள்ளார். ஆனால், முரட்டுத்தனமாக செயல்பட்ட பிச்சைக்காரன் கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான்.
பின்னர், பெண்ணின் பையில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
இச்சம்பத்திற்கு பிறகு பெண் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பொலிசார் விசாரணை செய்தபோது பலாத்காரம் செய்த பிச்சைக்காரனுக்கு 35 வயது இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
பொது இடத்தில் பணம் கொடுக்காத பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஹைதரபாத்தில் பொறியில் மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், எப்படி தற்கொலை செய்யலாம் என்று பத்து குறிப்புகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் நவீன்குமார் என்ற 24 வயது பொறியியல் மாணவன் கடந்த புதன் கிழமை அனுபாமா பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
இதை விசாரித்த அப்பகுதி பொலிசார் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட நவீன்குமார் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் அவர் தமது குடும்ப பிரச்னைகள் காரணமாகத்தான், தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என எழுதியுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இணையத்தை பயன்படுத்தி எவ்வாறு எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார்.
அதில் அவர் முக்கியமாக 10 குறிப்புகளை எடுத்துள்ளார். குறிப்பாக காத்தாடியில் கயிறு கட்டி தற்கொலை செய்துகொள்வது, தொண்டை இறுக்கி தற்கொலை செய்து கொள்வது என பார்த்துள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
நவீன்குமார் சொந்த ஊர் நால்கோண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள, மோட்குர் கிராமம் என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் தான் அனுபாமா பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள ஜிவ்தா அறக்கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட பசு ஒன்று வயிற்றுப் பகுயில் வீக்கம் காணப்பட்டது.
இதனால் பசு கர்ப்பம் தரித்திருக்கிலாம் என்று கருதிய மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதில், பசுவின் வயிற்றில் 100 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக், இரும்புக் கம்பிகள், மின்சார ஒயர்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது.
மக்காத மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற பிளாஸ்டிக் குப்பைகளை பாதுகாப்பற்ற முறையில் வீதிகளில் வீசுவதால், இதுபோன்ற விலங்குகள் அதை உண்ணும் நிலை அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி கிராமங்கள் கூட தற்போது புற்பூண்டுகளை இழந்து காண்கிரீட் காடுகளாக மாறி வருவதால் ஆடு மாடுகள் குப்பைகளையும் கழிவுகளையும் உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது என விலங்கின ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் கல்கமுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் 20 வயதான யுவதியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசிக்கு வந்த மிஸ்ட் கோல் மூலம் யுவதிக்கு இந்த இளைஞன் அறிமுகமாகியுள்ளார். நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இருவரும் நேரில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில், இருவரும் கல்கமுவ நகரில் சந்திப்பது என முடிவு செய்தனர்.
அனுராதபுரத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படும் இந்த இளைஞன், தனக்கு தெரிந்த வீடு ஒன்று இருப்பதாகவும் அங்கு எவரும் இல்லை என்பதால், சுதந்திரமாக பேசிக்கொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதற்கு இணங்கிய 20 வயதான யுவதி, இளைஞனுடன் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் வைத்து யுவதியை இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இளைஞன் யுவதியை தாக்கியுள்ளதுடன் யுவதி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வீட்டுக்குள் சென்று யுவதியை காப்பாற்றியுள்ளனர். சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனை மிகவும் நம்பியதாகவும் அந்த நம்பிக்கையில் அவரை சந்திக்க வந்ததாகவும் அவர் தனக்கு இப்படி செய்வார் என என்றும் நினைத்தில்லை எனவும் யுவதி காப்பாற்றிய இளைஞர்களிடம் கூறியுள்ளார். யுவதி கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை தப்பியோடிய இளைஞன் ஏற்கனவே திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே இந்த நபர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, பலாங்கொடை, முல்கம பிரதேசத்தில் தனது நான்காவது கள்ளக் காதலனை கொலை செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்கம காட்டுப் பகுதியில் வைத்து கொல்லப்பட்ட நபரின் சடலம் மீடு்கப்பட்டுள்ளது.
கல்தொட்டை பகுதியில் வசித்து வந்த 35 வயதான மாலக பண்டார செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நபரின் கள்ளக்காதலியே கொலை செய்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இந்த பெண் தனது முச்சக்கர வண்டியை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார். முச்சக்கர வண்டி வட்டியினால், மூழ்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கொல்லப்பட்ட நபரிடம் இருக்கும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் நோக்கி்ல், அவரை முல்கம காட்டுக்கு அழைத்துச் சென்று கோடரியால் தாக்கி கொலை செய்து விட்டு பணத்தையும் அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் பெண்ணிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து கொல்லப்பட்டவரின் தங்க ஆபரணங்கள் சிலவற்றையும் செல்போன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பெண்ணின் மற்றுமொரு கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு, சித்தாண்டி, சந்தனமடு ஆற்றுப்பகுதியில்,நேற்று சனிக்கிழமை மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி 11 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் சர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் இலுக்குப்பொத்தாணை கிராமத்துக்கு சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பாதையூடாக மாவடிவேம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்காக வந்த காட்டு யானை, இவர்களை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் சகோதரிகள் இருவரும் காயமடைந்த நிலையில். மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் சர்மிலா என்ற 11 வயதுடைய சிறுமி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறு காயங்களுக்குள்ளான அவரது தங்கை தொடர்ந்து மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் இருந்து சித்தாண்டி, ஈரக்குளம் போன்ற பகுதிகளில் காட்டு யானையின் தாக்குதலினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம்தெரிவிக்கின்றனர்.
சந்தனமடு ஆறு ஊடான காட்டுப் பாதையின் இரு மருங்கிலும் இருக்கும் காடுகளை வெட்டி அகற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், குறித்த காட்டுப் பாதையில் இருக்கும் சிறிய வகை காடுகளை அகற்ற வன ஜீவராசிகள் அதிகாரிகள் முட்டுக்கட்டையாக தொடர்ந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளர்.
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கு வதையொட்டி வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. ஐரோப்பாவின் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற நகரில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் திகதி அன்னை தெரசா பிறந்தார்.
18 வயதில் லொராட்டா சகோதரிகளின் சபையில் சேர்ந்தார். இந்தியாவில் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விரும்பினார். இதற்காக 1929-ம் ஆண்டு இந்தியா வந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங்கில் துறவற பயிற்சியை தொடங்கினார். 1937-ம் ஆண்டு உறுதி மொழி எடுத்து துறவறம் மேற்கொண்டார்.
1950-ம் ஆண்டு கொல்கத்தாவில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக ‘மிஷனரிங் ஆப் சாரிட்டிஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். மறு ஆண்டில் அவர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ குடிமகள் ஆனார். அன்பு கருணையுடனும், தாயுள்ளத்துடனும் தொண்டு செய்து வந்த அன்னை தெரசா மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அவரது சேவையை போற்றி மத்திய அரசு 1980-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது. முன்னதாக 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உடல் நலக்குறைவால் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் திகதி தனது 87-வது வயதில் அன்னை தெரசா மரணம் அடைந்தார்.
அன்னை தெரசா மறைவுக்குப் பின்பும் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற பெண் அன்னை தெரசா உருவம் பதித்த டாலர் அணிந்ததால் அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டிருந்த புற்றுநோய் கட்டி குணம் அடைந்தது. இதை அற்புதம் என போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அங்கீகரித்தார்.
அதன்பின் 2008-ம் ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரினோ என்பவரது தலையில் இருந்த உயிருக்கு ஆபத்தான மூளைக்கட்டி அவரது குடும்பத்தினர் அன்னை தெரசாவிடம் வேண்டியதால் குணம் அடைந்தார். இந்த அற்புதத்தை போப் பிரான்சிங் அங்கீகரித்து அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நடக்கிறது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு வழங்கப்படுகிறது. அப்போது கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கிறது.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் 3 இலட்சம் பேர் பங்கேற்கிறார்கள். அவர்கள் வாடிகன் சிட்டியில் குவிந்துள்ளதால் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதற்காக அவர்கள் ஏற்கனவே வாடிகன் போய்ச் சேர்ந்து விட்டனர்.
மேற்கு வங்காளம் சார்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழுவும், டெல்லி மாநில அரசு சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஒரு குழுவும் வாடிகன் சென்றுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து ‘மிஷனரிங் ஆப் சாரிடிஸ்’ அமைப்பைச் சேர்ந்த 50 கன்னியாஸ்திரிகளும், நாடு முழுவதும் இருந்து பாதிரியர்களும், கிறிஸ்தவர்களும் வாடிகன் சென்றுள்ளனர்.
புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி கொல்கத்தாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ள நிலையில், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ரயிலின் இரு பெட்டிகளை அகற்றியுள்ள நிலையில், ரயில் எஞ்சினை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் ஒன்றே நேற்றையதினம் இவ்வாறு தடம்புரண்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், காங்கேசன்துறை வரையான ரயில் போக்குவரத்துக்கள் சாதாரணமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா தமிழ் மாமன்றம் நாடாத்தும் தமிழ் மாருதம் 2016 முதலாம் நாள் நிகழ்வு இன்று (03.09.2016) மாலை 4.00 மணியளவில் வவுனியா பொது நூலக சரஸ்வதி சிலைக்கு முன்பாக தமிழர் பாரம்பரிய நடன வாத்தியத்துடன் ஊர்வலமாக ஆரம்பமாகி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தினை அதிதிகள் வந்தடைந்தனர்.
இந் நிகழ்வின் மங்கள விளக்கினை அருணா செல்லத்துரை தம்பதிகள் ஏற்றி வைத்தனர். வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைச் சேர்ந்த மாணவி தர்மிதா சசிக்குமார் தமிழ் வாழ்த்தினை பாடினார். அத்துடன் தலைமையுரையினை சி.கிருபானந்தகுமாரன் ( தமிழ் மாமன்ற தலைவர்) நிகழ்த்தினார்.
வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திரா, அருணா செல்லத்துரை தம்பதிகள் (மூத்த ஊடகவியலாளர்), த.மங்களேஸ்வரன் (வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம்), அரசியல் பிரமுகர்கள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றய நிகழ்வில் இசை அரங்கு, இசையும் அசையும், வழக்காடு மன்றம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் புத்தக மலிவுவிலைக் கண்காட்சி , ஒவியக் கண்காட்சி என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை காலை மற்றும் மாலை நேர நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.