2 வயது மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தாய் : அதிர்ச்சி சம்பவம்!!

chelsey-russell-crop

அமெரிக்காவில் தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Lakewood பகுதியை சேர்ந்தவர் Chelsey J.Russell (32). இவர் தன் குடும்பத்துடன் உத்தாவில் உள்ள போவல் பகுதி ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு படகில் Chelsey J. Russell தன் இரண்டு வயது மகனுடன் சவாரி செய்துள்ளார். படகில் சவாரி செய்த போது அவரின் இரண்டு வயது மகன் படகின் மேல் பகுதிக்கு செல்ல முயன்றிருக்கிறார். இதனால் எதிர்பாராத விதமாக ஏரியின் தண்ணீருக்குள் விழுந்தான்.

இதை கவனித்த Chelsey J. Russell தன்னுடைய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், மகனை காப்பாற்றுவதற்காக உடனே தண்ணீரில் குதித்தார்.

தண்ணீரில் குதித்த அவர் ஏரியின் ஆழமான பகுதி என்பதால், அவர் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர் தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது.

இறுதியாக தான் தண்ணீரில் மூழ்கினாலும் பரவாயில்லை என கருதி, தன் இரண்டு வயது மகனை தனது கையால் தண்ணீருக்கு மேலாக தாங்கி பிடித்தபடியே நீரில் மூழ்கினார்.

மற்றொரு படகில் இருந்த அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து அவரது கையில் இருந்த 2 வயது மகனை உயிருடன் மீட்டனர்.

ஆனால் Chelsey J. Russell தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் உயிரிழந்ததற்கு life jackets இல்லாமலே தண்ணீரில் குதித்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர் : ஹீரோவாக காப்பாற்றிய பொலிஸ்!!

help

அமெரிக்காவின் நியூஜெர்சியில் தண்டவாளத்தில் சிக்கிய நபரை விரைந்து வரும் ரெயிலில் நின்று பொலிசார் ஒருவர் ஹீரோவாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஜெர்சி மாகாணத்தில் Secaucus சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் சிக்குண்டு இருப்பதாக பொலிசார் ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவலர் Ortiz குறிப்பிட்ட நபரை அந்த தண்டவாளத்தில் இருந்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து எழுந்து வெளியேற மறுத்து அடம் பிடித்துள்ளார்.

தற்கொலைக்கு அந்த நபர் முயல்வதை புரிந்து கொண்ட காவலர் Ortiz அவரை வலுக்கட்டாயமாக இழுக்க முயற்சி மேற்கொண்டார். அதே வேளையில் அந்த ரெயில் தண்டவாளத்தில் விரை ரெயில் ஒன்று தூரத்தில் வருவதை காவலர் தெரிந்து கொண்டார்.

ரெயில் நெருங்கி வந்துகொண்டிருக்கையில் குறிப்பிட்ட நபரை அலாக்காக தூக்கி தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

அடுத்த 2 விநாடிகளில் ரெயில் கடந்து செல்லவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. குறிப்பிட்ட நபரை காப்பாற்றிய அந்த காவலரை பொதுமக்களும் அவரது சக பொலிசாரும் வெகுவாக பாராட்டினர்.

தமது உயிரையும் பொருட்படுத்தாமல் இன்னொருவரை காப்பாற்ற துணிந்த அவரது செயல் பாராட்டுக்குரியது என நியூ ஜெர்சி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை : டில்ஷான் பகிரங்க குற்றச்சாட்டு!!

Dilshan

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்ட போது அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என திலகரத்ன டில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற திலகரத்ன டில்ஷான் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

ஒய்வு பெற்றதற்கான காரணங்களை அறிவித்த திலகரத்ன டில்ஷான், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால், தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை.

இந்த நேரத்தில் புதிய வீரர் ஒருவர் பயிற்சி எடுக்கும் வாய்ப்பை வழங்க தான் தீர்மானித்ததாக திலகரத்ன டில்ஷான் கூறியுள்ளார்.

மேலும் சில ஆண்டுகள் விளையாடக்கூடிய திறமை இருக்கின்ற போதிலும் அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற புதிய வீரர் ஒருவருக்கு அவகாசம் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

இதேவேளை, அரசியலில் பிரவேசிக்க தனக்கு எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என்றும், தனது குடும்பத்தினரோடு கூடுதலான நேரத்தை செலவிடுவதற்காகவே தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற தீர்மானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலில் பிரவேசித்து மீண்டும் மன அமைதியை பறிகொடுக்க தான் தயாரில்லை என திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மீது வீழ்ந்த விமானம்!!

Flight

சிறிய விமா­ன­மொன்று வீடொன்றின் மீது வீழ்ந்­ததால் இருவர் காய­மடைந்த சம்­பவம் அமெரிக்காவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஒற்றை இயந்­திரம் கொண்ட, செஸ்னா ரகத்தைச் சேர்ந்த இவ் ­வி­மானம் இண்­டி­யானா மாநி­லத்தின் டெரே ஹோட் நக­ருக்கு அருகில் கடந்த வாரம் வீழ்ந்­தது.

இதனால், விமா­னத்தில் பயணம் செய்த பட்ரிக் ஓ நீல், ஜோன் ட்ரம்ப் ஆகிய இருவர் காயமடைந்தனர். இவர்கள் இரு­வரும் டெரே ஹோட் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்­பட்­டனர்.

இவர்கள் இரு­வரும் இதே வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் மருத்­து­வர்கள் என்­பது குறிப்பிடத்தக்­கது. மேற்­படி விமானம் வீழ்ந்­த­போது வீட்­டுக்குள் எவரும் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்லாந்தில் சாரதியற்ற மினி பஸ் சேவை ஆரம்பம்!!

11

சார­தி­யற்ற மினி பஸ் ஒன்று பின்­லாந்தில் பரீட்­சார்த்­த­மாக சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது. பின்­லாந்தின் தலை­நகர் ஹெல்­சிங்­கி­யி­லுள்ள வீதி­யொன் றில் கடந்த வாரம் இந்த பஸ் சேவையில் ஈடு­பட ஆரம்­பித்­தது.

சார­தி­யற்ற கார்கள் உலகின் பல நக­ரங்­களில் பரீட்­சார்த்­த­மாக இயக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், பொதுப் ­போக்­கு­வ­ரத்து சேவைக்கு சார­தி­யற்ற மினி பஸ் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வது அரி­தாகும். Easymile EZ -10 எனும் இந்த பஸ் பிரான்ஸில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாகும்.

விசே­ட­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட தரிப்­பி­டங்­களில் வைத்து, பயணிகள் இந்த பஸ்ஸில் ஏறி இறங்கினர்.

12

உலகின் சிறந்த மொடல் போட்டியில் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ மூன்றாமிடம்!!

6

உலகின் சிறந்த மொடல் 2016 ( Top Model of the World 2016 ) அழகுராணி போட்டியில் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

ஜேர்மனியின் பிரேமன் நகரில் இப்போட்டி நடை பெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பல்கேரியாவைச் சேர்ந்த மார்கா கூப்பர் Top Model of the World 2016 பட்டத்தை வென்றார்.

புவர்ட்டோ ரிக்கொவின் பிரான்செஸ்கா டோரா இரண்டாமிடத்தையும் இலங்கையின் விஸ்னா பெர்னாண்டோ 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

பிரேஸிலின் இமானுவேல் கொஸ்டா 4 ஆம் இடத்தையும் தாய்லாந்தின் அஞ்சனா ஆர்கிளோம் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

25 வயதான விஸ்னா பெர்னாண்டோ 2015 தெரண மிஸ் ஸ்ரீலங்கா போட்டி களில் புவி அழகுராணி போட்டிக்கான மிஸ் ஏர்த் ஸ்ரீலங்கா 2015 அழகுராணி யாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 3 4 7 8

வைத்­தி­ய­சா­லை­யில் பிறந்த குழந்­தைகள் மாற்­றப்­பட்­டதால் தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தாய்மார்!!

babies

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அரச வைத்­தி­ய­சா­லையில், அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகள் மாறிப் போய் குழப்பம் ஏற்பட்டதால், ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்களும், தாய்ப்பால் கூட கொடுக்காமல், பாசப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகரைச் சேர்ந்த ரஜிதா 22 என்ற பெண்ணுக்கு, ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது.

இரண்டாவது பிரசவத்துக்­காக ஐதராபாத் அரக வைத்­தி­ய­சா­லையில் அண்­மையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

டாக்டர் மற்றும் தாதி­கள், ரஜிதாவின் உறவினர்களை அழைத்து, அவர்களிடம் ஆண் குழந்தையை கொடுத்துள்­ளனர். பின்­னர் ரஜிதாவிடமும், அவர்கள் அந்த குழந்தையை காட்டியுள்­ளனர்.  சிறிது நேரத்துக்கு பின்னர், அதே டாக்டரும், தாதிகளும், பதற்றத்துடன் ஓடிச் சென்­ற­னர். ‘குழந்தை மாறி விட்டது.

உங்களுக்கு பிறந்தது பெண் குழந்தை தான். ஆண் குழந்தையை கொடுங்கள்’ என கூறியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த பெண் குழந்தையை ரஜிதாவிடம் கொடுத்துள்­ளனர். அப்­போ­து ரஜிதா அந்த குழந்தையை ஏற்க மறுத்­துள்ளார்.

‘ரஜிதாவுக்கு குழந்தை பிறந்த அதேநேரத்தில், ரமாதேவி என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்­ளது. ரமாதேவியின் உறவினர்களிடம் ஆண் குழந்தையை கொடுப்பதற்கு பதிலாக, தவறுதலாக, ரஜிதாவின் உறவினர்களிடம் ஆண் குழந்தையை கொடுத்துள்ளனர். ரஜிதாவுக்கு பிறந்தது பெண் குழந்தை தான்’ என, வைத்­தி­ய­சா­லை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

‘எனக்கு பிறந்தது ஆண் குழந்தை தான், டாக்டர்கள் அப்படித் தான் முதலில் கூறினர். இப்போது, பெண் குழந்தை பிறந்ததாக கூறுகின்றனர். ஆண் குழந்தையை கொடுக்க மாட்டேன்’ என, ரஜிதா கண்டிப்புடன் கூறிவியுள்­ளார்.
இத­னி­டையே ரமா தே­வி, ‘எந்த குழந்தை என்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது நான் பெற்ற குழந்தையாக இருக்க வேண்டும்’ என கூறி, ஆண் குழந்தைக்கு உரிமை கோரியுள்­ளார்.

பெண் குழந்தையை வாங்க, இரண்டு பேருமே மறுத்துள்ளனர். எங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான். அதற்கு தான் தாய்ப்பால் கொடுப்போம்’ என, இருவருமே கூறி­யுள்­ள­னர்.

இது குறித்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இரு குழந்தைகளுக்கும், வைத்­தி­ய­சா­லையின் பராமரிப்பில் புட்டி பால் கொடுக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, ரஜிதாவின் உறவினர்களும் வைத்­­தி­ய­சாலை மீது பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இந்நி­லை­யி­லேயே, இரு தம்பதியருக்கும், மரபணு பரிசோதனை நடத்த வைத்­தி­­ய­சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பரி சோதனை முடிவுகள் வரும் வரை, இரண்டு குழந்தைகளையும் வைத்­தி­ய­சா­லை பராமரிப்பில் வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாப்பிட்ட பின்னர் செய்யக் கூடாதவை!!

Dont do after eat

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்..

1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2.சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3.அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4.சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5.சாப்பிட்ட பின்னர் உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏ

9 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : 60 வயது சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

Abuse

9 வயது சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்ற சந்­தே­கத்தில் கைதான சந்­தேக நபரான 60 வயது முதி­ய­வரை எதிர்­வரும் 8ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான திரு­மதி நளினி கந்­த­சாமி உத்­த­ர­விட்டார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது, அட்­டா­ளைச்­சேனை தைக்கா நகர் பிர­தே­சத்தில் சுமார் ஒரு­மா­தத்­துக்கு முதல் சிறுவன் வீதியில் விளை­யாடிக் கொண்­டி­ருக்கும் போது சந்­தேக நபர் அவ­ரது வீட்­டுக்கு சிறு­வனை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக வீதியில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரிப்பு!!

TELUK INTAN 21 FEBRUARY 2016 .Empat orang termasuk tiga sekeluarga maut apabila kereta yang dinaiki bertembung dengan sebuah kenderaan pacuan empat roda di Kilometer 7 Jalan Sitiawan-Teluk Intan, petang tadi.STR/ RAVALE SAVARINATHAN . *** Local Caption ***

 

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக வீதியில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு உயிர் ஆபத்தான விபத்துக்கள் 3 இடம்பெற்றுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டின் இதுவரையாக காலப்பகுதியில் 1 உயிராபத்தான விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஒபனாயக்க தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள 115 பிரசே செயலாளர் பிரவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல்!!

Elephant

நாடு முழுவதிலும் உள்ள 115 பிரசே செயலாளர் பிரவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல் நிலவுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை என வனஜூவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.எ.எஸ். பத்திரன தெரிவித்தார்.

யானைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளை அமைப்பதாலேயே இந்த பிரச்சினை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய காட்டு யானைகளின் நடை பாதைகளை உரிய வகையில் திறந்து விடுவதற்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் டப்ளியூ.எ.எஸ். பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் காட்டு யானைகள் வருகை தருகின்ற பிரதேசத்தில் உள்ள மக்களை தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DD விவாகரத்து பெற்றாரா?

DD

பிரபல தொகுப்பாளினி DD விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இது பற்றிய வீடியோ இதோ..

கிரிக்கெட்டில் தூக்கம் தொலைத்த நாட்கள் இதுதான் : உண்மையை உடைத்த டில்ஷான்!!

Dilshan

இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட 10 மாதங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தூக்கம் தொலைத்த நாட்கள் என்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற டில்ஷான் கூறியுள்ளார்.

சங்கக்காரா 2011ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரோடு ஓய்வு அறிவித்தார். இதன் பின்னர் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட டில்ஷானுக்கு, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா தொடர் சிக்கல் மிகுந்ததாக மாறிவிட்டது.

இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் அணித்தலைவராக தான் சந்தித்த சவால்களை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் தூக்கம் தொலைத்த நாட்களும் இருக்கிறது. அதில் இருந்து மீள நினைத்த போது, என்னால் அதில் இருந்து மீண்டு வரமுடியாமல் போனது.

பல பிரச்சனைகளை சந்தித்தேன், நான் அணித்தலைவர் பதவியை கேட்கவில்லை. ஆனால் அந்த இடத்தில் நான் தலைவராக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

ஆனால் தலைவர் பதவி பலரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அதன் மூலம் நான் அதிகமாக கற்றுக் கொண்டேன்.

நான் சந்தித்த ஒரு பிரச்சனை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சில ஆட்சேபனைகள் இருந்தன. அந்த அழுத்தங்களை என்னால் எதிர்த்து போராட முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி சிலர் அதிசங்களை நிகழ்த்தினர்.

இதற்கு பின்னால் ஏதோ ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றி சிலர் நன்றாக அறிவர்.

மேலும், லாட்ஸ் டெஸ்டில் 193 ஓட்டங்கள் குவித்ததை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. ஏனெனில் லாட்ஸில் சதம் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். அந்த வகையில் அது எனக்கு சிறப்பான தருணம் என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களுக்கு சிறை?

Zimbabwe-Olympic

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரியோ ஒலிம்பிக்கில் சிம்பாப்வே நாட்டின் சார்பாக மொத்தம் 31 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் யாருமே பதக்கம் வெல்லவில்லை.

இந்த நிலையில் சிம்பாப்வே நாட்டின் சர்வாதிகார அதிபரான ராபர்ட் முகாபே ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த வீரர்களை எலிகளுடன் ஒப்பிட்டு அதிபர் பேசியதாகவும், நாட்டின் பணத்தை அவர்கள் வீண் செய்துவிட்டதாக கோபப்பட்டதாகவும் அந்நாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி உலகம் எங்கும் பரவி பரபரப்பை ஏற்பத்திய நிலையில், அந்த செய்தியில் உண்மையில்லை என்று அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதே போன்று ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்ப அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருண் விஜய் தலைமறைவு!!

Arun Vijay

சென்னையில் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டி பொலிஸ் வாகனம் மீது விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண்விஜய் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகள், கிரிக்கெட் வீரர் மிதுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டுள்ளார்.

இதில் அருண்விஜய் அதிகமாக குடித்துவிட்டு செம போதையில் அதிகாலை, 3 மணிக்கு, தன் மனைவி ஆர்த்தியுடன் தனது சொகுசு காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதிகமாக குடித்திருந்ததால் அருண்விஜய்யின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

உடனே அங்கிருந்த பொலிசார் அருண்விஜயையும், அவரது மனைவியையும் விரைவாக வந்து மீட்டுள்ளனர்.

மேலும், காரில் இருந்த சேப்டி பலூன் ( safty baloon) மூலம் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்றபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண் விஜய்யிடம், நீதவான் முன் அபராதத் தொகை செலுத்திவிட்டு, வாகனத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால், அருண் விஜய் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்து அங்கிருந்து ஓடி தலைமறைவாகியதோடு தனது கைப்பேசியையும் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் சொகுசு காரையும் பறிமுதல் செய்ததோடு சைபர் கிரைம் பொலிசார் அவரது அலைபேசி டவர் சிக்னல்களை கண்காணித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பெண்கள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது!!

Toursit

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண்கள் இனிமேல் குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான மகேஷ் சர்மா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது, எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விளக்கும் வகையில் வரவேற்பு பதாகைகளிலே அவற்றை குறிப்பிட வேண்டும்.

அவர்கள் செல்லும் வாகனத்தின் நம்பர் பலகையை புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்றி திரியக் கூடாது, ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது என தெரிவித்துள்ளார்.