பேருந்தில் இறந்த மனைவி : கணவன், கைகுழந்தையுடன் கீழே இறக்கிவிட்ட நடத்துனர்!!

Bus

மத்தியபிரதேச மாநிலத்தில் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மற்றும் இறந்த மனைவியுடன் தவித்த நபரை வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பிறந்து 5 நாள் ஆன கைக்குழந்தை மற்றும் தாய் சனியா பாய் உடன் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறவே அவர் பேருந்தில் வைத்தே மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதையறிந்த அந்த பேருந்தின் நடத்துனர், அந்த குடும்பத்தினரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 கி.மீற்றர் பயணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராம்சிங் அந்த நடத்துனரிடம் கெஞ்சியும் அவர் அவர்களை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதால் செய்வதறியாது காட்டுபகுதியில் தவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு வழக்கறிஞர்கள் அந்த வழியாக சென்றவர்கள் இவர்களின் பரிதாப நிலையை பார்த்து உதவி செய்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களில் அவசர ஊர்தி இல்லாமல் உயிரிழந்த உறவினர்களை சுமந்தே செல்லும் அவல நிலை நடந்தேறும் நிலையில் ஆதரவற்ற குடும்பத்தினரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியில் நயன்தாரா!!

Nayanthara

தெலுங்கு படம் பாபுபங்காராம் வெற்றி பெற்றுள்ளதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார். நயன்தாரா தமிழில் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன.

இதனால் நயன்தாரா மார்க்கெட் சூடு பிடித்தது. சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியதாக கூறப்பட்டது.

தெலுங்கு படநிகழ்ச்சிகளில் பங்கேற்காததால், படத்தயாரிப்பாளர் சங்கம் தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடைவிதித்தது. தடை நீக்கப்பட்ட பிறகு நயன்தாரா நடிப்பில் இப்போது திரைக்கு வந்திருக்கும் தெலுங்கு படம் ‘பாபுபங்காராம்‘ வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள இது தமிழில் செல்வி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் – நயன்தாரா நடித்துள்ள இந்த படம் 4 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்து ‘ஹிட்’ ஆகி இருக்கிறது. படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகா வம்சி கூறியுள்ளார்.

ஜீவாவுடன் நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘திருநாள்’ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தெலுங்கு படமும் வெற்றி பெற்றுள்ளதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

பாகிஸ்தானுடனான 2 ஆவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி!!

LONDON, ENGLAND - AUGUST 27:  Joe Root and Alex Hales of England celebrate the wicket of Azhar Ali of Pakistan during the 2nd One Day International match between England and Pakistan on August 27, 2016 in London, England.  (Photo by Gareth Copley/Getty Images)

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 251 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. சர்ப்ராஸ் அஹ்மட் 130 பந்துகளில் 105 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.

ஜோ ரூட் 108 பந்துகளில் 89 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் 80 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 30 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 2:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

முதலாவது T20 போட்டியில் ஓர் ஓட்டத்தினால் இந்திய அணியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!!

Darren Bravo of the West Indies celebrates the win during the 1st international T20 Trophy match between India and the West Indies held at the Central Broward Stadium in Fort Lauderdale, Florida, United States of America on the 27th August 2016 Photo by: Ron Gaunt/ BCCI/ SPORTZPICS

இந்திய அணியுடனான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய 6 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைக் குவித்தது. எவின் லூயிஸ் 49 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தார் அவர் ஸ்டுவர்ட் பின்னி வீசிய ஓவர் ஒன்றில் 5 சிக்ஸர்கள் உட்பட 32 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்பிரிட் பம்ரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியுற்றது.

லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்றார். ரோஹித் சர்மா 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் தோனி 25 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், ட்வைன் பிராவோ வீசிய அந்த பந்தை எதிர்கொண்ட எம்.எஸ்.தோனி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதிக உடல் எடை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்!!

Prostate-Cancer

அதிக உடல் எடை உடையவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நொறுக்குத் தீனி பழக்கம், அடிக்கடி கொழுப்பு அதிகமான உணவு உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் உடல் எடையை அதிகாமாக்கி கொள்கின்றனர்.

உணவுப்பழக்கம் ஒரு புறம் இருக்க முறையான உடல் பயிற்சி இல்லாமல் இருப்பதும் நம்மில் பலருக்கு அதிக உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு வயிறு, மூளை, கல்லீரல் மற்றும் கணையம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உள்ள அதிக கொழுப்பு. ஈஸ்ட்ரோஜன் , டெஸ்டோஸ்டெரோல் போன்ற ஹோர்மோன்களை அதிகம் சுரக்க செய்வதுடன் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதாக விஞ்ஞானிகள் குறிப்புட்டுள்ளனர்.

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

CV

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..

பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை இன்று காலை எனது வதிவிடத்தில் சந்தித்தனர்.

அவர்கள் எழுத்து மூலமாக எனக்கொரு வேண்டுகோளை முன்வைத்தனர். அதில் அவர்கள் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது எமது கடமையாகும். தாங்கள் இப்படியான பாதுகாப்பை யாழ்ப்பாணத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள்.

அதே போல இத்தமிழ் மாணவர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்படி உங்களுக்கு கோரிக்கை விடுக்கின்றேன்.

இதன் மூலம் தான் அம் மாணவர்களின் பெற்றோரை பேராதனையில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்குமாறு கோரவும் அவர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.

எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் அங்கு வகுப்புகள் நடைபெறவிருக்கின்ற பொழுதிலும் அங்குள்ள சிரேஷ்ட மாணவர்களால் அவர்களுக்கு தீங்கு ஏற்படுமென எண்ணி அவர்களை அங்கு செல்ல அனுமதிப்பதில் விருப்பமற்றிருக்கிறார்கள்.

அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தேவையற்றனவாகவே காணப்படுகின்றன. பொதுவாக முதலாம் ஆண்டு மாணவர்களுடைய ‘கோரிக்கைக் கூட்டங்கள் (Request Meetings) இரவில் தான் நடைபெறுவதுண்டு.

ஆனால் அவை பற்றி அன்றன்றைய தினம் காலை 6 மணியளவில் நேரகாலத்தோடு அறிவிக்கப்படுவதுண்டு.

ஆனால் சம்பவம் நடந்த இரு நாட்களிலும் இரவில் மிகவும் தாமதமாக நடுநிசிக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பதாகத் தான் அக் கூட்டங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து முதலாம் வருட மாணவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்காகவே இப்படியாகத் தாமதமாக வேண்டுகோள் திட்டமிட்டு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

காயப்பட்ட சிலர் இப்பொழுதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தங்களிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!!

Shoot

மாலபே – இசுருபுர பகுதி வீடொன்றில் பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அதுருகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த அந்தப் பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் 45 வயதாக பெண் எனத் தெரியவந்துள்ளது.

வவுனியாவை வந்தடைந்த நல்லிணக்க பேரணியில் தமிழ் புறக்கணிப்பு : ஊடகவியலாளர்கள் தர்க்கம்!!

 
இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27.08.2016) பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

வவுனியா வந்தடைந்த பாதையாத்திரையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி ரோகண புஸ்பகுமார, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் அரச ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள், சமயத்தலைவர்கள் எனப் பலரும் வரவேற்றனர்.

இலங்கை மனித உரிமை அமைப்பினரால் வடபகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கப் பயணத்தின்போது சில வாகனங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் அணிந்திருந்த உடை போன்றவற்றில் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை அறிந்த ஊடகவியளாலர்கள் ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஏற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதையடுத்து ஏற்பாட்டாளர்கள் தமது தவறினை உணர்ந்து ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக்கோரியதுடன் இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது என தெரிவித்தனர்.

1 DSC_0193 DSC_0195 DSC_0196 DSC_0197 DSC_0199 DSC_0200 DSC_0205 DSC_0207 DSC_0212 DSC_0213 DSC_0215 DSC_0219 DSC_0221 DSC_0222 DSC_0227 DSC_0228 DSC_0229

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை!!

Pro

வெள்ளவத்தை ஹெவலொக் வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரினால் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விடுதி முகாமையாளரும் அடங்கும்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 28,31 மற்றும் 41 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும், மொரட்டுவை, அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வட்ஸ் அப்பின் புதிய முயற்சி பயனர்களுக்கு ஆபத்தா?

Whatsapp

இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வட்ஸ் அப் காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் சுமார் 19 பில்லியன் டொலர்கள் செலுத்தி கொள்வனவு செய்திருந்தது.

இதன் பின்னர் அசுர வளர்ச்சி கண்ட வட்ஸ் அப் ஆனது பல மில்லியன் கணக்கான பயனர்களை தற்போது கொண்டுள்ளது.

இதேவேளை வட்ஸ் அப்பில் பகிரப்படும் தரவுகள், தகவல்கள் தொடர்பில் பல நம்பிக்கையின்மைகள் அண்மைக் காலங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இப்படியான ஒரு தருணத்தில் மற்றுமொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது வட்ஸ் அப்பில் தரப்பட்டுள்ள பயனர் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக் தளத்துடன் நேரடியாக பகிரப்படவுள்ளது.

பேஸ்புக் ஆனது தனது விளம்பர சேவையை விரிவுபடுத்தும் முகமாக தொலைபேசி இலக்கங்கள் உட்பட சில தகவல்களை இவ்வாறு வட்ஸ் அப்பிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக பேஸ்புக்கில் தமது தகவல்களை மறைத்து வைத்துள்ள பயனர்களுக்கு இப் புதிய வசதி சில சமயங்களில் தலைவலியை தரக்கூடும்.

வீதியோரக் கடையில் அமர்ந்து மீன் சாப்பிட்ட டேவிட் கமரூன்!!

camaro

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் வீதியோரக் கடையில் அமர்ந்து மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

உலகின் அதிகாரமிக்க தலைவராக இருந்த டேவிட் கமருன் கடந்த யூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பிற்கு பின்னர் பதவி விலகினார்.

அரச மாளிகையை விட்டு வெளியேறிய இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். இவர் பதவி விலகிய நாட்களில் இருந்து, இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகி வந்தன.

இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு கடையில் நின்று ஏதேனும் ஒரு பொருள் வாங்கிகொண்டிருந்தால் கூட, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடும் நெட்டிசன்கள், அதனுடன் சேர்த்து, கமரூன் சந்தோஷமாக இருக்கிறார், கவலையாக இருக்கிறார் என்ற கருத்துக்களையும் தட்டிவிடுவர்.

தற்போது, அதே போன்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விடுமுறையை முன்னிட்டு Cornwall- இல் உள்ள வீதியோரக் கடையில் அமர்ந்து மீன் மற்றும் சிப்ஸ்ஸினை கமரூன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு அருகில் சக நபர்களும் சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் ஒருவர் தனது பின்புறத்தை காட்டியவாறு கமரூனுக்கு அருகாமையில் நிற்கிறார், அப்பெண், கமரூனின் மனைவி சமந்தா தானா என்பது சரியாக தெரியவரவில்லை.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது, இவர் எவ்வளவு மன வருத்தத்துடன் இருக்கிறார் என்பதை இந்த புகைப்படமே நமக்கு உணர்த்துகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் உலகின் அதிகாரமிக்க மனிதராக வலம் வந்த இவர், தற்போதும் அதே அதிகாரத்தோடு இருந்தால் இவ்வாறு சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டிருக்கமாட்டார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமானத்தை தகர்க்க முயற்சித்த நிர்வாண மனிதரால் பரபரப்பு!!

Flight

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் விமான ஓடுதளத்தில் நிர்வாணமாக ஓடி, டிரக் மூலம் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம், Omaha என்ற இடத்தில் உள்ள Eppley விமானதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது விமானதளத்தை சுற்றியுள்ள வேலிப் பகுதியில் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். விமானம் புறப்படும் நேரத்தில் அவர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக வேலியின் மீது ஏறி குதித்தார்.

பின்னர் விமான ஓடுதளத்தில் ஓடிய அவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிரக்கை எடுத்துக் கொண்டு விமானத்தின் மூக்கு பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து அந்த மர்ம நபரை அதிரடியாக கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 2 அதிகாரிகளுக்கு லோசான காயம் ஏற்பட்டது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது மிகவும் மோசமான செயல். அந்த நபர் தனது ஆடைகளை களைந்து, அங்கு ஏற்கனவே புறப்பட தயாராக இருந்த டிரக்கை எடுத்துக் கொண்டு விமானத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமியின் கேள்வி!!

King

பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் நேற்று விஜயம் செய்துள்ளனர்.

இதே மையத்தில் புற்றுநோயால் தாயை இழந்த 14 வயது வயது சிறுமி ஒருவர் இளவரசர் வில்லியமிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

புற்றுநோயால் எனது தாயை கடந்தாண்டு இழந்துவிட்டேன். இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் உங்களுடைய தாயை இழந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுமியின் கேள்வியால் சிறிது கண்கலங்கிய இளவரசர் வில்லியம், எனது தாயை இழந்து 20 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும் அவரை நினைத்து வாடிக்கொண்டு இருக்கிறேன்.

தாயை இழக்கும் வேதனை எனக்கும் தெரியும். இந்த இழப்பை நீயும் நானும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என சிறுமிக்கு இளவரசர் வில்லியம் உருக்கமாக பதிலளித்துள்ளார்.

இளவரசர் வில்லியமின் இந்த உருக்கமான பதில் அங்குள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய முன்னாள் இளவரசியும் வில்லியமின் தாயாருமான டயானா கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.

தலையை வெட்டி நடுரோட்டில் வீசுவோம் : காதல் ஜோடிகளுக்கு பெற்றோர் எச்சரிக்கை!!

Lovers

திருச்சியில் காதலர்களை தலையை வெட்டி நடுரோட்டில் வீசுவோம் என பெற்றோர் மிரட்டியதால் பொலிசில் தஞ்சமடைந்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் ரஜபுனிசா பேகம்(வயது 20) அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அசன்(வயது 23) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இக்காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அப்பெண்ணிற்கு மற்றொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வந்துள்ளனர்.

இதனால் அப்பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் அப்பெண் பெற்றோரிடம், நீங்கள் பார்த்த பையனை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஜபுனிசா, காதலன் அசனுடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடிவந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் இருவரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த காதல் ஜோடிகள் பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டும் என பொலிசில் புகார் மனு அளித்துள்ளனர்.

கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த துயரம் : நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!!

Loan1

ராஜஸ்தானில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை, சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோஸ்கித்தால் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஜபாரிக்கா கிராமத்தை சேர்ந்த மிதுலால் என்பவருக்கு 30000 ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷ் தன் வீட்டில் மரவேலைகள் நடப்பதால், தான் கொடுத்த பணத்தை மிதுலாலிடம் கேட்டுள்ளார். இதனால் மிதுலால் மகள் லட்சுமி கடந்த புதன்கிழமை, ரமேஷ்-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் வந்து பணம் பெற்று செல்லும்படி கூறியுள்ளார்.

இதனால் அன்று மாலை பணம் பெறுவதற்காக வந்த ரமேஷை மிதுலால் மகன் மற்றும் சிலர் உருட்டுகட்டைகளால் தொடர்ந்து தாக்கினர்.

இதனால் நிலைகுலைந்த ரமேஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அடித்த போது எடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேலும் ரமேஷ்சின் குடும்பத்தினர் பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து வீடியோவில் உள்ள சிலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loan

மரணிக்க தயாராக இருக்கிறேன் : 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு!!

O1

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்.

இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.
இவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.

இந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.

தனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

நான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது. 24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.

ஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.

அவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.

145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை”.

O2