ஐஸ்வர்யா தனுஷிற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்!!

Dhanush

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷிற்கு தற்போது சர்வதேச அளவில் பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவர் தற்போது ஐ.நா அமைப்பின் பெண்கள் நல்லெண்ணத் தூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

எம்மா வாட்சன், Anne Hathaway, Nicole Kidman போன்ற பிரபல நடிகைகளும் இத்தகைய பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகினுள் ஊடுறுவிய வேற்றுகிரக வாசிகள் : பறக்கும் தட்டில் கண்காணிப்பு!!

2016-08-27_at_14-15-59

அமெரிக்காவின் நியூயோர்க் நகர் வான்பரப்பில் பறந்த பறக்கும் தட்டின் படத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பறக்கும் தட்டின் புகைப்படத்தினை ஹோலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட் அவரின் உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சூரிய அஸ்தமனத்தை தனது கையடக்கத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்தவேளையில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் அதில் சிக்கியது.

அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயோர்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தினை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரோவன் பிளாசர்டின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றிய இப்படத்துக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் விருப்பமும், 1,680 பேர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

379B5E4900000578-0-image-a-9_1472227976163

இருவேறு விபத்துக்களில் இரண்டு உயிரழப்புக்கள்!!

Acci

வெயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெயாங்கொடை – கட்டுநாயக்க வீதியில் ஒரே திசையில் சென்ற லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெயாங்கொடை, மகலெகொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, மில்லெனிய, தெல்கட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கோனுதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

ஹட்டன் பொகவந்தலாவ வீதியில் இன்று இடம்பெற்ற கொடூர விபத்தில் சாரதி பலி!!

Accident

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (27) சனிகிழமை நண்பகல் 12.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் முகம் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லதன்னி பகுதியில் இருந்து ஹட்டனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனில் நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிறிவிக்கபடுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராஜேந்திரன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சடலம் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடா்பில் கெப் வாகன சாரதி கைது செய்யபட்டுள்ளார்.
இதேவேளை இதன்காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ வீதியில் சுமார் 45 நிமிட நேரம் வாகன நெரிசல் காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

1

யாழிலிருந்து கனடா செல்ல பயணித்தவர்கள் மீது யானை தாக்குதல் : உயிரிழப்பு 02 ஆக அதிகரிப்பு!!

Elephant

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்த 05 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான்.

கனடா செல்வதற்காக வடக்கில் இருந்து வந்த குழுவொன்று மீது இன்று அதிகாலை 2.20 மணியளவில் காட்டு யானை தாக்குதல் நடத்தியது.

இதனால் வேனில் இருந்த 39 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 05 வயது சிறுவன் ஒருவன் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்

நடிகர் அருண் விஜய் கைது!!

Arun Vijay

நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருண்விஜய் தனது குடும்பத்துடன் காரில் திரும்பி வரும் வழியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் வாகனம் மீது மோதினார்.

இதில் அருண் விஜய்க்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் பொலிஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் பொலிசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் அவர் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டதால் அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவரைக் கைது செய்தனர். பின்னர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

வவுனியாவை வந்தடைந்த நல்லிணக்கத்திற்கான ஒலிம்பிக் தீபம்!!

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று 26.08.2016 காலை புறப்பட்ட ‘நல்லிணக்கத்திற்கான’ ஒலிம்பிக் தீபம் வவுனியாவில் பம்பமடுவில் அமைந்துள்ள யாழ் வவுனியா வளாகத்தை மாலை 2.00 மணியளவில் வந்தடைந்தது.

தேசியக் கொடி ஏற்றலுடன் ஒலிம்பிக் தீபத்தை பொறுப்பேற்ற வவுனியா வளாக மாணவர்கள் வவுனியா மன்னார் வீதி வழியாக வவுனியா பொதுவைத்தியசாலையை வந்தடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக ஒலிம்பிக்தீபம் நடைபவனியாக வவுனியா பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின் அங்கிருந்து நேற்று மாலை 5.00 மணிக்கு இரஜரட்டை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒலிம்பிக் தீபம் இன்று கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடனும் இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் 01 ம் திகதி தொடக்கம் 13 ம் திகதி வரை வயம்ப பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 ccccc cccccc IMG_7649 IMG_7655 IMG_7658 IMG_7659

வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

 
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமாகி விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் உற்சவம் 01.09.2016 வியாழக்கிழமை சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.

தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

சென்றவருடம் இலங்கைலே அதி உயரத்தை உடைய ஐயனார் சிலை அமைத்து கும்பாபிசேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-கீதன்-

1 2 14081020_1342668102429577_900202971_n 14081034_1342668089096245_167555437_n14102083_1342668042429583_1168791699_n 14089584_1342667455762975_1652439876_n

இலங்கையில் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி!!

Srilanka Accident

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைத்து நாட்டின் அபிவிருத்திக்கு தேவைப்படும் மில்லியன் கணக்கான நிதி எம்மை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அது சமூகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை 1568 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 1632 பேர் உயிரிழந்திருப்பதுடன், மோட்டார் சைக்கிள் விபத்து 666 என்றும், இதில் 686 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வாகன் விபத்துக்களின் போது இளைஞர்களே அதிகமாக உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விபத்துக்களால் நாடு பொருளாதார ரீதியில் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும், விபத்தினால் காயமடைபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கே பாரிய நிதி செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதியினைக் கொண்டு கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய முடியும். சரியான முறையில் தலைக்கவசம் அணியாமையே மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் போது அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக விமான நிலைய புதுப்பித்தல் காரணமாக பயண நேரங்களில் மாற்றம்!!

Airport

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை அதன் பயண நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை மூன்று மாத காலப்பகுதிக்கு விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை நாளொன்றுக்கு 8 மணிநேரம் மூடப்படவுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர், சென்னை, திருச்சி, மாலே, கொச்சின் மற்றும் பெங்களூர் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயண அமர்வுகளை ரத்துச்செய்யவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், பீஜிங், ஷாங்காய், புதுடில்லி, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களின் நேர அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ரத்துச்செய்யப்படும் விமான பயண அமர்வுகளுக்காக பிற நேரங்களில் விமானங்களை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி : பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

2

பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராதர் கவுன்சில் அறிவித்துள்ளது.

அங்கு வரும் மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாக அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கேம்பர் கடற்கரையில் போதிய உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விமர்சனம் செய்துள்ளன.

குறித்த கடற்கரை பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ராதர் கவுன்சில் உறுப்பினர் சாலி ஆன் ஹார்ட் கூறுகிறார்.

– BBC – Tamil

கண்டியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!!

Shot

கண்டி – பேராதனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். பேராதனை – பிலிமத்தலாவ – நானுஓய பகுதியில் இந்த சம்வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் வர்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

8 மாதக் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்!!

Rape

தமிழகத்தில் 8 மாத பெண் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் பீகாரை சோர்ந்த சஞ்சித் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டைகவுண்டன் பாளையத்தில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் டும்குன் (வயது- 24), அவரது மனைவி மலாதேவி (வயது- 20) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ரீட்டா (வயது- 2) சரிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தை சரிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மில்லிருந்து பணி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.

குழந்தையின் உடலை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, மில்லில் வேலை பார்த்த விடுதியில் தங்கியிருந்த அனைவரையும் விசாரித்த போது சஞ்சித் மட்டும் அங்கு இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு சஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடிய போது அவர் ரயிலில் பீகார் செல்ல முடிவு செய்து பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.

பொலிசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் சஞ்சித் நடந்ததை கூறி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியரின் 100 மணிநேர சாதனையை முறியடித்த சென்னை இளைஞன்!!

Rec

மரத்தான் ஐயர்னிங்கில் அவுஸ்திரேலியரின் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் சென்னை இளைஞர் டேனியல் சூர்யா.

அவுஸ்ரேலியாவை சேர்ந்த இளைஞர் மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இவரின் சாதனையை முறியடிக்க சென்னை இளைஞர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் திகதி காலை தொடங்கினார்.

நேற்று காலை தொடங்கிய சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார்.

தொடர் ந்து 5 நாட்கள் இந்த சாதனை செய்ய இருக்கிறார். இந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதி மொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம்.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறுகையில், கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண் தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

முதல் முதலாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுப்பதற்காக வீதி வீதியாக பிச்சை எடுத்த சிறுவன்!!

Lancham

உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பிற்காக வந்த அரசு உதவித் தொகையை பெறுவதற்கு வீ.ஏ.ஒ விற்கு லஞ்சம் கொடுப்பதற்காக சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூழித் தொழிலாளி கொளஞ்சி (48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவரது குடும்பத்திற்கு சமூக நல திட்டத்தின் மூலம் அரசு உதவி தொகையாக ரூபாய் 12,500 வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை வாங்குவதற்காக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு கொளஞ்சியின் மகன் அஜித்குமார் (15) சென்றுள்ளார். அப்பொழுது சமூக நலத்துறை அதிகாரிகள் வி.ஏ.ஓ விடம் கையெழுத்து வாங்கி வருமாறு கூறியதையடுத்து அஜித்குமார் வி.ஏ.ஓவிடம் கையெழுத்து வாங்க சென்ற பொழுது வி.ஏ.ஓ அஜித்குமாரிடம் லஞ்சமாக 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சிறுவன் அஜித்குமார் லஞ்ச பணம் கொடுப்பதற்காக தெருக்களிலும், பேருந்துகளிலும் பாத்திரத்தை வைத்து பிச்சை எடுத்துள்ளார்.

மேலும், தந்தையின் இறப்பிற்கு வந்த அரசு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதற்காக சிறுவன் தெருத்தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணைகளைத் திசை திருப்பவே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளது!!

Sulaiman

விசாரணைகளைத் திசை திருப்புவதற்காகவே பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி பம்பலப்பிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டதுடன், மாவனெல்ல பகுதியில் நேற்று முன்தினம் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்தது.

உயிரிழந்த சுலைமானின் தாய்வழி உறவினர்களுக்கே வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிரேதப் பரிசோதனை நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் அவரின் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுலைமானின் ஊழியர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 6 கோடிக்கும் அதிக பணத்தை சுலைமானிடம் இருந்து பலர் கடனாகப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.