இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சி!!

Ex

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது கரையாமல் அப்படி தங்கி விடும்.

இதனால் தடித்து மிக அசிங்கமாக காணப்படும், இதுதவிர மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்த பருமனை மிக எளிதான உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

* ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இதை ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

* தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படியே தொடர்ந்து 20 தடவைகள் செய்து வந்தால் இடுப்பு பருமனை குறைக்கலாம்.

* தரையில் கால்களை நீட்டியபடி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முன்புறமாக எழுந்து நிமிர்ந்து கைவிரல்களால் கால் விரல்களை தொட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

இப்பயிற்சி வயிற்று கொழுப்பை கரைக்கும். முதுகு பகுதிக்கு வலிமை கொடுக்கும்.

10 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை : தாயார், கள்ளகாதல் கைது!!(காணொளி)

Abuse

அமெரிக்காவில் உள்ள நியூமெக்ஸிகோ நகரில் 10 வயது சிறுமியொருவர் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்பில் குறித்த சிறுமியின் தயார் மற்றும் அவரது கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் அந்நாட்டுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியைக் காண

அம்பாறையில் சிநேகபூர்வமாக பழகிவரும் மானும் இரு பன்றிகளும்!!

Deer

அம்­பாறை வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான மிருக வைத்­திய முகா­மைத்­துவப் பிரிவில் மான் ஒன்றும் தாயி­ட­மி­ருந்து பிரிந்து சென்ற பன்­றி கள் இரண்டும் மிகவும் சிநேகபூர்வமாக பழகி வரு­கின்­றன.

மோசடியாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக கையையும் காலையும் துண்டித்துக் கொண்ட பெண்!!

Train

வியட்நாமியப் பெண்ணொருவர் மோசடியான முறையில் காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக தனது கையையும் காலையும் வெட்டிக் கொண்டுள்ளார்.

வியட்நாம் தலைநகர் ஹனோயைச் சேர்ந்த இப் பெண் எல்.டி.என். என்ற முதலெழுத்துக்களால் மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த மே மாதம் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் கையொன்றில் மூன்றில் ஒரு பங்கும் கால் ஒன்றில் மூன்றில் ஒரு பங்கும் துண்டிக்கப்பட்டிருந்தன. இக் கையையும் காலையும் மீண்டும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தான் ரயில் விபத்தொன்றில் காயமடைந்ததாக வும் தனது நண்பர் ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும் பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்தார்.

இதையடுத்து சுமார் 130,000 அமெரிக்க டொலர் காப்புறுதி இழப்பீட்டுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், அவர் தனது கையையும் காலையும் நண்பர் ஒருவர் மூலம் வெட்டித் துண்டித்துள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டறிந் தனர் என வியட்நாம் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிய முதலைகளுடன் மல்யுத்தம் நடத்தும் யுவதி!!

11

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், பாரிய முத­லை­க­ளுடன் ‘மல்­யுத்தம்’ நடத்­து­வதை பொழுது போக்­காகக் கொண்­டுள்ளார்.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த கய்லா கார்வி எனும் 24 வய­தான இந்த யுவதி 5 வய­தி­லி­ருந்து முத­லை­க­ளுடன் விளை­யாடி வரு­கி­றாராம். இது­வரை 100 இற்கும் அதி­க­மான முத­லை­களை தான் பிடித்­துள்­ள­தாக அவர் கூறு­கிறார்.

இவரின் தந்தை கெவின் கார்­வியும் முத­லை­களைப் பிடிப்­பதை தொழி­லாகக் கொண்­டவர். கய்லாவும் அவரின் தந்தை கெவினும் (53) இணைந்து முதலை பிடிப்­பது தொடர்­பாக பாட­சா­லை யொன்­றையும் நடத்­து­கின்­றனர்.

தனது காத­லா­ரான கிறிஸ் ஸ்டட்ஸ் (26) சகிதம், முத­லை­களைத் தேடி புளோ­ரிடா மாநிலத்தின்  பல்­வேறு இடங்­க­ளுக்கும் கய்லா கார்வி பயணம் செய்­கிறார்.
12 அடி நீள­மான பாரிய முத­லைகளு டன் மல்­லு­க்கட்டும் கய்லா இது தொடர்­பாக கூறு­கையில், இவை எனக்கு அச்சமேற்படுத்தவில்லை அவை செல்லப் பிராணிகள் போன்றவை தான் என்கிறார்.

12

புர்கினி நீச்சலுடை மீதான தடை பிரான்ஸின் அதி உயர் நீதிமன்றினால் இடைநிறுத்தம்!!

Alamy Live News. GKY8KC Brighton, UK. 24th August, 2016. UK Weather: Crowds flock to Brighton beach to enjoy the hot sunshine today with temperatures forecast to reach over thirty degrees centigrade as the heatwave weather continues throughout southern Britain ¿ Simon Dack/Alamy Live News This is an Alamy Live News image and may not be part of your current Alamy deal . If you are unsure, please contact our sales team to check.

பிரான்ஸிலுள்ள நகரமொன்றின் கடற்கரைகளில், தலைமுதல் கால்வரை உடலை மறைக்கும் வகையிலான புர்கினி எனும் நீச்சலுடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் அதி உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

பிரான்ஸின் தென் பிராந்திய நகரான விலேநியுவ் -லோபெட் கடற்கரைகளில் புர்கினி அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான வழக்கு அந்நாட்டின் அதி உயர் நீதிமன்றமான அரசுப் பேரவையில் நடைபெற்றது.

இவ்வழக்கில், விலேநியுவ் -லோபெட் கடற்கரைகளில் புர்கினி அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இடைநிறுத்தி அந்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த இடைநிறுத்த உத்தரவானது, பிரான்ஸின் ஏனைய பல நகரங்களில் புர்கினிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விவகாரத்திலும் எதிரொலிக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

3வது ஒருநாள் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் விற்றுத் தீர்க்கப்பட்டன!!

SL

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கட்டுக்கள் யாவும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் போட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை இரு அணிகளுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.

கனடா செல்ல இருந்தவர்களுக்கு நேர்ந்த அவலம் : ஒருவர் பலி, 10 பேர் காயம்!!

Elephant

புத்தளம் – அநுராதபுரமட வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் அந்தப் பிரதேசத்தால் சென்ற வேன் ஒன்று மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் வேனில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடா செல்வதற்காக வடக்கில் இருந்து வந்த குழுவொன்றே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் இரு பெண்களும் 08 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதியளவு உறக்கமின்மை நினைவுத் திறனை பாதிக்கும் : ஆய்வில் முடிவு!!

Sleep

உறக்கமின்மையும் குறைவாக உறங்குவதும் நினைவுத் திறனை பாதிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நெதர்லாந்தின் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஹாவகிஸ் இது தொடர்பாக தெரிவித்ததாவது..

நமது நினைவுத் திறனுக்கும் உறக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம்.

குட்டித் தூக்கம் போடுவது நினைவுத் திறனை ஊக்குவிக்கின்றது என்பதும் நமக்குத் தெரிந்ததுதான், ஆனால், உறக்கமின்மையும் குறைவாகத் தூங்குவதும் எவ்வாறு மனித மூளையில் நினைவுத் திறனை பாதிக்கிறது என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இப்போது குரோனிங்கன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தூக்கம் – தூக்கமின்மை – நினைவுத் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நமது மூளையில் உள்ள நியூரோன்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் நம் நினைவுத் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தூக்கம் குறைவாக உள்ள நிலையில், இந்தப் பகுதிகளின் செயற்பாடு பாதிக்கப்பட்டு நினைவுத் திறன் பாதிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.

மூளையின் ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதியில் கற்றல் மற்றும் நினைவு ஆகியவற்றுடன் தொடர்புடைய நியூரோன்களின் நுனியில் டென்டிரைட் என்னும் உயிரணுக்கள் உள்ளன.

பல்வேறு நேர அளவில் தூக்கமின்மை இந்த உயிரணுக்களில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஐந்து மணி நேரத்தை விட குறைவாக உறங்கும்போது, நினைவுக் குவிப்பு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.

தூக்கக் குறைவு என்பது டென்டிரைட் உயிரணுக்களின் பருமனிலும் நீளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. இதுவே நினைவுத் திறனை பாதிக்கிறது.

உறக்க நிலையை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவதால் இந்த பாதிப்பு பெரிய அளவுக்கு ஏற்படுகிறது இந்த நிலையானது, நியூரோன்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கிறது.

ஆனால் அதன் பின்னர் 3 மணி நேரம் உறங்கினால், டென்டிரைட் உயிரணுக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. அதனால் நினைவுத் திறனை ஓரளவு தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு உறக்கத்தை தள்ளிப்போடுவதும், சில மணி நேரம் உறக்கத்தை தாமதப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வதும் நியூரோன்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கிறது.

இதையடுத்து, நினைவுத் திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை குரோனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எலிகளைக் கொண்டு நடத்திய ஆய்வில் உறக்கமின்மைக்கும் நினைவுத் திறன் குறைவுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் குறைவான உறக்கம் என்பது சர்வ சாதாரணமான விடயமாகிவிட்டது, ஆனால் நமது மூளையின் செயற்பாடு உட்பட ஒட்டுமொத்த உடல் நலத்தை அதுபாதிக்கிறது, நமது அன்றாட வாழ்வில் கேடு விளைவிக்கிறது.

உறக்கத்தைப் பல மணி நேரம் தள்ளிப்போடுவது, சிறிதளவே தூங்குவது ஆகிய பழக்கங்கள் மனித மூளையிலும் அதன் செயற்பாடுகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்று பேராசிரியர் ரொபர்ட் ஹாவகிஸ் கூறினார்.

வவுனியாவில் வங்கி ஊழியர்மீது இளைஞர் குழு தாக்குதல்!!

 
வவுனியா இரண்டாம் குருக்குத்தெருவில் உள்ள செலான் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வங்கியில் வைத்து இளைஞர் குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.

வங்கியில் கடமை முடிந்து வங்கி வாயிலுக்கு ஊழியர் வருகை தரும் தருணம்பார்த்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர் குழுவொன்று வங்கி ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

1 a b c d f g

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த 5 பேரினதும் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது!!

Dead

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நால்வரில் மூவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களென்றும் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மற்றைய இளைஞர் லண்டனில் பிறந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவர்கள் ஐவரும் 19 முதல் 26 வயதிற்குட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

நெருங்கிய நண்பர்களான இவர்கள், வருடத்தின் உஷ்ணம் அதிகமான தினம் என பிரித்தானியாவில் வர்ணிக்கப்படும் நாளில் பொழுதுபோக்கிற்காக கெம்பர் சேண்ட்ஸ் பகுதிக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நிதர்ஷன் ரவி, இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராசா, கோபி நாதன், கெனிகன் நாதன் மற்றும் குருஷாந்த் ஶ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் இந்த இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சகோதரர் பிரித்தானிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்றைய தினம் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பொழுதுபோக்கிற்காகக் கூடியிருந்தார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இளைஞர்கள் கடலில் மூழ்கிய அதே இடத்தில் கடந்த மாதம் 19 வயதான இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை லண்டனில் நடத்துவதற்கு, அங்குள்ள அவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நிதர்ஷன் ரவி

11

கோபி நாதன்

12

கெனிகன் நாதன்

13

இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராசா

14

குருஷாந்த் ஶ்ரீதவராஜா

15

படங்கள்: பேஸ்புக்

தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் கதறல் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

Boys

சிரியாவில் இரண்டு சிறுவர்கள் அம்புலன்ஸ் உள்ளே கட்டித் தழுவி கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சு உருக வைத்தது.

சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 17 ஆம் திகதி ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற 5 வயது சிறுவன் அம்புலன்ஸில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான்.

முகம் முழுவதும் ரத்தம் வழிய இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது போல தற்போது உள்ள வீடியோவில் அம்புலன்ஸ்சின் உள்ளே சிறுவன் ஒருவன் தூசி நிறைந்த முகத்தோடும், வாயில் ரத்தக்கரையுடன் இருப்பதும், மற்றொரு சிறுவன் அவரை ஓடி வந்து கட்டி அணைத்து அழுவதும், அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த அவர்கள் மேலும் அடித்து கதறி அழுவதும் காண்போரை கண்கலங்க வைத்தது.

ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் குற்றம் சொல்லவில்லை : தொடரும் சர்ச்சைகளுக்கு சேரன் பதிலடி!!

Seran

ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் நான் குற்றம் சுமத்தவில்லை. நான் யாரைப் பற்றி பேசினேன் என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னா பின்னா திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்கள் தான் திருட்டு டி.வி.டியை வெளியிடுகிறார்கள், அவர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இயக்குனர் சேரன் கூறியிருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன், யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது,

இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது. ஒன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை..

அப்போ எங்களுடைய வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா, உலகெங்கும் நண்பர்களை கொண்டு(அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு…

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்க மாட்டார்கள்… இவ்வாறு சேரன் தம்முடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

Ser

கடவுச்சீட்டு அலுவலகம் இனிமேல் பத்தரமுல்லையில்!!

Passport office Srilanka

கொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் இயங்கி வந்த இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இந்த அலுவலகம் பத்தரமுல்லையில் உள்ள சுஹூருபாய கட்டிடத்தில் இயங்கவுள்ளது.

இதன் காரணமாக இலக்கம் 10 புஞ்சி பொரள்ளை ஆனந்த ராஜகருண மாவத்தையில் இயங்கிய திணைக்களத்தின் அலுவலகம் இன்று முதல் மூடப்பட உள்ளது.

இதற்கு மட்டும் இலங்கை தமிழர்கள் வேண்டுமா? சேரனுக்கு பதிலடி கொடுத்த பெண்!!

Seran

திருட்டுத்தனமாக சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்வது, இலங்கை தமிழர்கள் தான் என்கிற போது அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது என சேரன் கூறியுள்ளார்.

திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சேரன் கூறியதாவது, திரைப்படங்களை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும், சமூக வலைதளமாக இருக்கட்டும், ஆனால் அது முறையாக இருக்கவேண்டும்.

திருட்டுத்தனமாக இருக்ககூடாது, அதில் பலரது உழைப்பு இருக்கிறது. நாம் தமிழன் என்று சொல்கிறோம், ஆனால் தமிழன் தான் இத்தகைய செயல்கள் எல்லாம் செய்கிறான் என்கிற போது அதிர்ச்சி அளிக்கிறது.

வரும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்வது இலங்கை தமிழர்கள் தான் என்று கூறுகிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக ஒட்டு மொத்த திரையுலகமே ஒன்றாக போராடினோம். அதனால் பல விசயங்களை நாங்கள் இழந்தோம், அதையும் மீறி போராடினோம்.

இதை அறிந்தும் அதை சார்ந்த சிலர் தான் இதை செய்கிறார்கள் என்கிற போது, அவர்களுக்காக ஏன் தான் போராடினோம் என்று அருவருப்பாக இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகநூலில் பெண் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முக்கியமாக, ஒருநாள் இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்திவிட்டு சென்று விட்டீர்கள், வேறு என்ன செய்தீர்கள்.

ரகுமான், ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம், வெளிநாட்டில் கச்சேரி நடத்தி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், அதற்கு இலங்கை தமிழர்கள் வேண்டுமா?.

முதலில் ஊரில் உள்ள திரையரங்கில் டிக்கெட் விலையை குறைக்க சொல்லுங்கள், பிறகு மக்கள் திரையரங்கில் வந்து படம் பார்ப்பார்கள் என கூறியுள்ளார்.

சடலத்தை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற கொடுமை : மீண்டும் அரங்கேறிய கொடூரம்!!

Body

ஒடிசாவில் இறந்தவரின் சடலத்தை இரண்டாக உடைத்து, அதை பிளாஸ்டிக் பையில் போட்டு மருத்துவ ஊழியர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற பெண் கடந்த புதன்கிழமை ரெயில் விபத்தில் பலியானார். இதனால் இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள பலசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலசூருக்கு ஆட்டோவில் உடலை எடுத்துச்சென்றால் செலவாகும் என்பதற்காக, உள்ளூர் சுகாதார மைய ஊழியர்கள் பாரிக்கின் இடுப்பு பகுதியில் ஏறி நின்று இரண்டாக உடைத்து, அதை பிளாஸ்டிக் பையில் போட்டு, துணியை வைத்து கட்டி கம்புகளில் கட்டித் தூக்கிச்சென்றனர். இச்சம்பவத்தை கண்ட அவரின் மகன் செய்வதறியாது கண்கலங்கியுள்ளார்.

மேலும் ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யாததால் மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீற்றர் நடந்து சென்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல ‘Mahaparayana’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.