இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்று வருகின்றது.
அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே பொதுமகன் ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு தனது ஆதங்கங்களை வெளியிட்ட அவர்,
பொதுமக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் அபகரித்து வியாபார நிலையங்களை அமைத்துள்ளனர். வவுனியா குடியிருப்பில் அமைக்கப்பட்ட பொதுமண்டபத்தினை அபகரித்துள்ள இராணுவம் இன்று வரை வெளியேறவில்லை .
மக்களுகென அமைக்கப்பட்ட ஒரு பொது இடத்தினைக்கூட இராணுவம் வழங்கவில்லை. மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்கின்ற செயற்பாட்டில் இரானுவத்தினர் செயற்படுகின்றனர். வடக்கில் குறிப்பாக தாண்டிக்குளத்தில் இராணுவ உணவகம் காணப்படுகின்றது.
நடந்து முடிந்த முடிந்த யுத்தத்திற்குப் பின்னரான செயற்பாடுகளில் சரியான முறையில் நீதி செயற்பட வேண்டும். நீதி நாட்டில் நல்ல முறையில் இருந்தாலும் தமிழ் மக்களை பொருத்தவரையில் நீதிதுறையினரால் சரியான முறையில் நீதி கிடைக்கவில்லை.
வவுனியாவை எடுத்துக்கொண்டால் கனகராயன்குளத்தில் பாடசாலை மாணவி பாலியல் வண்புனர்வின் பின்னரான படுகொலை வழங்கு அண்மையில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் சந்தேக நபர்களை அடையாளம் கண்பித்திருந்த போதும் அந்த வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இங்கும் நீதி கிடைக்கப்படவில்லை.
வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளில் கூட நீதி கிடைக்கப்படவில்லை. பல கொலைகளைச் செய்யதவர்கள் கூட நடமாடுகின்றனர். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. 2009ம் ஆண்டு நடந்த படுகொலைகளுக்கு கூட தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.





























