வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு உதவ புதிய திட்டம்!!

Foreign

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் சென்றுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், இதன் காரணமாக அங்கிருந்து தப்பி தூதரகத்தில் தஞ்சமடைதல், அல்லது தற்கொலை செய்துகொள்ளுதல் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் தடுத்து வைக்கப்படுதல்.

நீண்ட காலம் குடும்பத்தோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால் போதல், சம்பளம் முறையாக கிடைக்காமை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்தல் வேண்டும்.

எனினும் பலருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்யும் முறை தெரியாதிருத்தல், முறைப்பாடு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய தெளிவு இல்லாமை என்பவற்றால் முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

குறித்த, நடமாடும் சேவை மூலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ நிறுவனம் உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேற்கூறிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதன்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 – 071 4661486 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் எனவும் குறித்த நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!!

weatheralert

நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

Selfi

கோவையில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முற்பட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் உள்ள பீளமேட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஷ்(17). இவர் மற்றும் இவரது நண்பர்கள் சிலர் பள்ளியில் சுதந்திர தின விழாவை முடித்து விட்டு அங்குள்ள ஜி.வி.ரெசிடென்சி சென்றுள்ளனர்.

ஹரீஷின் நண்பர்கள் அங்குள்ள 120 அடி கிணற்றின் அருகே நின்று செல்பி எடுத்துள்ளனர். அதன் பின்னர் கிணற்றின் படிக்கட்டு அருகே சென்று ஹரீஷ் செல்பி எடுக்க முற்பட்ட போது தவறி கிணற்றின் உள்ளே விழுந்துள்ளார்.

கிணற்றில் கட்டை, முட்புதர்கள், மற்றும் 70 அடிக்கு கீழ் தான் தண்ணீர் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடியும் ஹரீஷ் உடலை மீட்க முடியவில்லை. மேலும் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மற்றும் பைக் போன்றவற்றை வாங்கி கொடுப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்குமாம் : ஏன் என்று தெரியுமா?

Beared

பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள், விருப்பங்கள் இருக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்குள்ளும் ஒன்று மட்டும் ஒத்துப்போகும். அது என்னவெனில் தாடி வைத்த ஆண்களைப் பிடிப்பது.

ஆம் பல பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். ஓர் இடத்தில் என்ன தான் ஷேவிங் செய்து ஆண்கள் அழகாக இருந்தாலும், தாடி வைத்த ஆண்களின் மீது தான் பெண்களின் கண்கள் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஆணுக்குரிய தோற்றம்

தாடி வைத்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்க முதன்மையான காரணம், அது தான் ஆணுக்குரிய தோற்றத்தைத் தருகிறதாம்.

முதிர்ந்த தோற்றம்

தாடி வைத்த ஆண்கள் பார்ப்பதற்கு முதிர்ந்தவராவும் மற்றும் வாழ்க்கை பற்றி மிகவும் தீவிரமானவராகவும் காணப்படுகிறார்களாம். மேலும் பெண்களுக்கு பார்ப்பதற்கு சிறுவர் போன்று காணப்படுபவர்களை விட, முதிர்ந்தவர் (Mature) போன்று காணப்படுபவர்களைத் தான் பிடிக்குமாம்.

முத்தம் கொடுக்கத் தூண்டும்

தாடி வைத்த ஆண்களைக் காணும் போது முத்தம் கொடுக்கத் தோன்றுவதோடு, அவர்களுக்கு முத்தம் கொடுக்கும் போது, அந்த தாடி உணர்வை மேலும் தூண்டுமாம். அதனாலேயே பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களைப் பிடிக்கிறதாம்.

வலிமையான தோற்றம்

ஆண்கள் தாடி வைத்திருந்தால், அது அவர்களை வலிமையானவர்களாகவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும் வெளிக்காட்டுமாம்.

செக்ஸியானவர்கள்

பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்கள் செக்ஸியாக காணப்படுவார்களாம்.

அனைத்து உடைகளும் பொருந்தும்

ஆண்கள் தாடி வைத்திருந்தால், எந்த உடை அணிந்தாலும் பொருத்தமாக இருப்பதோடு, பெண்களின் கண்களை கவரும் வண்ணம் இருக்கிறார்களாம்.

ட்ரிம் செய்வதே சிறந்தது

முக்கியமாக பெண்களுக்கு நீளமாக தாடி வைத்திருக்கும் ஆண்களைப் பிடிக்காது. அளவாக அல்லது தாடியை ட்ரிம் செய்து ஸ்டைலாக இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்.

உங்களின் மன நிலையை 5 நிமிடத்தில் மாற்றும் ஸ்மார்ட் போன் பயிற்சி!!

Smart

உற்சாகமில்லாது இருக்கிறீர்களா? இந்த Smartphone Exercises உங்களின் தன்மையை மாற்றி நல்ல சந்தோசமான நிலைக்கு கொண்டுவரக் கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது ஆய்வில் 5 நிமிட வீடியோ பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்பு பங்கேற்பாளர்களில் அமைதியும், உற்சாகமும் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வுகள் Basel பல்கலைக் கழக மாணவர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கு ஆரோக்கியமான 5 இளைஞர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

வீடியோ பயிற்சியளிக்கப்பட்டர்களில் இதன் விளைவு நீண்டகால நன்மை தருவதாக கூறியிருந்தனர்.

இவ்வாறான Smartphone Games அவர்களின் கவனிக்கும் ஆற்றலை கூட்டுவதாக சொல்லப்படுகிறது.

1000 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : 33 பேர் உயிரிழப்பு!!

Bus

நேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்து 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 43 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர்.

இதனையடுத்து நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 15 பேரை காத்மண்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக அந்நாட்டு வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பிரசண்டாவும் மீட்புப் பணிகளை துரித படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோசமான சாலைகளும், அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதும் விபத்துக்களுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பிரித்தானிய யுவதியிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் கைது!!

Arrest

எலஸ்வத்த பிரதேசத்தில் தங்கியிருந்த பிரித்தானிய யுவதி ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் உப்புவெளி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இலங்கை இளைஞர்கள் இருவருடன் இணைந்து எலஸ்வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதுபான விருந்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்து முடிந்ததும் அதில் ஒரு இளைஞர் குறித்த யுவதியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த யுவதி உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்தாரா முத்துக்குமார் : பரபரப்புத் தகவல்கள்!!

Muthukumar

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார். அப்படி வாங்கியுள்ள காசோலைகளில் பெரும்பாலானவை இவரது வங்கி கணக்கில் பணத்தை கொண்டுவந்து சேர்க்கவில்லை.

மாறாக, அவரது வீட்டு அலுமாரியில் காகிதங்களாகவே படிந்து போயுள்ளன. மஞ்சள் காமாலை நோய் முற்றியநிலையில் முத்துக்குமாரின் மருத்துவச் செலவுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதாம்.

அந்த சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்து கொண்டிருந்தபோதுதான், நா.முத்துக்குமாரை மரணம் ஆட்கொண்டு விட்டது.

இவர் வீட்டு அலுமாரியில் காகிதங்களாக படிந்து போயிருக்கும் காசேலைகளின் மொத்த பணமதிப்பு 70 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த காசோலைகள் எல்லாம் பணமாக மாறியிருந்தால் இன்று நாம் ஒரு மகா கவிஞனை இழந்திருக்க மாட்டோம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

நா.முத்துக்குமாரை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொண்ட பல தயாரிப்பாளர்கள், அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாக கொடுக்க தவறியதை நாம் என்னவென்று சொல்வது.

இனிமேலாவது அவருக்கு சேரவேண்டிய பணத்தை தயாரிப்பாளர்கள் திருப்பி கொடுக்க முன்வர வேண்டும்.

நா.முத்துக்குமாரின் உயிரை காப்பாற்ற உதவாத அந்தப்பணம், அவர் உயிராக நேசித்த அவரது குடும்பத்தாரையாவது இனி காப்பாற்றட்டும்.

நான் அழிவற்றவன் : உசேன் போல்ட் ஆவேசம்!!

Bolt

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட பந்தைய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினர்.

இது குறித்து போல்ட் கூறியதாவது, இது ஒரு அற்புதமான நாள், நான் போட்டியில் வேகமாக செயல்படவில்லை சிந்தித்து செயல்பட்டேன் அதனால் வெற்றி அடைந்தேன். என்னுடைய வெற்றி தொடரும்.

மேலும் ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னர் உசைபோல்ட் காயங்களால் அவதி பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அமெரிக்காவின் மற்றோரு ஓட்டப்பந்தைய வீரரான Justin Gatlin, போல்ட் ஒலிம்பிக்கிற்கு வரமாட்டார். அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைப்பு தராது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் போல்ட் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு தான் ஒரு அழிவற்றவன், இன்னும் இரண்டு பதக்கங்கள் ரியோ ஒலிம்பிக்கில் உள்ளன. கடந்த முறையை விட இந்த முறை தான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்.

நான் ரியோ ஒலிம்பிக் அரங்கத்திற்குள் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் பூம் என்று குரல் எழுப்பியது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என பூரிப்புடன் கூறினார்.

38 மணி நேரம் கடலில் போராடிய அதிசயப் பெண்!!

Sea

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் கடலில் தவறிவிழுந்து 38 மணி நேரம் கடந்த பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பான் (32) என்ற பெண், ஜப்பானிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்ற cruise ship என்ற கப்பலில் கடந்த 10ம் திகதி சென்றுள்ளார். அவர் ஷாங்காய் பகுதி அருகே வந்த போது கப்பலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

ஆனால் தன் மகள் வீடு திரும்பாததை அறிந்த அவரது தந்தை பான் சென்ற கப்பலுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்களோ தாங்கள் பயணிகள் அனைவரையும் ஷாங்காய் நகரில் இறக்கிவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி அப்பகுதி வழியே படகில் சென்ற ஒருவர் பான் கடலில் தத்தளித்துகொண்டிருப்பதை கண்டு அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீன்கள் சில கடித்திருப்பதாகவும், அதனால் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 91 அடி ஆழம் உள்ள கடலில் ஒரு லைப் ஜாக்கெட் இல்லாமலும், உணவு எதுவுமில்லாமல் தொடர்ந்து 38 மணி நேரம் கடலில் பான் உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு அவரது தந்தையார் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பான் ஒரு நல்ல நீச்சல் வீரர் என்பதால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மனை­வியை கொலை செய்த பின்­னர் சட­லத்­துக்கு அருகே கள்­ளக்­காதலி­யுடன் உறவில் ஈடுபட்ட கண­வன்!!

Murder

கணவர் வேறொரு பெண்­ணுடன் தொடர்பு வைத்­தி­ருந்­ததை தட்­டிக்­கேட்ட மனை­வியை கொலை செய்­து­ கட்­டிலில் வைத்து சடலத்தின் மேல் கண­வனும் கள்­ளக்­கா­த­லியும் உல்­லா­ச­மாக இருந்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது.

டில்­லியின் ஷாகார்பூர் பகு­தியை சேர்ந்த தம்­பதி பைரோஸ், ஹாலிம் இரு­வ­ருக்கும் இடையே கருத்து வேறு­பாடு இருந்து வந்­துள்­ளது. இந்­நி­லையில் பைரோ­ஸுக்கு, பூஜா என்ற பெண்­ணுடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது, இதனை அறிந்து கொண்ட ஹாலிம். அவரின் வீட்­டுக்கு சென்று சண்­டை­யிட்­டுள்ளார்.

தக­ராறு முற்றிப் போகவே, பைரோஸ் மற்றும் பூஜா சேர்ந்து ஹாலிமை கொலை செய்ய திட்டமிட்டுள்­ளனர்.  இதன்­போது இரு­வரும் சேர்ந்து மனை­வியை கொலை செய்­து யாருக்கும் தெரி­யாமல் அவ­ரது உடலை மறைத்­த­துடன் முதல் நாள் சட­லத்தை கட்­டிலில் போட்டு அதன் மீது மெத்தையை வைத்து இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்து ள்­ளதாக கூறப்படுகின்றது.

இந்­நி­லையில் இரண்டு நாட்கள் கழித்து துர்­நாற்றம் வீசவே, ஹாலிமை சாக்கு பையில் போட்டு வீதியில் வீசி எறிந்­துள்­ளனர். சாக்கு பையி­லி­ருந்து அழு­கிய நாற்றம் வந்­த­வுடன், அக்­கம்­பக்­கத்தில் இருந்­த­வர்கள் பொஸா­ருக்­கு தகவல் அளித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதி­கா­ரிகள் சாக்கு பையை பார்த்­த­போது சடலம் இருப்­பது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டது, உட­ன­டி­யாக சட­லத்தை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் கொலை செய்­யப்­பட்ட பெண் ஹாலிம் என்பதும், கண­வரே கொலை செய்­ததும் தெரி­ய­வந்­துள்­ளது இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது!!

Madu

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார் மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.

மடு மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்று மடு தேவ மாதாவின் விண்ணேற்புத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

மடு மாதா அன்னைக்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கண்டி. மறை மாவட்ட ஆயர் வியன்னி பெனாண்டோ, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க, அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அந்ராடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடைந்தது.

விண்ணேற்புத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிரும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.

திருவிழா இறுதியில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மடு திருத்தலத்திற்கு அன்பளிப்பு தொகையினை வழங்கி வைத்தார்.

அத்துடன், மன்னார் மாந்தை ஆலய காணிக்கான உறுதிப்பத்திரத்தை அமைச்சர் ஜோன் அமரதூங்க, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகையிடம் வழங்கி வைத்தார்.

உயிருக்குக்குப் போராடும் இச் சிறுவனின் உயிர்காக்க உதவுங்கள் : ஓர் தாயின் கதறல்!!(காணொளி)

Boy

கிளிநொச்சி ஊற்றுப்புலம் என்னும் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்துவரும் வ.பிரேம்குமார் அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள்.

பிரேம்குமார் அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்றே தனது குடும்ப செலவுகளை சமாளித்து வருகின்றார்.

இவரது மகனான பிரேம்குமார் டனுஜன் ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் 6ல் கல்வி கற்றுவந்த வேளையில் 2 மாதங்களுக்கு முன்பு பாடசாலையில் மயக்கமுற்று விழுந்தார்.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக பொரளை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு15 00 000 (பதினைந்து லட்சம் ருபாய்) தேவை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பிரேம்குமாரால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாதுள்ளதனால், உறவுகளான உங்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

உயிருக்குப் போராடும் இச் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற அன்புள்ளம் கொண்டவர்கள் உதவிடுங்கள்.

தொலைபேசி இலக்கம் – 0766770518
வங்கி கணக்கிலக்கம்- வ.பிரேம்குமார்
048200100049138
மக்கள் வங்கி
கிளிநொச்சி

தேசிய அடையாள அட்டை-760873861V

DSC_0298 DSC_0299 DSC_0300DSC_0289 DSC_0291 DSC_0292 DSC_0294 DSC_0295 DSC_0296

லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா!!

 
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

ரதோற்சவ நிகழ்வை வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று நீண்டநேரமாக ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில் பிரித்தானியாவில் அதிகம் விற்பகையாகும் நாளிதழான சண் மற்றும் டெயிலி மெயில் ஊடகங்களும் இந்தநிகழ்வுக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.

1 3 6 7

மன்னார் மாவட்டத்திலுள்ள சமூக சேவையாளர்களுக்கு சாமஸ்ரீ விருது வழங்கிவைப்பு!!

 
அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் மன்னார் மாவத்திலுள்ள சமூக சேவையாளர்களுக்கான சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தின் தன்னலம் பாராத சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உரையாற்றுகையில்..

சமூகத்தில் நாம் புகழையும் விருதுகளையும் நோக்கியதாகத்தான் எமது சேவைகள் இருக்குமென்றால் அது சமூகசேவையல்ல, மாறாக எந்தவித சுயலாப நோக்கமுமின்றி எம்மால் சமூகத்திற்கு சேவை செய்ய முடியுமானால் அதுவே சமூக சேவை.

இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படும் நீங்கள் தன்னலமற்ற, புகழை எதிர்பார்க்காமல் சேவையாற்றிவர்கள் என்றே நான் கருதுகின்றேன் அதனால்தான் இந்த கௌரவிப்பு நிகழ்வு உங்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களது சேவை இனிவரும் காலங்களிலும் தொடரட்டும் என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட, மாகாண சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், சமூகசேவையாளர்கள், ஊடகவியலார்கள், மக்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

1 13912705_1345739452132733_4688428339593565406_n IMG_7051 IMG_7055 IMG_7061 IMG_7085 IMG_7094

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது!!

Aus

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் இன்று (15) மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை கடற்படையினர் திரகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்துள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் கடல்சார் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.