விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் தயா மாஸ்டரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 4 சரீரப் பிணைகளிலும் விடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வடக்கு மாகாணத்தை விட்டு வெளியில் செல்ல தடைவிதித்துள்ளார்.
கடந்த முறை நடந்த வழக்கு விசாரணையின் போது, தயா மாஸ்டருக்கு பிணை வழங்கியிருந்தது. எனினும் நான்கு அரச அதிகாரிகள் சரீரப் பிணை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போனதன் காரணமாக அவர் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டமையினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று (15.08.2016) பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களின் பிணையிலும் ஜந்து லட்சம் காசுப் பிணையிலும் செல்ல வவுனியா மேல் நீதமன்ற நீதவான் (10.08.2016) புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கமைய இன்று நான்கு அரச உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் கையோப்பமிட்டதுடன் ஜந்து லட்சம் ரூபா பணமும் நீதிமன்றத்தில் கட்டப்பட்டது.
அத்துடன் தினசரி காலை 9 மணியிலிருந்து 12 மணிக்குள் யாழ் பொலிஸ் நிலையத்தில் கையோப்பமிட வேண்டுமெனவும் வடமாகாணத்தை விட்டு வெளி மாகாணத்திற்கு செல்ல முடியாது என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.
வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா அரசாங்க அதிபர் ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர். கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்களான பி.ஹரிசன், றிசாத் பதியுதீன் ஆகியோர், வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று பொருளாதார மையத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தேக்கவத்தை மிகவும் பொருத்தமான இடமென உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் பி.ஹரிசனுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பொருளாதார மையத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும், எவ்வாறான விளைபொருட்களை கொண்டு வருவது எனவும் கலந்துரையாடுவதற்காகவே விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா பொருளாதார மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா? அல்லது ஓமந்தையில் அமைப்பதா? என்ற சர்ச்சை ஏற்பட்டதனால் அமைச்சரவையிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
இறுதியாக ஓமந்தையில் ஒரு பொருளாதார மையமும், வவுனியாவில் இன்னுமொரு பொருளாதார மையமும் அமைப்பது என அறிவிக்கப்பட்டதை அடுத்தே தேக்கவத்தையில் வவுனியாவுக்கான பொருளாதர மையத்தை அமைப்பது என இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பி.ஹரிசன் வவுனியா பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்து பேதங்கள் நிலவிய போதும், தற்போதுஅவை தீர்க்கப்பட்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சுமூகமான தீர்வை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள 200 நிதியை இந்த வருடத்துக்குள் பயன்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
அமெரிக்க நாட்டில் உள்ள கடை ஒன்றில் ஐஸ் கிரீமை திருடிச்சென்ற நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு 7 லட்சம் பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் நகரில் பிரபல கோடீஸ்வரரான John Catsimatidis என்பவருக்கு சொந்தமான Gristedes என்ற ஐஸ் கிரீம் கடைகள் பல நகரங்களில் இயங்கி வருகின்றன.
எனினும், அண்மை நாட்களாக மர்ம நபர்கள் இவரது கடைகளை குறி வைத்து ஐஸ் கிரீம் பெட்டிகளை திருடிச்சென்று குறைந்து விலைக்கு விற்று வருகின்றனர்.
நியூயோர்க் நகரில் உள்ள இவரது ஒரு கடையில் ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் கடையில் புகுந்து ஐஸ் கிரீம் பெட்டிகளை திருடிச் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
ஆனாலும், பொலிசாரால் இந்த மர்ம நபர்களை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், ஐஸ் கிரீம் திருடர்களை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 5,000 டொலர் (7,27,100 இலங்கை ரூபாய்) பரிசு வழங்கப்படும் என தொழிலதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பொலிசாருக்கு இதுவரை 250 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் அடிப்பையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து அவரையே திருமணம் செய்துகொண்ட மருமகன், தற்போது விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் மேத்தா(22). இவர் மருவாகி கிராமத்தை சேர்ந்த சுரேந்திர மேத்தா, ஆஷா தேவியின் மகள் லலிதா குமாரியை கடந்த 2013ம் ஆண்டு யூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான அடுத்த ஆண்டு லலிதா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகளுக்கு உதவி செய்த வந்த ஆஷா, மருமகனுடன் காதல் வயப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்த இவர்கள், யூன் மாதம் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்த இவர்கள், பஞ்சாயத்து முன்னிலையில் நிறுத்தப்பட்டனர், அப்போது தனது மருமகனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஆஷா தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒருவரையாருவர் காதலிப்பதால் ஊர் பஞ்சாயத்தும் இதனை ஒப்புக்கொண்டது.
இவர்களின் இந்த செயலால் குடும்பத்தினர் கடும் கோபம் கொண்டு, இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த இவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்துகொண்டு பிரிந்துவிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படியே, கடந்த யூன் 23 ஆம் திகதி இவர்கள் இருவரும் சேர்ந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை ஈ ஷிவுக்கு, அதே நாட்டை சேர்ந்த “டைவிங்” வீரர் குயின் கை பதக்க மேடையில் வைத்து திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.
இரத்தினத்திலான மோதிரம் ஒன்றை ஈ ஷிவுக்கு அணிவித்து தனது திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இதனை ஈ ஷிவும் ஏற்றுக்கொண்டு தனது விருப்பத்தினையும் தெரிவித்துள்ளார்.
China’s silver medalist He Zi, left, receivers a marriage proposal by China’s diver Qin Ki, right, during the medal ceremony for the the women’s 3-meter springboard diving final in the Maria Lenk Aquatic Center at the 2016 Summer Olympics in Rio de Janeiro, Brazil, Sunday, Aug. 14, 2016. (AP Photo/Michael Sohn)
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்டியில் சவுதி அரேபியாவின் கரீமன் அபுல்ஜதாயேல் பங்குபற்றியிருந்தார்.
ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய சவுதி அரேபியாவின் முதல் வீராங்கனை இவராவார். இப் போட்டி யில் அபுல்ஜதாயேல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
அவர் முதல் சுற்றில் 7 ஆம் இடத்தைப் பெற்றார். ஆப்கானிஸ்தான் வீராங்கனை கமியா யூசுப் 8 ஆவது இடம் பெற்றார்.
இரவு நேரத்தில் தொலைத்தூர பிரதேசமொன்றில் கழிவறைக் கடதாசிகளை தீ மூட்டியதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானமொன்று தரையிறக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor Service) எனும் பறக்கும் மருத்துவ சேவை அமைப்பின் விமானமொன்றின் விமானிகளுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டது.
1928 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் மருத்துவ அமைப்பு இது. தமது குழுவினர் எதிர்நோக்கும் சவால்களை சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 31 ஆம் திகதி தமது விமானிகளுக்கு ஏற்பட்ட மேற்படி அனுபவம் குறித்து அவ்வமைப்பு சமூக வலைத் தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த இரவில், பண்ணையொன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. எமது மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்தின் மூலம் பறந்தனர்.
ஆனால், இருளான அப்பகுதியில் விமானத்தை இறக்குவதற்கு ஏற்ற பகுதியை அடையாளம் காண்பதற்கு விமானிகளால் முடியவில்லை.
அதையடுத்து ஒளியை ஏற்படுத்துவதற்கு என்ன வழி என தொலைபேசி மூலம் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. தம்மிடம் கழிவறை கடதாசி சுருள்கள் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
அக் கழிவறை கடதாசிகளை டீசலில் நனைத்து தீ மூட்டுமாறு அதிகாரிகள் ஆலோசனை கூறினர். அதன்படி கழிவறை கடதாசிகள் தீ மூட்டப்பட்டன.
30 மீற்றர் அகலமான பரப்பில் சுமார் அரை மணித்தியாலம் இவ்வாறு கழிவறை கடதாசிகள் தீ மூட்டப்பட்டன என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி, நோயாளியான பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரேசில் நாட்டில் உலகமே வியக்கும்படி ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா 4வது இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு டிடி இல்லை இல்லை, உன்னுடைய முழுத்திறமையும் நீ காட்டினாய், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை’ என கூறினார்.
இதுமட்டுமின்றி நாட்டில் ஊழல் குறித்து அதில் இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளுக்கு நவ்ராஸ் மற்றும் மோவஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளும், அவற்றின் தாயும் அம்புலன்ஸ் மூலமாக டமாஸ்கஸ் அருகே அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
அந்தக் குழந்தைகளை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பிரித்தெடுக்காவிட்டால் இறந்து விடும் என கூறப்படுவதால், இதற்கு உதவுமாறு உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சிரியா வைத்தியர்கள் கோரி உள்ளனர்.
இதற்கிடையே அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்திப்பதாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பலரும் செய்திகள் விடுத்துள்ளனர்.
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்
அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்..
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.
நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப்பின்னாலும் இரண்டு கண்களைத்திறக்கின்றன. புத்தகங்களை நேசி.ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்.உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு.விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே.நல்ல நண்பர்களைச்சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை.
என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால்,இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார். உன் கண்களில்இருந்து உதிரும் கண்ணீர்த்துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.
இந்திய சுதந்திர தினவிழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் வருகையின் போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 70வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்.
கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடிக்கு முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் வயது 70 அல்ல, காலனி ஆதிக்கத்திற்கு பிறகு சிறந்த இந்தியாவின் வயது 70 என கூறினார்.
சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை அனைத்து இந்தியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலமே சுதந்திரம் கிடைத்தது என மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவின் போது அருண் ஜெட்லி, குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் மோடியின் உயிருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாலும், சமீப காலமாக காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி அடிக்கடி நடைபெற்று வருவதாலும் மத்திய உளவுத்துறையினர் பிரதமர் மோடிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை அளித்திருந்தனர்.
இதனால் பிரதமர் சுதந்திர தின உரையாற்றும் செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, பாரம்பரியம் மிக்க டெல்லி செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி பொலிசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், இன்று வரை, சூரிய அஸ்தமனத்துக்கு பின்பு ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34,500 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணர் பிரஸிலா சமரவீர தெரிவித்தார்.
கடந்தவருடம் 29,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும், அதனுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோயினால் பீடிக்கபட்டவர்களின் எண்ணிக் கொழும்பு, கம்பஹா,களுத்துறை,கண்டி,மாத்தறை,காலி,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகளவனாவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, டெங்கு நோய் பரவும் இடங்களை துப்பரவு செய்து நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசி டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்காக அங்கு சென்றுள்ள ஜப்பானிய பெண்ஒருவரிடம் இலங்கையர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட வழிகாட்டுனர் ஒருவர், அவருடையஉடமைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதியன்று குறித்த பெண், இந்தியாவுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இலங்கையர்,ஒருவர் அவர் வழிகாட்டுவதாக கூறி உறுதியளித்துள்ளார்.
தாம் இலங்கையின் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டதாகவும் வாழ்க்கையை கொண்டுசெல்லமுடியாத நிலையில் புதுடில்லிக்கு வந்த வழிகாட்டுநனராக செயற்படுதாகவும் ஜப்பானியபெண்ணிடம் இலங்கையர் தெரிவித்துள்ளார்.
தனையடுத்து குறித்த இலங்கையர், ஜப்பானிய பெண்ணை பழக்கமற்ற பல இடங்களுக்குஅழைத்துச் சென்றுள்ளார்.
அந்த இடங்கள், ஜப்பானிய பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் ஒருவாறு அவரின் நம்பிக்கையை இலங்கையர் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அடுத்தநாள் வெளியிடம் ஒன்றுக்கு ஜப்பானிய பெண்ணை அழைத்துச் சென்றஇலங்கையர், அவருக்கு பானம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த பானத்தை அருந்திய ஜப்பானிய பெண், சரோஜின் நகர் பகுதியில் மயங்கிய நிலையில்அவரிடம் இருந்த 15ஆயிரம் ரூபா பணம், புகைப்படக்கருவி மற்றும் விலையுயர்ந்த தொலைபேசிஆகியவற்றை குறித்த இலங்கையர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.