ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!!

Olympic

ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார்.

எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ் டிரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக கருதப்பட்டவர்.

ஆனால் துருதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. 17 பேர் ஓடிய அந்தப் பந்தயத்தில் இரண்டரை லேப்கள் மீதம் இருந்த நிலையில், ஓடுதளத்தில் தண்ணீர் இருந்த காரணத்தால் சக போட்டியாளர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்த அவர் டிரோவின் காலில் மோதினார். இந்த மோதலில் இன்னொரு வீராங்கனையும் கீழே விழுந்தார்.

கீழே விழுந்த இரு வீராங்கனைகளும் எழுந்த ஓடத் தொடங்கினார். ஆனால் கீழே விழாத டிரோவுக்கு பிரச்னை தனது காலணியின் வாயிலாக எழுந்தது.

அந்த வீராங்கனை டிப்ரோவின் கால் மீது விழ, அவரது ஷூ பழுதடைந்தது. சில நொடிகள் நின்று அதை சரி செய்ய முயற்சி செய்தார் டிரோ.

ஆனால் மற்ற அனைவரும் தன்னை முந்திவிட்டதால் அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் பழுதடைந்த அந்த ஷூவை கழட்டி வீசிவிட்டு ஒற்றை ஷூவோடு ஓடத் தொடங்கினார் டிரோ.

அதைப் பார்த்த மொத்த அரங்கமும் டிரோவை உற்சாகப்படுத்தியது. சக நாட்டவரைப் போல் கூச்சலிட்டு அந்தப் போராளிக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர்.

ஒற்றை ஷூவோடு இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியோடும் இன்னும் வேகமாக ஓடினார் டிரோ.

சுமார் அரை மைல் தூரம் ஒற்றை ஷூவோடு ஓடிய டிரோ பலரையும் முந்தி ஏழாம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடம் பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் டிரோ டிராக்கிலேயே கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்.

அவரது இந்த முயற்சியைப் பாராட்டி சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் அளித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்குத் தரும் கோஷத்தை டிரோவுக்காக எழுப்பினர்.

தெரியாமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று வீராங்கனைகளின் வாய்ப்பு பறிபோனதால் மேல்முறையீடு செய்யப்பட்டு டிரோ, டிரீகி, ஆயிஷா பிராட் ஆகிய மூவருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு உண்மையான ஒலிம்பியன் தனது போராட்டக் குணத்தைக் கைவிடமாட்டார். தோல்வியைத் துரத்தி தனது கண்ணீருக்கு அர்த்தம் சேர்ப்பார். அப்படியான ஒரு போராளியைத் தான் பிரேசிலின் ஒலிம்பிக் அரங்கம் எடினேஷ் டிரோ வாயிலாக கண்டுகளித்தது.

பிரித்தானிய இளம் பெண்ணிற்கு பாகிஸ்தானில் நேர்ந்த கொடுமை!!

images

பாகிஸ்தானுக்கு விடுமுறையை கழிக்க சென்ற பிரித்தானிய இளம் பெண் ஒருவரை அவரது உறவினர் ஒருவர் அடைத்து வைத்து 3 ஆண்டுகள் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் doncaster பகுதியில் தமது உறவினர் ஒருவருடன் குடியிருந்து வருபவர் பெயர் வெளிடப்படாத அந்த இளம் பெண். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு விடுமுறையை கழிக்கும் பொருட்டு பாகிஸ்தானில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு 2 மாதங்கள் தங்கியிருந்த அவருக்கு விடுமுறை முடிவுக்கு வரும் அந்த வாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருந்தது. சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறையில் வந்த இவரது உறவினர், துப்பாக்கியை காட்டி மிரட்டி தமது மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் சகோதரர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்த இவரை 21 வயது இளைஞர் ஒருவருக்கு ஒரு சில தினங்களிலேயே மண ஒப்பந்தம் செய்து முடித்து வைத்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர் ஆளாகியுள்ளார்.

அறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் தொடர்ந்து பல்வேறு சித்திரவதைகளுக்கு இவர் இரையாகியுள்ளார். இதனைடையே அந்த நபருடன் திருமணம் என்று கூறி சடங்கு ஒன்றையும் நடத்தி முடித்துள்ளனர்.

பிரித்தானிய குடியுரிமை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் மிக எளிதில் பிரித்தானியாவில் நுழைந்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இந்த திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தொடர்ந்து 3 ஆண்டுகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை அனுபவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் போராடி கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் விவாகரத்து பெற்று அங்கிருந்து பிரித்தானியா வந்து சேர்ந்துள்ளார்.

தமது வாழ்க்கையின் முக்கிய நாட்களை பாகிஸ்தானின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சித்திரவதையில் தொலைந்து போனதை நினைவுகூறும் அவர், தமது சிறு வயதிலேயே ஏற்பட்ட வலிகளில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் பிரித்தானியாவில் கட்டாயத்திருமணம் குறித்த 1220 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 44 சதவிகித வழக்குகள் பாகிஸ்தான் தொடர்புடையவை என பிரித்தானிய அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஒரேநாளில் 5.5 கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை!!

Tree

இந்தியாவில் அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

அதி மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் திகதி எட்டே மணி நேரத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட்டதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்திருந்தது அங்குள்ள அரசு.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் கடந்த ஜுலை மாதம் 11-ம் திகதி உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு 24 மணிநேரத்துக்குள் ஐந்து கோடி மரக்கன்றுகளை நடும் மாபெரும் சாதனை திட்டத்துக்கு மாநில அரசும் வனத்துறையும் ஏற்பாடு செய்தது.

இதற்காக, சுமார் ஆயிரம் அரசு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 80 வகைகளை சேர்ந்த 7 கோடி மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. எந்தெந்த வகை மண்ணில் எவ்வகை செடிகள் விரைவாக வளர்ந்து நல்லப்பலனை தரும் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

அதன்படி, அரசுப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் துணையுடன் அம்மாநிலத்துக்குட்பட்ட 85 வனக் கோட்டங்களில் சுமார் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்கள் கடந்த மாதம் 11-ம் திகதி நடப்பட்டன.

மரம் நடுவதற்கு முன்னதாகவும், மரம் நடும்போதும், மரங்களை நட்ட பின்னரும் எடுக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் புகைப்படங்கள் மற்றும் 18 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை ஆய்வுசெய்த கின்னஸ் நிறுவனத்தார் உத்திரப்பிரதேசம் மாநிலம் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 24 மணி நேரத்துக்குள் ஐந்தரை கோடி மரங்களை நட்ட இந்த சாதனையை தற்போது உலக சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழ் அளித்துள்ளது.

Capture

யாழில் கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!!

Body

ஊர்காவற்துறை – காரைநகர் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காரைநகர், திக்கரையை சேர்ந்த சண்முகராஜ துவாரகா என்ற 15 வயதான சிறுமியொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிக்கு தேங்காய் பறிப்பதற்கு வருககை தந்த சிலர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார், இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டாரா?

அல்லது தற்கொலை சம்பவமா? என்பது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத மிருகக்காட்சிசாலை பிடிபட்டது!!

1

சுற்றுலாத்துறையினரின் பார்வைக்காக சட்டவிரோதமான முறையில் வன விலங்குகளைத் தடுத்துவைத்திருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேற்படி சட்ட விரோத மிருகக்காட்சி சாலை தம்புள்ள பிரதேசத்திலுள்ள கபுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்று வந்துள்ளது. சீகிரிய வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி நேற்று இம்முற்றுகை இடம் பெற்றுள்ளது.

ஒரு ஹோட்டலின் பின் பகுதியில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட கூடுகளில் இவை அடைக்கப்பட்டிருந்த வேளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவற்றை தாம் அடைத்து வைத்திருந்ததாக மேற்படி ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

ஆந்தை, முள்ளம் பன்றி, ஆமை போன்ற அரிய உயிரனங்கள் பலவும் இதில் இருந்துள்ளன.

சந்தேக நபரை தம்புள்ள நீதவான் மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதியில் சுமார் 50,000 மீனவர்கள் பாதிப்பு!!

SL

இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதியில் சுமார் 50,000 மீனவர்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத்திற்கு சுமார் 6000 இற்கும் அதிகமான இந்திய படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி தொழில் ஈடுபடுவதாக அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பொட்ரம் ரொலிங் முறையை பயன்படுத்துவதால், இலங்கை மீன் வளம் முற்றாக அழிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருதவதாகவும், இது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் இராஜதந்திர ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்திய மீனவர்களின் வருகையால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே சுட்டிக்காட்டினார்.

உலகின் அதிவேக வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

Bolt

உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் மீண்டும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார்.

முதலாவது போட்டியில் பிரான்சின் ஜிம் விகாட் மிக வேகமாக போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.

அரையிறுதிச் சுற்றில் இரண்டாவது போட்டியில் உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட்
பங்குபற்றினார். இதில் 9.84 செக்கன்களில் போட்டித் தூரத்தை யுசெய்ன் போல்ட் கடந்து வெற்றி பெற்றார்.

இவர் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்க வென்று சாதனை படைத்தார்.

இவர் ரியோ டி ஜெனிரோவில் இம்முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.81 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Bolt 1

முகமாலையில் இடம்பெற்ற இரு வேறு கண்ணிவெடிச் சம்பவங்களில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்!!

 
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு கண்ணிவெடி வெடிப்புச் சம்பவங்களில் ஒரு கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்தோடு, மற்றொரு சம்பவத்தில் பொது மகன் ஒருவர் பலியாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12 திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் இறந்த நிலையில் 14 திகதி ஞாயிற்று கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்ணிவெடி அகற்றப்படாத ஆபத்து மிக்க குறித்த பிரதேசத்திற்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து அதன் மருந்தை விற்பனை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் இறந்த பகுதிக்கு டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு 29 வரையான ரங்கன் ரக கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இதன் போத அவரின் உடலின் அருகில் 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரை காணவில்லை அவரது மனைவி 13 திகதி பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் ஞாயிற்று கிழமை சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை முகமாலை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பிரிதொரு சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த எஸ். மகேஸ்வரி என்பவர் படுகாயம் அடைந்து யாழ் போதான வைத்தியசாலையில் சிகிசை பெற்றுவருகின்றார்.

குறித்த பெண் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன் போது ஒரு கண் முற்றாக இழந்த நிலையிலும் ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலில் மிகப்பெரும் காயத்துடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

news (1) news (2) news (3) news (4) news (5)

இளம் பெண்களின் திருமண ஆசைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

Couples

தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்ற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம் பெண்களின் திருமணக் கனவுகளாக மலர்ந்து கொண்டிருக்கின்றது.

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்
தங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்ற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம் பெண்களின் கல்யாண கனவுகளாக மலர்ந்து கொண்டிருக்கிறது.

இது 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் ஒரு அங்கம். ‘மேரேஜ் டூ லவ்’ என்ற சமூக அமைப்பு பொலிவுட் நடிகை வித்யா பாலனை முன்னிறுத்தி இந்த கருத்துக்கணிப்பை எடுத்திருக்கிறது.

அப்படி 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளம் பெண்களிடம் திருமண ஆசைகள்’ பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் உங்கள் பார்வைக்கு..

நண்பர் போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்பது 80 சதவீத பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கணவரிடம் அதிகபட்ச அன்பு, தாம்பத்யம், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே.

மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் அளவுக்கு கணவர் திறந்த மனதுடன் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்பதைத்தான் எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்பதை கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எவ்வளவு நல்லவராக இருந்தாலும், நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அதிரடியாக சொல்கிறார்கள் 68 சதவீத பெண்கள்.

10 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். அங்கு நிறைய பெண்கள் திருமணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள். காரணம், வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் 42 சதவீத பெண்கள் அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம் என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர் தங்கள் வாழ்க்கை துணையாக வேண்டாம் என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், மது அருந்துபவர்கள் எந்த விஷயத்திலும் தங்களை ஒரு அளவுக்குள் அடக்கிக் கொள்ளமாட்டார்களாம். மனைவிக்கு வேண்டாம் என்பதை கூட, மதுபிரியர்கள் வேண்டும் என்பார்கள் என்பது, இன்றைய பெண்களின் மன நிலையில் உதிக்கும் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி விட்டால் எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது.

டீன்- ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் செய்ய தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே முடக்கி போட்டுவிடக்கூடாது என்பது, அவர்களின் அன்புக் கட்டளை.

கீழே விழுந்த பின்னரும் மனம் தளறாமல் ஓடி தங்கம் வென்று சாதனைப் படைத்த பிரிட்டன் வீரர்!!

Win

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை எளிதாக கடந்து கொண்டு வந்தார். 10 ஆயிரம் மீட்டரை நெருங்கும்போது திடீரென கால் தடுமாறி கிழே விழுந்தார். மற்ற வீரர்கள் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

கிழே விழுந்ததால் வெற்றி பறிபோகி விடுமோ என்று அஞ்சமால் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடினார். இறுதியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கீழே விழுந்த பிறகு தனது முயற்சியால் வெற்றி பெற்ற மொ பராக் பிரட்டன் நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் தடகளத்தில் பிரிட்டன் வீரர்கள் மூன்று தங்கப் பதக்கம் வென்றது கிடையாது. முதன்முறையாக பராக் மூன்று தங்க பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார்.

புதன்கிழமை 5 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் கலந்து கொள்கிறார். இதில் தங்கம் வென்றால், 1976ம் ஆண்டு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் தொடர்ந்து இரண்டு முறை தங்க பதக்கங்கள் வென்ற பின்லாந்து வீரரான லஸ்ஸே விரேன் சாதனையை சமன் செய்வார்.

முதல் சந்திப்பில் கஜோலை வெறுத்தேன் : அவர் மிக மோசமானவர் என அமீரிடம் கூறினேன் : ஷாருக் கான்!!

SRK

நடிகர் ஷாருக் கானும் நடிகை கஜோலும் மிகப் புகழ்­பெற்ற பொலிவூட் சினிமா ஜோடி­யினர். இவர்கள் இணைந்து நடித்த தில்­வாலே துல்­ஹா­னியா லே ஜயாங்கே (டி.டி.எல்.ஜே), குச் குச் ஹோதா ஹை, கபீ குஷி கபி கம், பாஸிகர் முத­லான திரைப்­ப­டங்கள் பெரும் வெற்றி பெற்­றவை. நீண்ட காலத்தின் பின் இவர்கள் இணைந்து நடித்த தில்­வாலே படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியா­கி­யது.

மிக நெருங்­கிய நண்­பர்­க­ளாக இவர்கள் விளங்­கு­கின்­றனர். எனினும் கஜோ­லுக்கும் ஷாருக் கானுக்கும் இடை­யி­லான முதல் சந்­திப்பு அவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யாக இருக்­க­வில்­லையாம்.

1993 ஆம் ஆண்டு வெளி­யான பாஸிகர் திரைப்­ப­டத்தில் தான் இவர்கள் முதன் முதலில் இணைந்து நடித்­தனர். அப் ­ப­டத்தில் கஜோ­லுடன் ஷாருக்கான் நடிக்க ஆரம்­பித்­த­வுடன் நடிகர் அமீர் கானும் கஜோ­லுடன் பட­மொன்றில் இணைந்து நடிக்க விரும்பம் தெரி­வித்து, அவரின் நடிப்பு குறித்து ஷாருக்­கா­னிடம் விசா­ரித்­தாராம்.

அப்­போது, “கஜோல் மிக மோச­மா­னவர். பணியில் கவனம் செலுத்­து­வதே இல்லை. நீங்கள் அவருடன் இணைந்து பணி­யாற்­று­வது கடினம்” என நான் தெரி­வித்தேன்.

ஆனால், அன்று மாலை பட­மாக்­கப்­பட்ட காட்­சி­களை ரஷ் போட்டு பார்த்­த­போது, அமீரை தொலை­பே­சியில் அழைத்து, “என்­ன­வென்று தெரி­ய­வில்லை, அவர் (கஜோல்) திரையில் அற்புதமாக இருக்கிறார்” தான் கூறியதாக ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு கோழிகுஞ்சுகள் வழங்கிய இ.இந்திரராசா!!

 
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலத்தில் கடந்த 12.08.2016 இடம்பெற்றது.

இன் நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

1 IMG_4141 IMG_4153 IMG_4156 IMG_4161

இரவு நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடலாமா?

Eating

இரவுகளில் திடீரென பசி எடுத்தால் வெறும் வயிற்றோடு படுக்க தேவையில்லை. மிகவும் குறிப்பிட்ட வயிறு நிறையக் கூடிய சிற்றுண்டிகளை சாப்பிடலாம்.

இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். சில சமயங்களில் இரவு உணவு சாப்பிட்டாலும் தூங்குவதற்கு முன் திடீரென பசி எடுக்கும். புரண்டு படுப்பீர்கள். சில சமயத்தில் தூக்கமும் பாதிக்கும். இந்த மாதிரி சமயங்களில் என்ன பண்ணலாம்.

இரவுகளில் திடீரென பசி எடுத்தால் வெறும் வயிற்றோடு படுக்க தேவையில்லை. மிகவும் குறிப்பிட்ட வயிறு நிறையக் கூடிய சிற்றுண்டிகளைசாப்பிடலாம். அவை ஜீரண மண்டலத்திற்கு பாதகம் அளிக்காது. நீங்களும் நிம்மதியாக தூங்கலாம். அப்படிப்பட்ட உணவுகள் எவை எனப் பார்ப்போம்..

ஒரு கப் அளவு கோர்ன் அல்லது ஓட்ஸ் ஃப்ளேக்ஸ் பாலில் கலந்து சாப்பிடலாம். இவைகள் பலவகை சார்ந்த கார்போஹைட்ரேட்களை கொண்டதால் ஜீரணிக்க அதிக நேரம் தேவைப்படாது. பாலில் கலந்து சாப்பிடுவதால் நிம்மதியாக தூக்கமும் வரும். இவற்றில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

ஒரு கப் யோகட் சாப்பிடலாம். இதில் ட்ரிப்டோஃபேன் உள்ளது. இவை வயிற்றிற்கு இதம் அளிக்கும். வயிறும் நிறைந்தது போலிருக்கும்.
அப்பிள், வாழைப்பழம், மாதுளை ஆகியவை கலந்து சலட் செய்து ஒரு கப் அளவு சாப்பிடலாம். நல்ல தூக்கத்தை தரும். உடல் எடையும் ஏறாது.

கரட்டையும் வெள்ளரிக்காயையும் நறுக்கி சலட் செய்து சாப்பிடலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடியவை. சலட் செய்யாமல் வெறுமனே சாப்பிடுவதும் நல்லதுதான். வயிறு நிறைந்துவிடும்.

மீன் வகைகளை இரவுகளில் சாப்பிடலாம் . கொழுப்பு இல்லாததால் இவை தீங்கு விளைவிக்காது. அதிகளவு புரோட்டின் மினரல் உள்ளது. எளிதில் ஜீரணமாகிவிடும்.

என்றைக்காவது பசி எடுக்கும்போது இரவுகளில் இப்படி சாப்பிடலாம். மற்றும்படி இவற்றையும் சாப்பிட்டு விட்டேதான் உறங்கச் செல்ல வேண்டுமென்பதில்லை. அதே சமயம் பசியோடுதான் தூங்க வேண்டும் என்பதுமில்லை. வயிற்றிற்கு பாதகம் செய்யாத ஆரோக்கிய சிற்றுண்டிகளை சாப்பிட்டு நீங்களும் நிம்மதியாக தூங்குங்கள். வயிற்றிற்கும் நிம்மதியை தாருங்கள்.

வவுனியாவில் ம.தியாகராசாவினால் சுயதொழில் முயற்சிக்கு உதவித்திட்டம்!!

 
வடமகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாககராசா அவர்கள் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பாக திருமண அலங்கார தொழிலுக்கான பொருட்களை பயனாளிகளிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிக்கு தொழிற்துறை சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கினார்கள்.

1 IMG_4431 IMG_4435 IMG_4436

இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் பதக்க கனவு தகர்ந்தது!!

Rio 2016

ஒலிம்பிகில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‪#‎இந்தியாவின்‬ ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர்‬ (22 வயது) வால்ட் இறுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

இதில் 15.966 புள்ளிகளைப் பெற்று ‪‎அமெரிக்கா‬ வீராங்கனை ‪சிமோன் பிளேஸ் ‬‎தங்கப்‬ பாதிக்கத்தையும் ,வெள்ளிப்‬ பதக்கத்தை 15.253 புள்ளிகளைப் பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்த ‪மரியா பசேகா‬, வெண்கலப்பதக்கத்தை‬ 15.216 புள்ளிகளைப் பெற்று சுவிற்சிலாந்து ‪Giulia Steingruber‬ முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளார்கள்.

இதில் இந்தியா வீராங்கனை 15.066 புள்ளிகளையே பெற்று 4 ஆம் இடத்தினையே பெற முடிந்துள்ளது.

13921170_1706950009332588_1666319695569612633_n

தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!

Dead

திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகபுரம் 2 ஆம் பிரிவு கற்புகனார் வீதியைச் 21 வயதுடைய சிவகுமார் வினோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியதால் தம்பட்டை முருகன் கோவிலுக்கு அருகில் தென்னை மரம் ஒன்று முச்சக்கர வண்டியின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்த விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.