மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
முத்துக்குமாரின் 9 வயது மகன் ஆதவன் இறுத்திச் சடங்குகளைச் செய்தார். முன்னதாக சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள முத்துக்குமார் இல்லத்தில் இருந்து அவரது உடல் நியூ ஆவடி சாலையில் உள்ள மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. நடிகர்கள், இயக்குநர்கள், பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகில் ஏராளமான பாடல்களை எழுதி இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார், மஞ்சல் காமாலை நோயினால் உடல்நிலை சரியில்லாமல் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைத்துறை, அரசியல் துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டனர்.
தனியாக விமானத்தை இயக்கி, 700 அடி உயரம் சென்று, 15 நிமிடங்கள் வானில் வட்டமிட்டேன். அப்போது மகிழ்ச்சியோடு சேர்ந்து எனக்கு தன்னம்பிக்கையும் அதிகரித்தது’’ என்று கூறும் காவியா, சாதனை பெண்கள் பட்டியலில் தன்னையும் இணைக்கத் துடிக்கும் இளம் பயிற்சி விமானி.
20 வயதே ஆன காவியா விமான பைலட்டுக்கான பயிற்சியை பெங்களூரு ஜக்கூரில் உள்ள அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பெற்று வருகிறார். மதுரையை சேர்ந்தவர். தந்தை ரவிக்குமார், மதுரை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர். தாயார் கல்பனா. தங்கை சவுமியா 9ம் வகுப்பு மாணவி.
விமானம் ஓட்டவேண்டும் என்ற லட்சியத்தை சிறுவயதிலேயே காவியா உருவாக்கியிருக்கிறார். நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்த அவர் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தனது லட்சியத்தை அடைந்திருக்கிறார்.
பெங்களூருவில் மழைச் சாரலுக்கு மத்தியில் விமான பயிற்சித்தளத்தில் காவியாவை சந்தித்தோம். சீருடையில் கம்பீரமாக தோன்றும் அவர், தான் கடந்து வந்த பாதையையும்– பயிற்சி அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
‘‘எனது தந்தைக்கு 4 சகோதரிகள். அவர்கள் துபாயில் வசிக்கிறார்கள். நான் 6–ம் வகுப்பு படித்தபோது எனது அத்தைகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் துபாயில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வந்ததை பெருமையாக என்னிடம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அந்த அனுபவத்தை அவர்கள் விவரித்தபோது, ‘விமானத்தில் பயணம் செய்த அனுபவமே இவர் களுக்கு இவ்வளவு ஆச்சரியமாக இருந்தால், அந்த விமானத்தை இயக்கும் அனுபவம் எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கும்!’ என்ற கோணத்தில் என் மனப்பறவை பறந்து வானத்தை வட்டமிட்டது. உடனே நான் எனது அத்தைமார்களிடம் ‘நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள். நான் அது போன்ற விமானத்தில் விமானியாக இருந்து அந்த விமானத்தையே இயக்க விரும்பு கிறேன். இதை ஒரு சபதமாக எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்போது அவர்களில் யாரும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.
அன்று முதல் என் மனதில் விமானம் பற்றிய விஷயங்களே ஓடிக்கொண்டிருந்தது. எனது பெற்றோரிடம், நான் பைலட் ஆவேன் என்று அடிக்கடி கூறி வந்தேன். ஆனால் அவர்களோ அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார்கள். நானோ பைலட் ஆகும் லட்சியத்தில் இருந்து இம்மியளவுகூட நழுவவில்லை’’ என்கிறார்.
காவியா 15 வயதிலேயே பைலட் பயிற்சியை பற்றி விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.
‘‘10–ம் வகுப்பு படித்து முடித்ததும், புதுச்சேரியில் உள்ள விமான பயிற்சி பள்ளிக்கு போன் செய்து, ‘விமான பயிற்சியில் சேர வேண்டும்’ என்று கூறி விவரம் கேட்டேன். அவர்களோ 12–ம் வகுப்பு முடித்தால் மட்டுமே சேர முடியும் என்று சொல்லிவிட்டனர். அதனால் பள்ளிப் படிப்பை தொடர்ந்தேன். 12–ம் வகுப்பை முடித்தேன்.
தேர்வு முடிவு வெளியானதும், எனது தோழிகள் என்ஜினீயரிங் சேர விண்ணப்பிக்குமாறு கூறினார்கள். என் பெற்றோரும் அந்த படிப்பிற்கே என்னை அனுப்ப விரும்பினார்கள். ஆனால் நான் திட்ட வட்டமாக மறுத்துவிட்டேன்.
எனது ஒரே நோக்கம், பைலட் பயிற்சியில் சேருவது தான் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அப்போது தான் எனது லட்சியம் விளையாட்டுத் தனமானது அல்ல. உணர்வுப்பூர்வமானது என்பதை பெற்றோர் புரிந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள்’’ என்கிற காவியா, அடுத்து பைலட் பயிற்சியில் சேர முழு முயற்சியினை எடுத்திருக்கிறார்.
‘‘எனது தோழியின் தாயார் மூலம் பெங்களூருவில் விமான பயிற்சி பள்ளி இருப்பதை அறிந்தேன். அதில் சேர விண்ணப்பித்தேன். ஒரே நாளில் 3 தேர்வு களை எழுதினேன். அந்த மூன்றிலும் தேர்ச்சியும் பெற்றேன். அடுத்த வாரமே பயிற்சியில் சேரும்படி அதிகாரிகள் கூறினார்கள். ‘என் கனவு நிறைவேறப்போகிறது’ என்று நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சி சில விநாடிகளிலேயே கரைந்து போனது.
பைலட் பயிற்சியை முடிக்க 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? என்று நான் விழிபிதுங்கி நிற்க, எனது பெற்றோரும் அவ்வளவு பணத்தை தங்களால் கட்ட இயலாது என்று கூறி, வேறு படிப்பில் சேர்ந்துவிட சொன்னார்கள்.
அதனால் பைலட் கனவு கலைந்து போய்விடுமோ? என்ற கவலை எனக்குள் தொற்றிக்கொண்டது. ஆனாலும் நான் மனந்தளராமல் பயிற்சிக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், நான் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவள் என்பதால், இதற்கு மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் என்ற தகவல் தெரிய வந்தது.
அதுபற்றி பெற்றோரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினேன். என்னுடைய ஆர்வத்துக்கு அணை போடாமல் கஷ்டப்பட்டு 7 லட்சம் ரூபாய் முதலில் செலுத்தினார்கள். பைலட் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். 4 பேர் அமரும் குட்டி விமானத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.
பயிற்சி பள்ளியில் சேருவதற்கு முன்பு விமானத்தை அன்னாந்து பார்த்த அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. விமானத்தில் ஏறி பயணித்த அனுபவம் எதுவும் கிடையாது. முதல் இரண்டு மாதங்கள் விமானத்திற்கு வெளியேதான் பயிற்சி கொடுத்தார்கள். முதல் நாள் விமானத்தில் காலடி எடுத்துவைத்ததும் உடலே சிலிர்த்ததுபோல் இருந்தது. இரண்டாவது நாள் பைலட் இருக்கையில் அமர்ந்து விமானியின் அறிவுரைப்படி விமானத்தை இயக்கினேன். தொடர்ந்து பயிற்சி பெறுகிறேன். விமானத்தில் பறக்கும்போது என்னை நானே பெருமித மாக உணர்கிறேன். விமானத்தை இயக்கும்போது எனக்கு பயம் எதுவும் ஏற்படுவதில்லை’’ என்கிறார்.
காவியாவுடன் பத்து பேர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார்கள். அதில் இவர் ஒருவர் மட்டுமே தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.
‘‘விமானத்தில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்ய 10 ஆயிரம் ரூபாய் கட்டணம். என்னிடம் போதிய அளவுக்கு பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். இப்போது மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகையை ஒதுக்கியுள்ளது. இனி பணப்பிரச்சினை ஏற் படாது. நான் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து 2½ ஆண்டு ஆகிறது. வருகிற டிசம்பர் மாதத்துடன் பயிற்சி நிறைவடைகிறது. இனி, ‘கிராஸ் கன்ட்ரி’ அடிப்படையில் விமானத்தை ஓட்ட உள்ளேன். தனியாக 400 நாட்டிக்கல் மைல் தூரம் வரை விமானத்தை இயக்குவேன்.
என்னுடன் 10 பேர் இந்த பயிற்சியில் சேர்ந்தனர். இதில் 9 பேர் பல்வேறு காரணங்களால் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். நான் மட்டுமே தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன். இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தில் மல்டி என்ஜின் விமானத்தை இயக்கும் பயிற்சியில் சேர உள்ளேன். இதற்காக தேர்வு எழுதியுள்ளேன்.
அந்த விமானத்தை 25 மணி நேரம் இயக்க வேண்டும். அதன் பிறகு பயணிகள் விமானத்தை இயக்கும் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. போயிங்– 787 விமானத்தை இயக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு முன்பாக ஏர்பஸ்–320 விமானத்தை ஓட்ட வேண்டும். பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை’’ என்று கூறும் காவியா, மாணவ– மாணவிகளுக்கு தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை தருகிறார்.
‘‘மாணவ– மாணவிகள் எதை படிக்க விரும்புகிறார்களோ அதை படிக்கவேண்டும். நிச்சயமாக ஒவ்வொருவராலும் சாதிக்கமுடியும். அதனால் தனது லட்சியங்களில் இருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’’ என்கிறார்!
ஜக்கூர், தலைமை விமான பயிற்சியாளர் அமர்ஜித்சிங் டங்கே கூறுகையில், “காவியா சிறப்பான முறையில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த துறையில் அவர் சாதனையாளராக திகழ்வார்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.
காதலியிடம் இருந்து விலகிக்கொள்ள காதலிக்கு செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காதலனை பிலியந்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், காதலனுக்கு உதவியதாக கூறப்படும் பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலனை விட்டு பிரிந்தால் 50 லட்சம் தருவதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் கொலை செய்ய போவதாகவும், செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேரையும் தனித்தனியாக அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் காதலி என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் அனுப்ப, குறித்த காதலன், பெண் அழகுக்கலை நிபுணருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலியின் பெயரில் வாங்கிய சிம் அட்டையை பயன்படுத்தி இந்த எஸ்.எம்.எஸ் அனுப்பபட்டுள்ளது. காதலனை பொலிஸார் பொலிஸ் சிறைக்கூண்டிலில் அடைத்த போது, அவரை விடுவிக்குமாறு கோரி காதலி அழுதுள்ளார்.
சந்தேக நபரான காதலன் ஏற்கனவே திருமணம் செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஆடை தொகையில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட டீ சேர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரபாகரனின் படத்துடன் தமிழீழ வரைப்படமும் அந்த டீ சேர்ட்டில் அச்சிடப்பட்டிருந்ததாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்காக கொள்வனவு செய்த ஆடைகள் அடங்கிய பொதியை திறந்து பார்த்த போது இந்த டீ சேர்ட் அதில் இருந்துள்ளது.
இதனையடுத்து விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆடைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியில் நேற்று முன்தினம் (12.08.2016) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற 39 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற குடும்பஸ்தரை பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும் போதிய வசதிகள் பூவரசங்குளம் வைத்தியசாலையில் இன்மையினால் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் பலியான குமாரசிங்கம் ரமணகுமாரின் சடலத்தினை உறவினர்கள் ஏற்ற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும். உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தினை பெற முடியாது எனத் தெரிவித்து உறவினர்களும் கிராம மக்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் இன்று அவரது கிராமத்தில் இறுதிக் கிரிகைள் இன்று (14.08.2016) நடைபெற்றது. இவரது மரணத்தால் இக் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வவுனியாவில் இன்று(14.08) காலை 10.30 மணிக்கு வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது.
தமிழரசுகட்சியின் வடகிழக்கு பிரதி நிதிகள் அனைவரம் கலந்து கொண்டதுடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் இன்று மாலையில் ஆரயப்பட் விடயங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதாகவும் கலந்த கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), இன்று காலை காலமானார்.
கடந்த ஒரு மாதமாகவே மஞ்சள் காமாலை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நா.முத்துக்குமார் இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறைவனடி சேர்ந்தார்.
தற்போது, அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டின் கீழ் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்கா வைக்கப்பட்டிருக்கும் நா.முத்துக்குமாரின் உடலுக்கு பொதுமக்களும், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 06.00 மணியளவில் நியூ ஆவடி ரோடு வேலங்காடு மைதானத்தில் நா.முத்துக்குமாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் தனது தாயாரை கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த லத்திகா என்ற சிறுமி அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்க்கு தனது ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் என் அப்பாவின் தாயார் ஆண் குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் எங்கள் அம்மாவை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார். என்னையும் மற்றும் என் சகோதரியையும் கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனால் மனமுடைந்த நாங்கள் தனியாக சென்று ஒரு வீட்டில் வசித்து வந்தோம். எங்கள் அப்பா மட்டும் தங்களை அவ்வப்போது பார்த்து விட்டு செல்வார்.
ஆனால் திடீரென்று என் அப்பாவின் தாயார் மற்றும் சிலர் வந்து என் அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்போகிறோம், நீ அவனை விட்டு விலகிசெல் என்று அம்மாவை மிரட்டினர்.
ஆனால் அம்மா அதற்கு ஒத்துழைப்பு தராததால் எங்கள் அம்மாவை எங்கள் கண் முன்னே மண்ணென்ணெயை ஊற்றி எரித்து கொன்று விட்டனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பொலிசார் எங்கள் அம்மா தற்கொலை செய்து விட்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
ஆகவே எங்கள் அம்மாவை கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என தனது ரத்தத்தால் மனம் உருகி எழுதியுள்ளார்.
இது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்க்கு தெரிந்ததையடுத்து, உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தில் கூட்டமாக நின்று உணவருந்தி கொண்டிருந்த காட்டுப்பன்றிகளை நோக்கி நபர் ஒருவர் குறிபார்த்து சுட்டதில், பன்றிகள் வானத்தை நோக்கி பறந்து தரையில் வந்து விழுந்துள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு சட்டரீதியான முறையில் அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தலாம்.
ஆனால் எக்காரணம் கொண்டும் விஷம் கலந்த மருந்துகள், விஷரீதியான ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் முகாம் ஒன்றினை அமைத்துள்ள விலங்குகளை வேட்டையாடும் கும்பல், தங்கள் கண்ணெதிரே மேய்ந்துகொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளை குறிபார்த்து சுடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அதன்படியே, இவர்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைதூரத்தில் காட்டுப்பன்றிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றனர்.
அப்போது இந்த கும்பலில் ஒருவர், துப்பாக்கியினை கொண்டு, அந்த பன்றிகளை நோக்கி குறிபார்த்து இண்டு முறை சுடுகிறார்.
இந்த குண்டுகள், பெருமளவில் வெடித்து சிதறும் வீரியம் கொண்டவை என்பதால், குண்டுகள் அந்த பன்றிகளை நோக்கி பாய்ந்த நொடியில், தரையில் இருந்து பெரும் புழுதி கிளம்பி, காட்டுப்பன்றிகள் வானத்தை நோக்கி பறந்து தரையில் வந்து விழுகின்றன.
இதனைப்பார்த்த வேட்டைக்காரர்கள் சியர்ஸ் சொல்லி சிரிக்கின்றனர். டெக்சாஸ் மாநிலத்தில் 2.6 மில்லியன் அளவு பன்றி காய்ச்சல் வைரஸ் பரவியுள்ளது.
தற்போது இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அங்கு சட்டரீதியான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரதங்கள் மீது தொடர்ந்தும் கல்லெறித் தாக்குதல்கள்நடத்தப்பட்ட நிலையில் அந்த புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்று ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றின் மீது கொழும்பின் புறநகர் ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக புகையிரதகட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து தூரச்செல்லும் புகையிரதங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக புதுடில்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சுமார் 60- 70 வயது மதிக்கத்தக்க மஹியங்கனையை வசிப்பிடமாகக்கொண்ட ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்பவர் யாத்திரிகர்கள் சிலருடன், கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.
மாலை 6.45 அளவில் இவர் 80பேரைக் கொண்ட யாத்திரிகர் குழுவுடன் டி-3 ஒழுங்கையில் நின்றபோதும் பின்னர் காணாமல் போனதாக முறையிடப்பட்டது.
இறுதியாக அவர், 18 இலக்க வாயில்படியில் நின்றமையை சீசீடிவியின் மூலம் அவதானிக்க முடிந்துள்ளது. எனினும் அதன் பின்னர் அவரை காணமுடியவில்லை.
இந்தநிலையில் அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்பதுடன் ஆங்கிலமோ, ஹிந்தியோ பேசத்தெரியாதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்ப்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு, தமிழ்த் தேசிய இன படைப்புலகம் அடைந்திருக்கிற பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்..
எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத்துயரில் சிக்கித்தவிக்கிறேன்.
என் தம்பி முத்துக்குமார் தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.
என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை’ திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது.
வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.
அரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.
என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
என்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்.
போய் வா என் தம்பி!
இம் மொழியுள்ளவரை
உன் கவி இருக்கும்.
தமிழ் உள்ளவரை நீயிருப்பாய்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.
நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்து தங்கத்தை பகிர்ந்து கொண்ட கனடா நீச்சல் வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது…
கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க முடியாது.
ஏதாவது நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை வெளியேறச் சொல்வார்கள். கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
கடந்த 1953 ம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஹோட்டல் ஒன்றில், சினிமா நடிகர் டரோத்தி டேன்ட்ரிட்ஜினின் கால் தண்ணீரில் பட்டதால், அந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
1964 ம் ஆண்டு பிரபல பாடகரும் நடனக் கலைஞருமான சம்மி டேவிஸ் ஜுனியர், புளோரிடாவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்ததால், அவர் குளித்து முடித்ததும் தண்ணீர் வெளியே திறந்து விடப்பட்டது.
அமெரிக்காவில் சம உரிமை கோரி கறுப்பின மக்கள் போராடிய காலகட்டத்தில், செயின்ட் அகஸ்ட்டின் நகரில், கறுப்பினத்தவர் குளித்த நீச்சல் குளங்களில் அசிட் கலக்கப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது.
சிமியோனின் முன்னோர்கள் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அத்தகைய சமூகத்தில் பிறந்து இன்று நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆபிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன்.
அதனால்தான் தாங்க முடியாமல் மனசு வெடித்து அழுதே விட்டார் . வெற்றி குறித்து அவர் கூறுகையில், இந்த பதக்கம் எனக்கானது அல்ல. ஆபிரிக்க – அமெரிக்க இன மக்களுக்கு சொந்தமானது.
எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய எனது முன்னோர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். எனது இளைய தலைமுறையினர் என்னை முன்னுதாரணமாக கொண்டு சாதிக்க வேண்டும் என்றார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4×100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை 1000 தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 473 தங்கப்பதக்கங்களை வென்ற முன்னாள் சோவியத் யூனியன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக்கண்காட்சி மையத்தில் இயந்திரக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில…