போக்கிமேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டது : பெண் பரபரப்புப் புகார்!!

Pokemon

போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ரஷியாவை சேர்ந்த பெண் பொலிசாரிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான ஒருபெண் போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பொலிசில் புகார் அளித்து உள்ளார்.

நான் தூங்கி கொண்டிருந்தபோது பெரிய உருவம் கொண்ட போக்கிமோன் என்மீது படுத்திருந்தது. நான் துள்ளி குதித்து கட்டிலில் இருந்து இறங்கியதும் அது மறைந்து விட்டது. இருப்பினும், எனது படுக்கை அறைக்குள் போக்கிமோன் கதாபாத்திரங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை எனது கைபேசியின் மூலம் என்னால் பார்க்க முடிகிறது என அந்தப் பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

18 வயது நிரம்பினாலும் வாக்குரிமை பெற தாமதமாகும் இலங்கை இளைஞர் யுவதிகள்!!

Election

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் திகதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வயதுக்கு வந்தும்கூட வாக்காளராகப் பதிவு செய்ய முடியாதிருப்பதாக முறையிடப்பட்டிருக்கின்றது.

ஜுன் மாதம் முதலாம் திகதி, 18 வயதை எட்டாத ஒருவர் அடுத்த வருடம் ஜுன் முதலாம் திகதி வரையில் 18 வயதை எட்டி, பல மாதங்கள் கடந்த நிலையில் வாக்காளராகப் பதிவு செய்வதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கின்றது என்று அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

வாக்காளராகப் பதிவு செய்யும் தற்போதைய இந்த நடைமுறை காரணமாக நாடாளவிய ரீதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழப்பதாக கவலை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இளைஞர், யுவதிகளுக்காகச் செயற்பட்டு வருகின்ற அவ்ரியல் எனப்படும் நிறுவனத்தினரே மனித உரிமைகள் ஆணையகத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.

அதேவேளை, ஜுன் மாதம் முதலாம் திகதி, 18 வயதை எட்டியதும் வாக்காளராகப் பதிவு செய்தாலும்கூட, அந்தப் பதிவுகள் உடனடியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் அத்தகைய பதிவின் பின் உடனடியாக வருகின்ற தேர்தல்களில் இளைஞர்கள், யுவதிகள் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பதிவு செயற்பாட்டில் இத்தகைய குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, வாக்காளர் பதிவு நடவடிக்கையில் காணப்படுகின்ற இக்குறைபாட்டை நீக்குவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாகவே இந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்பதை அரசியல் தலைவர்களுக்கு விளக்கிக் கூறியிருப்பதாகவும், அவர்களே இதற்கு உரிய நடவடிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

-பிபிசி-

தொழிற்சாலைகளை மீள இயக்குவதன் முலம் 12000 முன்னாள் போராளிகளுக்கு உதவலாம்!!

Vijayakala

இயங்காமலிருக்கும் நிறுவனங்களை மீள இயக்குவதன் மூலமாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள் என, சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை – அம்பனைப் பகுதியில் அலுமினியத் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் அரசாங்கத்தினாலும், பெற்றோரினாலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் இன்று மனமுடைந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு தெல்லிப்பழையில் இன்று அலுமினியத் தொழிற்சாலையைத் திறந்து வைத்தது போன்று இயக்கமின்றி இருக்கும் சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற நிறுவனங்களை மீள உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான முயற்சிக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

கடந்த கால அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய அனுமதிக்கவில்லை. அவர்கள் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு பெரும் சிரமப்பட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்குச் செல்லக் கூடிய சூழல் அப்போதிருக்கவில்லை.

இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து போர் காரணமாகப் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்ற எமது உறவுகள் மீண்டும் எமது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமெனில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறான காலகட்டங்களை எமது மக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் சந்திக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போதைய நல்லாட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்திருந்தாலும் கூட வெளிநாட்டிலிருந்து தமது சொந்த மண்ணிற்கு வருகை தருவதற்கான சாதகமான சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்திலே முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை தற்போது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கும், இந்தியாவுக்குமான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இன்றைய தினம் இந்த அலுமினியத் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகின்றது.

தங்களுடைய முதலீடுகளை எமது மாவட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எமது மாவட்ட இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏது நிலைகள் உருவாகியுள்ளன.

இவ்வாறான அலுமினியத் தொழிற்சாலைகள் கடந்த காலங்களில் எமது மண்ணைச் சேர்ந்தவர்களால் ஆரம்பித்து நடாத்தப்பட்டிருந்தன. எங்களுடைய முதலீட்டாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட காரணத்தால் இவ்வாறான தொழிற்சாலைகளை அமைக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 அடி அம்மன் சிலையைக் கடத்திய மூவர் கைது!!

Arrest1

பொகவந்தலாவ – லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமல் போன அம்மன் சிலை, நேற்று இரவு 09.00 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் மற்றும் ஒருவரைக் கைதுசெய்யும் நோக்கில் பொகவந்தலாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 03 அடி உயரம் கொண்ட, ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை காணாமல் போனதாக, கோயில் நிர்வாகம் கடந்த 01ம் திகதி ஜூலை மாதம் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ பொலிஸார் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பலாங்கொட பின்னவல – தெதனகல கிழ் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த அம்மன் சிலை மீட்டனர்.

மேலும் அம்மன் சிலையினை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த அம்மன் சிலை கடந்த ஜந்து நாட்கள் ஜேப்பல்டன் காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் பின்னவல – தெதனகல தோட்டப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொட – பின்னவல – தெதனகல கிழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பூசகர் ஒருவருமாவர்.

இவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சதம் அடித்த தினேஸ் சந்திமால் : வலுவான நிலையில் இலங்கை அணி!!

Sri Lanka Australia Cricket

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் சதமடித்து அசத்தியுள்ளார். இது இவரது 7வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்ட முடிவில் 64 ஓட்டங்களுடன் இன்றய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தினேஸ் சந்திமால் தனது 7வது சதத்தை பெற்றுகொண்டார்.

சற்று முன்னர் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளதுடன் இலங்கை அணி 301 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்துள்ளது.

களத்தில் தினேஷ் சந்திமால் 105 ஓட்டங்களுடனும் ரங்கன ஹேரத் 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா உலகம்!!

Muthukumar

பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய நா.முத்துக்குமார் இன்று சென்னையில் திடீர் மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

சீமான் இயக்கத்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர், பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 103 பாடல்கள் எழுதியவர் என்ற பெருமை இவரையேச் சாரும். மேலும், தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமார் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 41.

நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நா.முத்துக்குமார் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல்கள் என்றும் தமிழ் சினிமா இரசிகர்களின் மனதில் என்றும் நிலையாய் நிற்கும் என்பது மட்டும் உறுதி.

அமெரிக்க நீச்சல் சம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!!

Olympic Games 2012 Swimming...epa03328223 Michael Phelps of the United States waves after he won a semi-final in the Men's 200m Butterfly at the Aquatics Center during the London 2012 Olympic Games Swimming competition, London, Britain, 30 July 2012. EPA/HANNIBAL

அமெரிக்க நீச்சல் சாம்பியனான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் சிங்கப்பூரின் 21 வயதுடைய வீரரான ஜோசப் ஸ்கூலின் வெற்றி பெற்றார்.

மைக்கல் பெல்ப்ஸ் 2008 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலினை சந்தித்துள்ளார்.

அதன் பின் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ஸ்கூலின், ஒலிம்பிக் போட்டியின் போது பெல்ப்ஸை வெற்றி கொண்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் 22 தங்கம் அடங்கலாக 27 பதக்கங்களை பெல்ப்ஸ் சுவீகரித்துள்ளார்.

கன்னிச் சதமடித்த தனஞ்சய டி சில்வா : தடுமாற்றத்திலிருந்து மீண்ட இலங்கை அணி!!

Sri Lanka cricketer Dhananjaya de Silva (R) is congratulated by teammate Dinesh Chandimal after scoring a century (100 runs) during the first day of the third and final Test cricket match between Sri Lanka and Australia at The Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 13, 2016. / AFP PHOTO / ISHARA S.KODIKARA

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் 26 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்.

தொடர்ந்து களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் தனஞ்ச டி சில்வா இன்றய ஆட்ட நேர முடிவில் 116 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இன்றய முதல்நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Sri Lanka's Dhananjaya de Silva celebrates scoring a hundred during the first day of their third test cricket match against Australia in Colombo, Sri Lanka, Saturday, Aug. 13, 2016. (AP Photo/Eranga Jayawardena)

காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்!!

Body

மகியங்கனை, தியபான குளத்தில் இருந்து நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திஸ்ஸபுர பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த நபரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், மகியங்களை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வேகமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் : உலக சாதனை படைத்த இலங்கையர்!!

Guness

இலங்கையை சேர்ந்த சினிமா கலைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். வேகமாக திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளமையை அடுத்து அவரின் பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் தந்தன ஹேவாபன்ன என்பவர் தயாரித்த “மங்கல கமன“ என்ற திரைப்படத்தின் மூலமே அவர் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு மணித்தியாலமும் 25 நிமிடங்கள் நீளமான இந்த திரைப்படத்தை தயாரிக்க, அவர் 71 மணித்தியாளங்களும் 19 நிமிடங்களையும் செலவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதியில் இருந்து 25 திகதி வரையிலான காலப்பகுதியினுள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் கின்னஸ் குழுவினால் www.guinnessworldrecords.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணமான ஜோடிகள் தமது முதலிரவில் முகங்கொடுக்கும் மன ரீதியான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இயக்குநரான நந்தன ஹேவாபன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உலகின் வேகமான திரைப்பட தயாரிப்புக்கான கின்னஸ் சாதனையை நமீபியா திரைப்பட இயக்குனர் படைத்துள்ளார்.

அந்த நமீபியா திரைப்பட இயக்குனர் தனது திரைப்படத்தை 10 நாட்கள் மற்றும் சில மணித்தியாளங்களில் நிறைவு செய்திருந்தார்.

இதயமற்ற தொலைக்காட்சி நிருபர்!!

R1

விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador – வில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். எதிரே வந்த வாகனம் ஒன்று இவரது கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளான இவர் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடக்கிறார்.

அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர், இவரின் உயிரை காப்பாற்றுவதை விட்டு, அந்நபரிடம் பேட்டி கண்டுள்ளார், இங்கு என்ன நடந்தது? எதிரே வாகனம் வந்ததை பார்த்தீர்களா? என கேட்கிறார். அதற்கு அந்நபர் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கு அடுத்ததாக, அந்த நிருபர் அதிர்ச்சியளிக்கும் கேள்வியை கேட்கிறார், நீங்கள் மருத்துவமனை செல்ல விரும்புகிறீர்களா? இவர் இந்த கேள்வியை கேட்ட சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளா நபர் இறந்துவிடுகிறார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை வீடியோ எடுத்த பொலிசார்!!

Swathi

சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரை பொலிசார் புழல் சிறையில் வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

கடந்த யூலை 2 ஆம் திகதி சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை அடையாளம் காண கடந்த மாதம் பொலிசார் அணி வகுப்பு நடத்தினர்.

இந்த வழக்கில் சுவாதி கொலை செய்யப்பட்ட போது பதிவான வீடியோவில் உள்ள உருவம், ராம்குமார் உருவத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை அறிய ராம்குமாரை வீடியோ எடுக்க பொலிசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இதற்கு ராம்குமார் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், ராம்குமாரை புழல் சிறையில் வீடியோ எடுக்க அனுமதி வழங்கினர். அதன் பின்னர் பொலிசார் ராம்குமாரை புழல் சிறையில் சுமார் அரை கிலோ மீற்றர் நடக்க வைத்து வீடியோ எடுத்து பதிவு செய்தனர்.

தற்போது எடுக்கப்பட்ட வீடியோவும், சுவாதி கொலைசெய்யப்பட்ட போது பதிவான வீடியோவும் ஒத்துப்போகிறதா என பொலிசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன் : ஒலிம்பிக்கில் அவரையே தோற்கடித்த அதிசயம்!!

O5

ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் கொடுத்த அதிர்ச்சி யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது.

ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளேவ் நீச்சல் இறுதிப்போட்டியில் 22 தங்கங்களை வென்ற பெல்ப்ஸை வீழ்த்தி ஸ்கூலிங் சிங்கப்பூருக்கான முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ், செட் வி குளோஸ், லெஷ்லோ ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துக்கொண்டனர்.

இதேவேளை மைக்கல் பெல்ப்ஸ் உடன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

O1 O3

நுளம்புக் கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்!!

health_news_for_online_9_8_16

இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த விரட்டிகளைத் தான் நிவாரணத்திற்காக பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் நுளம்பை வரவிடாமல் தடுப்பதற்கும், அதையும் கடந்து, வீட்டிற்குள் நுழைந்து, படுக்கையறைக்குள்ளும் வந்துவிட்டால் அதன் கடியிலிருந்து தப்பிப்பதற்கும் இரசாயனம் கலக்காத இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்படும் விரட்டிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே.. இதைத்தான் தற்போது விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் தற்போது கிடைக்கும் நுளம்பு விரட்டுவதற்கான மருந்துகள் எல்லாம் பக்கவிளைவுகள் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

நுளம்புவை வீட்டிற்குள் வரும்போது, அதன் பாதைகளிலோ அல்லது அவை தங்குமிடங்களிலோ சர்க்கரையையும் ஈஸ்ட்டையும் கலந்த கலவையை வைத்துவிட்டால் போதும். அவை வராது. வந்தாலும் கடிக்காது. அதே போல் எலுமிச்சையும் யூகலிப்டஸ் தைலமும் கலந்த கலவையையும் பயன்படுத்தலாம். மலேரியாவை பரப்பும் நுளம்புகளை 30 சதவீதம் இத்தைலம் உறுதியாக தடுக்கிறது என்று ஆய்வாளர்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் என்பவற்றை வாங்கி வீட்டில் தண்ணீரிலோ அல்லது ஏதேனும் முக்கியமான இடத்திலோ வைத்துவிட்டால் நுளம்பு வீட்டிற்குள் எட்டிப்பார்க்காது. அதேபோல் ஒரு சிலருக்கு தங்களின் உடலில் கிராம்பு எண்ணெயைத் தடவிக் கொண்டால் அவர்களை நுளம்பு ஒருபோதும் கடிக்காது.

ஒரு சிலர் பயணங்களின் போதோ அல்லது அவர்களது சொந்த மண்ணிற்கு பயணம் மேற்கொண்டு அங்கு தங்கியிருக்கும் போதோ நுளம்புகளின் தொல்லை தாங்க இயலவில்லை என்றால், மேற்கூறியவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்து கலந்த கலவையோ உடன் வைத்துக் கொண்டால் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்கலாம். நோயிலிருந்தும் தற்காத்துக கொள்ளலாம் இயற்கையான முறையில். இந்த கலவை எப்படி தயாரிக்கவேண்டும் என்பதை அருகிலுள்ள மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து பயன்பெறவும்.

நுளம்பு கடித்து தோல் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் தயவு செய்து மருத்துவர்களை சந்திக்கவும். அவர்கள் உங்கள் தோலை பரிசோதித்து தற்போது சந்தையிலுள்ள அதிக பக்கவிளைவுகளற்ற மூன்று விதமான நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள். அவற்றை பயன்படுத்தி இதிலிருந்து குணமடையலாம்.

மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!!

Madu

மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

நாளை மறுதினம் பிற்பகல் 3.30 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விசேட ரயில், இரவு 10.18 இற்கு நீர்கொழும்பை வந்தடையவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 10.45 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள மற்றுமொரு விசேட ரயில், மாலை 6.51 இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக நாளாந்தம் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மடு யாத்திரையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகளை மடு ரயில் நிலையத்தில் ஏற்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் மடுமாதா திருத்தலத்தின் பெருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ள பெருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் வருகைத் தந்தவண்ணம் உள்ளனர்.

வவுனியா HDFC வங்கியினால் தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு!!

 
HDFC வங்கியினால் வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை (14.08.2016) ஞாயிற்றுக்கிழமை 2 மணிமுதல் 6 மணிவரை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக் கருத்தரங்கில் ஆசிரியர் G.ஐங்கரன் மாணவர்களுக்கான பயிற்சியை வழங்கவுள்ளதுடன், 3 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

HDFC Sch copy