பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்பது கழிவறை நீரை குடிப்பதற்கு சமம்!!

young teenager drinking water after exercise.

குடிநீர் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கக்கூடியதுடன் உடல் எடையை குறைக்கக் கூடியது.

எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை ஓரிடத்தில் இருந்து கொண்டு சென்று குடிப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களையும் நாம் பயன்படுத்துகிறோம்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய சமீபத்திய ஆய்வுகளில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் கொண்டு செல்வது மிகவும் பாதுகாப்பற்றது, அசுத்தமானது என்று தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துபவர்கள் அதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் தண்ணீர் குடிக்கும் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் தண்ணீர் போத்தல்களை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை கழுவுவதும், அதனால் போத்தல்களில் ஏராளமான பக்டீரியாக்கள் உருவாகி குடிகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய பிளாஸ்டிக் போத்தல்களில் கழிவறை தண்ணீருக்கு இணையான பக்டீரியாக்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

கூழானாலும் குளித்துக் குடி என்று அவ்வை சொன்னதை நினைவுகூறும் வேளையில், தண்ணீர் போத்தல்களை சுத்தப்படுத்துவதையும் கடமையாக் கொள்ள வேண்சியது அவசியமாகியுள்ளது.

நுளம்புக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயதுச் சிறுமி!!

Russia_Mosquito_Festival

ரஷ்யாவில் நடைபெற்ற நுளம்புக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 நுளம்புக்கடிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவில் வருடா வருடம் நுளம்புக்கடித் திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான நுளம்புக்கடித் திருவிழா கடந்த 14 ஆம் திகதி பெரஸ்னிகி என்ற நகரில் நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள காட்டு பகுதிக்குள் போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடம்பில் ஆடை எதும் இல்லாமல் அங்கு சென்று தங்கி வரவேண்டும்.

அது போல பலதரப்பட்ட வயதினை சேர்ந்த பொதுமக்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பலரும் நுளம்புக்கடி தாங்காமல் வெகு விரைவாக காட்டிலிருந்து வேகமாக வெளியே வந்து விட்டனர்.

இதில் இல்யுகினா என்ற 9 வயது சிறுமி அதிக நுளம்புக்கடி வாங்கி இறுதியாக வெளியே வந்தார்.

இவர் உடம்பில் 43 நுளம்புக்கடிகள் உள்ளதாகவும், இச்சிறுமியை தான் அதிக அளவில் நுளம்புகள் கடித்துள்ளதாக கூறி நடுவர்கள் அச்சிறுமிக்கு முதல் பரிசு கொடுத்து பாராட்டினர்.

மேலும் இச்சிறுமி தான் நுளம்புகளுக்கு பிடித்த மிகவும் டெஸ்டியான பெண் என்ற செல்ல பட்டத்தையும் அவருக்கு கொடுத்தனர்.

ரஷ்யாவில் நுளம்பால் ஜிகாவைரஸ் பரவும் நிலையில், அந்நாட்டில் நுளம்புக்கடித் திருவிழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி முனையில் பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் : இளைஞர்களின் வெறிச்செயல்!!

Abuse

பாடசாலையில் சுதந்திரதினத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மாணவியை பாலியல் பலாத்காரத்திரத்திற்கு உட்படுத்திய இளைஞர்களின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானவின் கைதல் மாவட்டம் கையராக் கிராமத்தில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் சுதந்திரதின விழா நடைபெற்றது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சுதந்திர தின விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பினார்.

அவர் வீடு திரும்பும் வழியில் மோகன் மற்றும் சரப் என்ற இளைஞர்கள் மாணவியை கத்தி முனையில் வழிமறித்து கடத்தி சென்று டிக் கிராமத்தில் உள்ள மோகன் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஒருவர் வீட்டின் வெளியே நிற்பதும், மற்றோருவர் வீட்டின் உள்ளே சென்று மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனிடையே மாணவி தொடர்ந்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் மோகன் மற்றும் சரப் இருவரையும் கைது செய்து, குழந்தை பாதுகாப்பு சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் ஐந்துபேர் கொண்ட கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்!!

Fire

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் அவரது கணவரால் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சுபலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் மூலமே அவரின் கணவர் ஹரிதாஸ் குற்றவாளி என தெரியவந்துள்ளது.

ஈத்தாமொழி பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ்-சுபலெட்சுமி தம்பதிக்கு குழந்தை இல்லை. ஹரிதாஸ், சுபலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சுபலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, சம்பவத்தின் அன்று இரவு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன்.

அதிகாலை மூன்று மணியளவில் கழிவறை சென்றேன். அப்போது வெளிப்புறமாக கழிவறையை பூட்டிய எனது கணவர், என் மீது மண்ணெண்னை ஊற்றி தீ வைத்தார்.

தீயின் வெப்பம் தாங்க முடியாமல் நான் வலியால் அலறினேன்.எனது சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் யாரேனும் வந்துவிடுவார்கள் என பயந்து, வீட்டில் தீவிபத்து நடந்தது போல் காட்டி, என் கணவர் என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்.” என தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஹரிதாசை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் வெள்ளத்தால் அடித்துச் செல்­லப்­பட்டு பங்­க­ளா­தே­ஷுக்குள் சென்ற யானை!!

E2

நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் தூரம் வெள்­ளத்தில் அடித்­து­வ­ரப்­பட்ட யானை­யொன்று பங்­க­ளா­தேஷில் மீட்­கப்­பட்­டுள்­ளது.

முழு­மை­யாக வளர்ந்த மேற்­படி யானை இந்­தி­யாவின் அஸ்ஸாம் மாநி­லத்­தி­லி­ருந்து பங்­க­ளா­தே­ஷுக்குள் சென்­றி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பங்­க­ளா­தேஷின் ஜமால்பூர் மாவட்­டத்­தி­லுள்ள கிரா­ம­மொன்றின் குள­மொன்றில் மேற்­படி யானை தவிப்­பதை கிரா­ம­வா­சிகள் கண்­டனர். இந்த யானை நீரில் மூழ்கி இறக்கும் அபா­ய­மி­ருந்த நிலையில் இது தொடர்­பாக வன­வி­லங்­குத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து, மேற்­படி யானைக்கு நேற்­று­முன்­தினம் மயக்க மருந்து ஏற்­றப்­பட்டு, வன­விலங்குத் து­றை­யி­னரும் கிரா­ம­வா­சி­களும் இணைந்து யானையை மேற்­படி குளத்­தி­லி­ருந்து வெளியே எடுத்தனர்.

இந்த யானை இந்­தி­யாவில் தனது யானைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெள்­ளத்தால் பிரிக்­கப்­பட்டு சுமார் 1000 கிலோ­மீற்றர் தூரம் இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த யானையை மீண்டும் இந்­தி­யா­வுக்கு கொண்­டு­வ­ரு­வது குறித்து இந்­திய அதி­கா­ரிகள் முதலில் ஆராய்ந்­தனர். எனினும், இந்த யானையை அதன் யானைக்­கூட்டம் மீண்டும் ஏற்­காமல் விடலாம் என்­பதால் இத்­திட்­டத்தை இந்­திய அதி­கா­ரிகள் கைவிட்­டனர்.

அதை­ய­டுத்து, பங்களாதேஷின் டாக்காவுக்கு அருகிலுள்ள வனவிலங்குப் பூங்காவொன்றுக்கு இந்த யானையை வாகனம் மூலம் கொண்டு செல் வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

E1 E3

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் : பாடசாலைகள் மூடப்படும் விபரம்!!

Exam

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21 பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம், நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகா வித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை, கண்டி சீதாதேவி பெண்கள் பாடசாலை ஆகியனவே முழுமையாக மூடப்படவுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் தவனைக்காக குறித்த பாடசாலைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பகுதியளவில் மூடப்படவுள்ள 21 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இம் மாதம் 31 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் நிமித்தம் 39 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் 35 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதோடு, இவை மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி திறக்கப்படும்.

பகுதியளவில் மூடப்படும் ஏனைய நான்கு பாடசாலைகளும், இம் மாதம் 31 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்ஷான் ஓய்வு!!

Tillakaratne-Dilshan-3

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுவரையில் தமது ஓய்வு குறித்து டில்சான் உத்தியோகப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.

கையில் 6 தையல்களைப் பொருட்படுத்தாது சதமடித்த கௌசல் சில்வா : இலங்கை 288 ஓட்டங்கள் முன்னிலை!!

 

Sri Lanka's Kaushal Silva raises his bat and helmet in celebration after scoring a century (100 runs) during the fourth day of the third and final Test cricket match between Sri Lanka and Australia at The Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 16, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

இலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் 24 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 288 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் கௌசல் சில்வா 115 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் சந்திமல் 43 ஓட்டங்களையும், அணித்தலைவர் மெத்தியுஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆஸி அணி சார்பில் லியோன் 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் இன்றய 5வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையவுள்ளது. இரு அணிகளும் வெற்றிபெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையர்களில் 80 சதவீதமானவர்களுக்கு நேரமில்லை!!

SL

இலங்கையர்களில் 80 சதவீதமானோர் ‘நேரமில்லை” என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலின் போது குறித்த அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகர உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையர்களாகிய நாம் நாளாந்தம் தமது இலக்குகளை வெற்றிக்கொள்ளாமைக்கு சராசரியாக நான்கு வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றோம்.

இதில் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தின் ஆய்வின்படி 80 சதவீதமானோர் ‘நேரம் இல்லை” என்ற காரணத்தையும், 45 சதவீதமானோர்’தோற்றுவிடுவோம் என்ற பயம்” என்ற காரணத்தையும், 38 சதவீதமானவர்கள் ‘முயற்சி செய்வதில் பயனில்லை” என்ற காரணத்தினை முன்வைப்பதோடு, 28 சதவீதமானவர்கள் ‘எவ்வாறு அதனை செய்வது என எனக்கு தெரியாது” எனவும் பதிலளித்துள்ளனர்.

குறித்த ஆய்வின் மூலம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், இவ்வாறான போலியான காரணங்களைக் கொண்டு நாம் நமது இலக்குகளை தவறவிடுகின்றோம். நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் தங்களது இலக்குகளை வெற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே இலங்கையர்கள் எனும் அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு செயற்படுவதால் மாத்திரமே எமது இலக்குகளை அடைய முடியும் என குறித்த ஆய்வின் மூலம் தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த நற்குண முன்னேற்ற அமைப்பின் கலந்துரையாடலில் பங்குகொண்ட சிறப்பு விருந்தினரான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய ஜயந்தி குரு உதும்பலா தெரிவிக்கையில், இலக்குகளை நோக்கி பயணிக்கும் எமக்கு வெறும் சாக்குபோக்குகள் தடையாக அமைந்தவிடக்கூடாது.

நாம் நினைக்கின்ற இலக்குகளை அடைவதற்கான திறனை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு திறனை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் சாக்கு போக்குகளை சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. இலக்குகளை அடைய நம்முன் காணப்படுகின்ற தடைகளை தகர்த்துவிட வேண்டும்.

இயலாமை என்ற ஒன்றை எம்மிடத்தில் இருந்து நீக்கி, இலக்குகளுக்கான பாதையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றிபெற வேண்டும். அதை விடுத்து சாக்குபோக்குகள் சொல்லி, நமது இலக்குகளை நாமே தவறவிடுவதனை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி இரத்தானமை தொடர்பில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!!

ARR

இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் BBCக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெளிவுபடுத்தினார்.

அரசியல் காரணங்களுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதாலேயே தாம் இசைக்கச்சேரியில் கலந்துகொள்ளவில்லையென அவர் BBCக்கு தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் கண்டிப்பாக இலங்கை வரும் வாய்ப்பு உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார்.

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின்னர் ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகின்றார்.

சூரிய சக்தியை மணலில் சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!

Technology

சூரிய சக்தியை மணலில் சேமித்துவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு இராச்சிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடம் பாலைவனமாக இருப்பதால், அங்கு சூரிய சக்தியை பிரதான எரிசக்தியாகப் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இதுகுறித்த ஆய்களில் ஈடுபட்டுள்ள மஸ்தார் கல்விநிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய சக்தியை மணலில் சேமிக்கும் சேண்ட்ஸ்டாக் எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்மூலம், சூரிய சக்தியினை மணலில் சேமித்து இரவிலும் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வீட்டுத் தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுப்பு!!

body

தங்கல்ல ரன்ன கோடயிம்புரவ்ததை பகுதியிலுள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

நேற்று காலை குறித்த சிசு பிறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையை பிரசுவித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்களின் உடல்நிலை பாதிப்பு!!

Kidney

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர்களது வழக்கறிஞர் நேற்று கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு, நேற்று அழைக்கபட்ட போது கருத்தக்களை தெரிவித்த சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அஜந்தா லக்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு இந்திய பிரஜைகளின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சிறைச்சாலைக்குள் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய வழக்கறிஞர், அவர்களை உடனடியாக மிரிஹானையில் அமைந்துள்ள முகாமிற்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோள் அடுத்த வழக்கு தினத்தில் ஆராயப்படுமென்று கூறிய நீதிபதி, சந்தேக நபர்களை வரும் 30ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் இந்த சந்தேக நபர்கள் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-பிபிசி-

சுவிஸில் சிவன் சிலைக்கு முன் நரபலி கொடுக்கப்பட்டதா : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Sivan

சுவிட்சர்லாந்து நாட்டில் இந்துக் கடவுளான சிவன் சிலைக்கு முன்னால் நரபலி கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் தான் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சில தினங்களுக்கு முன்னால் யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிவன் சிலைக்கு முன்னால் சிலர் கருப்பு உடை அணிந்துக்கொண்டு சுற்றி வருகின்றனர். இவர்களில் மத்தியில் ஒரு பெண்ணும் வருகிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அப்பெண் கீழே படுக்கிறார்.

அப்போது, நபர்களில் ஒருவர் கத்தியை ஓங்கி கீழே படுத்திருக்கும் பெண்ணை வெட்டுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இக்காட்சியை தூரத்தில் இருந்து ஒருவர் கைப்பேசியில் படம் பிடித்தாக தெரிகிறது.

இந்த வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், CERN துறை அதிகாரிகள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் பேட்டியளித்தபோது, இந்த அலுவலகத்திற்கு மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

மேலும், மாணவர்கள் நகைச்சுவைக்காக இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுகின்றார்கள். மாணவர்களின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சிவன் சிலைக்கு முன்னால் யாரும் நரபலி கொடுக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என CERN அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற ஆறு இலங்கையர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!!

Asylum seekers from Sri Lanka arrested for attempting to sail to Australia illegally by boat

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரோலியா சென்ற 6 பேர், இன்று இலங்கைக்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி, கடல் வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.

தொடர்ந்து 12 நாட்கள் படகில் பயணித்த இவர்கள், அவுஸ்ரோலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துள்ளனர்.

இதையடுத்து, அவுஸ்திரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவர்கள் அங்கிருந்து உடனடியாக விஷேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் இன்று காலை 8.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து இவர்களை கைது செய்த விமான நிலையப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள்!!

Sexual hareshment

பாடசாலைகளில் சேவைபுரியும் கல்விசாரா ஊழியர்களில் நூறில் பத்து வீதமானோர்பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களாலோ பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 15,000 கல்விசாரா ஊழியர்கள் கடமை புரிவதாகவும் கல்விசாராஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்கள் குறித்த சம்பவங்கள் தொடர்பில் முறையிட்டால் அவர்களதுசம்பளங்கள் குறைக்கப்படுவதோடு, அவர்கள் தூர இடங்களுக்கு மாற்றலாகிஅனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மருதானையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் வடமேல் மாகாணம் வெளிஓய, மொனராகல, பதுளை ஆகிய பிரதேசங்களில்அதிகம் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.