இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
மெத்யூ அபேசிங்க 50.53 செக்கன்களில் இந்த தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரேசில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜோனஸ் ஜுனிஸ் ஒலிம்பிக் ஆரம்ப தினத்தின் போது நமீபியா நாட்டின் கொடியை ஏந்தி அணிக்கு தலமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் நபரொருவர் புலியொன்றை வளர்ப்பு மிருகமாக வீட்டில் வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக பெரிய கூண்டொன்றையும் அமைத்து யாருக்கும் ஆபத்து நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது நண்பரொருவர் அனுமதியுடன் புலியின் கூண்டுக்குள் சென்று புலியுடன் விளையாடும் காட்சியினை புலியின் உரிமையாளரான நண்பர் கையடக்கதொலைபேசியில் வீடியோ செய்து கொண்டிருந்துள்ளார்.
இதனிடையே அந்த நபரின் விளையாட்டில் கோபமடைந்த புலி திடீரென்று அவரை தாக்கியுள்ளது. முதலில் அதை கருத்தில் கொள்ளாத அந்த நபர் புலியிடம் போக்கு காடுவதை போல கூண்டுக்குள் ஓடியுள்ளார். இதனால் புலி கோபமடைந்து.அந்த நபரின் காலை கவ்விக்கொண்டு அது மறைவிடத்திற்கு அவரை இழுத்து சென்றது.
இதில் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உயிருக்கு பயந்து அலறியுள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத அதன் உரிமையாளர் சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.இதனிடையே புலிக்கு பயிற்சி அளிக்கும் நபர் சுதாரித்துக்கொண்டு தடி ஒன்றால் புலியிடம் இருந்து அந்த நபரை விடுவிக்க முயற்சி எடுத்துள்ளார். பின்னர் ஒருவழியாக புலியிடம் இருந்து அந்த நபர் விடுபட்டு தப்பி கூண்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முத்தையா முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சி கொடுப்பதால் நாட்டிற்கு துரோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கொழும்பில் நடக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
செயலாளர் மொஹான் டி சில்வா கூறுகையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அழைப்பிதல் கடிதம் தொடர்பாக முரளியின் பதிலை எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த குறித்த இளம்பெண், தனது பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
ஒருநாள் இவ்யுவதியின் கைப்பேசிக்கு மிஸ்ட் கோல் ஒன்று வந்துள்ளதுடன், அது யார் என தெரிந்து கொள்வதற்காக அவ்யுவதி அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதன் போது மறுமுனையில் பேசியவர் தான் தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகக் கூறி அந்த அழைப்புத் துண்டித்துள்ளார்.
ஆயினும், மீண்டும் அதே இலக்கத்திலிருந்து குறித்த யுவதிக்கு அழைப்பை மேற்கொண்ட குறித்த நபர், தான் ஏற்கனவே தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்து, அவ்யுவதி பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அந்நபர் அடிக்கடி இவ்யுவதிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரோடு உரையாடி வந்துள்ளார். இதனால் அந்நபர் மீது இவ்யுவதிக்கு காதல் ஏற்பட்டு குறுகிய காலத்தினுள் அவர்கள் காதலர்களாக மாறியுள்ளனர்.
குறித்த யுவதி தனது விபரங்களை அந்நபருக்குத் தெரிவித்த போதிலும் அந்நபரது விபரங்களைக் கேட்டறிய தவறியுள்ளார்.
இந்நிலையில் இந்த தொலைபேசி காதலன் தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என அவளிடம் தெரிவித்த போது அவளும் அதற்கு சம்மதித்து ஒரு நாள் தனது காதலனைச் சந்திப்பதற்காக இவ்யுவதி அவளது வீட்டுக்கும் தெரியாமல் ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவித்துவிட்டு கொழும்புக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் சந்தித்துள்ளதோடு அன்றிரவு அவர்கள் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தேவையினை நிறைவேற்றிக் கொண்ட அவ்விளைஞன் மறுநாள் காலையில் மிகத் தந்திரமான முறையில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளான யுவதி அங்கிருந்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தொலைபேசி காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் அம்மா மற்றும் மகன் 10 மீற்றர் ஏர்பிஸ்டல் பிரிவில் மோதும் போட்டி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ளது.
ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த நினோசலுக்வட்ஸே(41), அவரது மகன் மச்சாவாரினி(19) இருவரும் 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவில் மோத உள்ளனர். அம்மாவுடன் ஒரே பிரிவில் மோத உள்ளது குறித்து மச்சாவாரினி கூறியதாவது..
ஒரு போட்டியில் பதக்கம் வெல்வதை விட அதில் சாதனை படைப்பதே எனது குறிக்கோள். மேலும் அம்மாவுக்கு 19 வயதில் தான் பதக்கம் கிடைத்தது, எனக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது. இன்னும் பதக்கம் வெல்வதற்கு ஒரு வருடம் இருக்கிறது என்று சிரித்துகொண்டே கூறியுள்ளார்.
நினோசலுக்வட்ஸே கூறியதாவது, தனது மகனுடன் விளையாட இருப்பது சந்தோஷமாக உள்ளதாகவும், அதே சமயம் போட்டியின் போது அவனுக்கு போட்டியாளராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருக்க வேண்டும்.
மேலும் அவனுக்கு தற்போது, இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது. அவனை விட ஒரு போட்டியாளர் மற்றும் பயிற்சியாளர் என்ற முறையில் மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நினோசலுக்வட்ஸே 6 முறை உலக சம்பியன், 4 முறை ஐரோப்பிய சம்பியன் மற்றும் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நினோசலுக்வட்ஸே 50 மீற்றர், 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவிகளிலும், மச்சாவாரினி 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவிகளில் விளையாட உள்ளனர்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் இன்று காலமானார். 75 வயதான அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.
ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார்.
பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றி வந்தவர் வனேசா மார்கோட்டி(27).
மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்ற வனேசா, அங்குள்ள காட்டுப்பகுதியில் ‘ஜாகிங்’ செய்யச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை.
மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் வனேசாவின் தாயார், பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பொலிசார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவளது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் கிடந்துள்ளது.
விசாரணையில் அது வனேசாவின் உடல் தான் என தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மார்கோட்டின் மரணம் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வனேசா மார்கோட்டின் இறப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அலுவகத்தில் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து, அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்ட வனேசா மார்கோட்டின் இறப்பு எங்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிரதான சந்தேகநபரே நேற்று (08.08.2016) மாலை பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி தம்மை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாக பொலிஸ் நிலையத்தில் சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்தே தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் விடுதியின் முகாமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் விடுதி, நீதிமன்ற உத்தரவால் சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த விடுதியின் உரிமையாளரையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும்.
இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது.
எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.
அவுஸ்திரேலியா முதல் இடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் கொழும்பில் நடைபெற இருக்கும் 3வது டெஸ்டில் இலங்கை அணியை கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும். அதே சமயத்தில் இங்கிலாந்து ஓவலில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தானை வென்றால், அல்லது இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரை 3-0 என வென்றால், அவுஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான். அதே சமயத்தில் ஓவல் டெஸ்ட் டிரா ஆகி, இந்தியா 3-0 என தொடரை வெல்லாவிடில் அவுஸ்திரேலியா 1வது இடத்தில் நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது.
இந்தியா முதல் இடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக உள்ள இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். மற்ற எதையும் பார்க்க தேவையில்லை.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றி, இந்தியா மேற்கிந்திய தீவுகள் தொடரை 3-0 என வெல்லாவிடில் இங்கிலாந்து தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும். கொழும்பு டெஸ்டில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து, இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால், ஓவல் டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் இங்கிலாந்து முதலிடத்தை எட்டும்.
பாகிஸ்தான் ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்று, இந்தியா 3-0 என மேற்கிந்திய தீவுகள் தொடரை கைப்பற்றாமல், அவுஸ்திரேலியா கொழும்பு டெஸ்டில் தோற்றால் முதல் இடம் பிடிக்கும்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 79 நேபாளப் பிரஜைகள் கடந்த சில வாரங்களில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் 19 பேர் இலங்கையில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்களாதேஷில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக, நேபாள வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களும் பெண்கள் என, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் 22 பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நேபாள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நேபாளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்தல்காரர்கள் நேபாளத்தில் உள்ள பெண்களை வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபோர் தீவுகள் ஊடாக கடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த பெண்களை இலங்கை பொலிஸாரின் உதவியுடன் மீட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேபாள பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் மலேசியா போன்ற நாடுகளுக்கு நடனக்காரர்கள், பார் ஊழியர்கள் மற்றும் பணிப் பெண்கள் போன்ற வேலைகளுக்கு இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவதாக அந்த நாட்டுப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன் இந்த விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நேபாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பீடியின் விலை இன்று முதல் ஆறு ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை சந்தைகளில் ஒரு பீடி இரண்டு ரூபாய் 50 சதம் தொடக்கம் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 20 பீடிகள் அடங்கிய ஒரு கட்டு 120 ரூபாவரை விற்பனை செய்யப்படவுள்ளது.
பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் இலைக்கான வரியை அரசாங்கம் அதிகரித்தமையே இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமாகும்.
வெலிமடை நுகதலாவை பிரதேசத்தில் கராஜ் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலமொன்றினை இன்று (09.08.2016) வெலிமடை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பொரகஸ் பகுதியை சேர்ந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார்.
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1963ல் எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பூவும் பொட்டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆரின் ரிக்ஷாகாரன் படத்தில், பம்பை உடுக்கை கட்டி… என்ற பாடலுக்கும், அடிமைப்பெண் படத்தில் காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ… என்ற பாடலுக்கும் நடனமாடி உள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆருடன் நீரும் நெருப்பும், தேடிவந்த மாப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், விக்ரம், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.
இந்த நிலையில் ஜோதிலட்சுமிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டார். இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா மூண்று முறிப்பு கிராம சேவையாளர் பிரிவில் கடையாற்றி ஒய்வுபெறும் கிராமசேவையாளர் ச.வேலுப்பிள்ளை அவர்களுக்கான பிரியாவிடையும் புதிதாக கடமைக்கு வருகைதந்திருக்கும் கிராமசேவையாளரான திரு.ஆதவன் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூன்றுமுறிப்பில் நேற்று முன்தினம் (07.08.2016) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல் கிராம சேவையாளர்கள், ஓய்வுநிலை கிராமசேவையாளர்கள், பகுதி சமூர்தி உத்தியோகத்தர், ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள், கிராமமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா பொலிஸாருடன், தாண்டிக்குளம் சிவில் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து மக்களுக்காக நேற்று முன்தினம் (07.08.2016) தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சமூகத்திற்கான நடமாடும் சேவை நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் அவர்கள் கலந்து கொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நடமாடும் சேவையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.