பிரபல நடிகை ராதிகா தமிழ் சினிமா 80’களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இன்று எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து நலம் விசாரித்த ராதிகா இவரின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இன்று இறப்பு செய்தியை கேட்டு ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.
தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது .
சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது .
“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம் .
ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது ?
சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம் .
“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல் .
இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட்டது.
தாலி பற்றி..
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள். தாலி பொருளாகு பெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.
தமிழனின் பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு.
ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது.
பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் தன்னிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நேற்று குறித்த சிறைச்சாலைக்கு கைதிகளின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக சென்றபோதே இந்தக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது போன்று தம்மையும் விடுதலை செய்யுமாறும், அண்மையில் சில தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவித்தது போன்று தம்மையும் விடுதலை செய்ய உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் நீதிமன்றத்திலுள்ள கைதிகளை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதால் தமக்கு மொழி தொடர்பான பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வட மாகாணத்திலுள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தம்மை ஆஜர்படுத்துமாறும், தம்மை விரைவில் விடுவிக்க உதவி செய்யுமாறும் கைதிகள் வேண்டிக்கொண்டனர்.
குறித்த விடையம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதிய மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பேசி சாதகமான பதிலொன்றை வழங்குவதாகவும் சிறைகளிலுள்ள கைதிகளின் குடும்பங்களுக்கு ஏதேனும் இடைக்கால நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தங்க மகன் என வர்ணிக்கப்படும் மைக்கல் பெல்ப்ஸ் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் சற்று முன்னர் நிறைவடைந்த 200 மீட்டர் பட்டர் ப்ளை (Butter Fly) மற்றும் 4 X 200 போட்டிகளில் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இதன்மூலம் தனது பதக்க பட்டியலில் மேலுமிரு தங்கப்பதக்கங்களை சேர்த்துள்ளார்.
இதுவரை இவர் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 25, இதில் 21 தங்கப்பதக்கங்கள் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும்.
இவ்விரு தங்கப்பதக்கங்களையும் சிறிய கால இடைவௌியில் இவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்த போட்டிப் பிரிவின் கீழ் மைக்கல் பெல்ப்ஸ் வௌ்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது 19 ஆவது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
4 பேர் கொண்ட குழுக்கள் கலந்து கொள்ளும் 100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் ‘பிரி ஸ்டைல்’ என்னும் பிரிவில் (4 X 100) அமெரிக்கக் குழுவில் மைக்கல் பெல்ப்சும் பங்குபற்றினார்.
31 வயதான பெல்ப்ஸ் கலந்து கொள்ளும் ஐந்தாவது ஒலிம்பிக் விழா இதுவாகும்.
டெல்லியைச் சேர்ந்த ஃபைஷான் படேல்- சனா தம்பதியர் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை முடித்து நேற்று (ஓகஸ்ட் 8) விமானம் ஏற வேண்டிய சூழலில் சனாவின் கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டது.
சனாவின் கடவுச்சீட்டு தொலைந்தாலும் அவரது கணவர் ஃபைஷான் படேல் தனியாக தேனிலவுப் பயணத்துக்கு விமானம் ஏறிவிட்டார். விமானத்தில் ஏறிய படேல் தனது இருக்கைக்கு பக்கத்தில் மனைவியின் புகைப்படத்தை ஒட்டி வைத்து ´மனைவி இல்லாமல் தேனிலவு பயணம் செய்கிறேன் என்று ட்விட் செய்தார்.
அந்த ட்விட்டை பார்த்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உங்கள் மனைவியை உடனடியாக என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள். நாளை அவருக்கு டூப்ளிகேட் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று பதிலளித்தார்.
அதன்படி சனாவுக்கு டூப்ளிகேட் கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சனா தேனிலவுக்கு போய் சேர்ந்தாரா என்பது குறித்து எந்தவித தகவலும் இதுவரை இல்லை.
இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.
சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாகாஷ் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வர்த்தகப் பயணத்தின்போது அவர் இலங்கையில் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைக்காக அவர் அளித்த விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டதாகவும் நாகாஷ் தெரிவித்திருக்கிறார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமானது இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாகபல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இங்கு இடம்பெற்ற மோதல் நிலைமையினால் பல்கலைக்கழகங்களின் அனைத்துபீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டதுடன், ஒரு சில பீடங்களின் கல்விநடவடிக்கைகள் கடந்த வாரங்களில் ஆரம்பமாகின.
எனினும் மோதலுடன் தொடர்புடைய விஞ்ஞான பீடம் இன்றைய தினமே மீண்டும் திறக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது.
புதிய வாழ்க்கை ஒன்றுக்காக செக்குடியரசில் புகலிடம் கோரும் நோக்கில் கடந்த ஆண்டு இறுதியில் ப்ராக் (Prague) விமானத் தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு செக்குடியரசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் தாம் இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக தெரிவித்து கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து செக் குடியரசை நோக்கி சென்றுள்ளார்.
எனினும் அவர் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தமது நாட்டுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தி செக்குடியரசின் பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவருக்கு சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அவர் தெரிவிக்கும் கூற்றுக்கள் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரசியல் அடைக்கலத்துக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பத்தாயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் காரணமாக ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகின்றார் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயினால் அதிகளவில் 30 முதல் 69 வயது வரையிலானவர்களே உயிரிழக்கின்றனர்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 8 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீரிழிவு நோய்க்கு வழியமைக்கும் அதிக உடல் எடையைக் கொண்ட 26 வீதமானவர்கள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடற் பயிற்சி சரியான உணவுப் பழக்க வழக்கங்களின் ஊடாக 90 வீதமானவர்கள் நீரிழிவு நோயிலிருந்து மீள முடியும்.
அதிகளவில் மரக்கறி, பழ வகைகள் உட்கொள்ளுதல் மற்றும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்றவற்றின் ஊடாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.
நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் அடி தூரம் நடப்பதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கனடாவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கடந்த வாரம் தண்டனை வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் தண்டணை அறிவிக்கப்படும் என்று கனேடிய செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
லிங்கநாதன் மஹேந்திரராஜா என்ற இவர் தாக்குதல் நடத்தியமை, இரண்டு பேரைதடுத்து வைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வாரம் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று பரவலாக கனேடியஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது கனடாவின் உயர்நீதிமன்றத்தினால் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவரின் சட்டத்தரணிதெரிவித்துள்ளார்.
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் பீட்சா விற்பனைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இயந்திரத்தில் தொடு திரையினால் ஆன திரையில் நமக்கு தேவையான பீட்சாவினை தெரிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் பீட்சா Owen க்குள் சென்று 3 நிமிடத்தில் ரெடியாகி துண்டு துண்டாக நறுக்கப்பட்ட நிலையில் நமது கையில் வந்து சேர்ந்து விடும்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த பீட்சா ஏ.டி,எம் இயந்திரம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த பீட்சவின் விலை 10 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த பீட்சாவை வாங்கமுடியும்.
பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva Barros ஆகிய இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.
சமூகவலைதளம் ஒன்றில் எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும் Katyucia பின்னர் Paaulo வின் குணம் தம்மை ஈர்த்ததாகவும், அதனையடுத்து 18 மாதங்களுக்கு பின்னர் தொடர்ந்து சமூகவலைதளம் வாயிலாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே 2 மாதம் தொடர்ந்து பேசி வந்த இருவருக்கும் நேரில் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து Paulo தனது வாகனத்தில் 186 கி.மீ. தூரம் தனியாக பயணம் மேற்கொண்டு Katyucia ஐ சந்தித்துள்ளார்.
வாழ்க்கையில் முதன் முறையாக மேற்கொண்ட அந்த நெடுந்தூர பயணமும் முதல் சந்திப்பும் தமது வாழ்நாளில் மறக்க முடியாது என கூறும் Paulo, பார்த்த முதல் நொடியிலேயே Katyucia ஐ தமக்கு பிடித்துவிட்டதாக தெரிவிக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் தமது காதலை தெரிவிக்க பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வார் என்ற பலவித குழப்பங்கள் தமக்குள் இருந்து வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமது நண்பர்கள் அளித்த ஊக்கத்தை அடுத்தே துணிச்சலுடன் அவரிடம் தமது காதலை வெளிப்படுத்தியதாக கூறும் Paulo, முதலில் ஏற்க மறுத்துள்ளதாகவும் பின்னர் தமது அன்பை அவர் புரிந்து கொண்டு காதலை ஏற்றதுடன், தம்முடன் உணவகங்கள், பூங்கா என பல இடங்களுக்கும் வரவும் செய்தார் என காதலுடன் தெரிவித்துள்ளார் Paulo.
பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட முடிவின்படி தற்போது ஒரே வீட்டில் தங்கி வருகின்றனர். இருப்பினும் திருமணம் செய்து கொண்ட பின்னரே குழந்தைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி உயரம் கொண்ட எஞ்சிய மக்களை போலவே தங்களின் வாழ்கையையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இருவரின் எண்ணமாகவும் உள்ளது.
குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் உள்ள பகுதியில் இறங்கி படமெடுத்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஜூனாகாத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கிர் வனவிலங்கு சரணாலயம். வனவிலங்குகள் உள்ள பகுதிக்கு ஜீப் மூலம் பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுவது வழக்கம். சிங்கம் உள்ள பகுதிக்கே ஜீப்பில் அழைத்து செல்லப்படுவதால் பார்வையாளர்கள் இப்பகுதிக்கு செல்ல அதிகம் அலைமோதுவது வழக்கம்.
வனவிலங்குகள் உள்ள பகுதிக்கு அருகே அழைத்து சென்று பார்வையாளர்களை காட்டும் போதிலும், ஜீப்பில் இருந்து இறங்குவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவது இல்லை.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ரவீந்திர ஜடேஜா அத்துமீறி ஓடும் ஜீப்பில் இருந்து இறங்கி சிங்கங்கள் முன்பாக படமெடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், வனவிலங்கு சரணாலயம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் வனவிலங்கு சரணாலயத்திற்கு வந்திருந்த ஜடேஜா விதிகளை மீறி ஜீப்பில் இருந்து இறங்கி படம் எடுத்ததால் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜடேஜாவுடன் நின்றிருந்த அவரது மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாவும், முழு விசாரணை அறிக்கை வந்தவுடன் ஜடேஜா தம்பதியுடன் இருந்த வன அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரணாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் தனியார் விடுதியில் கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளிட்ட 4 பேர் விஷமருந்தியதில் கணவரைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவரது சகோதரர் மணிகண்டன். இவர்களது நிலத்தில் சுப்பிரமணி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை மணிகண்டன் தனக்கு வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி, வீடு கட்டுவதற்குச் செலவான 7 லட்சத்தை தருவதென்றால் விட்டை அவரது பெயருக்கு எழுதி தருவதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், சுப்பிரமணியின் குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுப்பிரமணி, அவரது மனைவி கௌசல்யா (34), மகள்கள் ஜனனி (17), இலக்கியா (14) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து நிலையத்தின் பின்புறம் பிலிஸ்விலா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு சுப்பிரமணி, தான் வைத்திருந்த விஷ மருந்தை குளிர்பானத்தில் கலந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் அதிகாலையில் திடீரென சுப்பிரமணி தங்கியிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, விடுதியில் இருந்தவர்கள் அறைக்கு வந்து, ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் வழியிலேயே கௌசல்யா மற்றும் மகள்கள் ஜனனி, இலக்கியா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த ஜனனியின் கையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், எங்களது வீட்டை அபகரித்து, பணமும் கொடுக்காமல் ஏமாற்றிய சித்தப்பா மணிகண்டன்தான் எங்களது சாவுக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடிதத்தைக் கொடைக்கானல் பொலிசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும் பக்திபரவசத்துடன் ஈடுபட்டிருந்தமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..
உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களையுமே நாம் வியப்போடுதான் தற்போது பார்க்கின்றோம். ஏனெனில் இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியத்துடனே ஒவ்வொரு சம்பவங்களும் நடக்கின்றன.
மகளின் கணவருடன் தாய் தொடர்பு, தந்தையுடன் மருமகள் கள்ளக்காதல், சகோதரியுடம் சகோதரன் கள்ளக்காதல் போன்ற கொடூரமான சம்பவங்கள் இன்று அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது மனைவியின் தாயோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவமே அது.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சூராஜ் ( 22) . இவர் 42 வயதான தனது மாமியார் ஆஷா தேவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூரஜ் என்பவருக்கும் லலிதாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்த சில தினங்களுக்கு பின்பு சூராஜிற்கு உடல் நிலை சரியில்லை என்று அவரை பார்த்துக்கொள்ள லலிதாவின் தாய் ஆஷா தேவி அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆஷாவின் கணவர் டில்லியில் பணிபுரிவதால், மருமகன் சூராஜ் மற்றும் மாமியார் ஆஷாவிற்கு இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு இருவரும் வெளியேயும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், பின்னர் தங்களின் கிராமத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆஷாவும் சூராஜூம் மீண்டும் அவர்கள் கிராமத்துக்குச் சென்று, ஊர் பஞ்சாயத்திடம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதாகவும் சேர்த்து வைக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பஞ்சாயத்தும் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முந்தைய திருமணத்தில் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கி இருவரும் பிரிந்து வந்தனரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மேலும் தனது மகளுடன் சேர்ந்து சூராஜுடன் வாழ ஆஷா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களின் இந்த செயலால் அவர்களது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர்.