இலங்கையில் மூன்று லட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட வதிவிட வீசா!!

Visa

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது.

பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு குறித்த சிறப்பு வைப்புக்கணக்கில் பேண வேண்டும்.

அவ்வாறு வெளிநாட்டவர் இங்கு தங்கியிருக்கும்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாது.

பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

காளிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட மாணவி!!

T1

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி, இவர் அங்குள்ள காளி கோவிலில் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தி உள்ளார். தான் கனவில் கண்ட சம்பவம் அனைத்தும் நிறைவேற கடவுள் நாக்கை காணிக்கையாக கேட்டதாகவும், அதனாலேயே நாக்கை அறுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் சகோதரர் சச்சின் பேசுகையில், கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறிய போது எனக்கு பெரிய விடயமாக தெரியவில்லை.

சும்மா விளையாட்டாக கூறுகிறாள் என்று தான் நினைத்தேன், என்னுடன் பிறந்த சகோதரி இப்படி மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பார் என கனவிலும் கூட நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாணவி நாக்கை அறுத்துக் கொண்டதும் மயக்கமடைந்துள்ளார். எனினும் அருகில் இருந்த பூசாரி மற்றும் மக்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் விளக்கு மற்றும் ஊதுவர்த்தியை ஏற்றி வைத்ததாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த மருத்துவ அதிகாரிகள் அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

T2 T3

காதலை எதிர்த்த தோழியை விஷம் வைத்துக் கொன்ற பெண்!!

F1

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிக்கு தேனீரில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ 7 ஆண்டுகளாக இணைபிரியா தோழிகளாக பழகி வந்துள்ளார்கள். சிட்னியில் வடிவமைப்பு கல்லூரியில் பயின்ற இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி உள்ளார். மேலும் ஜெசிகா மற்றும் அவரது காதலருக்கும் இடையே இருக்கும் உறவை கைவிடும்படி மிர்னா வலியுறித்தியும் உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனையடுத்து, மிர்னா தனது தோழியிடம் இருந்து விலகியே இருந்துள்ளார். இந்நிலையில், தொடர்புகள் அறுந்துப்போய் இருந்த மிர்னாவிடம் கடந்த ஆண்டு வட்ஸ்அப் மூலம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட ஜெசிகா, மிர்னாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதைதொடர்ந்து, இந்தோனேசியாவில் உள்ள தனது தோழி பூன் ஜுவிடா என்பவருடன் இணைந்து ஜெசிகா, மிர்னாவை கொலை செய்ய திட்டமிட்டு ஒரு ஹோட்டலில் சந்திக்க அழைத்துள்ளார். ஜெசிகா, மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான தேனீரில் விஷம் கலந்து வைத்திருந்துள்ளார்.

மிர்னா வந்ததும் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் விஷம் கலந்த தேனீரை மிர்னாவிடம் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். ஆனால் ஒரு வாய் மட்டுமே அந்த தேனீரை அருந்திய மிர்னா, அதன் சுவை வேறு மாதிரி இருப்பதை உணர்ந்து குடிக்க மறுத்துள்ளார். ஆனால், அருந்திய அந்த ஒரு வாய் தேனீரே அவரது உயிரை பறிக்க போதுமானதாக இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெசிகா, தற்போது இந்த கொலை வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.

இச்சம்பவத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே ஜெசிகா தனது காதல் முறிவாலும், தோழியின் பிரிவாலும் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது முன்னாள் காதலரின் வாகனத்தை சூறையாடியுள்ளார். மேலும் மது போதையில் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.

F2 F3

80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)

Boy

வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான்.

தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பயேஷித் ஷிக்தர் ஹூசைன் என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்த போதே கைகள், கால் போன்றவற்றின் தோல் சுருங்கி முதுமைத் தோற்றத்துடன் இருந்துள்ளது. அதோடு குழந்தைக்கு இதய நோய், பார்வைக்குறைபாடு, காது கேளாமை உள்ளிட்ட குறைபாடுகளும் உள்ளன.

இதையடுத்து, பயேஷித்தை பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று அவனது பெற்றோர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களது பூர்வீக நிலத்தை விற்றுப் பணம் பெற்றிருக்கின்றார்கள்.

ஆனாலும் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பில் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லையாம்.

இந்நிலையில், தற்போது அந்த சிறுவனை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.

இங்கு ஷிக்தரின் முதுமை நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 03 3 4 5 6 7 8

காணாமல் போன மலேசிய விமானத்துக்கு நடந்தது இது தான்!!

Flight

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது.

அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டொலர் (சுமார் ரூ.905 கோடி) செலவில் தேடும் பணி நடந்தும், அந்த விமானத்தைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து பெறப்பட்ட சிக்னல்களை அவுஸ்திரேலியாவை சேர்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்தார்கள். அதில் அந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

அந்த விமானம் கடைசி நேரத்தில் செயற்கைக்கோள்களுடன் தானியங்கி கைகுலுக்கல் சிக்னல்களை பல முறை செய்திருக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த சிக்னல்களில் இருந்து, அந்த விமானம் தற்போது தேடல் பணி நடந்து வருகிற 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில்தான் விழுந்திருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தலைமை கமிஷனர் கிரேக் ஹ¨ட் கூறி உள்ளார்.

4 வயதில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி!!

1080863574UP2

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அடிப்படை ஊழியராக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர்.

இவரது 15 வயது மகள் சுஷ்மா, தனது அறிவுக் கூர்மையால் இந்த சிறுவயதியிலேயே பட்டதாரியாகி, நுண்ணுயிரியில் தொடர்பான முனைவர் பட்டத்துக்கு படித்து வருகிறார்.

இவரது தம்பியான ஷைலேந்திரா என்பவர் ஒன்பது வயதில் 12வது வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்துள்ள நிலையில், தேஜ் பகதூரின் கடைசி மகளான நான்கு வயது அனன்யாவுக்கு மழலையர் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இங்குள்ள ஒரு பள்ளியில் நேரடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மழலைப் பருவத்திலேயே தனது அக்கா மற்றும் அண்ணனின் புத்தகங்களை எடுத்து படிக்க கற்றுகொண்ட அனன்யா, தற்போது ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஒன்பதாம் வகுப்பில் நேரடியாக சேர்ப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியின் ஒப்புதலுக்காக பள்ளி நிர்வாகம் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதே பள்ளியில் தனது ஒன்பதாம் வகுப்பில் அனன்யாவின் அக்காவான சுஷ்மா சேர்ந்தபோது அவருக்கு வயது ஐந்து என்பது குறிப்பிடத்தக்கது. தனது அக்கா, அண்ணனைவிட அதிக அறிவாற்றலுடன் காணப்படும் அனன்யா, ராமாயணத்தின் பெரும்பகுதியை படித்து, மனப்பாடம் செய்து வைத்துள்ளதாக அவரது தாயார் பெருமிதத்துடன் கூறுகிறார்.

தனது பிள்ளைகளின் அறிவாற்றல் தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கிய பிறகுதான் தேஜ் பகதூருக்கு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

என் பிள்ளைகளுக்கு நான் எவ்வித சிறப்பு டியூஷனுக்கும் ஏற்பாடு செய்தது இல்லை. அதற்கான வசதியும் எனக்கு கிடையாது. இறைவன் அருளிய அறிவாற்றலை கொண்டு எங்கள் வம்சத்துக்கே இவர்கள் பெருமை தேடி தந்திருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், தேஜ் பகதூர்.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை சந்தேக நபரிற்கு பிணை!!

Vavuniya harishnavi

வவுனியா உக்குளாங்குளத்தில் கெங்காதரன் ஹரிஸ்ணவி என்ற 14 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்ட்டிருந்தார்.

இச் சம்பவத்தில் பாலசிங்கம் ஜனார்த்தனன் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் 25.02.2016 அன்று வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.

அந்த பிணை விண்ணப்பத்திற்கு சட்டமா அதிபர் சார்பில் தோன்றிய அரச சட்டவாதி நிஷாந்த் நாகரட்ணம் அவர்கள் பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபினையினை தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் ஆறு மாதகாலம் விளக்கமறியலில் இருந்து வருவதையும் குற்றச்சாட்டு ஒன்று நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு நபரும் குற்றம் அற்றவர் என்ற காரணத்தினாலும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்கள் இவ் வழக்கில் சந்தேக நபரான பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு இரண்டு இலட்சம் ரூபா பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா இரண்டு ஆட்பிணை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற வளாக பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 9-12 மணிக்கிடையில் கையொப்பமிடுமாறும் கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் தெரிவித்து பிணை வழங்கப்படடுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கைதான தயா மாஸ்டருக்கு விளக்கமறியல்!!

(3)

கடந்த 2009 ம் ஆண்டு நடைப்பெற்ற யுத்தத்தின்போது பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி ஒரு நாள் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளராக இருந்த தயாநிதி இன்று(10.08.2016) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான போது 4 அரச அலுவலர்களின் சரீரப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிணையாளர்கள் நாளை ஒப்பமிடும் வரையிலும் தயாநிதியை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

thaya master 01

நயன்தாரா உள்ளே வரக்கூடாது : ஏன் இப்படி ஒரு முடிவு!!

Tamil Actress Nayanthara in Maya Movie Stills

நயன்தாரா கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளார்களாம்.

என்ன என்று விசாரித்தால் நயன்தாரா ஹோட்டலுக்கு வரும் போது தனக்கு ஏதும் பிடிக்கவில்லை என்றால் மிகவும் கோபப்படுகிறார், கையில் கிடைத்த பொருட்களை தூக்கி அடித்து உடைக்கிறார் என புகார் கூறியுள்ளனர்.

போர்த்துகலில் புயல் வேகத்தில் வீடுகளை நோக்கி பரவும் காட்டுத்தீ!!

625.0.560.350.160.300.053.800.668.160.90
போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி புயல் வேகத்தில் பரவி வருவதால், Funchal நகரில் உள்ள சுமார் 400 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இங்கு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார், 3,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், வடக்குபகுதியில் தான் அதிகமான தீ பரவி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் காடுகள் மற்றும் பைன் மரங்கள் நிறைந்த பகுதிகள், மழையின்மை காரணத்தால் மிகவும் வறட்சியடைந்து காணப்பட்டுள்ளது. இக்காரணத்தினாலேயே இங்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தீயினால் ஏற்பட்ட புகைமண்டலங்கள் வானத்தை நோக்கியும் எழும்பிய வண்ணம் உள்ளன, இந்த புகையின் தாக்கத்தால் உடல்நலரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனக்கு என்னுடைய பணம் வேண்டும் : வீதியில் வைத்து முதியவரிடம் சண்டையிட்ட பாலியல் தொழிலாளி!!

BEP/PATRICK GHERDOUSSI/LA PROVENCE Illustration sur la prostitution

லண்டனில் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்த முதியவரிடம் பாலியல் தொழிலாளி சண்டையிட்ட வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு 40,000 பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.வாழ்சல்ல நகரில் உள்ள ரோட்டில் முதியவர் ஒருவர் நடந்துசென்றுகொண்டிருக்கிறார், அப்போது அவருக்கு அருகில் வரும் பாலியல் தொழிலாளி, எனக்கு என்னுடைய பணம் வேண்டும் எனக்கு என்னுடைய பணம் வேண்டும் என சத்தம் போட்டு கத்துகிறார்.

இதனை கேட்ட அம்முதியவர் கண்டுகொள்ளாமல் சென்றாலும், அந்த பெண்மணி விடாமல் துரத்தி எனக்கு பணம் வேண்டும் என்று சண்டையிடுகிறார், இதனை நபர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கையில், அவரை பார்த்து நான் பொலிசிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டில் விடுக்கிறார்.

மேலும், பாலியல் தொழிலாளியான என்னிடம் இந்த முதியவர் உறவு வைத்துகொண்டு, அதற்கான முழுத்தொகைகையும் கொடுக்கவில்லை, மாறாக என்னுடைய சேவைக்கு £2 மட்டுமே செலுத்தியுள்ளார், அதனால் மீதியுள்ள தொகையை எனக்கு தரவேண்டும் என சண்டையிட்டுள்ளார்.இப்பெண்மணியிடம் இருந்து தப்பிக்க முடியாத முதியவர் ஒரு கட்டத்தில், தான் கையில் வைத்திருந்த ஸ்டிக்கை வைத்து அவரை அடித்து விரட்டுகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு போதும் ஏற்க போவதில்லை – ஜனாதிபதி மைத்திரி!!

ma
இலாபம் பெறுவதற்காக ஒரு காலமும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க தான்ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக திறப்பு விழாவில் இன்றைய தினம் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டால் அரச நிறுவனங்கள் நட்டத்தையேபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் கொழும்பு துறைமுகம் மூலம் ரூபா 40 பில்லியன் ஈட்டிக் கொள்ளமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய கடன் சுமையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளஞ்செழியனின் மற்றுமொரு கடுமையான தீர்ப்பு!!

ilancheliyan-judge
யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு இன்று நீதிமன்றம் 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத்திறனாளி சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து யாழ். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதன்போது சந்தேகநபர்கள் நான்கு பேரையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், தலா பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அத்துடன் குற்றவாளிகள் நான்கு பேரும் தலா ஐந்து இலட்சம் வீதம் பாதிக்கப்பட் சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.இதற்கு மேலதிகமாக 25 000 வீதம் குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஒமந்தையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!!

 
ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கக்கோரி இன்று(10.08.2016) காலை முதல் வவுனியா ஒமந்தை பிரதேச சபைக்கு முன்பாக தா.மகேஸ்வரன் என்ற பொதுமகன் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த மகேஸ்வரன்..

2010ம் ஆண்டு நகர அபிவிருத்தித் திட்டமிடல் நிபுணர் குழுவின் தெரிவுக்கு அமைவாகவும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் எட்டப்பட்ட முடிவுக்கு அமைவாகவும் பொருளாதார வர்த்தக மையம் ஓமந்தையில் அமைவதே சிறந்ததாகும்.

இதனை அரசியல் காரணங்களுக்காக அவரவர் வசதிக்கேற்ப மாற்றுவதை அனுமதிக்க முடியாது. ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கும் வரை நான் உண்ணாவிராத போராட்டத்தினை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

1 DSC_0009 DSC_0010 DSC_0013 DSC_0014 DSC_0016 DSC_0018 DSC_0019 DSC_0024 DSC_0027

வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!!

 
வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று(10.08.2016) காலை முதல்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் ஊழியர்களின் தனிநபர் கோவைகள் கானாமல் போனமை தொடர்பாகவும் வவுனியா நகரசபை ஊழியர்கள் பலமுறை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் தமக்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், நேற்றைய தினம் இது சம்பந்தமாக நகரசபைச் செயளாளரை தாம் சந்திக்க முற்பட்டபோது செயளாளர் தம்மை உதாசீனப்படுத்தியதாகவும், எனவே தாம் தொடர் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

1 news (1) news (2) news (3) news (5)

நயன்தாராவிற்கு முத்தம் தருவதெல்லாம் ஒரு பெருமையா? வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!!

Actress Nayantara in Greeku Veerudu Pictures

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது, ஆனால், சமீபத்தில் வந்த திருநாள் பெரிதும் ரசிகர்களை கவரவில்லை.இப்படத்தில் ஒரு சிறுவன் இவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி, இதை பலரும் கண்டித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த காட்சியில் நடித்த சிறுவனின் தாய், இதை பேஸ்புக் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துள்ளார், அதை ஷேர் செய்து பல ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.