16 ஆண்டுகால உண்ணா விரதத்தை முடிக்கும் இரும்புப் பெண்!!

Rom-Sharmila

மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா, 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை இன்று முடிக்கிறார்.

மணிப்பூரில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-ம் ஆண்டு பொலிஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் பலர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்ற சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது. அந்த சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்வதற்கு பாதுகாப்பு படைக்கு அதிகாரம் தருகிறது. அதை எதிர்த்து முறையிடவும் முடியாது.

இதனால் அந்த கொடிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்போது (2000-ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி) மனித உரிமை காவலரான இரோம் சானு சர்மிளா (வயது 44), உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் எந்த உணவையும் சாப்பிட மறுத்து வருகிறார். எந்த பானத்தையும் குடிக்கவும் மறுத்து வருகிறார்.

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பல முறை கைது செய்யப்பட்டும், விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார்.தற்போது அவர் அங்குள்ள ஜவகர்லால் நேரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கில் ஒரு டியூப்பை செருகி அதன் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி இரோம் சர்மிளா இம்பால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் எனது உண்ணாவிரதத்தை ஆகஸ்டு மாதம் 9-ந் திகதி முடித்துக்கொள்கிறேன். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என கூறினார். அதன்படி தனது 16 ஆண்டு கால உண்ணா விரத போராட்டத்தை நாளை இரோம் சர்மிளா முடித்துக்கொள்கிறார்.

இரோம் சர்மிளாவின் சகோதரர் இரோம் சின்காஜித் பிடிஐ செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில்,”நாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் இரோம் சர்மிளா ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் உள்ள அவரை நாளை கோர்ட்டு விடுவிக்க இருக்கிறது.

இதன்பின்னர் 15 தினங்களுக்கு முன் அறிவித்தபடி தனது உண்ணா விரத போராட்டத்தை நாளை முறைப்படி கைவிடுவார். விடுதலைக்கு பிறகு அவர் எங்கு செல்வார் என்று தெரியவில்லை. அவர் ஒருவேளை வீட்டிற்கு வந்து தங்க விரும்பினால், நாங்கள் அவரை வரவேற்க ஆர்வமாக உள்ளோம்.ஆனால், இது அவரின் விருப்பத்தை பொறுத்தது” என்றார்.

தமிழகத்தில்அகதி முகாம்களில் இருந்து 75 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்!!

Ref

இந்தியாவின் தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள 75 இலங்கையர்கள் இன்று நாடு திரும்ப உள்ளனர்.

மூன்று குழுக்களாக அவர்கள் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் வருகை தர உள்ளனர்.

30 பெண்கள் உள்ளடங்குகின்ற அந்தக் குழு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் சம்பந்தமான காரியாலயத்தின் தலையீட்டினால் நாடு திரும்பும் இவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

2011ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற 4870 பேர் தாயகம் திரும்பியுள்ளதுடன், மேலும் இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

பட்டம் விட்டு விளையாடிய 15 வயதுச் சிறுவன் பலி!!

Body

பலப்பிட்டிய பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 15 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் விட்ட பட்டம் மாதுருகங்கையில் வீழ்ந்துள்ளது. அதனை எடுக்க முயற்சித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலப்பிட்டிய ராகுல வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலாச்சார உடையில் நல்லூர்க் கொடியேற்ற உற்சவத்தில் கலந்து கொண்ட வெள்ளைக்காரப் பெண்கள்!!

1

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான காலை- 10 மணியளவில் தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற உற்சவம் வைபவம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷம் எழுப்ப எம்பெருமான், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.

கொடியேற்ற உற்சவம் காண யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு அடியவர்களும் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக வெள்ளைக்காரப் பெண்கள் சைவத் தமிழ் மக்களின் கலாசார ஆடையான சேலை அணிந்து வந்து நல்லூர்க் கந்தனைப் பக்திபூர்வமாக வழிபட்டமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

சைவத் தமிழ்க் கலாசாரத்தில் வெளிநாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் எம்மவர்கள் வெளிநாட்டு மோகத்தில் ஊறித் திளைப்பது கவலையளிப்பதாக ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட மூத்த ஆன்மீகவாதியொருவர் கவலை வெளியிட்டார்.

2

எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழருக்கு உற்சாக வரவேற்பு!!

Evarast

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, தமிழர் என்ற சாதனையை படைத்த ஊட்டி இராணுவ வீரருக்கு, அவரது சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் இரண்டாம் படைப்பிரிவில் அவர் பணியாற்றி வருகிறார்.

இந்திய இராணுவக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்ட, 14 பேர் கொண்ட எவரெஸ்ட் மலை ஏறும் குழுவில் சிவகுமாரும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சிவக்குமார் அடைந்தார். அங்கு, தேசிய மற்றும் இராணுவக் கொடியை சக வீரர்களுடன் ஏற்றினார்.

இதற்காக, இந்திய ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் பாராட்டுக்களை பெற்ற சிவகுமார் நேற்று அவரது சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதன் போது அவருக்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதேவேளை, மலேஷியாவில் வாழும் தமிழர், புதுச்சேரியில் வாழும் தமிழர் என, இருவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ள போதும், தமிழகத்தில் வசிக்கும் முதல் நபர் என்ற பெருமை, சிவகுமார் பெற்றுள்ளார்.

5 லட்சம் விலங்குகள் படுகொலை : உலகின் மிகப்பெரிய ரத்த பலி திருவிழா!!

Nq

சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நேபாளத்தில் நடந்த 5 லட்சம் எருமைகள் பலியிடப்பட்ட திருவிழா. போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். நவீன காலச்சூழல் வேறு. .

கொல்லப்படுவனவற்றில் 70 சதவீதம் விலங்குகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவன, மீதி நேபாளத்துக்கு உரியன. நேபாளத்துக்கு அருகாமையான இந்தியாவின் நான்கு எல்லை மாநிலங்களில் இருந்து கொண்டுசெல்லப்படுகிறது.

இதனால், அங்குள்ள நீதிமன்றங்கள் விலங்குகளின் இத்தகைய கடத்தலுக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச மனித சமூக அமைப்பின் முயற்சியால், அங்கு கொண்டுசெல்ல இருந்த 2,500 எருமைகள் மீட்கப்பட்டன. 100 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்

அறக்கட்டளை தலைவர்கள் கருத்து

காதிமை கோயிலின் அறக்கட்டளை தலைவர் ராம் சந்திரா ஷா கூறுகையில், ‘இனிமேல், இந்த கோயிலில் விலங்குகள் தியாகம் என்ற பெயரில் உயிர்ப்பலிகள் மற்றும் வன்முறைகள் நடக்காது. மாறாக, அமைதியின் அடையாளமான வழிபாடுகள் மட்டுமே காணப்படும். பக்தர்கள் கொண்டுவரும் விலங்குகள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்’. என்று கூறுவதோடு கையெழுத்திட்ட ஆணையையும் அனுப்பியுள்ளார்..

’இந்த சடங்கு, கோயிலின் நிதிநிலை சார்ந்த விஷயமாக இருப்பதால் யோசிக்க வேண்டியிருக்கிறது. விழா தொடரலாம். வேண்டுமானால், விலங்குகள் படுகொலை செய்யப்படுவதை அந்த அரங்கில் அடையாளமாக குறைத்து, அமைதியின் நினைவுச்சின்னமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அடுத்த திருவிழா வரும் 2019 ல் நடக்க உள்ளது. பக்தர்கள் அப்போதும் கொண்டுவரவே செய்வார்கள்.’ என ஜய சர்மா கூறியுள்ளார்.

முன்னேற்றமே மாற்றம்தான்

சிவப்பு ரத்தம் இல்லாத சிறு உயிர்களை கொள்வதை நாம் ஒரு தவறு போல உணர்வதில்லை. உணவுக்காக மீன்களை அறுப்பதும் நீர்வாழ் உயிரி என்பதால் பெரிய தாக்கத்தை தருவதில்லை. கோழி, ஆடு போன்றவற்றை சாப்பிடுபவர்கள் கூட அதை அறுப்பதை பார்க்க அவ்வளவாக விரும்புவதில்லை.

ஆனால் மனிதனைவிட பெரிய விலங்கான மாடு, எருமைகளை ரத்தம் பீறிட தலையை வெட்டிச் சாய்த்தால் காணச் சகிக்குமா? அதுவும் கோயில் விழாக்களை மையப்படுத்தி செய்வது, சார்ந்தவர்கள் மதத்தையும் பிற்போக்காக ஆக்கிவிடுகிறது..

காலமாற்றத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்காத பழமை, மக்களின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும். சில வழக்கங்கள் வந்ததே தவறாக இருக்கும்போது, அதை வழக்கம் என்று காரணம் காட்டி மேலும், தொடர விடலாமா?

கருத்து இறுக்கமான முன்முடிவுகளில் வாழ்பவர்களுக்கு, தங்கள் வழக்கங்களின் தவறுகள் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், சர்வதேசம் என்ற விசாலமான விவாதங்களுக்கு உட்படும்போது, நம் வழக்கங்களில் அறிவுக்கு பொருந்தாத தவறுகள் சூழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்படும், அதை பேதமையான வாதங்களால் பிடிவாதம் செய்யாமல் மாற்றிக்கொள்வது மாற்றுபவர்களைவிட மாற்றிகொள்பவர்களுக்கே நலம்.

உலகின் மிக அதிவேக ரயில் : அடுத்த மாதம் களமிறக்குகிறது சீனா!!

Train

மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ – ஷூஜூ இடையே இயக்கப்படும்.

அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன.

புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது.

புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக, 16,000 கி.மீ. தொலைவுக்கு மிக அதிவேக ரயில்களை இயக்கக் கூடிய இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சீனா, கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டொலர் இலாபம் ஈட்டியது என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலீட்டுடன் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், வசதியான பயணம் செய்யவும் சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

சீனா குறிப்பாக இந்தியா உட்பட வெளிநாடுகளில் அதன் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

19வது தங்கத்தை வென்று சாதனை படைத்த சென்ற மைக்கல் பிலிப்ஸ்!!

USA's Michael Phelps kisses his gold medal on the podium of the Men's 4x100m Freestyle Relay Final during the swimming event at the Rio 2016 Olympic Games at the Olympic Aquatics Stadium in Rio de Janeiro on August 7, 2016. / AFP PHOTO / Odd Andersen

ஒலிம்பிக்கின் “தங்க வேட்டை நாயகன்” என்று அழைப்படும் மைக்கல் பிலிப்ஸ் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம் வென்று தனது தங்க வேட்டையை 19 ஆக உயர்த்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மைக்கல் பிலிப்ஸ், நீச்சல் வீரரான இவர் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் (18), அதிக பதக்கம் (22) வென்று சாதனை வீரராக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த 4*100 மீ தொடர் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்க அணி தங்கம் வென்றது.

அமெரிக்க அணி பந்தய தூரத்தை 30 நிமிடம் 09.02 வினாடியில் கடந்தது. 4 பேர் கொண்ட அந்த அணியில் 31 வயதான மைக்கல் பிலிப்ஸ் இடம் பெற்றிருந்தார்.

பிலிப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 23 பதக்கம் (19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) வென்று யாரும் எளிதில் நெருங்க முடியாத நிலையில் உள்ளார்.

பிலிப்சுக்கு இந்த ஒலிம்பிக்கில் இன்னும் சில போட்டிகள் இருப்பதால் அவரின் தங்க பதக்க வேட்டை மேலும் அதிகரிக்கலாம்.

அண்ணனே தங்கைக்கு செய்த கொடுமை!!

Kidnap

ஈரோட்டின் அந்தியூர் தாலுகாவை சேர்ந்தவர் சென்னிமலை, இவரது மகள் சசிகலா கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடிவந்த சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் கடந்த மாதம் 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே சசிகலாவை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை பொலிசில் புகார் கொடுத்தார்.

இதனை அறிந்து கொண்ட தம்பதியினர் சசிகலா- ரமேஷ் பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர். இந்த தகவல் சசிகலாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் சென்னைக்கு வரவே பொலிசார் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் சசிகலா கணவர் ரமேசுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதுடன், திருவேற்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தன்னுடைய மகள் பிரிந்து போன துக்கம் தாங்காமல் அவரது தந்தை தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிகிறது, இந்நிலையில் இவருக்கு அதிகளவு சொத்து இருந்த காரணத்தால் சசிகலாவின் பெரியப்பா மகனான அத்தாணி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (32) சதித்திட்டம் தீட்டினார்.

இதற்காக ரமேஷ்- சசிகலாவை நோட்டமிட்ட நந்தகுமார், நான்கு பேருடன் சேர்ந்து சசிகலாவை கடத்தி சென்றார். இதனையடுத்து ரமேஷ், சசிகலாவை மர்மநபர்கள் கடத்தி சென்றனர் என திருவேற்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து வேலூர் குற்றப்பிரிவு ஏ.டி. எஸ்.பி. உமா சங்கர் தலைமையில் மாவட்டம் முழுவதும் பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர்.

பொலிசாரின் சோதனையில் சசிகலா கடத்தப்பட்ட கார், பள்ளிகொண்டா சுங்கசாவடியை கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் கார் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உஷாரான பொலிசார் எடுத்த துரித நடவடிக்கையின் பேரில் காரை மடக்கி பிடித்ததுடன் சசிகலாவையும் மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட நந்தகுமார், காரை ஓட்டிச்சென்ற அந்தியூரை சேர்ந்த கருப்பண்ணன் (48), சித்தேஸ்வரன் (43), சந்தோஷ்குமார் (27), கணபதி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, காதலனுடன் சசிகலா ஓட்டம் பிடித்தது அவரது தந்தை உள்பட அனைவரையும் மிகவும் பாதித்தது.
சசிகலா பெயரில் அதிக சொத்தும் உள்ளது. சசிகலாவையும் இழந்து சொத்தையும் இழக்க அவர்கள் விரும்பவில்லை.

எனவே ரமேசிடம் இருந்து சசிகலாவை பிரித்து சொத்தை அபகரிக்க திட்டமிட்டு கடத்தினோம் என வாக்குமூலம் அளித்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : 1000 ரூபாய் அபராதம் விதித்த கிராம நிர்வாகம்!!

Abuse

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்த இளைஞருக்கு அங்குள்ள கிராம நிர்வாகம் 1000 ரூபாய் அபராதம் விதித்து விடுவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் சித்பூர் கிராமத்தில்தான் இந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை அப்பகுதியில் உள்ள இளைஞன் ஒருவன் மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

7வது வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி இதுகுறித்து தமது பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து மறைத்து வந்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக கூறி அந்த நபர் சிறுமியை மிரட்டி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுமியுடன் உறவில் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில் சிறுமி கர்ப்பமானதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரிய வரவே, அவர்கள் நியாயம் கேட்டு கிராம நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாகத்தினர் அதிர்ச்சி தரும் முடிவுக்கு வந்தனர்.

இதனிடையே இளைஞனின் பெற்றோர் இந்த விவகாரத்தினை சுமூகமாக முடித்து வைக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை தங்களது மகனே திருமணம் செய்து கொள்வார் என உறுதியளித்துள்ளனர்.

ஆனால் கிராம நிர்வாகத்தினர் அதற்கு உடன்படாமல், சிறுமிக்கும் அந்த இளைஞனும் இடையே நடந்துள்ளது பாலியல் பலாத்காரம் அல்ல எனவும், இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் கூடியே உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு அபராதமாக 1000 ரூபாய் நிர்வாகத்தினரிடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

கொதிக்கும் எண்ணெயிலிருந்து கைகளால் எடுக்கப்பட்ட வடை 11 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம்!!

Vadai

தமி­ழ­கத்தின் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்தில் ஆதி­ப­ரா­சக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்­ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை 11 ஆயிரம் இந்­திய ரூபா­வுக்கு ஏலம் போயுள்­ளது.

துரிஞ்­சி­குப்பம் கிரா­மத்­தி­லுள்ள ஆதி­ப­ரா­சக்தி அம்மன் கோவிலில் அண்­மையில் 16ஆம் ஆண்டு ஆடிப்­பூரம் விழா நடை­பெற்­றுள்­ளது.

இவ்­வி­ழாவில் கொதிக்கும் எண்­ணெ­யி­லி­ருந்து கைகளால் பக்­தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வாறு எண்­ணெ­யி­லி­ருந்து எடுக்கப்பட்ட வடை­களில் 7 வடைகள் ஏலம் விடப்­பட்­டன. அதில் முதல் வடை 11 ஆயி­ரத்து 100 ரூபா­வுக்கு ஏலம் விடப்­பட்­ட­தாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலை அணியை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது : மத்யூஸ்!!

CRICKET-SRI-AUS

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக விளங்கும் அவுஸ்திரேலியாவை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான வோர்ன் முரளி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வென்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் இலங்கை அணி தனதாக்கியுள்ளது.

பல்லேகலையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் வென்றதன் மூலம், 1999 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியை இலங்கை அணி முதல் தடவையாக சுவைத்தது.

காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்றதன் மூலம் 17 வருடங்களின் பின் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்துள்ளது.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களைப் பெற, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுடன் சுருண்டது. இலங்கை வீரர் ரங்கன ஹேரத் இப்போட்டியில் ஹெட்றிக் விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நுவன் சொய்ஸாவுக்கு அடுத்தாக ஹெட்றிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் ரங்கன ஹேரத் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதல் இன்னிங்ஸில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேவேளை டில்ருவன் பெரேரா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 237 ஓட்டங்களைப் பெற்றது. தில்ருவன் பெரேரா 64 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்யூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு மேலும் 481 ஓட்டங்கள் தேவையான நிலையில் போட்டியின் 3 ஆவது அவ்வணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆனால், 183 ஓட்டங்களுடன் அவ்வணி சுருண்டது.

முதல் இலங்கையர்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ரங்கன ஹேரத் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4 ஆவது தடவையாக 5 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்களை வீழ்த்தினார் டில்ருவன் பெரேரா. இப்போட்டியில் மொத்தமாக 99 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை வீழ்திய டில்ருவன் பெரேரா, ஒரு டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அரைச் சதம் குவித்ததுடன் பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் பெற்ற முதல் இலங்கையரானார்.

டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் 25 தடவைகள் மாத்திரமே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் டில்ருவன் பெரேரா தெரிவானார்.

இப்போட்டில் வென்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த போட்டி முழுவதும் எனது அணியினர் எனக்கு பின்புலமாக நின்றனர். அவர்களுக்கு எனது விசேட நன்றி.

அதேபோன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தேர்வாளர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி. தரவரிசையில் முதல் நிலையிலுள்ள அணியை வென்றமை மிகுந்த திருப்தியளிக்கிறது. எமக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம்’ எனக் கூறினார்.

ஒரு மாதத்தில் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் : போக்கிமோன் கோ சாதனை!!

Pokemon-Go

கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது கேண்டி கிரஷ் சோடா சகா, கிளாஷ் ரோயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் அதிக இலாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதியிலிருந்து சடலம் கண்டெடுப்பு!!

Sadalam

அங்குலுகஹ ரன்கல பிரசேத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடுதியில் காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் இரத்த கரை காணப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில் தித்தகல்ல பிரசேத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!

food

சோடா

சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள அசிட் தான் முக்கிய காரணம். இந்த அசிட்டானது இரைப்பையில் சுரக்கும் அசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
அல்கஹோல்

பொதுவாக அல்கஹோல் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி, டீ

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

மீண்டும் வருவேன் : ஒலிம்பிக்கில் கால் முறிவைச் சந்தித்த வீரர்!!(வீடியோ)

Leg

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது கால் முறிவுக்கு உள்ளாகிய பிரான்ஸ் வீரர், 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இருந்தவாறு தனது பேஸ்புக் தளத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

தனது காலில் எற்பட்ட முறிவு சத்திரசிகிச்சையின் மூலமாக சரிசெய்யப்பட்டுள்ளது. நான் இப்பொது சந்தோஷமாக உணர்கின்றேன்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்கின்ற எனது பிரான்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் செய்த தவறை அவர்கள் சரிசெய்வார்கள் என நான் நம்புகின்றேன்.

இதேவேளை எனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது பிரான்ஸ் வீரர் (26) சமிர் எய்ட் ஜிம்னாஸ்டிக்கை முடித்து தரையிறங்கும்போது கால்முறிவுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.