பாகிஸ்தானில் வைத்தியசாலையில் குண்டுவெடிப்பு : 55 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்!!

Pak

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 55 பேர் பலியானதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவெட்டா நகரத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று (திங்கள்கிழமை) காலை பணிக்கு செல்லும்போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

பிலால் அன்சாரியை அவரது சக பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவமனைக்கு வெளியே வழக்கறிஞர்கள் காத்துக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 55 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் கலவரம் வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வயதுக் குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசு!!

1

ஒன்றரை வயதுடைய குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசுக்கட்டியொன்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டியகற்றிய சம்பவமொன்று இந்தியாவின் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மற்றும் சுமதி ஆகியோரின் ஒன்றரை வயது மகள் நிஷா.

குறித்த குழந்தைக்கு சில மாதங்களாக வயிறு வீங்கியபடி இருந்தது. இதனால், மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர்.

ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சிசு வளர்வதை கண்டு பிடித்தனர். மேலும் கல்லீரல், மண்ணீரல் ஆகியவை இடம் மாறி இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து மருத்துவர் விஜியகிரி தலைமையிலான குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, குழந்தை நிஷாவுக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ எடை கொண்ட சிசு கட்டியை அகற்றினர்.

அந்த கட்டியில் குழந்தையின் முடி, தாடை எலும்புகள் உள்ளிட்டவை இருந்தன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் நிஷா ஆரோக்கியத்துடன் இருப்பதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் விஜியகிரி கருத்துத் தெரிவிக்கையில்,

தாயின் வயிற்றில் இரட்டை கரு உருவாகும்போது அதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அரவணைத்து குழந்தையின் வயிற்றில் உள்ளடங்கி குழந்தையாக உருமாறியிருக்கிறது.

இதனை ஆங்கிலத்தில் டுவிண்டெரி எனக் கூறுவர். கருத்தரிக்கும் 10 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற விசித்திரமான நிகழ்வு நடைபெறும்.

உரியநேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை வயிற்றில் இருந்த பனிக்குடம் உடைந்து அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

2

அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஈரான்!!

Dead

அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், மக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடீரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார்.

ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், ஈரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார்.
பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார்.

தன் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அமிரி அமெரிக்க சென்றதாகவும், மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிவித்ததாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.

பிரபல சிங்கள நடிகர் விஜய நந்தசிறி காலமானார்!!

wijayanandasiri

பிரபல சிங்கள நடிகர் விஜய நந்தசிறி inru மாலை காலமானார். களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

1944 ஆம் ஆண்டு பிறந்த விஜய நந்தசிறி திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், மேடை நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோனாவருனி மாஹத்துருனி, இயஸ் போஸ் ஆகிய பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை தொடர்களில் நடிகராகவும் அவர் மக்கள் மணதில் இடம்பிடித்துள்ளார்.

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து சாதனைப் படைத்த மனிதர்!!

jeans_stich_002.w540

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும் அலுப்பாக இருந்தது. ஒரே மாதிரி வேலையைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. என்னால் வேறு தொழிலையும் செய்ய முடியாத சூழல்.

இந்தத் தொழிலை இன்னும் சுவாரஷ்யமாக மாற்றிக்கொள்வது எப்படி என்று யோசித்தேன். புதுப் புது யோசனைகள் உதித்தன. அவற்றைச் செய்து பார்த்தபோது, ஏராளமான வரவேற்புக் கிடைத்தது. என் அப்பா ஒரு குழந்தைக்கு சிறிய ஜீன்ஸைத் தைத்துக் கொடுத்தார். அதைப் பார்த்துதான் மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 7.5 செ.மீ. ஜீன்ஸை உருவாக்கிப் பார்த்தேன்.

வெற்றிகரமாகத் தைத்து முடித்த பிறகு, 5 செ.மீ. ஜீன்ஸைத் தைக்க ஆரம்பித்தேன். அளவு சிறியதாகப் போகும்போது தைப்பதும் கடினமாகிக்கொண்டே வரும். 2.5 செ.மீ. ஜீன்ஸ் தைத்து முடித்தவுடன், அதைவிடச் சிறியதைத் தைக்க முடியுமா என்று என் அப்பா சவால் விட்டார். அந்த சவாலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக 0.9 செ.மீ. ஜீன்ஸையும் தைத்து முடித்தேன்.

இந்தச் சிறிய ஜீன்ஸை தையல் இயந்திரத்தில் தைக்க முடியாது. ஆனால் அதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறேன். கின்னஸ் புத்தகத்துக்கும் தகவல் அனுப்பினேன். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்கியவன் என்று கின்னஸ் அமைப்பு என்னைத் தேர்வு செய்துவிட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் காசிம்.

பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்!!

balloon_man_003.w540

ரஷ்­யாவைச் சேர்ந்த ஒருவர் பலூன் மூலம் தனி­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வய­தான பெடோர் கொனி­யுகோவ் எனும் இவர், இப் ­ப­ய­ணத்­தின்­போது உறை­ய­வைக்கும் குளிர், உறக்­க­மின்மை போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ளார்.

அவரின் ஒட்­சிசன் முக ­மூ­டி­மீது ஐஸ் படியும் அள­வுக்கு குளி­ரான சூழலில் இவர் பய­ணத்தை மேற்கொள்கிறார். எனினும், உலகை சுற்­றி­வரும் பய­ணத்தில் அரைப்­ப­கு­தியை பெடோர் கொனியுகோவ் கடந்துள்ளார் என அவரின் மகன் ஒஸ்கார் கொனி­யுகோவ் நேற்று புதன்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட பகு­தி­யி­லி­ருந்து கடந்த 12 ஆம் திகதி இப் ­ப­யணத்தை பெடோர் கொனி­யுகோவ் ஆரம்­பித்தார். 56 மீற்றர் (118 அடி) உய­ர­மான இந்த பலூன் ஹீலியம் மற்றும் வெப்­ப­வாயு மூலம் இயங்­கு­கி­றது. இந்த பலூனில் தொங்கும் 2 மீற்றர் (6 அடி, 7 அங்­குலம்) நீளமும் 2 மீற்றர் உய­ரமும் 1.8 மீற்றர் (5 அடி 11 அங்­குலம்) அக­லமும் கொண்ட கார்பன் பெட்டியொன்றில் பெடோர் கொனி­யுகோவ் தங்­கி­யுள்ளார்.

இப்­ப­யணம் ஆரம்­ப­மாகி 12 தினங்­களில், அதா­வது எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் மீண்டும் அவுஸ்­தி­ரே­லி­யாவை வந்­த­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.திட்­ட­மிட்­ட­படி இப்­ப­யணம் நிறை­வ­டைந்தால் ஒரு புதிய சாத­னை­யாக அமையும். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே தற்போதைய சாதனையாகும்.

இரயில் மோதியதில் துண்டான தலை: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!!

417344_1
பிரித்தானியாவில் ரயில் பயணி ஒருவர் ஜன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனின் Wandsworth Common ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட பயணி 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து விக்டோரியா நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே அந்த நபர் ஜன்னல் வழியாக தமது தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவகையில் எதிரே வந்த ரெயிலுக்கு இடையே இவரது தலை சிக்குண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ரெயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர சிகிச்சை பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து பொலிசாருக்கும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், குறிப்பிட்ட நபரை காப்பாற்ற கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் இரு ரெயில்களுக்கும் இடையே தலை சிக்குண்டு காணப்பட்டதால், மருத்துவ குழுவினரால் அந்த நபரின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளனர்.ஏற்கனவே தலையில் பலமாக அடிபட்டு குற்றுயிராக இருந்த அந்த நபரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனில் அவரது தலையை துண்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபரின் தலையை மருத்துவர்கள் துண்டித்து உடலை மீட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து பிரித்தானியா போக்குவரத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட விபத்தால் அந்த ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய, வந்து செல்லவேண்டிய ஏராளமான ரெயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.விபத்தில் உயிரிழந்துள்ள நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

என் காதலுக்கு என்ன பிரச்சனை? கீர்த்தி சுரேஷ்!!

keerthi_suresh_kumar_to_make_debut

ரஜினி முருகன் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்-60யில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்துக்கொள்வீர்களா என கேட்டுள்ளனர்,

அதற்கு அவர் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை.அப்படி காதல் திருமணம் என்றாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, எங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள்’ என கூறியுள்ளாராம்.

ஜீவனாம்சம் வேண்டாம் – 400 கோடி கிடைக்குமா? – அமலாபால்!

amala-paul-al-vijay-marriage-photos_140256681000
விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என விஜய் சமீபத்தில் கூறியிருந்தார்.இந்நிலையில், விஜய்யிடமிருந்து எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என அமலா பால் முடிவெடுத்துள்ளாராம். அதற்கான காரணம் அவருக்கே வெளிச்சம்.

பெரும்பாலும் இதுபோன்ற பிரபலங்களின் விவகாரத்தில் பெரிய தொகை ஜீவனாம்சமாக கொடுக்கப்படும். சமீபத்தில் ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன் மனைவியை விவாகரத்து செய்தபோது, 400 கோடி ருபாய் அளவிற்கு ஜீவனாம்சம் கொடுத்ததாக கூறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜனிக்கு கொலை மிரட்டல்!!

rajani-kanth-linga-movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் மலேசியாவை சார்ந்த ஒரு சிலர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர், மேலும், இதுப்போன்ற பேச்சுக்களை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

பரஷூட்டிலிருந்து தவறி விழுந்து தொழிலதிபர் பலி- வீடியோ இணைப்பு!!

parasailing_1cdc113e-5caa-11e6-8032-7fbe78900359
கோயம்புத்தூரில் பரஷூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’ என்ற அமைப்பின் சார்பில் பரஷூட்டில்பறக்கும் ‘பாரா செயிலிங்’ என்ற வான் சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த சாகச விளையாட்டில் கலந்துகொள்பவர்களிடம் ரூ.500 வசூலிக்கப்பட்டது. இதில் கோவை பீளமேட்டை சேர்ந்த தொழில் அதிபர் மல்லேசுவரராவ்( 53) கலந்து கொண்டார்.அவரை பரஷூட்டொடு பெல்டில் இணைத்து பறக்கவிட்டனர். அவர் சுமார் 10 நிமிடம் வானில் பறந்தார். மல்லேசுவரராவ் பரஷூட்டில் பறந்ததை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் செல்போனில் படம் பிடித்தனர்.

அப்போது மல்லேசுவரராவ் திடீரென்று கூச்சல் போட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் பாராசூட்டில் இருந்து அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மல்லேசுவரராவ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சாகச விளையாட்டு குறித்து பீளமேடு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த விளையாட்டிற்கு முறையான அனுமதி வாங்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மல்லேசுவரராவ் 70 அடி உயரத்தில் பறந்தபோது அவர் அணிந்திருந்த பாராசூட் ‘பெல்ட்’ கொக்கி கழன்றதால் கீழே விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயிலுக்கு கல் வீசிய கும்பல் – உதவிக் கல்விப் பணிப்பாளர் பரிதாபமாக பலி!!

????????????????????????????????????

ரயிலில் பயணித்த போது, கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவ்வாறு பலியானவர் வட மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் கே.எல்.புஸ்பகுமார எனத் தெரியவந்துள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 49 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த 3ம் திகதி பணி நிமித்தம், கொழும்புக்கு வந்த அவர், அதனை நிறைவு செய்ததும், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில், அனுராதபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து, வௌியில் இருந்து சிலர் வீசிய கற்களால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் ஜன்னல் அருகே இருந்த அவரது தலையில் கடும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட புஸ்பகுமார, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஐந்து தினங்களான சுயநினைவின்றி இருந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தார்.

பெண் சுட்டுக் கொலை!!

1 (58)

வெலிஅத்த பகுதியில் 40 வயதான பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்த பெண்ணே இன்று காலை இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னரே பலியாகியுள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிஅத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இனி நுவரெலியாவில் வௌி மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதியில்லை!!

v-radhakrishnan2017ம் ஆண்டுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற, வெளிமாவட்ட மாணவர்கள் எக் காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (08) கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்வி நடவடிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, எம்.திலகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது,

வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை காலப் பகுதியில் இறுதி நேரத்தில் பரீட்சை எழுதுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இம் முறைப்பாட்டுக்கு இணங்க அனுமதியை வழங்கிய பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிமாவட்ட மாணவர்கள் நுவரெலியாவில் பரீட்சை எழுதினாலும், மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட செட் புள்ளிகளே அவர்களுக்கு வழங்கப்படும். இருந்தும் பாரியளவில் பணம் செலவழித்து கொண்டு உல்லாச விடுதிகளில் தங்கியிருந்து பரீட்சை நடவடிக்கை கவனிக்கப்படுவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை மாகாண மற்றும் மாவட்ட கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் கல்வி இராஜாங்க அமைச்சின் கவனத்திற்கு விரைவில் கொண்டு வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.அத்தோடு, 2017ம் ஆண்டு முதல் க.பொ.த உயர் தர மற்றும் சாதாரண தர வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனுமதிகள் மறுக்கப்படும். அதேவேளை இந்த நிலை தொடரும் என்றால் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்ட மாணவர்கள் கல்வி பெறுபேற்றில் வீழ்ச்சி அடைவதுடன், உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் குறிக்கீட்டு கருத்து தெரிவித்தார்.

எனவே இவ் விடயம் தொடர்பில் கல்வி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலேசித்து தீர்கமான முடிவுகளை எடுக்கப்போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சபை நடவடிக்கையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்: இலங்கை வீராங்கனை கிமிகோ ரஹீம் வாய்ப்பை தவறவிட்டார்!!

z_p22-mathew11-696x542
2016 ஒலிம்பிக் போட்டிகளின், பெண்களுக்கான 100 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனையான கிமிகோ ரஹீம் நான்காவது இடத்தைப் பெற்றார்.அவர் 100 மீற்றர் தூரத்தை 1:04:21 என்ற நேரக்கணக்கில் கடந்திருந்தார்.

குறித்த நேரத்தின் பிரகாரம், அவர் மொத்தப்பட்டியலில் 28 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.இதன்மூலம் அவரால் காலிறுதிச் சுற்றுக்கு தெரிவாக முடியவில்லை.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளில், 100 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில், குறித்த தூரத்தை 1:03:78 என்ற நேரக்கணக்கில் கடந்திருந்ததுடன், அது அவரின் சிறப்பான நேரப் பெறுதியாகவும் பதிவாகியிருந்தது.

வவுனியா பஸ்நிலையத்தில் வர்த்தக நிலையம் தீப்பற்றியது!!

 
வவுனியா பஸ்நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தகநிலையமொன்று இன்று(08.08.2016) அதிகாலை தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பஸ்நிலையத்தில் அமைந்துள்ள சிடி விற்பனை நிலையமொன்று மின்னோழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

1 P1200842 P1200844 P1200845 P1200846