ரியோ ஒலிம்பிக்கில் பிரித்தானிய வீரர் உலக சாதனை!!

Adam Peaty

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், பிரித்தானிய வீரர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தகுதிசுற்று 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டி ஆரம்பித்த சில நொடிகளிலே பிரித்தானியாவை சேர்ந்த Adam Peaty (21) பந்தைய தூரத்தை கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதில் சாதனை என்னவென்றால் இதற்கு முன்னர் நீச்சல் போட்டியில் பந்தைய தூரத்தை 57.92 நிமிடங்களில் கடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை Adam Peaty 57.55 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார். இந்த இரண்டு சாதனையும் Adam Peaty தான் படைத்தார் என்பது சிறப்பு.

இது குறித்து Adam Peaty கூறியதாவது: போட்டி முடிந்ததும் ரசிகர்கள் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். இப்போட்டியில் தான் பிரேசில் வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே, பிறகு எதற்கு ஆரவாரம் செய்கிறார்கள் என்று யோசித்த பின், திரையில் தான் பந்தைய தூரத்தை 57.55 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர். இதன் காரணமாக ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர் என்பதை அறிந்தேன் என கூறியுள்ளார்.

Adam Peaty 2014 ம் ஆண்டில் காமன் வேல்த் 100 மீற்றர் நீச்சல் போட்டியில் சாம்பியன்பட்டம் வென்றார் மற்றும் 2015 ம் ஆண்டு வேர்ல்டு சாம்பியன்சிப் போட்டியில் 100 மீற்றர், 50 மீற்றர் போட்டிகளில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்கா அணிந்துவந்ததால் வேலை இழந்த பெண்!!

Far

அமெரிக்காவில் பர்கா அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், வெர்ஜினியா மாநிலத்தில் Fair Oaks Dental Care clinic என்ற மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Viriginia Najaf Khan என்ற இஸ்லாமிய பெண் பணியில் அமர்த்தப்பட்டார்.

இவர் மருத்துவமனைக்கு முதல் இரண்டு நாட்கள் சாதாரண உடையில் வந்துள்ளார், அடுத்த நாள் அவர்களின் பாரம்பரிய உடையான பர்கா அணிந்து மருத்துவமனைக்கு வந்தார்.

இதைக் கண்ட மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சக் ஜு அவரை அழைத்து, மெதுவாக இவ்வாறு பர்கா அணிந்து மருத்துவமனைக்கு வரக்ககூடாது.

இங்கே பல மதத்தை சார்ந்த நோயாளிகள் வந்து செல்லும் இடம், எனவே இதை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் Khan பர்காவை கழற்று முடியாது என கூறியதால், பொறுமை இழந்த சக் ஜு அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

இது குறித்து Khan கூறுகையில், பர்கா அணிந்து வந்து வேலையை செய்வது பெரிய தவறில்லை, இதன் காரணமாக தன்னை வேலையை விட்டு நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பர்கா அணிந்து வந்த காரணத்தினால் வேலையை விட்டு நீக்கியது, இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயதிலிருந்து 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்!!

Ab

பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணம் கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் வயது பெண் தெரிவித்துள்ளார்.

சிறுமி 10 வயதாக இருக்கும்போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளத்காகவும் இது 16 வயது வரை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள Keith Downend என்ற நபர் தற்போது பல்வேறு குற்றவியல் பிரிவின் கீழ் 19 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மனம் திறந்த அந்த இளம் பெண், தமது குழந்தை பருவத்தை அந்த நபர் சூறையாடியதாக கூறிய அவர், தினசரி இருமுறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது வாழ்க்கையின் முக்கிய காலகட்டம் அத்தனையும் நரகத்தில் கழிந்துள்ளதாகவே தாம் தற்போது உணர்வதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதால் இனி தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் குழந்தைகளை, அவரது மனைவி வேலைக்கு செல்லும்போது பார்த்துக்கொள்ளும் பொருட்டு பாதிக்கப்பட்ட சிறுமியை முதலில் தமது வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

வேலை நிமித்தமாக அந்த நபரின் மனைவி பெரும்பாலும் வெளியே சென்று விடுவதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி 10 வயதேயான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தம்மை வலுக்கட்டாயமாக எழுப்பி உறவு வைத்துக்கொள்ள நிர்பந்தித்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3000 முறை தம்மை அவர் பலாத்காரம் செய்திருப்பார் எனவும் அவர் வருத்தம் தோய்ந்த குரலில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த கொடுமைகள் பலவும் வெளியே சொல்ல முடியாதது என உடைந்து அழும் அவர், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.

2 மணி நேரத்தில் 20 பேரை கடித்து குதறிய நாய் : சுட்டுக்கொன்ற பொலிஸ்!!

Dog

சீனாவில் நாய் ஒன்று சுமார் 2 மணி நேரம் சாலையில் செல்பவர்களை கடித்து குதறி வெறியாட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Guizhou மாகாணத்தில் கடைகள் அதிகம் நிறைந்த தெருவில் மக்கள் சென்றுகொண்டிருக்கையில், திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த நாய், தெருவில் நின்றுகொண்டிருந்த நபரை கடிக்க முயற்சிக்கிறது.

அந்நபர் அந்த நாயிடம் இருந்து தப்பிபதற்காக அதனை அடிக்க முயற்சிக்கிறார், ஆனால் அந்நாயோ வெறிபிடித்து, அந்நபரின் கைகளில் தொங்கியபடி அவரை கடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக காரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண்மணியை துரத்தி துரத்தி கடிக்கிறது.

அப்பெண் தான் கையில் வைத்திருந்த ஜாக்கெட்டை வைத்து, அதனை விரட்டியடிக்கிறார். இதுபோன்று 8 வயது குழந்தை முதல் 78 வயது முதியவர் வரை தெருவில் சென்றுகொண்டிருப்பவர்களையெல்லாம் கடித்து குதறியது.

சுமார், 2 மணிநேரம் நாய் நடத்திய இந்த வெறியாட்டத்தால் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நாயினை சுட்டதில் அது உயிரிழந்துள்ளது.

16 வயதுச் சிறுமியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த பொலிஸ்!!

Abuse

மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் பொலிஸ் துணை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, சாங்லி மாவட்டம், விஷ்ரம்பாக் பொலிஸ் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் 26 வயதான பிரேம் சுக்தேவ் பான்சோடை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரேம் சுக்தேவ்வுக்கு சொந்தமான வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பிரேம சுக்தேவ் துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என பிரேம் சுக்தேவ் பான்சோடு மிரட்டியதாக குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பிரேம் பிரேம் சுக்தேவ் பான்சோடு மீது இந்திய தண்டனைச் சட்டம் 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழு வடைகளின் விலை 27000 ரூபாய் : கோவிலில் போட்டி போட்ட பக்தர்கள்!!

Vadai

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி வடைசுடும் நிகழ்வில் சுடப்பட்ட ஏழு வடைகள் 27,000 ரூபாய்க்கு பக்தர்களால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அருகே அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ஏழு வடைகள் அவ்வாறு சுடப்பட்டன. இந்த வடைகளைச் சாப்பிடும் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், இந்த வடைகளை ஏலத்தில் எடுக்க பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் அந்த வடைகளை ஏலத்தில் விட்டனர். இதன்படி முதல் வடை 11,100க்கு ஏலம் போனது. அதனைத் தொடர்ந்து முறையே 2வது வடை 3700, 3வது வடை 4400 என மொத்தம் 7 வடைகளும் 26,600க்கு ஏலம் போனது.

முல்லைத்தீவில் கனரக வாகனத்தில் சிக்குண்ட சாரதி பரிதாபமாகப் பலி!!

 
முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பகுதியிலுள்ள பட்டங்குளத்தின் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் புரண்டதில், அதன் சாரதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4

கொரியாவிற்கு வேலைக்குச் சென்ற 6000 இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்!!

Korea

கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்..

கொரியாவிற்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக சென்ற 6000 இலங்கையர்கள் தாம் தொழில் செய்யும் இடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த நிலைமை பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் எவரும் வேறும் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அவ்வாறு தொழில் செய்யும் இடங்களிலிருந்து தப்பிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த புதிய திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று புகலிடம் கோரும் இலங்கையர்கள்

கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் 13 பேர் பல்வேறு காரணங்களைக் காண்பித்து அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் காரணத்தினால் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பிற்கான வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து. அமைச்சர் தலதா அதுகோரலவும் அதிகாரிகளும் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து மீளவும் வீசா வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்று அங்கு வேறும் காரணங்களைக் காட்டி புகலிடம் கோருவோருக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என நாடுகளிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கோரியுள்ளது.

சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுவது பொருத்தமற்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2000 ரூபாவிற்கு மனைவியை விற்பனை செய்த கணவர்!!

Lady

குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை.

இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்துடன் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்தக் கணவரையும் விட்டு விட்டு தலகொலாவௌ என்னும் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் புதிய வாழ்க்கையைத் தொடர இந்தப் பெண் சென்றுள்ளார்.

இதன் போது தமது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தினால் குறித்த பெண் பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணை விற்பனை செய்த கணவர், வாங்கிய நபர் ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!!

 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்தா மரபினர் வருடா வருடம் இக்கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றனர். இதன்படி செங்குந்தா மரபினர் இல்லத்திலிருந்து கொடிச்சீலை யாழ். சட்டநாதர் சிவன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

அங்கிருந்து திருவூர்தி மூலம் காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.

இதேவேளை, இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன், நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13882152_1700556976638558_9117610238954236823_n 13903440_1700556589971930_9031313361721866892_n 13912484_1700556786638577_4012881490718570364_n 13912600_1700556929971896_5637434446056378788_n 13920820_1700556596638596_7145250107349166810_n 13925129_1700556593305263_8422991060652556796_n

உடல் எடையைக் கட்­டுப்பாட்டில் வைத்­தி­ருக்க எளிமை­யான குறிப்­புகள்!!

Belly

இன்று பல­ருக்­குள்ள பிரச்­சி­னை தான் உடல் எடை அதி­க­ரித்து காணப்படு­வது. பொது­வாக பல­ருக்கு கீழே குனிந்து சில வேலை­களை செய்­வது கூட கடி­ன­மாக இருக்கும்.

சிலர் வேலை­களை செய்து முடிப்­ப­தற்குள் களைப்­ப­­டைந்து விடு­வார்கள். எனவே, உங்கள் எடையை குறைக்க அன்­றாடம் சில வரை­மு­றை­களை கடை­பி­­டித்­­தீர்­க­ளா­னால் உட­ல் எடையை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு சில குறிப்­புகள்.

♦ உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து கொள்ள ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

♦ தற்போதைய உங்கள் எடையை ஒரு குறிப்பேட்டில் குறித்து வையுங்கள்.

♦ உங்கள் உணவுப் பட்டியலையும் அந்த குறிப்பேட்டில் குறித்துக் கொள் ளுங்கள்.

♦ எடையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.

♦ உங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

♦ உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

♦ உடல் எடையைக் குறைக்க கண்ட மாத்திரை, மருந்துகளை உண்ணக் கூடாது.

♦ உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் சிற்சில மாற்றங்களைக் கொண்டுவந்தாலே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.

♦ உங்களைப் போலவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவரின் நட்பைப் பேணுங்கள், முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்கு பெறச் செய்யுங்கள்.

♦ முயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தாரகமந்திரத்தை மனதில் கொள்ளு ங்கள்.

♦ முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

♦ தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்பது, செல்பேசியில் பேசிக் கொண்டே உண்பது, புத்தகங்கள் வாசித்துக் கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள்.

♦ உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள், ஐஸ்கிரீம், நெய், சீஸ், வெண்ணெய்,சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.

♦ சிறிய தட்டில் உணவை உண்ணுங்கள். (உளவியல் ரீதியாகப் பெரிய தட்டில் உண்டால் அதிகம் சாப்பிட வாய்ப்பிருக்கிறது)

♦ மூன்று வேளை அதிகம் உண்பதற்குப் பதில் ஐந்து வேளை குறைவாக உண்ணுங்கள்.

♦ அதிகமாகத் தண்ணீர் அருந்துங்கள்.

♦ காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது, அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

♦ இரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும், கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும்.

♦ உணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள்.

♦ இரவு உணவை நேரத்­தோடு எடுத்­துக்­கொள்­ளுங்கள்.

♦ விரதம் என்றோ,நேரமின்மை காரணமாகவோ எந்த வேளை உணவையும் தவிர்க்காதீர்கள். ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் அடுத்த வேளை உணவை அதிகம் சாப்பிட நேரிடும்.

♦ உங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

♦ மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களைச் சேர்க்காமல் முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

♦ உணவு உண்டபின் குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும்.(பசிப்பது போல் உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப் பொருட்கள் ஜீரணமாகி விட்டது என்று பொருள், எடை கூடாது)

♦அரிசி உணவுகளும் கிழங்கு உணவுகளும் கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை,ஓட்ஸ், பாஸ்தா, ராகி, கம்பு, தினைவகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

♦ காப்பி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக் கூடாது. கபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் கிறீன் டீ, லெமன் டீ, பழச்சாறுகளை அருந்தலாம்.

♦ உணவில் பச்சைக்காய்கறி, சாலட்கள், பழசாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்களைச் சர்க்கரையிட்டு ஜுஸாகக் குடிப்பதற்குப் பதில் பழங்களாகவே உண்பது உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் உடலிற்குச் சத்தினைச் சேர்க்கும்.

♦ பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.

♦ உடல் எடை மெலிய பட்டினி இருக்காதீர்கள்.சமச்சீரான சரி விகித உணவை உண்ணுங்கள்.

♦ இஞ்சிச்சாறு, இஞ்சிரசம் என்று உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
♦ சமையல் செய்ய நொன்ஸ்டிக் பாத்­தி­ரங்­க­ளைப் பயன்படுத்துங்கள், குறைந்த எண்ணெய் செலவாகும்.

♦ மன அழுத்தத்தை அண்ட விடாதீர்கள், அழுத்தத்தில் இருப்போர் அதிகம் உண்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

♦ பசிக்கும் போதெல்லாம் நொறுக்குத் தீனிகளை உண்ணாமல் ஆரோக்கிய மான உணவு, பழங்களைச் உண்ணுங்கள். காய்கறிகள் செலட், ஓட்ஸ் , பழக்கலவைகள் போன்றவை உண்பது பலனளிக்கும்.

♦ உடல் எடையைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸ், கொள்ளுப்பருப்பு ஆகியன முதன்மை வகிக்கின்றன, ஓட்ஸிலும் கொள்ளுப்பருப்பிலும் விதவிதமான பதார்த்தங்களைச் செய்து உடல் எடையைச் சீராக வையுங்கள்.

♦ கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

♦ சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க உதவும்.

♦ இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

♦ கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

♦ உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

♦ பப்பாளிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக்காயைக் கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.

♦ பசிக்காமல் உண்பதும் ருசிக்காக அதிகமாக உண்பதும் தவறு. உங்களுக்குப் பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் உண்ண வேண்டாம். இதுவே உடலைக் குண்டாக்கும். நாவைக் கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

நாசா அறிமுகப்படுத்தியுள்ள Mars Rover வீடியோ கேம்!!

Game

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.

கியூரியாசிட்டி விண்கலம் இதுவரை 13.5 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்துள்ளது சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது தவிர 362,000 தடவைகள் லேசர் கதிரை பாய்ச்சி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது, கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டு வருடத்துடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இதனைக் கொண்டாடும் வகையில் மார்ஸ் ரோவர் (Mars rover) எனும் ஒன்லைன் வீடியோ கேமினை நாசா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடி இந்த கேமை ஒன்லைனில் மட்டுமன்றி அப்பிள் மற்றும் அன்ட்ரோயிட் சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டில் கியூரியோசிட்டி ரோவர் 2 எனும் மற்றுமொரு விண்கலத்தினை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளதாக புதிய தகவலையும் நாசா வெளியிட்டுள்ளது.

nasa1

சவுதியில் இலங்கைப் பணியாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது!!

Saudi

சவுதி – தமாம் அல்கோபர் நகரில் இலங்கை பணியாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

தமக்கான 8 மாத சம்பளம் வழங்கப்படாமை காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக இலங்கை பணியாளர்கள் 12 பேர் அல் கோபர் தொழிற்சாலை நுழைவாயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில ஈடுபட்டனர்.

அதற்கமைய இந்த பிரச்சினைகளுக்கான தீ்ர்வை வழங்குவதற்கு சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் உறுதி அளித்ததனையடுத்து எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதாக அங்கிருக்கும் இலங்கை பணியாளர் ஒருவர்
குறிப்பிட்டுள்ளார்.

இதனிடயே டுபாய் சதுவா நகரில் இலங்கை பணியாளர்கள் 34 பேரினால் ஆரம்பிக்க்படட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பளம் மற்றும் உரிய சலுகைகள் வழங்கப்படாமை காரணமாக தொழிற்சாலை ஒன்றில் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை பணியாளர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தும் சம்பளம்வழங்கப்படாமை காரணமாக சதுவா நகர பஸ் தரிப்பிடத்தில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாமை காரணமாக தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதாக டுபாயில் உள்ள இலங்கை பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் மீட்கப்பட்ட சிசுவை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!!

B3

யாழ்ப்பாணம் இளவாழை வடலியடப்புப் பகுதியில் கோயிலொன்றுக்கு அருகில் காட்போர்ட் பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிசுவை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த சிசுவை இன்று முன்னிலைப்படுத்தி, குழந்தைகள் காப்பகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிசு தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதோடு குறித்த சிசு தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர். எனினும் குழந்தையின் தாய் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும் சிசுவின் தாய் தூரப் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெயியிட்டுள்ளனர்.

பிறந்து 10 தொடக்கம் 15 நாட்களேயான ஆண் சிசுவே நேற்று காலை உயிருடன் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் இளவாழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

B1 B2

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!!

Dead

வேயங்கொட பகுதியில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வேயங்கொட கொட்டல தீ எல்ல ஆற்றில் மூழ்கி நேற்று (06) மாலை இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வேயங்கொட நய்வல பகுதியிலுள்ள தடாகமொன்றில் மூழ்கி ஒன்பது வயதான பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

வவுனியா குருமன்காட்டில் திருட்டு!!

 
வவுனியா குருமன்காட்டிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2016) இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குருமன்காடு நான்காம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2016) இரவு 9.00 மணியவில் திருட்டுச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திருடங்கள் வீட்டினுள் புகுந்து தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.

களவாடபட்ட வீட்டின் முன்புறமாக இரவுவேளை இருபெண்கள் உட்பட மூவர் சந்தேகத்திற்கிடமாக அவ்விடத்தில் நின்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 02 news (1) news (2)