இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஒப்ரேசன் செய்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
அந்த வகையில் சுவார்டி தான் ஆண் என ஏமாற்றி தனது பெயரை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு ஹெனியர்டி(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் சுவார்டி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த ஹெனியாடி அவரை கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் சுவார்டி ஆண் அல்ல, ஒரு பெண் என்பதை அவரது அடையாள அட்டையை வைத்து கண்டுபிடித்தார். இது குறித்து அவர் பொலிஸில் முறைபாடு செய்த உடனே பொலிஸார் விரைந்து வந்து சுவார்டியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது அது தோல்வியில் முடிந்ததாகவும் அதன் பாதிப்பே தற்போது ஏமாற்றி ஒரு பெண்ணையே திருமணம் செய்ததாக கூறினார்
இந்தோனேசியாவில் இது போன்று ஏமாற்றி மோசடி திருமணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழக்கப்படும். தற்போது சுவார்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 7 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு வாகனமொன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அல்மேதா என்ற 71 வயதுடைய பெண்மணி ஒருவர் 17 வயதுடைய கெரி ஹாட்விக்(Gary Hardwick ) என்ற 17 வயதுடைய நபரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் டென்னிஸ் நகரில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண்மணி அவரது மகன் Robert இன் மரணத்தின் போதே கெரி ஹாட்விக் ஐ (Gary Hardwick ) சந்தித்துள்ளார் என்றும் மூன்று வாரங்களுக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயான அல்மேதா கணவனை இழந்ததுடன் சமீபத்தில் மூத்த மகனையும் இழந்துள்ளார் எனவே இதை தாங்கிக் கொள்ள முடியாமல் மணமுடைந்து போயிருந்தார்.
இதனை பார்த்த Garyயிற்கு இவர் மீது ஒரு அன்பு உருவாகியிருந்தது, இதுவே பின்னர் காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் நிகழ்வில் சந்தித்துள்ளனர். பின்னர் Garyதன் காதலை பிறந்த நாள் நிகழ்வின் போது தெரிவித்திருந்தார் தனி ஆளாக மனம் சோர்ந்திருந்த அல்மேதா Garyயின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்த மரணம் குறித்து மேலும் ஒரு சில சந்தேகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில்,
சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கி விட்டது. ஆனால், காவல்துறைக்கே பிலால் மாலிக் யார் என்பது தெரியவில்லை.
வய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிட்டார். இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை. அதோடு, சமீபமாக, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலை வழக்கில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.
ரம்ஜான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, ரத்தக் கறை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?
ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் தனது பேஸ்புக்கில் search செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் Search செய்ய வேண்டும்?
சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை. சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன்?
காவல்துறை எங்கள் மேன்ஷனில் வந்து விசாரிக்கவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து மேன்ஷன் மேலாளர்களையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்துத்தான் விசாரித்தார்கள் என்றுதான், ராம்குமார் தங்கியிருந்ததாக கூறப்படும் மேன்சன் மேனேஜர் அல்லது உதவியாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தனை விஷயங்களையும் எவ்வாறு புறந்தள்ள முடியும்? இதில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதால்தான், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழச்சி என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது ரிஜிஸ்டர்_மேரேஜ் என்றும் கூறுகிறது. அவர் கொல்லப்படும் போது நோம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனே இந்த கொலையை சுவாதியின் கணவர்தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவதைவிட, இது ஏன் ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவனிக்கத் தவறுகிறோமா? அல்லது தவிர்க்கிறோமா?
ஏற்கனவே திருமணமாக கதையை ஏன் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டும் அப்படியானால் சுவாதியின் பெற்றோருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஏன் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2015 ம் ஆண்டு நடந்த T20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்திருந்த பாகிஸ்தான் மொடல் அழகி குவான்டில் பலோச், அவரது சகோதரராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த குவான்டில் பலோச், கடந்த T20 உலகக் கோப்பை போட்டியின்போது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது, இணையங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குவான்டில், முல்தானில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
குவான்டிலை அவரது சகோதரரே கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அறிவித்துள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. தினம் தினம் தன்னை கணவர் சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியது உண்டு.
அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்.
பிரான்ஸின் நீஸ் நகரில் லொரியால் மோதி 84 பேரைக் கொன்ற நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை மொஹமட் லஹ்வீஸ் புஹ்லெல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
31 வயதான குறித்த நபர், குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனினும் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
நீஸில் உள்ள இவரது வீடு குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர் தனியாக இந்தச் செயலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் உடனிருந்தார்களா என்பது தொடர்பில் தெளிவில்லை.
மேலும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில்மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளது.
இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மோதல் நிலையை அடு த்துவிஞ்ஞான பீடம் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளில் உள்ளவிஞ்ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டுசம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர்கூறியுள்ளார்.
வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் வாணி அருணோதயா முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி இன்று(16.07.2016) 1.30 மணியளவில் வேப்பங்குளத்திலுள்ள பாடசாலை விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.சிவசக்தி ஆனந்தன் அவர்களும் பிரதம விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மற்றும் கெளரவ விருந்தினராக முஸ்லிம் தேசிய பாடசாலை அதிபர் M.S.ரம்ஸீன்,
விசேட விருந்தினர்களாக இ.நித்தியானந்தன்(மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்), திரு.கந்தவேள் (அதிபர்- பாவற்குளம் கலைமகள் வித்தியாலயம்), திரு.செல்வகுமார் (மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்), திரு.க.சந்திரகுலசிங்கம் (முன்னை நாள் உப நகரபிதா), M.அமிர்தலிங்கம்(மத்தியஸ்தர் சபை உறுப்பினர், சமாதான நீதவான்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு போட்டிகள்,உடற் பயிற்சி கண்காட்சிகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் இடம்பெற்றன.
அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள் உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருன்கிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.
மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது. மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.
இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள். ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்கின்றது பார்த்தீர்களா..
அது பெரிய விடயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.
ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர். மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.
வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் மாணவர்கள் வரவேற்கின்ற போதிலும் இன்றைய தினம் தமிழ் மாணவர்களால் மேள, தாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.
பெரும்பான்மையினத்தவர்களான சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.
இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊடகவியலாளர் அங்கு சென்ற போதிலும், அவர்களையும் அச்சுறுத்தி மாணவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் தாம் தப்பி, பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியில் வந்துள்ள போதிலும் சிங்கள மாணவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் பொலிசார் சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் நைஸ் நகர தாக்குதலுக்கு பொலிசார் மெத்தனமாக செயல்பட்டது தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரான்சில் உள்ள நைஸ் நகரில் தாக்குதல் நடத்தியவன் ஐஸ்கிரீம் கொண்டு செல்வதாக கூறி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பொதுவாக முக்கியமாக கருதப்படும் விழாக்களின் போது, அவ்விழாக்கள் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் அனுப்பப்படும், ஆனால் நேற்று நடந்த கொண்டாட்டத்தின் போது லொறி எவ்வாறு உள்ளே வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி நேற்று தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து கனரக வாகனங்கள் அனைத்தும் மாலை முதலே வழி மாற்றி அனுப்பப்பட்டன, ஆனால் தாக்குதல் நடத்த வந்தவன் கடற்கரைக்கு ஐஸ்கிரீம் கொண்டுசெல்வதாக கூறி உள்ளே சென்றுள்ளான், பொலிசார் முறையாக சோதனை நடத்தியிருந்தால் இச்சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். இதற்கு பொலிஸாரின் அஜாக்கிரதை தான் காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதி மனைவியிடம் விசாரணை
தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமதுவின் முன்னாள் மனைவியை பொலிசார் கைது செய்து அவரிடம் முகமது யார், அவன் பின்னால் யாரேனும் உள்ளார்களா, மனைவிக்கு இச்சம்பவத்தில் தொடர்பு ஏதும் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தாக்குதல் நடந்த போது லொறியில் இருந்து ஒருவர் தப்பியோடியதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது, அது குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்குமாரின் பொலிஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை பொலிசார் அழைத்து சென்றனர்.
நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்திய பின்னர், பொலிஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் பொலிசார் சமர்ப்பித்தனர்.
வீடியோ எடுக்கப்பட்ட ராம்குமாரின் வாக்குமூலத்தின் சிடி, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது, சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார்.
பொலிஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை பொலிசார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன்.
நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லப்டப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு பொலிசார் அனுப்பியுள்ளனர்.
அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல்போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது.
அதை அவர் தனது லப்டப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.
சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21 ஆகிய திகதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சில சந்தேகங்களும் எழுந்துள்ளன.
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவணி இன்று (16.07.2016) காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.
சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான நடைபவனி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து பின்னர் பசார் வீதியின் ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தான வீதி ஊடாக இலுப்பையடி, வைத்தியசாலை கடந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணி புதிய பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக தாண்டிக்குளம் சந்தியை வந்தடைந்தது.
சமநேரத்தில் பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி மன்னார் வீதி ஊடாக குருமண்காடு காளிகோவிலை அடைந்து கோவில் வீதி ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைந்து ஒன்றிணைந்து வீதி ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.
பாடசாலை அதிபர் ச.சுபாஷ்கரன் தலைமையில் நடைபெற்ற நடைபவணியில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்கள் இ.இந்திரராஜா, துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நடைபவனியில் பாடசாலையின் வரலாற்றை சித்தரிக்கும் பதாதைகளை மாணவர்களால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தமிழரின் பாரம்பரிய கலாச்சார கண்கவர் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வன்னிப் பட்டறை, தமிழ் விருட்சம் வவுனியா மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இணைந்து நடாத்திய தமிழர் பாரம்பரிய ஆடிப் பிறப்பு விழா இன்று (16.07.2016) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் சிலைக்கு முன்னால் இடம்பெற்றது.
இவ் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டத்திற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, கலாச்சார,விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா கலந்து சிறப்பித்ததுடன்,
வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உதவி அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்),செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர், வர்த்தகர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி.
ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று நாம் கொண்டாடுவதில்லையே. மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள். அவ்வளவுதான்.
ஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம், சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன?
தமிழன் இயற்கையோடு இணைந்து வாழ்பவன், அவனது கொண்டாட்டங்களும் இயற்கையோடு இணைந்தவையே. ஆடி முதல்நாளில் சூரியபகவான் தான் செல்லும் பாதையின் திசையை வடக்கில் இருந்து தெற்கிற்கு மாற்றிக் கொள்வதாக நம்பப் படுகிறது.
அந்த ஆடி முதல் திகதியில் இருந்து மார்கழி 31ஆம் திகதி வரையான 6 மாதகாலம் தட்சாயண புண்ணிய காலம் என்றும், இந்த 6 மாத காலமும் தேவலோகத்தில் இரவாகவும், தைமாதப் பிறப்பான தை முதல் நாளில் அங்கே பகல் காலம் ஆரம்பமாகிறது என்றும், இது உத்தராயண புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. தேவலோகத்தில் இராக்காலம் ஆரம்பமாகின்ற ஆடி முதல் நாளைத்தான் நாம் இங்கு ஆடிப்பிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
எமது நாட்டில் ஆடிமாதத்தில் மழை பெய்ய ஆரம்பிப்பதால் விவசாயிகளுக்கு அது விதைக்கும் காலம். விவசாயிகள் எல்லாம் அப்போது மிகவும் உற்சாகமாகத் தமது வயல்களில் வேலையை ஆரம்பிக்கும் பொருட்டே ஆடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றும் கூறுவர்.
ஆடிப்பிறப்பில் நெல் விதைத்துத் தைப்பிறப்பில் அறுவடை. அறுவடையில் வந்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு, மீண்டும் திசை மாறி வரும் சூரியபகவானுக்கு வரவேற்பு. அன்றுதான் தமிழர்க்கு ஆண்டுப் பிறப்பு. எல்லாமே சரியாகப் பொருந்துகின்றன அல்லவா ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஆடிப் பிறப்பைத் தொடர்ந்து, ஆடிமாதம் ஆடி அசைந்து போகாமல், ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடிவேல், ஆடிஅமாவாசை என்று அத்தனை சிறப்புக்களுடன் ஆன்மீகச் சிந்தனைகளைத் தூண்டுகின்ற மாதமாக ஆகிவிட்டது ஆடிமாதம்.
இதுவெல்லாம் சரிதான் ஆடிமாதம் சிறப்பானது தான். ஆனால் இத்தனை சிறப்பான ஆடியில் திருமணங்களுக்கு மட்டும் தடை. இது தமிழரின் வழமை. இந்த வழமைக்குக் காரணம்?
குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் இல்லாத அந்தக் காலத்தில், ஆடியில் திருமணம் செய்தால், அடுத்துவரும் சித்திரையில் குழந்தை பிறக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தது. சித்திரை மாதம் எமது நாட்டில் வெப்பம் கடுமையான காலம். பிறக்கின்ற பிஞ்சுக்குழந்தையால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியுமா அதனால்தான் ஆடியில் திருமணத்துக்குத் தடை.
சித்திரைப் பௌர்ணமியில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்துக்குக் கூடாது (ஆண்குழந்தை என்று சொன்னால் தான் எம்மவர்கள் காதுகொடுப்பார்கள் என்பதால் தான் ஆண்குழந்தை என்றிருக்கிறார்கள் போலும்) என்று ஒரு பயத்தையும் காட்டி ஆடியில் திருமணத்துக்குத் தடை விதித்திருக்கிறார்கள்.
பயத்தைக் காட்டி எம்மைப் பக்குவப்படுத்துகின்ற இந்துமதக்கோட்பாடுகளில் ஒன்று தான் இதுவும்.
திரும்பவும் ஆடிப்பிறப்புக்கு வருவோம். ஆடிப்பிறப்பென்றவுடன் ஆடிக்கூழ், கொழுக்கட்டை எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா, அத்துடன் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!” என்றாரம்பிக்கும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா?