உலகிலேயே பெரிய ஹோட்டல்கள் இலங்கையில்!!

Luxury-Hotel
அமெரிக்க டொலர் 133 மில்லியன் முதலீட்டுடன் புதிய ஹோட்டல் நிர்மாணவேலைத்திட்டம் 7 ற்காக அமெரிக்கா இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக இலங்கைமுதலீட்டு சபை தெரிவித்துள்ளது. சமர் சீசன், சோபியா கொழும்பு, த கோல்டன், கிரவுன் ஹோட்டல், கோல் ஹெரிடேஜ்லங்கா, மெரின் ட்ரைவ் ஹோட்டல் போன்றவையே இலங்கையில்அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் இலங்கையின் முதலீட்டு சபையுடன்ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த ஹோட்டலிற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடங்களில்ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா வியாபாரம் அதிகம்வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக உலக நாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாகஇருப்பதாகவும் முதலீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்புணர்வு- இரு சந்தேகநபர்கள் கைது!!

1 (28)
அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி தனது 6 மாத குழந்தையுடன் வீட்டியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் 5 காமுகர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அவரின் கணவர் விட்டுச்சென்றுள்ள நிலையில், குறித்த பெண்ணின் சகோதரி வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார் என்றும், சம்பவ நாள் அன்று பெண்ணின் சகோதாரியும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக இதுவரையில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய சந்தேகநபர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

arrest (1)
முதலை இறைச்சியுடன் பொலன்னறுவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பொலன்னறுவை – தேசிய பூங்கா பகுதி பரகாசு வில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மெதிரிகிரிய பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் பல நாட்களாக இவ்வாறு முதலைகளை கொலை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் பற்றிய முழு விபரம்!!

essential-items

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு 16 அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பீ தென்னகோன் கூறியுள்ளார்.

குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் இனிமேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களின் விபரங்கள் வருமாறு.

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா

கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா

சிவப்பு பருப்பு – 169 ரூபா

சீனி 1 கிலோகிராம் – 95 ரூபா

நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் – 495 ரூபா

நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் – 410 ரூபா

கடலை 1 கிலோகிராம் – 260 ரூபா

பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா

டின் மீன் – 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா

கோதுமை மா 1 கிலோகிராம் – 87 ரூபா

உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா

கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா

மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா

சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல்!!

 
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில், செல்வன் டிலக்ஸன் தலைமையில் நேற்று (13.07.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஓமந்தை வைத்திய அதிகாரி செ.மதுரகன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் ‘வெண்கோடு’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. செல்வன் ந.சதுர்ஸன், செல்வி தே.டிலானி ஆகியோர் இந்நூலின் இதழாசிரியர்களாவர்.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றியவர்கள் 2016 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களை வாழ்த்தி கௌரவித்து நம்பிக்கை ஊட்டினர்.

1

2

3

4

5

6

7

13620237_1115912061804131_6515842081870091152_n

13626495_1115912075137463_2622725324525973345_n

13645302_1115911715137499_8888895614836033987_n

13654171_1115912468470757_8165452432384454752_n

13669039_1115913001804037_7230544506808832456_n

13681004_1115912975137373_4710739758704416250_n

13686734_1115911828470821_3618873181326209063_n

13690592_1115911441804193_3288932914991303654_n

13697036_1115912478470756_7690425306590767691_n

13700020_1115911485137522_6487287942821494505_n

13700234_1115911908470813_792644753049221797_n

13700234_1115912455137425_8450546360162125460_n

வவுனியா கிடாச்சூரி மாணவி தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

 
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 இல் கல்வி கற்கும் செல்வி தர்மிதா சசிகுமார் தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு ஒன்றில் இடம்பெற்ற பாஓதல் நிகழ்வில் முதலிடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவியை தமிழ்ப்பாட ஆசிரியர் திருமதி கனகாம்பிகை சிவனேந்திரன் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி தமிழினி சொக்கலிங்கம் இருவரும் இணைந்து தயார்ப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு மாகாண ரீதியில் இடம்பெற்ற போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இம் மாணவியை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் ஆகியோருடன் இணைந்து வவுனியா நெற் இணையத்தளமும் தனது வாசகர்களுடன் இணைந்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

12143322_115201452169805_5200397966765582437_n 13322065_1724145001179617_5617305843759261423_n 13332736_1724144981179619_5955991199627274049_n (1) 13332736_1724144981179619_5955991199627274049_n 13606633_1737491633178287_1525147158050961537_n 13615128_1737491599844957_2694091547445523155_n

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இருதய சத்திர சிகிச்சைக்கான நிதி அன்பளிப்பு!!

 
நேற்று முன்தினம்(12.07.2016) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக உடுவில்லை சேர்ந்த பரமனாதன் இராணி என்பவரின் இருதய சத்திர சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த துஸ்சியந்தன் அவர்களால் 25000 ரூபாவும் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம் அவர்களால் 10000 ரூபாவும் சுழிபுரத்தை சேர்ந்த பாலா என்பவரினால் 5000 ரூபாவுமாக சத்திர சிகிச்சைக்காக ரூபா 40000 வங்கியில் வைப்பில்லிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விண்ணப்பமானது அவரது மகள் ப.ரேகா என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடந்த 24.06.2016 அன்று முன் வைக்கபட்டது. அதில் அதில் மேலும் தெரிவிக்கையில்..

1990ம் ஆண்டு தாங்கள் தையிட்டி காங்கேசன்துறை மண்னை விட்டு இடம்பெயர்ந்து உடுவில் தெற்கு புதுமடம் மானிப்பாயில் வசிக்கின்றோம். 2 பெண் பிள்ளைகளை சுமையாக தாங்கி வயதான தந்தையுடன் வாழ்கின்றோம். தற்போது எனது தாயாருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பது கண்டுபடிக்கபட்டுள்ளது. நாங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றோம்.

லங்கா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்க்கு ரூபா 800000 தேவையாக உள்ளது. எங்களின் பெயரில் உள்ள காணியையும் நகைகளையும் அடகுவைத்து அவரின் வைத்திய சிகிச்சைக்காக பணம் சேர்த்துள்ளபோதும் போதுமானதக இல்லை. எனவே தங்களிடமும் இவ் உதவியை வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

11 12 13

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் மைதானம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

 
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுதிட்டப் பகுதியில் 4 ஏக்கர் விஸ்தீரமான விளையாட்டு மைதானம் அரச ஊழியர் வீட்டுத்திட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கு.சண்முகலிங்கம் தலைமையில் அமைக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டது.

அரச ஊழியர்கள் தமக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும்முகமாக கடந்த 11.07.2016 மாலை 5.30 மணியளவில் அரச ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இவ் விளையாட்டு மைதானத்தை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துடன் விளம்பரப் பலகையையும் திறந்துவைத்தனர்.

4 ஏக்கர் விஸ்தீரமான இவ்விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பாதை, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கட் விளையாட்டுக்கள் விளையாடுவதற்கேற்ப அமைக்கப்படவுள்ளது.

1 20160711_173241 20160711_173745

வவுனியாவில் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்!!

 
புளொட் அமைப்பின் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் நேற்று (13.06.2016) காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கத்தினதும், கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரனினதும் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா(கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் நா.சேனாதிராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.ரவீந்திரநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் , வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான குகதாசன், சு.காண்டீபன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர்களான ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, மூர்த்தி ஆகியோருடன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 IMG_3175 IMG_3181 IMG_3186 IMG_3187 IMG_3188 IMG_3190 IMG_3191 IMG_3192 IMG_3193 IMG_3194 IMG_3195 IMG_3196 IMG_3198 IMG_3199 IMG_3207 IMG_3208 IMG_3213 IMG_3214 IMG_3217 IMG_3218 IMG_3220 IMG_3222 IMG_3223 IMG_3224 IMG_3226 IMG_3229 IMG_3230 - Copy IMG_3234 IMG_3235 IMG_3239 IMG_3276 IMG_3279

விவசாயம் செய்யவா? கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமரோனிடம் வினவிய 6 வயதுச் சிறுமிகள்!!

Camaron

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் ‘விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?’ என வினவினர்.

அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்கு தந்தை என்ற வகையில் அவர்களுக்கு எவ்வாறு வாசிப்பது என்பதைக் கற்பிக்க வேண்டியுள்ளது. அதனால் நான் அந்தப் பணியையே தெரிவு செய்யவுள்ளேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

Dino

ஜேர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு ஜேர்மனியில் இறைச்சி உண்ணும் இனத்தை சேர்ந்த டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு ஆதாரமாக இந்த வகையை சேர்ந்த ஒரு டைனோசரின் பல்லை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஜேர்மனி கடல் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.

குறிப்பாக, தற்போதைய பெர்லின் மற்றும் ஹேம்பர்க் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்துள்ளது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

டைனோசர்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் களமிறங்குகிறது பிளாக்பெர்ரி!!

blackberry-vienna-3d

கைப்பேசி சந்தையில் உயர்தரமானது என்ற முத்திரையுடன் விற்பனையில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் இயங்குதள போட்டியினால் பெரும் சரிவைச் சந்தித்தது.

பின்னர் கூகுள் நிறுவன ஆதரவுடன் அண்ட்ரோய்ட் இயங்குதள பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகம் செய்தது. இருப்பினும், அதிகபட்ச விலையால் செல்போன் சந்தையில் எதிர்பார்த்த விற்பனை இலக்கை அடைய முடியவில்லை.

இந்நிலையில், நடுத்தர மக்களின் ஆதரவைப் பெறும் வகையிலான விலையில் புதிதாக இரு வடிவங்களில் அண்ட்ரோய்ட் இயங்குதள ஸ்மார்ட் போன்களை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சென் தெரிவித்துள்ளார்.

இதற்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அண்ட்ரோய்ட் இயங்குதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரில் சொந்தமாக செல்போன்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதுவரையில் தனது அண்ட்ரோய்ட் இயங்குதளம் உள்ளிட்ட சொப்ட்வெயார்களை சாம்சங், ஜியோமி உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு அளித்து வந்தது. (ஆனால் கூகுள் மற்றும் நெக்ஸஸ் நிறுவனம் இணைந்து கூகுள்-நெக்ஸஸ் என்ற செல்போன்களைத் தயாரித்து வருகிறது.)

இந்நிலையில், உலகம் முழுவதும் 80 வீதம் பேர் அண்ட்ரோய்ட் இயங்குதள செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் இந்த வளர்ச்சியால் பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டன.

இந்நிலையில், இந்த அண்ட்ரோய்ட் இயங்குதளம் மற்றும் அது சார்ந்த மென்பொருட்களின் புதிய அப்டேட்களுக்கு கூகுள் நிறுவனம் அந்தந்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய சிக்கல் இருந்து வருகிறது.

ஆனால், அப்பிள் ஐ போன் நிறுவனத்திற்கு இந்த சிக்கல் இல்லை. ஏனென்றால், இந்நிறுவனம் சொப்ட்வெயார் (அப்பிள் இயங்குதளம்) மற்றும் ஹார்ட்வெயார் பாகங்களை சொந்தமாகவே தயாரித்து செல்போன்களை வெளியிடுகிறது.

எனவே, இதைக் கருத்திற்கொண்டு முழுவதுமாக கூகுள் நிறுவனம் சார்பில், கூகுள் பிராண்ட் பெயரிலேயே சொப்ட்வெயார் மற்றும் ஹார்ட்வெயார்களுடன் செல்போன் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அவதானம் : வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழப்பு!!

Dengu

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 20,000 அதிகமானோர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்காக விசேட வேளை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

50 வருடத்திற்கு முன்னர் முதலாவது டெங்கு நோயளர் இனங்காணப்பட்டதுடன் அன்றில் இருந்து இதிவரை வருடா வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றார்!!

 
பிரித்தானியாவிப் புதிய பிரதமராக அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மேயை முடிக்குரிய ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளார்.
இதனடிப்படையில் பிரித்தானியாவில் மார்க்கரட் தாட்சருக்குப் பின்னர் இரண்டாவது பெண் பிரதமராக தெரசா மே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தெரசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அத்துடன், தனது தலைமையிலான அரசாங்கம் சாதாரண மக்களுக்காகப் போராடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஏழைகள், பெண்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தனது அரசாங்கம் போராடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் விட்டுச் சென்ற பணியை தாம் தொடரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது பதவி விலகல் கடிதத்தினை ராணியிடம் கையளித்த டேவிட் கமரூன் புதிய பிரதமர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன், நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இதன் போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன், இணைந்திருப்பதாக என்பது குறித்து அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சுமார் 52 வீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்திருந்த நிலையில் டேவிட் கமரூன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 1 2 3

விரைவில் சுவாதியின் பெயரில் மொபைல் மென்பொருள்!!

Swathi

பொறியியலாளர் சுவாதியின் பாடுகொலை பலருக்கு பாடம் கற்றுத்தந்துள்ள நிலையில், குறித்த கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

கடந்த மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் படுகொலை பெண்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பாதுகாப்பு படை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக சுவாதி மொபைல் அப்ளிகேஷன் என்ற அப்ஸை விரைவில் அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்ஸில் பெண் பயணிகளை பாதுகாக்கும் வகையிலான பல புதிய வசதிகள் வடிவமைக்கப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மஞ்சள் கடவையில் விபத்து : பொலிஸ் அதிகாரி உடன் வேலை நீக்கம்!!

Yellow Crossing

உள்நாடு கடமைக்கு உரிய நேரத்தில் சமுகமளிக்காது தம்புள்ளையில் ஒரு விபத்து ஏற்பட காரணமான பொலிஸ் அதிகாரியொருவர் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை நகரில் நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் வீதியின் மஞ்சள் கடவையில் விபத்துக்குள்ளாகினர். இதன் போது அங்கு கடமையிலிருக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி சமூகமளித்திருக்காத நிலையில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காலை 6.00 மணிக்கு கடமைக்கு சமூகமளித்திருக்க வேண்டிய தம்புள்ளை பொலிஸ் இன்ஸ்பெக்டரான சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மேற்படி விபத்து இடம்பெறும் போது கூட கடமைக்குத் திரும்பியிருக்கவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தம்புள்ளை நகரில் தம்புலிகம மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் வேகமாக வந்த ‘கெப்’ வண்டி மோதியதில் அந்த பாடசாலையில் 6 மற்றும் 7ம் வகுப்புகளில் கல்வி கற்கும் மூன்று மாணவச் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் ஒரு பொலிஸ் அதிகாரி அங்கு கடமையிலிருந்துள்ளார்.

எனினும் சம்பந்தப்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அங்கு கடமைக்குச் சமூகமளித்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது