நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
புழல் சிறையில் ராம்குமாரை சரியாக அடையாளம் காட்டிய சுவாதியின் தந்தை, ராம்குமாரை பார்த்து கதறி அழுதுள்ளார்.
புழல் சிறையில் ராம்குமாரை போலவே முகத்தோற்றம் கொண்ட 35 பேரில் இருந்து 10 பேரை நீதிபதி சங்கர் தேர்வு செய்து அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைத்தார்.
ராம்குமாரின் கழுத்தில் பிளேடால் வெட்டப்பட்டு, தையல் போட்ட அடையாளம் இருப்பது அனைவருக்குமே தெரியுமென்பதால், அடையாள அணிவகுப்பில் பங்கேற்ற அனைவரின் கழுத்திலும் பிளாஸ்திரி போடப்பட்டு ஒரே மாதிரியாக காட்சியளிக்குமாறு செய்யப்பட்டது
ராம்குமாரை அடையாளம் காட்ட மொத்தம் 3 முறை அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது. முதல் ரவுண்டில் சுவாதியின் தந்தை, ராம்குமாரை சரியாக அடையாளம் காட்ட முடியாமல் குழம்பியதாக கூறப்படுகிறது.
எனினும் மிகுந்த யோசனைக்குப்பின் இவர்தான் என்று அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இரண்டாவது ரவுண்டில் அனைவருமே சிவப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த ரவுண்டிலும் சுவாதியின் தந்தையும், சிவகுமாரும் ராம்குமாரை எளிதாக அடையாளம் காட்டியுள்ளனர்.
முதல் இரு ரவுண்டுகளிலும் ராம்குமாரை அடையாளம் காட்டினாலும் ராம்குமாரிடம் சுவாதியின் தந்தை எதையும் பேசவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் ராம்குமாரை பார்த்ததும் சுவாதியின் தந்தையால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
உணர்ச்சி வசப்பட்டவராய், ” என் மகளை ஏன் கொலை செய்தாய்’ என திரும்ப திரும்பக் கேட்டு கதறியுள்ளார். “உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள் இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் ”எனக் கூறி கண்ணீர் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான வாழ்க்கை, பிரம்மாண்ட மால்கள், கோலிவுட், கூவம், மெரினா என இன்னும் பற்பல விஷயங்களுக்காக சென்னையை நாம் அறிவோம். ஆனால், நம்மில் பலரும் அறியாத பக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
வாகனங்கள் முந்திச் செல்லும் சென்னையின் பகல் பொழுதை தெரிந்திருக்கும் நாம் நடுநிசியில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை.
அப்படித்தான் நடுநிசியில் சென்னையை அறிய முற்பட்டிருக்கிறார் திருநங்கை அப்சரா ரெட்டி. சமூக ஆர்வலர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் நோக்கர் என பல்வேறு கோணங்களில் இயங்கிவரும் இவர் தனது அனுபவத்தை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
அவரது முகநூல் பதிவில் இருந்து:
சென்னை நகரம் நடுநிசி இரவில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்பது எனது திட்டம். நீண்ட நாள் திட்டத்தின்படி அன்றையதினம் நண்பர் ஒருவருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். லயோலா கல்லூரியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தோம்.
ஒரு இடத்தில் வழி நெடுக மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்புடன் பெண்கள் நிறைந்திருந்தனர். சொகுசு கார்களிலும், காஸ்ட்லி பைக்கிலும் வலம் வந்தவர்கள் அவர்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பேரம் நடந்து கொண்டிருந்தது.
காரில் இருந்து இறங்கிய நான் அங்கே நின்றிந்த ஒரு பெண்ணிடம் நான் வழக்கமான கேள்வி கேட்க அவரும் வழக்கமாக சொல்வதைப்போல் எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை என்றார்.
நான் வேலை தருகிறேன் என்றேன். என்னைப் பார்த்து சிரித்து, கேலி செய்தனர். அப்போது அங்குவந்த சிலர் என்னிடம் உனக்கு என்ன விலை எனக் கேட்டனர். வெறுப்பில் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.
அப்போது அவ்வழியாக ஒரு ரோந்து வாகனம் வந்தது. அதிலிருந்த காவலர் ஒருவரிடம் இதெல்லாம் நிறுத்த மாட்டீர்களா சார் எனக் கேட்டேன். அவரது பதில் என்னை அதிர வைத்தது.
என்ன செய்ய மேடம், ஏதாவது சொன்னால் எங்களுக்கு சாபம் விடுகிறார்கள். செருப்புடன் துரத்துகிறார்கள் அதையும் மீறி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றால் பொலிசார் எங்களை பலாத்காரம் செய்துவிட்டனர் என புகார் கொடுக்கின்றனர். அதனால் அமைதியாகவே இருந்துவிடுகிறோம் என்றார்.
மௌனத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம். அடுத்தடுத்ததாக 4 பகுதிகளுக்குச் சென்றோம். மெரினாவின் நேப்பியர் பாலம் அருகே நடந்த சம்பவம் என்னை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை.
சைக்கிளில் குழந்தையுடன் (4 வயது இருக்கும்) வந்த ஆசாமி சாலையில் நின்றிருந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலத்துக்கு அடியில் சென்றுவிட்டார்.
குழந்தையே இருட்டில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தது. மீண்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தேன். அதே பதில் “மேடம், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இன்று இவ்விடத்திலிருந்து துரத்திவிடுவோம். நாளை வேறு ஒரு இடத்தில் இதே வேலையை செய்வார்கள். கைது செய்தால் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்” என்றார்.
இரவு இன்னும் நீண்டு செல்ல மூன்றாம் பாலினத்தவரை நினைத்து வெட்கிப் போனேன். அவர்களுக்காக வருந்துகிறேன்.
ஆனால், இத்தகைய செயல்களை செய்வதால் எப்படி சமூகத்தில் மரியாதையும், சம அந்தஸ்தும் கோர முடியும். பாலியல் தொழிலின் அடையாளமாக இருந்து கொண்டே வேலை வாய்ப்பில் எப்படி உரிமை கோர முடியும்.
பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டுவந்தால் அல்லவா வெகுஜனத்தோடு இயைந்து வாழ முடியும். இது சரியான தருணம்.
இப்போதே இவர்கள் அனைவருக்கும் சரியான வழிகாட்டுதலை தர வேண்டும். கண்டிப்புடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் கூடிய விரையில் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த சமூக விரோத செயலால் நிரம்பிவிடும். அவர்கள் தங்களது சுயமரியாதையை உணர வேண்டும்.
மேலும் இத்தகைய பாலியல் தொழிலால் விளையும் ஆரோக்கிய கேடு குறித்தும் நான் கவலை கொள்கிறேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆண் காவலர்கள் இவர்களை கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் பெண் காவலர்கள் கைது செய்யட்டும்.
ஒவ்வொரு முறை பிடிபடும்போதும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். பாலியல் தொழிலை தடுத்து நிறுத்துவதில் காவலர்கள் துணிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது.
இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.
வேலை பார்த்தல்
பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும்.
இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.
வேலைபார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு (employor) 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது 12ம் திகதி ஆடி மாதம் 2016-ல் இருந்து அமுலுக்கு வருகின்றது.
வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துபவர் தொடர்பான அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிபுணத்துவக்கட்டணம் (skill charge) செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
உள்துறை அமைச்சு ஒரு வருடத்துக்கன நிபுணத்துவ கட்டணம் € 2,000யும் சிறிய அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ கட்டணம் € 364 அளவிட தீர்மானித்துள்ளது.
ஆனால் PHD-level மற்றும் tier-4 மாணவர்கள் வேலை பார்க்கும் குடிவரவு (tier-2) நிலைக்கு மாறும் போது இக்கட்டணம் அறிவிடப்படமாட்டது, இந்த சட்ட மாற்றமானது சித்திரை மாதம் 2017 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.
குடியிருப்புகளில் குடியிருப்பு தொடர்பான மாற்றங்கள் (Residential Finance)
பிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.
இச்சட்டமானது இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள வாடகை ஒப்பந்தத்திற்கும் இனி வழங்க இருக்கும் வாடகை ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையதாகும். இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.
இவ்விடயம் சம்பந்தமாக வீட்டு உரிமையாளர்களும் (HOME OWNERS) வீட்டு உரிமையாளர்களின் முகவர்களும் (ESTATE AGENT) விரைந்து செயற்பட பணிக்கப்படுகின்றனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான மாற்றங்கள்
பிரித்தானிய வசிப்பிட உரிமை இல்லாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து
செய்யப்படும். மேலும் வசிப்பிட உரிமை இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் வாகனம் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒட்டுநருக்கு 11கிழமைக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
வங்கி கணக்குகள் (Bank Accounts)
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் வசிப்பிட உரிமை வங்கிகளால் சோதனை செய்யப்படும், இதனை செயல்படுத்தப்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு வரை முறை விரைவில் வெளியிடப்படும்.
வசிப்பிட உரிமையினை குடிவரவுத் திணைக்களத்துடன் உறுதி செய்வதில் ஏற்படும் செலவை வங்கி அதன் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.
பிரித்தானியா வசிப்பிடவுரிமை இல்லாமல் வசிப்பவர்களின் வங்கி கணக்குகள் நிறுத்தப்படும் அல்லது நீதி மன்ற அனுமதியுடன் குறிப்பிட்ட கணக்குகள் உறைவு நிலை அனுமதியை (FROZEN ORDER) பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இச்சட்டமானது பிரித்தானிய காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தை விட மேலதிகமான அதிகாரத்தினை பிரித்தானிய விதிவுடமை இல்லாதவரை பிடித்தல் அவரது உடமைகளை தேடுதல் மற்றும் உடமைகளை கைப்பற்றுதல் தொடர்பாக வழங்கியுள்ளது.
இச்சட்டமானது குடிவரவு விதிகளை மீறுபவர்களை குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கும் மேலாக தண்டிக்கின்றது. இச்சட்டம் வரைவு நிலையில் இருக்கும் போது பல்வேறுபட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாகியுள்ளது.
மனித உரிமைகளை சிறப்பாக பேணிப் பாதுகாத்து வந்த பிரித்தானிய இன்று அதன் வரம்புகளில் ஏறி நின்று அதனை கவனிக்காமல் விடுவது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது. மேலும் இச்சட்டமானது குடிவரவாளர்களை விடிவிப்பது குடிவரவாளர்களை தடுத்து வைத்தல் மேல் முறையீட்டு அனுமதி மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு David Thayaparan M (Solicitor) – 02085408888
நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கர்நாடாக சட்ட மேலவையில் காலியாகவிருக்கும் 3 நியமன உறுப்பினர்கள் இடத்தினை நிரப்பினால் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 33ஆக உயரும். இதை கருத்தில் கொண்டு காலியாகவுள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா ஆர்வமாகவுள்ளார்.
தற்போது நடந்து வரும் சட்டபேரவை மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் மூன்று நியமன உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் முதல்வர் உறுதியாகவுள்ளார்,
இதில் பிரதிநித்துவம் இல்லாத சாதியினருக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது என்ற யோசனையும் சித்தராமையாவுக்கு உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், உள்துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வருடன் இரண்டு முறை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்
இதில் பிரதிநித்துவம் இல்லாத சாதியினருக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், உள்துறை அமைச்சருமான ஜி.பரமேஸ்வருடன் இரண்டு முறை முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளார்.
மூன்று இடங்களுக்கு முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் பரகூரு இராமசந்திரப்பா, இலக்கிய எழுத்தாளர் மருளசித்தப்பா, நடிகையும், முன்னாள் எம்.பியுமான ரம்யா மற்றும் கர்நாடக மாநில விஸ்வகர்ம மகாசபை தலைவர் கே.பி.நஞ்சுண்டி ஆகியோர் இடையில் போட்டி நிலவுகிறது.
நடிகை ரம்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி காங்கிரஸ் மேலிடம் வாய்மொழியாக உத்தரவிட்டும், அவரை நியமிக்க மாநில காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், எனவே 3 மேலவை நியமன உறுப்பினர்களை தேர்வு செய்யும் விடயத்தில் காலதாமதமாகி வருவதாக அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
கிளிநொச்சி – முரசுமோட்டை, சேற்றுக்கண்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.07.2016) மாலை மீட்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சகாதேவன் சுமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்படி நபர், ஆற்றில் நீராடச் சென்ற போது உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த, சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பி இரண்டு மணித்தியாலங்கள் கடந்த வேளையிலும் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என ஊர்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, இறந்தவரின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து இன்று(13.07.2016) காலை வவுனியா தினச்சந்தைப் பகுதியிலிருந்து பேரணியாக வவுனியா மாவட்ட செயலகம் சென்று மாவட்ட அரசாஙக அதிபர் எம்.பி.புஸ்பகுமராவை சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
அம் மனுவில் வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், விவசாயிகளின் போக்குவரத்தினை கருத்திற்கொண்டு தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துத் தருமாறும் கோரியே அம் மனுவினை வவுனியா மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் காணாமல் போன சம்பங்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தலையிடுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரை தலையிடுமாறு அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, விசாரணைகளில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு பதிவு தபாலில் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
மகாவலி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்ட 13 பேரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மணல் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 13 உழவு இயந்திரங்களை சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும்.இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் வீதி ஊடாக சேவையில் ஈடுபடும்.
இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய பஸ் நிலையத்திலும், கொழும்பு, வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் கழுகு ஒன்று சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் கடந்த வாரம் வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதனை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
உயரத்தில் பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று அசுர வேகத்தில் திடீரென வந்து தனது பெற்றோருடன் கண்காட்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த சிறுவனை தூக்கிச்செல்ல முயன்றிருக்கிறது.
ஆனால், அந்த கழுகால் சிறுவனைத் தூக்க முடியவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் மிரண்டுபோன சிறுவன், இரத்த காயங்களுடன் கதறி அழுது துடித்திருக்கிறான்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள், கழுகிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காணொளியில் காண்க…
ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால், கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
பிரிட்டனில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்ஸ், உள்துறை மந்திரி தெரசா மே ஆகியோர் இருந்தனர்.
இதில் எதிர்பாராத திடீர் திருப்பமாக ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், பிரதமர் டேவிட் கேமரூன் இன்று (புதன்கிழமை) பதவி விலகுகிறார். தெரசா மே புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.
புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே-வின் பெயரும், பிரிட்டன் நாட்டின் பிரபல மொடலும், ஆபாசப் படங்களில் நடித்து வரும் டெரசா மே-வின் பெயரும் ஒரேமாதிரியாக இருப்பதால், பலரும் ஆபாச நடிகைதான் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளதாக நினைத்து உலகில் உள்ள பல ‘ரசிக சிகாமணிகள்’ அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர்.
ஒருநாளும் இல்லாத திருநாளாகப்படி திடீரென குவிந்துவரும் வாழ்த்து மழையில் குளித்துவரும் டெரசா மே ஆனந்தத்தில் திக்குமுக்காடிப்போய் உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே-ன் பெயர் ஆங்கிலத்தில் எழுதும்போது, Theresa May என்றும், ஆபாச நடிகை தனது பெயரை Teresa May எனவும் எழுதி வருகின்றனர். இந்த ´H´ என்ற ஒரு எழுத்தால்தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகளை கண்டு வியந்துவரும் டெரசா மே, நான் அவளில்லை பாணியில் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்வதுடன், பிரதமராக பதவியேற்கவுள்ளது வேறொரு தெரசா மே என்று பவ்யமாக விளக்கமும் அளித்து வருகிறார்.
இலங்கையின் புகழ் பெற்ற முன்னணி நகைச்சுவை நடிகரான மரிக்கார் ராமதாஸ், சென்னையில் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு உயிரிழக்கும் போது வயது 69 ஆகும்.
அன்னாரின் மறைவுக்கு இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் கலைத்துறை சார்ந்தவர்கள் அனுதாபங்களை வௌியிட்டுள்ளனர்.
இலங்கை கலை வரலாற்றில் சரித்திரம் படைத்திட்ட ஒரு மாபெரும் கலைஞரான மரிக்கார் ராம்தாஸ் என்று அழைக்கப்படும் ராமதாஸ் அவர்களின் மறைவு இலங்கை கலையுலகிற்கு பாரிய இழப்பாகும் என முன்னாள் பிரதி அமைச்சரும் கலைஞருமான பிரபா கணேசன் தனது இறங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா நற்பேறு அடைந்திட, நன்றியுடன் பிரார்த்திப்பதாக உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட் தனது முகப்புத்தக பக்கத்தில் அனுதாபம் வௌியிட்டுள்ளார்.
மரிக்கார் ராமதாஸின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருக்கு நிகர் அவரே. அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.
முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என இளம் பெண்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.ஆனால் இளம் பருவத்தினருக்கு முகப்பரு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. முகப்பரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை இங்கே பார்ப்போம்.
ஐஸ் கட்டி
ஒரு ஐஸ் கட்டியை காட்டன் துணியில் எடுத்து சுற்றி அதனை பருக்கள் உள்ள இடத்தில் ஒற்றி வைத்து எடுக்கவும். இந்த முறையை வாரம் 2 முறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
எலுமிச்சை மற்றும் ஒலிவ் ஆயில்
எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். பருக்கள் மீது ஆலீவ் ஆயிலை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
புதினா
புதினா இலைசாறு எடுத்து பருக்கள் மீது தடவி இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவ வேண்டும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
டீ – ட்ரீ ஆயில்
டீ – ட்ரீ ஆயிலுடன் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர பருக்கள் மறைவதை காணலாம்.
Pokémon Go ஆனது பரபரப்பான மொபைல் கேமாக காணப்படுகின்றது. இது எல்லாராலும் விளையாட முடியாது. இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் பதிப்புக்களை பல்வேறு வழிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப் பதிப்புகளானது தொலை தூரத்திலிருந்து தொலைபேசியின் தகவல்களை அடுத்தவர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் Hackers க்கு உங்கள் தொலைபேசியை கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இந்த தீங்கிழைக்கும் பதிப்புகள் New Zealand மற்றும் Australia வில் இதன் உண்மையான பதிப்புக்கள் வெளியிடப்பட்டு வெறும் 72 மணி நேரத்துக்குள் வெளியிடப்பட்தாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இந்த செயலி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆயினும் இதை விரும்புபவர்கள் மூன்றாவது நபர்களிடமிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். நீங்கள் இச் செயலியை பயன்படுத்திக் கொண்டிருப்பவராயின் அது முறையானதா என அதன் அனுமதிகளை ஒப்பிடுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.