விஜய், அஜித்திற்கு இணையாக சந்தானம் படைத்த சாதனை!!

Santhanam

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படம் வருகிறது என்றாலே ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல் தான்.முன்பதிவிலேயே அரங்கம் நிறைந்துவிடும், அப்படியிருக்க சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சென்னையின் பிரபல மாலில் இந்த படம் வெளிவந்த 5 நாட்களில் 100 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வெற்றிநடைப்போடுகின்றதாம்.

இதற்கு சம்மதம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கிறேன்- காஜல் அதிரடி

Kajal-Agarwal-Cute-Wallpaper

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்த பாலிவுட் படத்தில் ஒரு லிப் கிஸ் காட்சி இருந்தது, இதை பார்த்த பல இயக்குனர்கள் கதை சொல்லும் போதே இவரிடம் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறுகிறார்களாம்.

காஜல் அகர்வாலும் நீங்கள் சொல்வது போல் முத்தக்காட்சியில் நடிக்கிறேன், ஆனால், என் சம்பளத்தை டபுளாக தர முடியுமா? என கேட்டு அதிர்ச்சியடைய வைக்கின்றாராம்.

மீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்!!

3558807-vibrant-photo-of-a-young-adult-swimming-underwater

ரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் சிக்கியுள்ளதாக தவறாக நினைத்து தனது நண்பரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ள Ryazan என்ற மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 9ம் திகதி நண்பரை பார்ப்பதற்காக 27 வயதான நபர் ஒருவர் மோஸ்கோ நகரில் இருந்து புறப்பட்டுள்ளார்.நண்பர்கள் இருவரும் சந்தித்த பிறகு, இரவு வேளையில் மீன் பிடிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர்.நபர் மீன் பிடிப்பதில் திறமையானவர் என்பதால், நண்பரை வேறு பகுதியில் மீன்களை தேடுமாறு அனுப்பியுள்ளார்.

மீன்களை வேட்டையாடுவதற்கு ஈட்டி போன்ற ஆயுதத்தை பயன்படுத்துவார்கள். இந்த ஆயுதத்துடன் நபர் மீன்களை தேடி அங்கும் இங்கும் அலைந்துள்ளார்.அப்போது, தூரத்தில் catfish வகையை சேர்ந்த மீன் ஒன்று நீந்தி செல்வதாக பார்த்த நபர் தனது கையில் இருந்த ஈட்டியால் சுட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக நபரின் குறி தவறாமல் தாக்கியுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு நபர் தவறாக சுட்டது தனது நண்பரை என தெரியவந்தது.இந்த சம்பவத்தில் 27 வயதான நபருக்கு படுகாயம் ஏற்பட்டதால், அவர் கடலிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மீன் பிடிக்க சென்றபோது நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிச்சை எடுத்தாவது ஜீவனாம்சம் வழங்க வேண்டும்:உயர்நீதிமன்றம்!!

1 (49)
கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்க சுபத்ரா என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தான் வசிப்பதற்கு ஒரு வீடும், ஜீவனாம்சமும் கோரி கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்க சுபத்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.அதை விசாரித்த நீதிமன்றம், வீட்டு வாடகைக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க செல்வராஜனுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் செல்வராஜன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு தொகையை ரூ.25 ஆயிரமாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகைத் தொகை செலுத்த தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இதையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வராஜன் மேல்முறையிடு செய்திருந்தார். அதில், வேலை இல்லாத காரணத்தால் எனக்கு வருமானம் இல்லை. எனவே இவர்கள் கோரியுள்ள தொகையை வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் செய்கையால் அவரது மனைவி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இதுவும் குடும்ப வன்முறையின் கீழ் அடங்கும். மனுதாரர் வேலையில்லாமல் இருப்பதாக கூறியுள்ளதற்கு எவ்வித ஆதாரமும் சமர்பிக்கவில்லை. மனைவியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்!!

baby_murder1

ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள் மறைத்துவைத்துள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அப்பெண்ணின் குடியிருப்பை சோதனையிட்டதில் குழந்தைகளின் உடல்கள் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், மனநலரீதியாக பாதிக்கப்பட்டிருந்த இப்பெண், தனக்கு குழந்தை பிறந்தவுடன், அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டி அறையில் உள்ள டின்களில் அடைத்து வைத்துள்ளார், இதுபோன்ற 6 குழந்தைகளை கொன்றுவிடவே, சந்தேகம் அடைந்த கணவர் கேள்வி எழுப்புகையில், கருக்கலைந்துவிட்டது, குழந்தை இறந்துவிட்டது என பொய்களை சொல்லியுள்ளார்.

வீட்டில் குழந்தை பிறந்துள்ளதால், வேலைக்கு செல்லும் கணவனால் இதனை கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்நிலையில் அடுத்த குழந்தையின் பிரசவத்தின்போது விடுமுறை எடுத்து, தனது மனைவியின் செயல்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனால் மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார், அதன்பிறகு இப்பெண்மணி வேறொரு நபருடன் தொடர்பு வைத்தன் மூலம் 2 குழந்தைகள் பிறந்துள்ளது, அதனையும் இவ்வாறே செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கணவன் மனைவி இருவருமே குற்றவாளி என நீதிபதி கூறியுள்ளார், மேலும் மனைவி செய்யும் செயல் தவறு என தெரிந்தும் அதுகுறித்து புகார் தெரிவிக்காமலும், கண்டிக்காமலும் இருந்துள்ளார். இதனால் அவர் மீது குற்றம் உள்ளது, மேலும் தாயாரும் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார், தற்போது இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

Kavinaya

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில், பிரிவு ஒன்றுக்கான இசையும் அசைவும் போட்டி நிகழ்வில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் செல்வி. கவிநயா அரவிந்தன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டம் பெற்றுக்கொண்ட ஒரே முதலிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் இவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் Dr. தேவராஜா அரவிந்தன், இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய ஆசிரியை திருமதி. ஜனந்தினி அரவிந்தன் ஆகியோரின் புதல்வியாவார்.

இவரை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

21

வவுனியாவில் 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!

Plote

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) கழகத்தின் மறைத்த தோழர்களையும் அனைத்து இயக்க போராளிகளையும், யுத்த காலத்தில் மரணித்த பொது மக்களையும் நினைவுகூரும் முகமாக வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இம்முறையும் 13.07.2016 தொடக்கம் 16.07.2016 வரையான காலப்பகுதியை தமது தோழர்களின் வீரமக்கள் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் காலை 10.00 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். .

இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

15 ஆம் திகதி காலை இரத்ததான நிகழ்வு வவுனியாவில் நடைபெறும் அதேவேளை, 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இரத்ததான நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மாலை 04.00 மணியளவில் மலரஞ்சலி மற்றும் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)
உப தலைவர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்).

15 அத்தியவசியப் பொருட்களின் உத்தேச விலைகள் இன்று அறிவிக்கப்படும்!!

essential-items

15 அத்தியவசியப் பொருட்களின் உத்தேச விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று அமைச்சரவை கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு, உருழைக்கிழங்கு, கருவாடு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 15 இன் உத்தேச விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இரத்தினபுரியில் தாயும் மகளும் வெட்டிக் கொலை!!

Murded

இரத்தினபுரி, வேவல்வத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபெவில பிரதேசத்திலகம வீடொன்றில் 37 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லெஷ்ஷமன் சசிகலா என்ற பெண்ணும் சுவேந்திரன் சஞ்சீவனி என்ற மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலங்கள், அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (13) நடைபெறவுள்ளன.

கொலை செய்யப்பட்ட குறித்த பெண் தகாத உறவை பேணிவந்த காதலனால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக வேவல்வத்த பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தையின் வாயில் வெங்காயத்தை திணித்து கொன்ற கொடூரத் தந்தை!!

Murder

மகாராஷ்டிர மாநிலத்தில் மனப்பாடப் பகுதியை சரியாக ஒப்பிக்காத 6 வயது மகளின் வாய்க்குள் வெங்காயத்தைத் திணித்து சொந்த தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குட்டே (30). இவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது 6 வயது குழந்தை பாரதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுப்பாடம் எழுதச் சொல்லி தனது மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த குழந்தை சரியாக எழுதாததால் சஞ்சய்குட்டே ஆத்திரமடைந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து தண்டனை என்ற பெயரில் குழந்தைக்கு வெங்காயத்தை கொடுத்து விழுங்க சொல்லி அடித்துள்ளார் சஞ்சய் குட்டே. அடி தாங்காமல் குழந்தையும் வெங்காயத்தை விழுங்கியுள்ளது.

அப்போது திடீரென அந்த குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சஞ்சய்யின் இந்தக் கொடூர செயலை கண்டு அவரது மனைவியும், 2 வயது மகனும் பயந்துபோய் வெளியில் சொல்லவில்லை.

இந்த நிலையில் குழந்தை பாரதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் சஞ்சய் குட்டே புதைத்துவிட்டார். பின்னர், பயத்தில் இருந்து மீண்ட சஞ்சய்யின் மனைவி தனது உறவினர்களின் உதவியுடன் பொலிசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட பாரதியின் உடலை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய் குட்டேயை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!!

Cricket

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கைவிடவில்லை.

அவுஸ்திரேலியாவின் டீ அணியில் விளையாடி வரும் இவர் கடந்த 10ஆம் திகதி அங்கு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இரட்டை சதம் பெற்றுள்ளார்.

இவ்வாறு கிரிக்கெட்டில் தமது திறமையை வெளிக்காட்டிய முதலாவது புகலிக்கோரிக்கையாளர் என்ற பெயருக்கும் யுகேந்திரன் உரித்துடையவராகியுள்ளார்.

அத்துடன் யுகேந்திரன் நடந்து முடிந்த 40 ஓவர்கள் கொண்ட குறித்த போட்டியில் ட்ரேசி வில்லேஜ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார்.

இந்த போட்டியில், அவர், 18 ஆறு ஓட்டங்களையும், 14 நான்கு ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 227 ஓட்டங்களுக்கு பெற்றிருந்தார்.

இதேவேளை ‘கிரிக்கெட் எனது உயிர். நான் எனது வாழ்க்கையில் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்வேன் என யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலிய அணியில் விளையாட கிடைத்தமை சிறந்த அனுபவம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கழுத்தறுத்த நிலையில் பள்ளி மாணவி மீட்பு!!

Tamilnadu Murder

மானாமதுரை அருகே 6ம் வகுப்பு மாணவியை பள்ளியில் இருந்து கடத்தி சென்ற வாலிபர், அவரது கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்தார். மாணவியை கொலை செய்த வாலிபரை, சென்னை பெண் சுவாதி கொலை சம்பவத்தில் நடந்தது போல, கழுத்தறுபட்ட நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தலைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). டிரைவிங் தெரிந்த இவர் வேலையில்லாமல் இருந்துள்ளார். இவரது உறவினர் ஜெயா, அதே பகுதியில் வசித்து வருகிறார். ஜெயாவின் மகள் காளீஸ்வரி (11), மேலநெட்டூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்தும், காளீஸ்வரி வீட்டுக்கு வரவில்லை. அவரது தோழிகளிடம் ஜெயா விசாரித்தார். இதில் பள்ளி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, கார்த்திக் அவரை டூவீலரில் அழைத்து சென்றது தெரிந்தது. இதனையடுத்து கார்த்திக்கின் செல்போனில் ஜெயா தொடர்பு கொண்டார்.

போனில் பேசிய கார்த்திக், ‘காளீஸ்வரியை கொலை செய்து விட்டேன்’ என கூறி விட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில் டிஎஸ்பி புருேஷாத்தமன், இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொலிசார் கணபதியேந்தல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில், அரை மயக்க நிலையில் கார்த்திக் விழுந்து கிடந்தார். அவர் அருகிலேயே ஒரு பூச்சிமருந்து பாட்டிலும் கிடந்தது. போலீசாரை கண்டதும், உடனடியாக தன்னிடம் இருந்த கத்தியால், அவர் தனது கழுத்தை அறுத்து கொண்டார் என கூறப்படுகிறது.

கழுத்தில் வெட்டு காயங்களுடன் அவரை மீட்ட போலீசார், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.சிறுமி காளீஸ்வரியை கொலை செய்து விட்டதாக அவர் போலீசாரிடமும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் காளீஸ்வரியின் சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 5 மணியளவில் அம்மனேந்தல் கண்மாய் பகுதியில் சீருடை அணிந்த நிலையில், கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டு, காளீஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் கார்த்திக்குக்கு கழுத்தில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன.

அவர் தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த போலீசார் கூறுகையில், ”மாணவியை கடத்தி கொலை செய்ததாக கார்த்திக் கூறினார். கொலைக்கான காரணம் குறித்து, அவர் இதுவரை ஏதும் கூறவில்லை. அவரது கழுத்தில் 3 ஆழமான வெட்டுக்காயங்கள் உள்ளன. அவரே வெட்டி கொண்டாரா அல்லது வேறு யாராவது வெட்டினார்களா என விசாரித்து வருகிறோம்” என்றனர்.

சமீபத்தில் சென்னையில் பெண் பொறியியலாளர் சுவாதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், வாலிபர் ராம்குமாரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கழுத்தில் அறுபட்ட நிலையில் போலீசார் கைது செய்தனர். அதே போன்று பள்ளி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதும், கொலை செய்த வாலிபர் கழுத்து அறுபட்ட நிலையில் கைதாகியுள்ளதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு காதல் விவகாரம் : கழுத்து அறுக்கப்பட்ட ஆண்!!

Male Body

காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

இச்சம்பவத்தில் ஒரு சிறிய வித்தியாசமும் உண்டு. தமிழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் பெண்களாக இருக்க, இச்சம்பவத்தில் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரட்டை சகோதரிகளை காதலித்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாணவர் ஒருவரால் மற்றுமொரு பாடசாலை மாணவரின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட மாணவன் அவரது காதலியின் சகோதரியுடன் நட்பினை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இருவருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சுவாதியின் அப்பாவுக்கும் என்னைத் தெரியும் : மனம் திறந்த ராம்குமார்!!

Swathi Ramkumar

படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவருகின்றனர். அதிலும் உண்மை எது பொய் எது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவருகின்றன.

கடந்த மாதம் 24ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது சென்னை மத்திய புழல் சிறையில் ராம்குமார் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு முற்போக்கு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் ராம்குமாரை சந்தித்துப் பேசியிருந்தார்கள்.
சட்டத்தரணிகளுடன் பேசிய ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ” நான் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகிலேயே சுவாதியின் வீடும் இருந்தது.

அந்த வழியாக சுவாதி செல்லும்போது இயல்பாக எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு ஒரு நல்ல தோழியாகவே அவர் இருந்தார்.

தினமும் அந்த வழியாக செல்லும்போது இயல்பாக பார்த்து பேசிக்கொள்வது எங்களுக்குள் இருந்தது.

சம்பவம் நடந்த அன்று தான் எனது அறையில்தான் இருந்தேன். சுவாதியை நான் சந்திக்கவில்லை. சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

எப்போதும் ஊருக்கு செல்வதுபோல் அன்றும் எனது ஊருக்கு வந்து விட்டேன். இந்த கொலையில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த படுகொலை வழக்கில் பொலிஸார் என்னை சந்தேகித்து வருவார்கள் என நான் நினைக்கவில்லை. நான் வீட்டில் இருந்தபோது பொலிஸ் உடையிலும், சாதாரண உடையிலும் இருந்த 20 பேர் என்னை தாக்க வந்தார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் கழுத்தை அறுத்துக்கொள்ள எந்த சூழ்நிலையிலும் முயற்சிக்கவில்லை.

அந்த நிமிடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. கண்விழித்தபோது வைத்தியசாலையில் இருந்தேன்.

இந்த வழக்கில் பொலிஸார் என்னை குற்றவாளியாக சேர்த்திருப்பது குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும்.

என்னை அவர் பார்த்திருக்கிறார். வேண்டுமென்றே இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன்” என கூறியதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷை அச்சுறுத்தும் நிலநடுக்கம் இலங்கையையும் பாதிக்குமா?

Earthquake

பங்களாதேஷை மையமாக கொண்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்க ஆபாயம் ஒன்று காணப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷ், கிழக்கு இந்திய பகுதிகள் என்பன கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் அமைந்துள்ளன. குறித்த பகுதியானது நில அதிர்வை தாங்ககூடிய சக்தி இல்லாத பகுதிகளாகும்.

தற்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தகடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நில நடுக்கமானது 8.2 முதல் 9க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள. நியூ மெக்சிகோ ஸ்டேட் பல்கலைக்கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ் நி “இந்த ஆய்வு சரியானதாக இருந்தால், அழுத்தம்கூடி வரும் பிளேட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிழக்கு இந்தியா நிச்சயம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துன், இதன் பாதிப்புகளானது மியான்மர் வரை நீடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக சுமார் 9 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை, குறித்த நிலநடுக்கம் இலங்கையும் தாக்க கூடுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி!!

Namal Rajapaksha

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாம்ல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று கோரியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் கோரிக்கையை சிறைச்சாலை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி நேற்று முதல் வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள நாமலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.