எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணத்தை 6 வீதமாக உயர்த்துவதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், பஸ் கட்டண அதிகரிப்பு தொடாபில் பஸ் சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானதல்ல என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனத்தின் தலைவர் அன்ஜன பிரியான்ஜித் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
குறுந்தூர பஸ் சேவைகளுக்காக இந்த பஸ் கட்டண அதிகரிப்பு எந்த வகையிலும் ஏற்றக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணத்தை ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 3.2 வீதத்தினால் அதிகரிக்கவே அரசாங்கம் உத்தேசித்திருந்தது எனவும், தமது சங்கத்தின் போராட்டத்தினாலேயே 6 வீத உயர்வு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 6 வீத பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் அதிகளவு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பஸ்களில் பயணிப்பதனை குறைத்துக் கொள்ளலாம் என அவர் நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் கருத்து வெளியிட்டுள்ளார்.
சுவாதி படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவளோடு பழகிய நாட்கள் இனி வருமா என்ற ஏக்கம் மட்டும் எனக்குள் இருக்கிறது என்கிறார் சுவாதியின் நெருங்கிய தோழி ஒருவர். பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய சுவாதியின் தோழி மேலும் தெரிவிக்கையில்,.
சுவாதிக்கு ஜெனரல் ஷிப்ட் என்றால் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் காலை 6.15 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் ஏறுவார். இடையில் நான் ஏறுவேன். எனக்காக அவர் ஹேண்ட் பேக்கை வைத்து இடம் பிடித்து வைத்திருப்பார்.
ரயிலில் தான் இருவரும் டிபன் சாப்பிடுவோம். எப்போதும் ஜாலியாக பேசுவோம். இதனால் செங்கல்பட்டு வருவது கூட எங்களுக்குத் தெரியாது. அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் போதே அவரது கண்கள் நீரால் நிறைந்தன.
சில நிமிடத்துக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கிய அவர், சுவாதி படுகொலை நடந்த வாரம் எனக்கு நைட் ஷிப்ட். இதனால் அவளுடன் நான் செல்லவில்லை. இதனால் தனியாக ரயிலில் சென்றுள்ளார் சுவாதி.
எங்கள் நட்பு வட்டாரம் பெரியது. அனைவரும் சகஜமாக பேசுவோம். சிலரை உறவு முறை சொல்லி அழைப்போம். எங்கள் குரூப்பில் எல்லோருக்கும் ஒரு செல்ல பெயர் இருக்கிறது.
சுவாதிக்கு கூட செல்லப் பெயர் வைத்திருந்தோம். அது என்னவென்றால் ‘நான் ஸ்டாப்’ என்பதே அந்தப் பெயர். அதற்கு காரணமே அவள் பேச தொடங்கினால் யாரையும் குறுக்கே பேச விடமாட்டார்.
அலுவலகத்திலும் அவள் அப்படித் தான். கொடுக்கிற வேலைத்திட்டத்தைக் கூட நேர்த்தியாக செய்து முடிப்பார்.. இதனால் எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும். அவளை யாராலும் மறக்க முடியாது.
நானும், அவளும் கூட சில நேரங்களில் சண்டை போட்டுள்ளோம். அதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த நிமிடமே பேசிவிடுவார். அனைவர் மீதும் இரக்கப்படுவாள். அவளுக்கு இந்த நிலைமை என்று நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
சுவாதி, தன்னை கட்டிடத் தொழிலாளி ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக ஒரு முறை சொல்லி இருக்கிறாள். ஆனால் அவர் யார் என்று தெரியாது.
சுவாதியைக் கொலை செய்யும் அளவுக்கு அவர் செல்வார் என்று யாருமே நினைக்கவில்லை. சுவாதியைப் போல ஒரு தோழியை வாழ்க்கையில் இழந்ததை எது கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது.
நினைவுகள் மூலம் அவள் இன்னும் நண்பர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். சுவாதியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஆச்சரியப்படும்படியாக பரிசு கொடுப்பாள்.
அவள் கொடுத்த கீ செயின் இன்னும் என்னிடம் உள்ளது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய நினைவு வருகிறது. அடுத்து எங்கள் நட்பு வட்டாரத்தில் விருந்து கொடுத்து அசத்துவோம்.
இப்போது அந்த விருந்து நடப்பதில்லை.சுவாதி கொலை செய்யப்பட்ட தகவலைக் கேட்டதும் அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.
அடுத்து சுவாதியின் கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுப்பிடிக்க காலதாமதமானதும், போலீஸார் எங்களிடம் (நண்பர்களிடம்) எல்லாம் விசாரித்தார்கள்.
எல்லோரும் தங்களுக்குத் தெரிந்ததை சொன்னோம். சில தகவல்கள் போலீசுக்கு உறுதுணையாக இருந்தன.
ஆனால் சுவாதி குறித்த தவறான தகவல்களையும், வதந்திகளையும் சிலர் பரப்பி விட்டனர். அது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.
இப்போது என் அருகில் அமர்ந்த சுவாதி இல்லாமல், செங்கல்பட்டு மின்சார ரயிலில் அலுவலகத்துக்குச் செல்கிறேன்.
அவள் இல்லாத பயணத்தைத் தவிர்க்க, இருப்பிடத்தை செங்கல்பட்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன் என்றார் சோகம் வழிய.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் காலி மாவட்ட காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவிற்கு உட்படாமல் செல்லும் நபர்கள் தொடர்பிலான பொறுப்பினை எவருக்கும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குடியை குடியை கெடுக்கும் என எத்தனையோ முறை சொன்னாலும் ஒழிந்தபாடில்லை, மதுவால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.
இதனால் தினமும் எத்தனையோ சாலை விபத்துகள் ஏற்படுகின்றன, இதுபோன்ற விபத்துகளை தடுக்க 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளான்.
சிவகங்கை மாவட்டம் திருவேலங்குடி அரசு பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் பிரேம்குமார், மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவன் கூறுகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்காக மது போதையால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க ஒரு கருவியை உருவாக்கினேன்.
இக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள அல்கஹால் சென்சார் மது வாடையை உணரும். இத்துடன் Capacitor, Transistor சேர்ந்த ஒரு Integrated Circuit இணைக்கப்பட்டுள்ளது.
மது வாடையை உணர்ந்தவுடன் சாவி போட்டு ஸ்டார்ட் செய்யும் இடத்திற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து விடும். இதனால் இன்ஜின் இயக்கம் தானாக நின்று விடும்.
மது குடித்து விட்டு, எவ்வளவுதான் உருண்டு புரண்டாலும் வாகனம் ஸ்டார்ட் ஆகாது, இந்த கருவியை டூவீலரிலும் வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர்.
இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல செயல்படுகிறது. இங்கு மதுப்பழக்கம் முற்றி விடமுடியாமல் உடலும் மனமும் கெட்ட குடிகாரர்களுக்கு வைன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மணி நேர இடைவெளியில் அளவான வைன் கோப்பையில் ஊற்றிக்கொடுக்கிறார்கள். இதற்கு நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் (Managed alcohol program) என்றும் பெயரிட்டுள்ளனர்.
இப்படி அளவாக மதுவை கொடுப்பதன் நோக்கம். மதுவுக்கு நன்றாக பழகிவிட்ட உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து அதன் வழியிலே சென்று, பிறகு, முற்றிலும் பழக்கத்தை நிறுத்திவிடுவதுதானாம்.
ஒட்டாவா நகரின் மேற்கே தியான மையம்போல அமைதியான நிலையில் காணப்படுகிறது இந்த ஹோட்டல். அதன் வரவேற்பு அறையில் பாம்புகள் ஒழுங்காகவும் வரிசையாகவும் விடப்பட்டு காட்சியளிக்கின்றன. இது கூட நோயாளிகளுக்கு மனரீதியாக ஏற்படுத்தும் ஒரு நம்பிக்கையாக தெரிகிறது.
இங்கு வருகிற பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர வயதுடையவர்கள் அல்லது வயதானவர்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களும் வருகின்றனர். தடி ஊன்றியவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தவர்கள், நடக்க தள்ளாடுபவர், காயம்பட்டவர்கள், கைகால் வீக்கமடைந்தவர்கள், கடித்து குதறப்பட்ட தழும்புடையவர்கள், விரல்களில் நகங்கள் கழன்றவர்கள் என சாராயத்தால் பலவிதங்களில் சீரழிந்தவர்களாக வருகிறார்கள்.
அவர்களுக்கு, இங்கு ’கலிபோர்னியன் ஒய்ட்’ என்ற 13% அல்கஹால் கொண்ட மதுவே கொடுக்கப்படுகிறது.
மது ஊற்றும் ஜாடியில் அளவீடுகள் உள்ளன. முதல்முறையாக, காலை 7.30 மணிக்கு, கொடுக்கும் அளவு 200 மி.லி. பிறகு, இரவு 9.30 மணி வரை மணிக்கு 140 மி.லி. வீதம் கொடுக்கப்படுகிறது. இந்த முறையில்தான் இங்கு சிகிச்சை நடக்கிறது.
ஒரு ஜாடியில் உள்ள மது, 50 பேருக்கு கொடுத்து காலி செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான அளவில் மது பீப்பாய்கள் மொத்தமாக வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஊழியரின் கருத்து, இந்த ஓக்ஸ் ஹோட்டலில் முன்னணி ஊழியராக பணியாற்றும் லூசியா அலி கூறும்போது,’ இங்கு போதை நிலையில் வருபவர்களை சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்வதில்லை.
அப்படியும் சிலர் வருவதுண்டு. சிகிச்சை பெறுபவர்களில் அளவான மதுவிலும் போதையேறியதாக அறிந்தால் அறையில் சென்று தூங்க சொல்கிறோம்.
மது நோயாளிகளுக்கு மதுவால் இங்கு சிகிச்சை அளிக்கும் செய்தி பற்றி பிபிசி உலக சேவை வானொலியிலும் லிண்டா ப்ரெஸ்லி அறிக்கையில் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வீடற்ற பாதிக்கப்பட்டவர்களின் குடிமுயற்சியை நிறுத்த, ஒரு சுகாதார நிபுணர்கள் குழுவினரின் சிந்தனையில் உருவானதுதான். ஆனால், அது பல சங்கடங்களால் தோல்வியடைந்தது என்கின்றனர்.
மருத்துவரின் கருத்து
இதன் ஆரம்ப கண்டுபிடிப்பாளரும் ஒட்டாவா மருத்துவமனையின் ஊழியர்களின் தலைவருமான டாக்டர் ஜெஃப் டர்ன்புல் இதுபற்றி கூறும்போது, ‘குடிப்பழக்கத்தால் சீரழிந்து விட்டவர்களை அப்படியே விட்டுவிடாமல், அவர்களை தேற்றும் ஒரு முயற்சிதான் இது, இப்படி கொஞ்சகொஞ்சமாக குறைத்து நிறுத்த முடியும் ஆனால், அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்’ என்று கூறுகிறார்.
மது நோயாளிகள் கருத்து
வடக்கு கனடாவில் உள்ள இனூய்ட் என்ற ஊரில் இருந்து வந்திருக்கும் எலிசா என்ற மது நோயாளி கூறும்போது, ”எனது 53 வயதில் 40 ஆண்டுகள் குடிகாரனாக கழித்தேன். போதை போதாமல் ஒரு நிலையில் மவுத்வாஷ், ஹேர் ஸ்ப்ரே என சுவை பிடிக்காமலே போதை வேண்டி குடித்தேன். நான் மது அடிமையாக இருப்பதை வெறுத்தேன் பெரிய நோயாளியாக உணர்ந்தேன். அதனால் இங்கு வந்தேன்.
இங்கு அருந்தும் அளவு மிகக்குறைவு ஒரு நிதானத்தை உணர்கிறேன் இனி வேறு எதையும் குடிக்க மாட்டேன்” என்கிறார். கோரின்னே என்ற பெண் அவருடை துணைவருடன் ஓக்ஸில் தங்கியுள்ளார்.
18 ஆண்டுகள் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, பிறகு நிர்வகிக்கப்பட்ட மது திட்டத்தில் சேர்ந்து இருந்து, அதை விட்டு வந்தும் மதுப்பழக்கத்தை விடவில்லை என்கிறார்.
ஆனாலும், அங்கு இருந்தது நல்ல அனுபவம் என்பவர், மதுக்குடித்தால் கடந்த கால சம்பவங்கள் எதையும் நினைவுப்படுத்தாதீர்கள் அதுவே ஒரு நிம்மதிதான் என்கிறார்.
நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுக்கவில்லை.
மதுவில் ஊறிப்போனவர்களுக்குதான் அளவாக கொடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. குறைவாக கொடுத்தாலும் ஒரு மணி இடைவெளியில் கொடுப்பது கூட அதிகம்தான்.
இதனால், அப்பழக்கத்தை நிறுத்தும் பயன் உண்டோ, இல்லையோ ஒரு குடியில் ஊறிப்போனவன் போக்குக்கு ஒரு ஆரோக்கியமான பரீட்சைதான்.
இந்தியாவில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தங்கையை அண்ணன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மொகமது நயீம், இவர் தனது தங்கையான ஷப்னத்திற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் அவரது தங்கை ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியுள்ளார். இது வெளியில் தெரிந்தால் குடும்பம் மானம் கெட்டு விடும் என அறிந்த மொகமது நயீம், தங்கையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தொழுகை முடிந்து வீடு திரும்பிய மொகமது நயீம், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஷப்னத்தை நோக்கி சுட்டுள்ளார்.
பாய்ந்து வந்த குண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த உலோக அணிகலன் மீதுபட்டது, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, துப்பாக்கி குண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த உலோக அணிகலன் மீது பட்டதால் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை, விரைவில் குணமாகி விடும். அவருக்கு நினைவு திரும்பிய பிறகு அவர் அளிக்கும் வாக்குமூலம் மூலமாகவே குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறியுள்ளனர்.
இருப்பினும் ஷப்னம் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் பொது இடத்தில் வைத்து தந்தை மகன் ஆகியோரை பொலிசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா (38). இவரது மனைவி உஷா (35), மகன் சூரியா (18).
இவர்கள் மூன்று பேரும் உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க நேற்று மதியம் செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு வந்துள்ளனர்.அப்போது நகையை தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
செங்கம் பிரதான சாலையில் உள்ள பிராதான கடையின் முன்பாக தம்பதியினர் குடும்ப பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்,
அப்போது அங்கு வந்த பொலிசார் பிரச்சனையில் ஈடுபட்ட மூவரையும் எச்சரிக்கை செய்துள்ளனர், இருப்பினும் வாக்குவாதம் தொடர்ந்ததால், ஆத்திரம் அடைந்த பொலிசார் கணவன் மற்றும் மகனை சரமாரியாக அடித்துள்ளனர்
சரியாக விசாரிக்காமலேயே பொது இடத்தில் வைத்து காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செங்கம் நகர மக்கள் கூறும்போது, “குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பொலிசார் மென்மையாக நடந்து கொள்கின்றனர். பாமர மக்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்று காட்டு மிராண்டித்தனமாக தாக்கி அவர்களை அவமதிப்புடன் அவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்துகின் றனர்.
முரட்டுத் தனமாக நடந்து கொண்ட அந்த 3 பொலிசாரில் 2 பேர் சீருடை அணிந்திருந்தனர். மற்றொருவர் (விஜயகுமார்) சாதாரண உடையில் இருந்துள்ளார்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பொலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிசார் என்பதால் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடக் கூடாது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி விசாரணை நடத்தி உள்ளார். இதையடுத்து, பொது இடத்தில் கண்மூடித்தனமாக தாக்கிய 3 பொலிசாரும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் ஷாஜித்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நபர் ஒருவர் 11 வயது மாணவியை கொலை செய்து புதைத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தலை சேர்ந்தவர் ஜெயா, இவரது மகள் காளீஸ்வரி மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம் போல காளீஸ்வரி நேற்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார், மாலை வெகு நேரம் ஆகியும் காளீஸ்வரி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா பள்ளி சென்று விசாரித்த போது கார்த்திக் என்ற நபர் அழைத்து சென்றது தெரியவந்தது, இதனால் மாணவியின் அம்மா கார்த்திக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார், அப்போது பதிலளித்த கார்த்திக் உன் மகளை கொலை செய்து புதைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த ஜெயா பொலிசில் புகார் செய்தார், மேலும் பொலிசார் விசாரித்த போது கார்த்திக் கழுத்து அறுத்த நிலையில் கண்மாயில் கிடப்பதாக தெரியவந்தது, உடனே பொலிசார் அங்கு சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொலிசார் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று அதிகாலை காளீஸ்வரியின் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர், இது மாவட்ட ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இக்கொலை சம்பவம் குறித்து கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் அல்லது பலாத்கார முயற்சியில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கிடந்த கார்த்திக் பொலிசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை வேறு யாரும் கழுத்தை அறுத்து சென்றுவிட்டார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 30 நாட்களாக நடந்த யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இறுதிப் போட்டி ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர், கெப்டன் ரொனால்டோ காயத்தின் காரணமாக கண்ணீருடன் வெளியேறினார்.
ஆனாலும் பதிலி வீரரால் அடிக்கப்பட்ட அரிய கோலால் போர்ச்சுக்கல் சாதனை படைத்தது. இதனால் 3 ஆவது முறையாக பட்டம் வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது.
இந்த வெற்றி போர்ச்சுக்கல் கால்பந்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பாரிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியை இலட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்தனர்.
போட்டியின் முடிவால் அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ரசிகர் ஒருவர் அழத் தொடங்கினார். தன் நாடு கிண்ணத்தை சுவீகரித்ததால் மகிழ்ச்சியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான் போர்ச்சுக்கல் சிறுவன்.
அந்த நேரத்தில் சிறுவன் கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் ரசிகரைக் காண நேர்ந்தது. அவரின் அருகில் சென்று கைகுலுக்கிய சிறுவன், அழும் ரசிகரின் தோளைப் பற்றி ஆறுதல் சொல்கிறான்.
பதிலுக்கு போர்ச்சுக்கல் சிறுவனின் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிடுகிறார் பிரான்ஸ் ரசிகர். மீண்டும் ஒருமுறை இருவரும் ஆதரவாகக் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.
வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத இந்தக் காட்சியை நீங்கணும் காணுங்கள்…
இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை ஒன்றில் குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. அதனைப் பார்த்த தாய் எலி சற்றும் மனம் தளராமல் பாம்பை துரத்திச் சென்று அதன் வாலினை சரமாரியாகக் கடித்துக் குதறியது.
எலியின் கடியைத் தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதருக்குள் ஒடியது. அதன் பிறகும் தாய் எலியின் ஆவேசம் அடங்கவில்லை, புதருக்குள் அந்த பாம்பை விரட்டிச் சென்றது.
சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஒடி வந்தது. அதுவரை அசைவின்றிக் கிடந்த குட்டி எலி தனது தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது.
ஒரு தாயின் பாசப் போராட்டத்தை விளக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கஹதுடவ – சிங்ஹகம பகுதியில் கூறிய ஆயுதம் ஒன்றினால் தக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தை இன்று (12) காலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.உயிரிழந்தவர் 44 வயதான சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கூறிய ஆயுதம் ஒன்றினால் தலைப்பகுதியில் தாக்கப்பட்ட அடையாளமொன்று சடலத்தில் காணப்பட்டதகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சற்றுத் தொலைவில் கத்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கஹதுடவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இதேவேளை குறித்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தன
ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான “encrypted chats” வட்ஸ் அப்பிள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் வட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக “encrypted chats” என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியால் தகவல்களை அனுப்பியவர், அதனை பெறுபவர் மட்டுமே அதனை படிக்க முடியும்.
இதனால் இந்த encrypted வசதி சமூகவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி வட்ஸ் அப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு போடப்பட்டது.இந்த நிலையில் வட்ஸ் அப்பில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ”encrypted chats” வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது Messenger அப்பில் அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான சோதனையை தொடங்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் விரைவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த மாணவன், மொறட்டுவ – கட்டுபெத்த பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்று வந்த 22வயது நிரம்பிய குறித்த மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என அறியும் பொருட்டு பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாணவன் தங்கியிருந்த விடுதி அறையிலுள்ள கட்டிலில் இருந்தே சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மரண பரிசோதனைகள் இன்று நடைபெறும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் மேலதிக வகுப்புக்களுக்காக சென்ற வேளையிலேயே துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரான பாடசாலை சிற்றூழியர், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏற்கனவே 05 தடவைகள் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகள், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுமார் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதானவர்களாக வளரும் வரை கண்காணித்த இந்த ஆய்வு இந்த இரு பழக்கங்களையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒவ்வாமை வருவது சற்று அதிகமாகக் காணப்படுவதாகவும், அந்தப் பழக்கங்களில் குறைந்தது ஒன்றையாவது வைத்திருந்தவார்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவாகவும் இருந்ததாகக் கூறியது.
இரண்டு பழக்கங்களையும் வைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாத பலன்கள் அதிகமாக இருந்தன.
ஆனால் கட்டைவிரலை சூப்பும் பழக்கமோ அல்லது நகத்தைக் கடிக்கும் பழக்கமோ இந்த ஒவ்வாமையுடன் தொடர்புள்ள வியாதிகள் ஏற்படுவதைக் குறைக்கின்றன என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
குழந்தைகள் தங்கள் கைகளைக் கழுவ ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க சஞ்சிகையான ‘குழந்தை நலம்’ (பேடியாட்ரிக்ஸ்) என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.