சுவாதி கொலையுண்டு கிடந்த போது உதவ ஒருத்தன் போகவில்லையே, அவர் இரத்தம் ஓடி வருவதை ரசித்துக் கொண்டிருக்கின்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என சீமான் கொதித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, இன்னும் சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்தும் தனிபெரும் முதலாளிகளின் சொத்தாகிவிடும்.
கடந்த 10 நாட்களில் 7 யானைகள் கொல்லப்பட்டுள்ளது. இரண்டு மருத்துவ கல்லூரி மாணவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியை தூக்கி போடுகிறான். இவன் படித்து வந்து என்ன மருத்துவம் பார்ப்பான்?
ஒரு நாய்க்குட்டியை மாடியில் இருந்து தூக்கி போடுகிற மனநிலை எப்படி ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும்.
சுவாதி என்ற தங்கை கொலை செய்யப்பட்டாள். கொலை செய்தவன் யார் என்று தெரியவில்லை. எங்கள் ஆட்சியின் வரைவில், பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கருவி வைத்து கண்காணிக்கப்படும் என தெரிவித்திருந்தோம்.
இதில் எவனும் குற்றவாளி அல்ல, இந்த சமூகமே குற்றவாளி, மிக கேடு கெட்ட சமூகமாக மாறி நிற்க்கின்றது. செயல் என்பதும், சிந்தனை என்பதும் சமூகத்தின் விளைச்சல். இந்த நிலம் நஞ்சாக இருக்கின்றது, அதனால் விளைவதும் நஞ்சாக விளைகின்றது.
சுவாதி காதலிக்கவில்லை என கொன்று விட்டேன் என சொன்னால், அது என்னடா காதல், அன்பு கொலை செய்யுமா? காதல் கொலை செய்யுமா, நேசம் கொலை செய்யுமா இதுவா காதல்.
தொடர் வண்டி நிலையம் ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை வெட்டி போட்டுவிட்டான் ஒருத்தன், இரண்டு மணிநேரமாக இரத்த சகதியில் ஒரு பெண் கிடக்கிறாள், ஒருவன் கூட உதவ முன்வரவில்லையே,
எப்படி என்றால் இந்த சமூகம் கேடு கெட்ட சமூகமாக மாறியுள்ளது. ஒருத்தன் போகவில்லையே, அவர் இரத்தம் ஓடி வருவதை ரசித்துக் கொண்டிருக்கின்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என சீமான் கொதித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நாளை மறுதினம் புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரேசா பதவியேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியிலிருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 11.07.2016 திங்கட்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு வழமைபோன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமக்களும் தங்களது கிராமங்களின் பயன் கருதி பூசை வழிபாடுகளில் பங்குபற்றுவது வழமையானஒன்றாகும் . அந்தவகையில் இன்று கிடாசூரி கிராமமக்களின் உபயத்தில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் அம்பாள உள்வீதி வலம் வந்து தொடர்ந்து இடபவாகனத்தில் வெளிவீதியில் எழுந்தருளிய நிகழ்வு இடம்பெற்றதோடு பகல் நிகழ்வுகள் நிறைவு பெற்றது .
யாழ்.தீவகம் நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்வித்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயடடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தீவகம் நயினாதீவு பகுதியில் இருந்து யாழ்.நகருக்குள் வந்த மேற்படி வாகனத்தின் சாரதி உறங்கிய நிலையில் வாகனம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள சுற்று வட்டத்திற்குள் நுழையும் பகுதியில் உள்ள மின் கம்பம் மற்றும் மரத்துடன் மோதி தலைகீழாக புரண்டுள்ளது.
இதில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த சிறீதரன் சிவமலர்(வயது48) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் மேலும் 9பேர் சிக்கியுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ் நகரத்தின் பிரபல கல்லூரியொன்றின் மாணவன் செந்தூரன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதால், அவரை பிணையில் விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கைக்குண்டு ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்னும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன் இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்றமையினால் அவரை பிணையில் விடுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அவரின் மனு நிராகரிக்கப்பட்டு , சிறையில் இருந்தவாறு பரீட்சை எழுத நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த மே மாதம் 9ம் திகதி கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் உடைமையில் கைக்குண்டு ஒன்று இருந்ததாக பொரலிசார் குற்றம் சுமத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாள் முதல் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக அந்த மாணவன் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.
எனினும் இவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருப்பதனால், அவரை பிணையில் விடுமாறு கோரி அவசர பிணை மனுவொன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மாணவன் சார்பில் பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
ஆவணி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மாணவன் செந்தூரன் தோற்றவுள்ளார். பரீட்சைக்கான திகதி அண்மித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே, இந்த பிணை மனுவை அவசர மனுவாகக் கருதி பரிசீலனை செய்து அந்த மாணவனின் எதிரகாலத்தைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இந்த மாணவன் கல்வியிலும் அதேபோன்று விளையாட்டுத் துறையிலும் சிறந்தவராவார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் படித்து, 7ஏ ஒரு பி ஒரு சி உட்பட 9 பாடங்களில் சித்தியடைந்துள்ளார்.
இவர் மாணவர் தலைவனாகச் செயற்பட்டுள்ளார். மெய் வல்லுனர் இல்லத் தலைவனாகவும், மெய்வல்லுனர் தலைவனாகவும் விளங்கியதுடன். 17வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தலில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மட்டத்திலான உயரம் பாய்தல் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ள சிறந்த மாணவனாவார்.
எனவே, அவருடைய எதிர்காலத்தை மேல் நீதிமன்றம் கருத்திற் கொண்டு அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், என அந்த பிணை மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இளஞ்செழியன், இந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.
அவர் கைக்குண்டு வைத்திருந்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பாரதூரமான வழக்கு என்பதால் இந்த பிணை மனுவை அவசர மனுவாக கவனத்தில் எடுத்து பிணை வழங்க முடியாது என தெரிவித்தார். அவர் தனது கட்டளையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் வன்செயல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மாணவனும், அவருடன் சேர்ந்த குழுவினரும் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ் மாவட்டம் அமைதி நிலைமைக்குத் திரும்பியது. இந்த மாணவனுக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மாணவனின் எதிர்காலம் மிக முக்கியமானது. அதைவிட பொதுமக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. குற்றம் சாட்டப்பட்ட இந்த மாணவன் சில மாதங்கள் தலைமறைவாகியிருந்ததன் பின்னரே, பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இவரை பிணையில் விடுவது யாழ் குடாநாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயற்பாட்டை ஏற்படுத்திவிடும்.
இவர் கைக்குண்டு வைத்திருந்தார் என்று இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பாரதூரமானது மட்டுமல்ல. அது மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டிய வழக்குமாகும். எனவே, இத்தகைய வழக்கு சம்பந்தப்பட்ட பிணை மனுவை அவசர மனுவாகக் கருதி பிணை வழங்க முடியாது.
எனவே, இந்த மாணவனை பிணையில் விடுமாறு கோரும் மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது. அந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதில் எந்தவிதத் தடையுமில்லை. அவர் விளக்கமறியலில் இருந்தவாறே பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
இவ்வாறு பரீட்சை எழுதுவதற்குரிய அனுமதியை நீதவான் நீதிமன்றத்தில் பெற்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் என நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தப் பிணை மனு தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், சட்டமா அதிபருக்கும் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி இந்த மனு மீதான வழக்கை எதிர்வரும் 08.08.2016ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இன்று (11.07.2016) மாலை 6.30 மணியளவில் A9 வீதி கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடுவீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் வாகனம் பலத்தசேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விடயங்களை வைத்து மக்கள் எவ்வாறு தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள், இவற்றில் உணர்ச்சி மிகுந்த நாடுகள் எவை என்பது குறித்த புள்ளியியல் தகவல் வெளியாகியுள்ளது.
Gross National Happiness என்ற அமைப்பு 143 நாடுகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இதில், பொருளாதாரம் இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் தங்களுடைய சந்தோஷம் மற்றும் கோபத்தினை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள்,
தங்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களில் அடிப்படையில், இவர்கள் அதிகமாக கோபப்படுவது அல்லது சிரிப்பது, இவை இரண்டும் இல்லாமல் எவ்வித உணர்ச்சிகளும் இன்றி கடமைக்காக வாழ்வது, அல்லது அதிகமாக தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, மேலும் மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக பழகுவது போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஈராக், கவுதமாலா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மிகுந்த உணர்ச்சி மிகுந்த நாடுகளாக கருதப்படுகிறது.
இந்திய மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதை கண்டித்து ரஷ்ய மருமகள் நூதனப்போராட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த ஓல்கா எபிமென்கோவா என்ற பெண் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்தபோது, ஆக்ராவை சேர்ந்த விக்ராந்த் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன்பிறகு ஆக்ராவில் உள்ள இந்தன்புரி பகுதியில் மாமியாரோடு கூட்டுகுடித்தனம் நடத்திய ஓல்கா இந்திய மொழியை சரளமாக பேசக்கற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தான் இதுவரை சந்தித்திராத வரதட்சணை கொடுமையை எதிர்கொண்டுள்ளார், ஒரு கட்டத்தில் சித்ரவதை உச்சத்தை தொட்டுள்ளது, கணவன் குழந்தையுடன் ஓல்காவை வீட்டை விட்டு மாமியார் விரட்டியுள்ளார்.
இதனால் வெகுண்டெழுந்த ஓல்கா தனது மாமியார் வீட்டின் முன்பு குழந்தையுடன் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கியுள்ளார், வீட்டுக்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் கணவரின் சொத்தை பிரித்து தரவேண்டும் என்பதுதான் வோல்காவின் கோரிக்கையாக உள்ளது.
தான் ரஷ்ய பெண் என்பதால் புகாரினை வாங்குவற்கு பொலிசார் மறுப்பதாக வோல்கா குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் திகதி சுவாதி மர்மநபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், ராம்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தனிப்படை பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
சுவாதியின் வீடு சூளைமேடு, தெற்கு கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ளது. அவர் பணியாற்றிய இடம் செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனம். தினமும் சூளைமேடு நெடுஞ்சாலையை கடந்து சௌராஷ்ரா நகர் 8வது தெரு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சுவாதி செல்வது வழக்கம்.
அப்போது ஏ.எஸ் மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் அவரைப் பார்த்துள்ளார். ராம்குமாருக்கு, சுவாதி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுவாதி வரும் காலை நேரத்துக்கு தவறாமல் ஆஜராகி உள்ளார் ராம்குமார். பிறகு, சுவாதியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பெருமாள் கோயிலுக்கு செல்லும் பழக்கம் உள்ள சுவாதிக்காவே ராம்குமாரும் அங்கு சென்றுள்ளார். சுவாதியின் வேலை பார்க்கும் இடத்தை தெரிந்து கொள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
டிக்கெட் எடுக்க சென்ற சுவாதியின் அருகிலேயே அவரும் நின்றிருக்கிறார். கறுப்பாக, ஒல்லியாக கிராமத்து சாயலில் உள்ள கட்டட வேலைப்பார்க்கும் இளைஞன் ஒருவன் தன்னையே பார்ப்பதை சுவாதி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் சொல்லியுள்ளார்.
ஆனால் அவர்கள் அதை பெரியளவில் கண்டுக்கொள்ளவில்லை. இதை தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் கடைசியாக அனுப்பியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ் இப்போது எங்கள் வசம் உள்ளது.
இதன்பிறகு சுவாதியின் பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், அவர் வேலைபார்க்கும் இடம் வரை சென்று விட்டு ரயிலில் திரும்பி வந்துள்ளார். கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த போது அவரது பின்னால் ராம்குமார் நெருங்கி நின்றுள்ளார்.
தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி, இதன்பிறகு மே 10ம் திகதி அவரது நெருங்கிய நண்பருக்கு ராம்குமாரின் தொல்லை குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.
சுவாதிக்காக அந்த நண்பரும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்து ராம்குமாரைப் பார்த்துள்ளார். சுவாதியுடன் அவரைப் பார்த்ததும் ராம்குமார் அமைதியாகவே இருந்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் அவர் சுவாதியை பின்தொடரவில்லை.
சுவாதி, இந்தத் தகவலை இலைமறை காயாக வீட்டில் சொல்லிய பிறகு அவரை பைக்கில் அழைத்து வந்துள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன்.
ஆனாலும், சுவாதியை பின்தொடர்வதை ராம்குமார் நிறுத்தவில்லை. சுவாதியிடம் தன்னுடைய காதலை ராம்குமார் சொன்ன போது, அவரை ‘தேவாங்கு போல இருக்கும் உனக்கு……’ (அதற்கு மேல் உள்ள வார்த்தையை இங்கு குறிப்பிட முடியாது) என்று ஆத்திரத்தில் சுவாதி திட்டியுள்ளார்.
இது ராம்குமாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ராம்குமார், சுவாதியை கொலை செய்ததற்கு முக்கிய காரணம்” என்றார்.
இந்நிலையில் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் உலாவருகின்றன.
340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர்.
ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது.
அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர்.
இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டுள்ளமையால், இங்கு தினமும் 3 சூரிய உதயங்களும், 3 சூரிய அஸ்தமனங்களும் நடைபெறுகிறது.
இந்த கிரகம் 16 மில்லியன் வயது உடையது என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு 580 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், நிறையும் 4 மடங்கு அதிகமாக உள்ளது.
சூரியனை விட 80 சதவீதம் அளவு பெரியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஸ்பியர் கருவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தூர கிரகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற ஓரின பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி. தொற்றுக்கு பிரதான காரணம் எனவும் அந்த மத்திய நிலையம் கூறியுள்ளது.
இலங்கையில் 1985 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 ஆயிரத்து 438 எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 390 நோயாளிகள் இறந்துள்ளனர்.
இதனடிப்படையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு எயிட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் தமக்கு எயிட்ஸ் நோய் இருப்பதை அறியாமலும் பலர் சமூகத்தில் இருக்கலாம் எனவும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என இன்று முதலமைச்சர் அலுவலகத்தில், வடமாகாண செயலாளர் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இன்று திங்கள் கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண செயலாளர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கே பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பதினெட்டு பேரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் வாக்களித்துள்ளார்கள்.
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளடங்கலாக மூன்று பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பெரும் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தீபிகா படுகோனே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என்ன செய்தார் என்பதை தனது பேஸ்புக் அபிமானிகளுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பொலிவுட் கதாநாயகளில் பிரபலமானவர் தீபிகா படுகோனே (30). தற்போது ஹொலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என்ன செய்தார் என்பதை அவர் தனது பேஸ்புக் அபிமானிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது..
இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். மன அழுத்தத்துக்குள் நான் மூழ்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த நிலையில் இருந்து வெளியேற கடுமையாக போராடினேன். அந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற கையறு நிலையில் தவித்தேன்.
ஆனால், எனது அப்போதைய நிலையை போராடி வெல்லும் பலத்தை எனக்குள் இருந்த ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய ஆற்றல் ஊக்குசக்தியாக அமைந்தது. பட்மின்டன் விளையாட்டு தெரிந்திருந்ததால் தோல்விகளை கையாள மட்டுமின்றி, வெற்றியை கையாள்வது எப்படி என்பதையும் விளையாட்டு கற்றுத் தந்தது. எனக்கு பணிவையும், அடக்கத்தையும் அது கற்றுத் தந்தது.
எந்த நிலையிலும் இருந்து மீள்வது எப்படி, எதையும் எதிர்த்து போராடுவது எப்படி என்பதை கற்றுத் தந்ததுடன் அந்த ஊக்கம்தான் என்னை வழிநடத்தி செல்கிறது. எந்த துறையிலும் சிறந்தவராக விளங்க ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார்.
எனவே, ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எனது வாழ்க்கையை மாற்றிய விளையாட்டு உங்களது வாழ்க்கையையும் மாற்றும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பலதுறைசார்ந்த பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி திரு.சுவாணி தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, தர்மபால செனவிரத்தின மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
பதஞ்சலி புக் ஒ ஃப் வேல்ட் ரெக்கோட்ஸ் மற்றும் ருத்ர சாந்தி யோகாலயம் மூலம் பயிற்சிப் பெற்ற இயைனியா அருண் என்ற 6 வயதே ஆன சிறுமி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மூன்று வயது முதலே தன் தாயார் யமுனா தேவியுடன் இணைந்து தினமும் காலை நேரங்களில் யோகா மற்றும் தியானத்தை விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் இயைனியா.
தற்போது திருச்சியில் வசித்துவரும் அவரை, பெற்றோர் முறையான பயிற்சி அளிக்க யோகரத்னா கிருஷ்ணகுமார் நடத்திவரும் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துள்ளனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக முட்டை மீது பத்மாசனத்தில் அமர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார்.
அண்மையில் திருச்சி சங்கம் ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள் கூடியிருக்க, மக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு மேடையில் 30முட்டைகள் கொண்ட தட்டு வைக்கப்பட்டது பின் அதன் மீது சிறுமியை பத்மாசனம் நிலையில் இருவர் தூக்கி அமரவைத்தனர். பிறகு சிறுமி 30நிமிடங்கள் தொடர்ந்து முட்டைகள் மீது அமர்ந்து புதிய சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முனைவர்.அசோகன், ‘இதுவரை யாரும் செய்யாத செயலை செய்து காட்டுவதே சாதனையாகின்றது. முடியும் என்று நினைத்து உரிய பயிற்சிகள் அளித்தால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும். இவ்வகையில் சிறுமி இயைனியாவின் திறமையைக் கண்டறிந்து வெளிக் கொண்டுள்ள வந்ததில் யோகரத்னா கிருஷ்ணகுமாருக்கு பாராட்டுக்கள் என்றார்.