கதிர்காமத்தில் இருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற வேன் ஒன்று ஜூல்பல்லம பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 வயது யுவதி ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (15.06.2016) காலை சுமார் 10 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீதி ஓரத்தில் நடந்து சென்ற பெண்ணின் மீது குறித்த வேன் மோதியதால் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததுடன், ஓய்வு எடுப்பதற்காக அருகில் அமர்ந்திருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்களும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜூல்பல்லம பிரதேசத்தை சேர்ந்த குருவிட்ட கே.ஜயந்திமகென்சிக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை செவனப்பிட்டிய பகுதிக்கு யாத்திரைக்குச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சை பெறுவதற்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
பொது மன்னிப்பு காலத்தின் கீழ் முப்படைகளையும் சேர்ந்த 2763 பேர் சட்டரீதியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முப்படைகளிலிருந்தும் தப்பிச் சென்றிருந்த வீரர்களை உத்தியோகபூர்வமாக பதவியிலிருந்து நீக்குவதற்கு கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ வீரர்கள் சட்டரீதியாக பதவியிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்கள் 118 பேரும், கடற்படை வீரர்கள் 71 பேரும் குறித்த காலப் பகுதியில் சட்டரீதியாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த பொதுமன்னிப்பு காலம் அடுத்த மாதம் 12ம் திகதி வரை நடைமுறையில் இருப்பதுடன், முப்படைகளிலிருந்தும் சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ள வீரர்கள் அதற்கு முன்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றி இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் நலமாக இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா இணையத்தளம் ஒன்றில் இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது, அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் மாரடைப்பால் காலமானார் என்றும், இத் தகவலை அவருடைய மகள் சௌந்தர்யா உறுதி செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் நலமாக இருப்பதாகவும், அந்தத் தகவல் பொய்யானது என்றும் இந்திய பிரதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் இறந்து போனதாக ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களில் வதந்திகள் பரவுவதும், அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து அறிக்கை விடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்து ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படம் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன், இயக்குநர் சங்கர் தயாரிப்பில் எந்திரன் 2.0 படத்தின் இறுதிக் கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
சங்கர் படத்துக்காகவே ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில்தான், அவர் மாரடைப்பால் காலமானார் என்ற உறுதிப்படுத்தப்படாத அதிர்ச்சித் தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த வெளிவரவிருக்கும் கபாலி திரைப்படம் உப தலைப்புக்களுடன் இத்தாலியில் திரையிடப்படவுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம், ரஜினி பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பலரின் எதிர்ப்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ள இந்தப் படமானது சீனா, ஹொங்கொங், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் வெளியாகவிருக்கிறது.
இப்போது முதல் முறையாக இத்தாலியில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற பெருமையினை கபாலி பெறுகிறது.
கபாலியின் 35 நொடி ட்ரைலரை சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். நெருப்புடா என்ற கர்ஜனை குரலுடன் தொடங்கிய இந்த ட்ரைலருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பார்த்த இத்தாலிய சினிமா பிரமுகர் மிஷெல் க்ராஷியோலா என்பவர், பொலிவுட் சினிமா பிரபலங்கள் சிலரிடம் ரஜினி குறித்து விசாரித்து தெரிந்துகொண்டதன் பின், விழாவுக்கு சென்றிருந்த ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷை அணுகியுள்ளார்.
அவரிடம் கபாலியை இத்தாலியில் வெளியிட அனுமதி கோரியுள்ளார்.
கபாலி இங்கு வெளியாகும் அதே நாளில் இத்தாலியிலும் வெளியாகவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இத்தாலிய திரைப்பட விழாக்களிலும் கபாலி திரைப்படம் கலந்து கொள்ள வாய்ப்புக்களும் கிடைத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தென் பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியும்மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிளும் மழைப் பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள்.
எனினும், 65 டிகிரி செல்சியஸுக்கு அதிக வெப்பமான பானங்களை அருந்தும்போது, அது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
உணவுக்குழாயில் உண்டாகும் புற்றுநோய் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.
விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டு அத்துறையில் கால்பதித்தவர் தான் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை Diana Baig.
கால்பந்து மற்றும் கிரிக்கெட் என இருமுக திறமையோடு கலக்கி வருகிறார் Diana Baig(20). பாகிஸ்தானில் Hunza என்ற பகுதியில் பிறந்த இவர், சிறுவயதிலேயே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அந்த ஆர்வத்தின் தூண்டுதலே, இன்று இருமுகம் கொண்ட நாயகியாக இவர் வலம்வரக் காரணமாக அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர், Gilgit-Baltistan women’s cricket அணிக்கு தலைமை வகித்து வந்துள்ளார், அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் A அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.
இவர் முதல் முறையாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற தேசிய கிரிக்கெட் போட்டியில் தனது நாட்டிற்கு விளையாடி திறமையை வெளிப்படுத்தினார்.
தனது அசாத்திய ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கலக்கி வந்த இவர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 2014 SAFF Women’s Championships கால்பந்து போட்டியில் தடம்பதித்தார்.
இவரின், திறமையின் காரணமாகவே பாகிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து Diana Baig கூறியதாவது, சிறுவயதில் என்னுடைய தெருக்களில் வைத்து சக சிறுவர்களோடு கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவேன். நான் வசித்த இடம் சற்று மலைப்பகுதி என்பதால் விளையாடுவது மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு என்பதால் உள்ளூர் போட்டிகளில் நடக்கும் பங்கேற்று, 2010 ஆண்டு ஒரு அணியின் தலைவியாக உருவெடுத்தேன்.
அதன் பின்னர் எனது கிரிக்கெட் பயணம் தொடர்ந்தது, 2016 ICC Women’s World Twenty20 போட்டியில் பங்கேற்றது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, அது எனக்கு ஒரு புதுவாழ்க்கையையும், புதுவித உந்துசக்தியையும் அளித்தது.
தற்போது கால்பந்து போட்டியிலும் எனது திறமையை காட்ட தயாராக உள்ளேன், காலையில் கால்பந்து விளையாடுவேன், அதன்பின்னர் 11 மணி அல்லது 12 மணியளவில் கிரிக்கெட் விளையாட்டிற்காக பயிற்சிகளை மேற்கொள்வேன்.
இந்த பயிற்சியை மாலை 4.00 மணிவரை தொடருவேன் என கூறியுள்ளார்.
பொலிவுட் நடிகை அலிசா கான் வறுமையால் டெல்லி கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவர் ”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” என்ற படத்தில் நடித்துள்ளார். காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.
மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா, தற்போது வறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர்.
இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை பொலிசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
டெல்லியில் தற்போது வறுமையால் வாடி வரும் அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருகிறார்.
இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளும் கதவுகளே இல்லாமல் 300 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. ஆனாலும், அங்கு எந்தவித திருட்டு பயமும் இல்லை. சனிபகவானே பாதுகாப்பு என நம்புகின்றனர்.
வீடு என்றாலே கதவு பாதுகாப்பு அவசியம் என கருதும் நம்மால் இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், சனி சிங்னாபூர் கிராமத்தினரின் நிஜமான நடைமுறை இதுதான்.
அந்த கிராம மக்கள் அனைவரும் சனி கடவுளை வணங்குகின்றனர். அந்த கடவுளின் மீது உள்ள பக்தியின் அதீத நம்பிக்கையால் இப்படிச் செய்கின்றனர். அதற்கு வியப்பான ஆரம்பமும் உண்டு.
வழக்கம் வந்த அதிசயம்
300 ஆண்டுகளுக்கு முன் கடும் மழையினால் பனாஸ்னாலா ஆற்றில் பெரும்வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் கனமான பலகை போன்ற 1.5 மீ. நீளமுள்ள கரியபாறை மிதந்து வந்தது.
அது சிங்னாபூர் கிராமத்தின் அருகே வரும்போது, கரை ஒதுங்கியது. அதை வினோதமான பொருளாக கண்ட சிலர் குச்சியால் குத்திப்பார்த்தனர். அதிலிருந்து ரத்தம் வழிந்தது. மக்கள் வியந்தனர்.
அன்று இரவு கிராம தலைவரின் கனவில் சனி கடவுள் தோன்றினார், கரை ஒதுங்கியது எனது சிலைதான். அது மகத்தான சக்தி படைத்தது.
அதை இந்த கிராமத்திலே வைத்து வழிபடுங்கள். அது உங்கள் எல்லோரையும் காப்பாற்றும். கிராமத்தினர் வீடுகளிலும் கதவுகள் வேண்டாம். அப்போது தான் தடையில்லாமல் நான் வந்து அருள் செய்ய முடியும். அனைத்துக்கும் நானே பாதுகாப்பு என்று உறுதியளித்து கிராம தலைவரை ஆசிர்வதித்து மறைந்தார்.
இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி எம்.காஞ்சனா சுபசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆய்வுகளுக்கு அமைய இலங்கையில் 15 வீதமான சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் 20 வீதமான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆண் சிறுவர்கள் எங்கு சென்றால் என்ன, நீராட்டி விட்டு வீட்டுக்குள் அழைத்து விடலாம் என பல பெற்றோர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம்.
ஆனால் தற்போது பெற்றோர்கள் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக சிறுவர்களுக்கு உடல் ரீதியாக மாத்திரமல்ல உளவியல் ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தொடர்ந்தும் சிறுவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் சிக்கினால், அவர்களை அதில் இருந்து மீட்பதும் சிரமமான காரியம். சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது, அது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கோ, பொலிஸாருக்கோ தெரியப்படுத்துவது பாரிய பணியாகும் எனவும் எம்.காஞ்சனா சுபசிங்க கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப் புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.
வொஷிங்டன் தென்மேற்கு பகுதியில் ஸ்கொயர் என்ற சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் 2001ம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்.
இவர், பரிமாறும் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு அடைத்த முறுமுறுப்பான சமோசா மற்றும் தோசையை உண்பதற்காக ஒரு நீண்ட வரிசையில் அமெரிக்கர்கள் காத்திருகின்றார்கள்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த திருக்குமார் 1995ம் ஆண்டு மற்றைய புலம்பெயர்ந்தவர்கள் போன்றே பச்சை அட்டை லாட்டரி (green card lottery) மூலமாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்கா நாட்டு நியூயோர்க் நகரத்தில் குடியேறினார்.
ஆரம்பத்தில் தனது மனைவி பிள்ளைக்காக கட்டுமான வேலை, ஒரு எரிவாயு நிலையம் மற்றும் தனது நண்பரின் உணவகம் என கிடைத்த வேலைகளை செய்து சொந்தமாக தொழில் செய்ய வழி தேடினார்.
தான் நினைத்தபடி தொழில் தொடங்க அமெரிக்க சட்டப்படி 27,000 டாலர்களை செலுத்த 31/2 வருடங்கள் கடுமையாக உழைத்து, சேமித்த பணத்தை கொண்டு நியூயோர்க் தோசை எனும் வீதியோர உணவகத்தை ஆரம்பித்தார்.
இன்று, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில், அவரது மலிவான மற்றும் ருசியான உணவிற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.
கலிபோர்னியா மற்றும் ஜப்பானில் ரசிகர் சங்கமும் உள்ளது. 2002 ஆம் ஆண்டு நியூயோர்க் பத்திரிகை மூலம் இவருடைய உணவகம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் நியூயோர்க் தோசை பற்றி செய்தித்தாள்களிலிருந்து வெளிவந்தன.
மிகப் பிரபலமான நடைபாதைகள் சமையல்காரர்களுக்கும் மற்றும் தெரு விற்பனையாளர் Vendy விருது 2007ல் திருக்குமாருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் நேற்று காலமானார்.
1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்திலும்,மேலும் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பொது நோக்கு மண்டபத்திற்குள் பாத்தீனியம் படர்ந்து காணப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக துப்பரவு பணியை மேற்கொள்லாமல் பொது நோக்கு மண்டபத்தினைச் சுற்றி பாத்தீனியம் பரவிக் காணப்படுகின்றது.
பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இப் பொதுநோக்கு மண்டபத்தில் பாத்தீனியம் படர்ந்து காணப்படுவதுடன், அதிகாரிகள், பொது அமைப்புக்கள் சென்றுவரும் பிரதான வீதியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.