அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு புதைக்கப்பட்ட நிலையில் வெண்ணெய் உருளை ஒன்று கிடைத்துள்ளது.
உடனடியாக அருகாமையில் உள்ள அருங்காட்சியகத்தை தொடர்பு கொண்டு அந்த வெண்ணெய் உருளையை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார் ஜாக்.
இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட Cavan County Museum வியக்க வைக்கும் செய்தியை ஜாக்கிடம் கூறியுள்ளது. ஜாக் கண்டெடுத்துள்ள அந்த வெண்ணெய் உருளை சுமார் 10 கிலோ எடை கொண்டது மட்டுமின்றி இது 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வெண்ணெயானது நிலப்பரப்பில் இருந்து 12 அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது முன்னோர்கள் எவரும் மத ரீதியான சடங்குகளின் ஒருபகுதியாக விலங்குகளிடம் இருந்து நிலத்தை காக்கும் பொருட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மரத்தாலான சட்டத்திற்குள் வைத்து வெண்ணெயை பாதுகாப்பார்கள், ஆனால் இந்த வெண்ணெய் உருளை மண்ணிலேயே புதைக்கப்பட்டுள்ளது.
பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் உட்பட எந்த பொருளையும் செல்வத்தின் அறிகுறியாகவும், முக்கியமானதாகவும், மதிப்புமிக்கதாகவும் அயர்லாந்து மக்கள் கருதியிருந்தனர்.
மட்டுமின்றி வெண்ணெய் என்பது அந்த காலத்தில் மிக விலை உயர்ந்த பொருளாக பாவிக்கப்பட்டது. தங்களுக்கான வரி செலுத்த பெருவாரியான மக்கள் வெண்ணெயை வழங்கி வந்துள்ளனர்.
தற்போது இந்த வெண்ணெய் உருளையானது டப்லினில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகில் பயணம் செய்த 44 இலங்கை அகதிகள் கடந்த 20 நாட்களாக நடுக்கடலில் ஆபத்தில் சிக்கி போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தம் ஏற்பட்டபோது உயிருக்கு அஞ்சிய பலர் அகதிகளாக இந்தியா நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
இவர்களில் ஒரு கர்ப்பிணி பெண், 9 குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர் இந்தியாவிலிருந்து படகு மூலமாக வெளியேறி அவுஸ்திரேலியாவில் புகலிடம் எதிர்ப்பார்த்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளனர்.
இரவு, பகலாக பயணமான இந்த படகு இந்தோனேஷியாவில் உள்ள Aceh என்ற கடற்பகுதிக்கு அருகில் வந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு சேதம் அடைந்துள்ளது.
கடந்த 20 நாட்களாக அவுஸ்திரேலியா அல்லது இந்தோனேஷியா அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் படகில் இருந்த இரு இளைஞர்கள் கடலில் குதித்து இந்தோனேஷியா கடற்கரைக்கு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், இருவரையும் கைது செய்த இந்தோனேஷியா கடற்படை அவர்களை மீண்டும் அவர்களின் படகிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் இலங்கை அகதிகளுக்கு ஆதரவாக ஐ.நா சபை அண்மையில் இந்தோனேஷியா அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்தோனேஷியா துணை ஜனாதிபதியான Jusuf Kalla தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை அதிகாரிகள் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ‘நடுக்கடலில் இருக்கும் இலங்கை அகதிகளை இந்தோனேஷியா கடற்கரைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் படகு பழுது பார்க்கப்பட்டு, உணவு மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் திருப்பி இந்தியா நோக்கி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகதிகள் இந்தியாவை அடையும் வரை அவர்களது படகை சுற்றி பாதுகாப்பிற்கு இந்தோனேஷியா கடற்படையினர் செல்லுவார்கள் எனவும் இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த நடவடிக்கை எப்போதும் மேற்கொள்ளப்படும் என்ற திகதியை அவர்கள் அறிவிக்கவில்லை.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சென்றவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெளனம் சாதித்து வருவது நடுக்கடலில் தத்தளித்து வரும் 44 பேரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தானில் ஏடிஎம் நிலையத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி ஒருவர் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஏடிஎம் நிலையத்திலிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jhunjhunu-வில் உள்ள ஒரு ஏடிஎம் நியைலத்தில் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு நேரத்தில் காவலாளி ஏடிஎம் உள்ளே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது முகத்திரையிடன் நுழைந்த ஒரு மர்ம நபர், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால், காவலாளியை மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காவலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இனியும் இது போன்ற ஏழை பணியாளர்கள் கொல்லப்படுவதை தடுக்க, இ்வ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, நிபந்தனையின்றி ஒரு கடுமையான தண்டனை வழங்கிட இந்திய அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சிப்பகுதியில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் உள்ள பதினைந்து வயதுடைய சிறுமி ஒருவரை கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமடைய வைத்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நேற்று முன்தினம்பிற்பகல் குறித்த விடுதியை சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் நேற்று முன்தினம் (14.06.2016) இரவு ஒருவரைக் கைது செய்து நேற்றைய தினம் (15.06.2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களின் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை நேற்றைய தினம் (15.06.2016) மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் நீதிவான் அறையில் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
குறித்த சிறுமியை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் உட்பட மூன்று பேர் அச்சுறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் இவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த சிறுமி முன்னர் பொலிசில் முறைப்பாட்டை செய்யத் தயங்கியதாகவும் தெரியவருகின்றது.
கதிர்காமத்திலிருந்து திஸ்ஸமஹாராம பகுதிக்கு வேகமாக சென்ற வேன் ஒன்று ஜுல்பல்லம பகுதியில் வைத்து வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதால் பெண் பலியாகியுள்ளார்.
திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெயந்தி மஹேசிக்கா என்ற யுவதி, தனது கையடக்கத் தொலைபேசிக்கு மீள்நிரப்பு அட்டையை பெற்று கொள்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலநறுவை பகுதியைச் சேர்ந்த சிலர் யாத்திரைக்காக கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்தவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளதோடு அவர்கள் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள்.
இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளது.
அந்த நிறுவங்களிடம் கடன் வாங்கிய ஒரு பெண் தன்னுடைய அனுபவத்தை கூறும்போது, அவர் 500 யான் (76 அமெர்க்க டாலர்) கடன் வாங்கியிருந்தார் என்றும், அதற்கு வார வட்டியாக வாங்கிய தொகையில் 30 சதவீதம் செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.
மேலும், ஒரு பழைய கடனை அடைக்க, ஒரு புதிய லோன் வாங்கிய போது, அவரின் கடன் 55,000 யான் வரைக்கும் சென்று விட்டதாகவும், உடனே அந்த நிறுவனம், அவரின் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இணையத்தின் மூலம், இப்படி ஆளைக் கொல்லும் வட்டிக்கு கடன் கொடுத்து, அதற்கு கேரண்டியாக பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை வாங்கும் நிறுவனங்களை பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குழந்தைகள் இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் செலவிட வேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும்.குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.
குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிக்க பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.
குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.
இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க “பாஸ்வேர்ட்” உதவும்.
வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் “சைபர் கஃபே”களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.
குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
நவீன உலகில் தொழில் ரீதியாக தங்கள் பணியை விரைந்து, எளிதில் முடிக்க பல உபகரணங்கள் பயன்படுகின்றன. உலக அளவில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள இந்த நிலையில் பிச்சை எடுப்பவர்கள் தற்போது புது விதமான உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பிச்சை எடுப்பவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பயனாளர்களை குறிவைத்து பணம் தந்து உதவுங்கள் என பிச்சை எடுப்பதாக ஐக்கிய அரபு அமீரக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கோடி கணக்கில் பயனாளைர்களை கொண்ட வாட்ஸ் ஆப் மெஸ்ஸெஞ்சர் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தளத்தின் மூலம் நண்பர்கள், குடும்பத்தினரை மிக எளிமையாக தொடர்பு கொள்ளலாம். மேலும் பிரச்சணைகளை வெளிக்கொண்டு வருவதிலும் முக்கிய பங்குவகிக்கிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக இணையதளம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில், பிச்சைக்காரர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அதன் பயனாளர்களை குறிவைத்து தங்களுக்கு பணப்பறிமாற்றம் செய்து உதவி செய்ய கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரபு நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பல்வேறு நம்பர்களிடம் இருந்து அடையாளம் தெரியாத பிச்சைக்காரர்கள் தங்கள் முகவரி, அக்கவுண்ட் நம்பர் முதலியவை அனுப்பி பண உதவி செய்யுமாறு அனுப்பியுள்ளனர். அந்த பெண் காவல் துறையில் அளித்த புகாரின் பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
மக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அனுதாபிகள் மக்களை குறிவைப்பார்கள். மேலும் பிச்சைக்காரர்கள் மனதை தொடும் அளவுக்கு பேசி, பொய் கதைகளை சொல்லி உங்களை நம்ப வைத்து பணம் பறிப்பார்கள் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அபுதாபி காவல் நடவடிக்கைகள் இயக்குனர் ஜெனரல் அமீர் முகமது அல் முஹைரி அறிவுறுத்தியுள்ளார்.
மழை வருவதை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்கும் பணிகளை இந்திய – இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
தற்போது அளவுக்கு அதிகமான பருவ மழை பெய்து வருவதால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை கணித்து மழை பெய்யும் தன்மையை கண்டறிய வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்பணியை வங்காள விரிகுடா படுகை ஆய்வக விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர். இவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் சவுத் ஆம்டனில் உள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளும் இணைந்துள்ளனர்.
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர்.பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பட்டன்களை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், பெல்ஜியம் பொலிசார் அதனை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களை எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து கொள்ளும் பேஸ்புக், நம்மை வகைப்படுத்திக் கொண்டு நமக்கேற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் ஈட்டுகிறது.
இதன் மூலம் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் அவர்கள் மார்க்கெட்டிங் செய்வது மேலும் எளிதாகுகிறது.எனவே உங்களுடைய தனியுரிமையை பாதுகாக்க விரும்பினால், அதனை பயன்படுத்துவதை பற்றி சிந்தியுங்கள் என எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்ற சம்பவத்திற்கு பிறகு, ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி லேண்டில் நேற்று முன் தினம் ஒரு குடும்பத்தினர் பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர்.
அப்போது, பெற்றோரை விட்டு விலகி ஏரிக்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்த 2 வயது சிறுவனை முதலை தண்ணீரிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.இக்காட்சியை கண்ட பெற்றோர் அலறி துடித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சிறுவனை மீட்கும் பணியில் இறங்கினர்.
நீச்சல் வீரர்கள் குளத்தில் பாதுகாப்பாக குதித்து குழந்தையை தேடி வந்துள்ளனர்.குழந்தையை முதலை விழுங்கியிருக்கும் என சந்தேகித்த பொலிசார் 5 முதலைகளை கொன்று அவற்றின் வயிற்றில் சிறுவனின் உடல் பாகங்கள் இருக்கின்றனவா என பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
ஆனால், ஒரு முதலையின் வயிற்றில் கூட சிறுவனின் உடல் இல்லை. எனினும், முயற்சியை கைவிடாத நீச்சல் வீரர்கள் தேடியபோது தண்ணீரிக்குள் சிறுவனின் உடல் எந்த காயங்களும் இன்றி கிடந்துள்ளது.சடலத்தை மீட்ட நீச்சல் வீரர்கள் அதனை கரைக்கு கொண்டு வந்தனர். பொலிசார் மற்றும் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறுவனின் பெயர் Lane Graves என கூறப்பட்டாலும் இவன் தான் காணாமல் போன சிறுவன் என பெற்றோர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் தான் என பொலிசார் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தாளங்குடாவை தாண்டியவுடன் வருகின்ற புதுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் வசிப்பவர்தான் இந்த கொல்லுப்பாட்டி செம்பாப்போடி செல்லம்மா.
செல்லம்மாவுக்கு தான் பிறந்த வருடம், தெரியாதாம், அங்கு நின்றவர்கள் கூறினார்கள் 1914 ஆம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார் என்று. அதனால் செல்லம்மாவுக்கு 102 வயது இருக்கும் என செல்லம்மாவின் கடைசி மகள் தெரிவித்தார்.
செல்லம்மா தனது வாழ்நாளில் வெகு விரைவில் ஐந்தாவது தலைமுறையைக் காணப்போகின்றார் என செல்லம்மாவின் பூட்டப்பிள்ளையொருவர் தெரிவித்தார்.
செல்லம்மாவுக்கு 12 பிள்ளைகள், 61க்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகள், 149க்கும் மேற்பட்ட பூட்டப்பிள்ளைகள், 26க்கும் மேற்ப்பட்ட கொள்ளுப்பிள்ளைகள் இருக்கு என செல்லம்மாவின் கடைசி மகள் கணக்கு காட்டினார்.
செல்லம்மாவின் அத்தனை பிள்ளைகளும் மாவட்டத்தையும் தாண்டி பல ஊர்களில் வசிக்கின்றர்கள் என தெரிவித்துள்ளனர்.
ஆச்சி தனக்கு நடந்த திருமண சம்பவத்தை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். ”எனக்கு 13 வயசில கல்யாணம் நடந்திச்சு.
அது ஒரு பெரிய கதடா மகனே! நான் ஆறாம் வகுப்பு வரைதான் படிச்ச. ஒரு நாள் அம்மாவும், அப்பாவும் என்ன அம்மாட தங்கச்சிட வீட்ட விட்டுட்டு போரதீவு காளியம்மன் கோயிலுக்குப் போயிட்டாங்க.
அந்தநேரம் பாத்து மாமாட மகன் வீட்ட வந்து என்னத் தூக்கித்து போயிட்டாரு (சிரிக்கிறார்) பிறகு அப்பா வந்து பிரச்சினப்பட்டு பெரிய புதினமெல்லாம் நடந்தது.
பிறகு எல்லாம் சரியாப் போயிட்டது. அப்ப 14 வயசில பிள்ளப்பெத்த நான். அந்நேரம் சோறு, கறியெல்லாம் நல்ல ருசியா இருக்கும். மண் சட்டியிலதான் சமைக்கிறது.
மீனெண்டா பெரிய பெரிய மீன் இவர் வாங்கிட்டு வருவார். இப்ப சோறு, கறியெல்லாம் நஞ்சாப் போச்சி. பிள்ள பெத்தா மிளகு தண்ணிச் சாப்பாடுதான் தருவாங்க.
என்னவும் என்டால் சொந்த பந்தமெல்லாம் ஒரு இடத்தில கூடிடுவோம். இப்ப சொந்த பந்தங்கள பாக்கிறதே கஷ்டமாயிருக்குது.
இங்க இருக்கிற கண்ணாமுனைப் பிள்ளையார இவரும் நானுந்தான் சிறாம்பிகட்டி வச்சுக் கும்பிட்டு வநதோம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொங்கிப் பூஜையும் செய்வோம்.
என்னுடை பிள்ளைகள், பேரப்பிள்ளையள், பூட்டப்பிள்ளைகள் எல்லாம் என்ன நல்லாப் பாக்குதுகள். இப்ப அரசாங்கத்தால 2250 ரூபா தாராங்க.
அதில மாப்பெட்டி, தைலம் எல்லாம் வாங்குவேன். அந்த காலத்தப்போல இந்தக்காலம் இல்ல. உடம்புல வருத்தமெண்டா நாட்டு வைத்தியந்தான் செய்யிறது.
வீட்டில சும்மா இருக்க மாட்டோம் ஏதாவது ஒரு வேலைய செய்து கொண்டுதான் இருபபோம். இப்ப ரெண்டொரு நாளாத்தான் நெஞ்சிக்க நோவுதுடா மகனே” என செல்லம்மா ஆச்சி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
செல்லம்மா ஆச்சி தமது அன்றாடக் கடமைகளைத் தானே செய்வது, மூன்று நேரம் தவறாது சாமி கும்பிடுவது போன்றவற்றைச் செய்து வருகின்றார்.
சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனப்பாடம் செய்த தேவாரங்களைப் படிப்பது, தனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளிடம் பழங்காலத்துக்கதைகளைக் கதைப்பது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்.
அத்துடன் செல்லம்மா ஆச்சியின் கட்டில் வெறும் மரத்தினாலான பலகையைக் கொண்டு செய்யப்பட்டது, அது தற்பொழுது உடைந்த நிலையில் இருக்கின்றது.
தனது கடமைகளை தானாகவே செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது. அதனால் பிடித்து நடக்கும் ஊன்று கோல் மற்றும் நூளம்பு வலை போன்ற பொருட்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்த பாட்டியின் வறுமை நிலையினைக் கொண்டு நல்ல உள்ளம் படைத்த உறவுகள் தனக்கு உதவி செய்தால் தன்னுடைய பிள்ளைபோல் அவர்களையும் நேசிப்பேன் என செல்லம்மா ஆச்சி மனமுருக கேட்டுக்கொண்டார்.
இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் முதுமை அடைந்தால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றார்கள்.
ஆனால் செல்லம்மா ஆச்சிக்கு அந்த குறையில்லை. வசதி இல்லாத நிலையிலும், எல்லாப் பிள்ளைகளும் தன்னை கவனித்துக் கொள்கின்றார்கள் என்றார்.
செல்லம்மா ஆச்சி சொல்வதைப் போல அந்தக் காலத்தில் உரலில் நெல் குத்தி, அம்மியில் மஞ்சள் அரைத்து, ஆட்டுக்கல்லில் உழுந்து அரைத்து, கிணற்று வாளியில் நீர் அள்ளி உடலுக்குக் கொடுத்த பயிற்சியும் அவரது உணவுப் பழக்க வழக்கமுமே இத்தனை காலமும் அவர் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும்.
இன்று பலர் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியாத நிலையிலே இருக்கின்றனர். சொகுசு வாழ்க்கை கூடிவிட்டதால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியம் இன்றி மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையேனும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம்.
இன்று முதுகு கூனியிருந்தாலும் முதுமையின் அடையாளமாக எம்மத்தியில் வாழும் செல்லம்மா ஆச்சி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்..
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல பேர் தங்களின் வேலையை விட்டு விட்டு போட்டியிட்டனர். இதை நீங்கள் ஒரு தோல்வியாக கருத கூடாது, சிறந்த தொடக்கமாக எடுத்துக் கொண்டு நாம் மறுபடியும் அயராது களத்தில் நிற்க வேண்டும்.
நாம் எப்படிபட்ட தலைவனின் பிள்ளைகள், அவர் நோக்கமும், நாம் நோக்கமும் ஒன்று தான் அடிமை தேசிய இனத்தின் விடுதலை.
ஒரு வித்தியாசம் அவருடையது ஆயுதம் ஏந்திய புரட்சி, நம்முடையது அறிவு ஆயுதம் ஏந்திய அரசியல் புரட்சி, ஆனால் நோக்கம் ஒன்று தான் இலக்கு ஒன்று தான் அதை நாம் அடைய வேண்டும்.
அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தல் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லாரும் போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 9 மற்றும், தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை அச்சம் இன்றி மேற்கொள்ளும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நீர்கொழும்பு மாநகரசபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கான பின்னணியில் உள்ளவரை கைதுசெய்யவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்பு தரப்பினர் இதுவரை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
எனவே தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கோரியும் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் காந்தி பூங்கா முன்னிலையில் கையெழுத்து போராட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
எனவே இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை வழங்குமாறு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக இவ் வழக்கை விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது மன்றில் மாணவியின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுகாஸ், கடந்த இரு வழக்கு தவணைகளுக்கு முன்னர் மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மரபணு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தார்.
இதன்போது நீதிவான் குறித்த வழக்கு தொடர்பாக முழுமையாக பரிசீலித்து பார்த்தும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும் முழுமையாக பரிசீலித்தே இது தொடர்பாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஏனெனில் இவ் வழக்கு தொடர்பான பூரணமான விசாரணைகள் முடிவுறாத நிலையில் அவை தொடர்பில் விசாரணை முழுமை பெற்ற பின்னரே அது தொடர்பாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த சட்டத்தரணி சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பிலும் நீதிவானிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிவான் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்திருந்ததோடு இது தொடர்பிலும் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் தம்மை எவ்வாறு வேண்டுமானாலும் விசாரணை செய்யுங்கள். எங்களுக்கு பிணை வழங்காது நீங்கள் நீதியான விசாரணையை மேற்கொள்ளுங்கள். ஆனால் எங்களது குடும்ப உறுப்பினர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என கோரியிருந்தனர்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் என்னை கைது செய்யும் போது என்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட எனது பேர்சையும் தொலைபேசியையும் பொலிஸார் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. அது எங்கே என என்னிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேட்கிறார்கள்.
மேலும் குறித்த மாணவி நடந்த சம்பவம் எனது சகோதரிக்கு நடந்த சம்பவம் போன்று இதற்கு நீதியான விசாரணை அவசியமெனவும் உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பொலிஸார் செய்யாது விட்டால் நான் விடுதலையாகி வந்து அவனை கண்டுபிடிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த நீதிவான் குறித்த சந்தேகநபரது உறவினர்கள் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அவ் வழக்கு தவணையின் போது சட்டத்தரணி ஊடாக அது தொடர்பான விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இவ் வழக்கு விசாரணையை இம் மாதம் 29ம் திகதிவரை ஒத்திவைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.