வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி த.ம.தேவேந்திரன், வ.தே.க.கல்லூரியின் விரிவுரையாளர் திரு.அ.யூ.ததேயு பீரிஸ் ஆகியோர் இணைந்து எழுதிய ‘14 விளையாட்டுக்களும், மெய்வல்லுநர் நிகழ்ச்சி அளவீடுகளும்’ எனும் நூல் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி மன்றத்தினால் நேற்று முன்தினம் (13.06.2016) வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.கு.சிதம்பரநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாட் அவர்களினதும் கைத்தொழில் வர்த்தக அமைச்சினதும் இணைப்புச் செயலாளர் முத்து முஹமது, இவர்களுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர் திருமதி கிசோர் சுகந்தி, வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.எம்.சுபைர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நூல் ஆசிரியர்கள் அறிமுகத்தை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.பவானந்தன் செய்து வைத்தார். நூல் அறிமுகத்தையும் ஆய்வையும் அருட்பணி அன்புராசா (அ.ம.தி) நிகழ்த்தினார்.
கொல்கத்தாவில் விமானம் ஒன்று தரையிங்குகையில் அந்த விமானத்தின் முன்புற டயர் வெடித்துள்ளது. ஆனால், இதில் பயணம் செய்த 198 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து கொல்கத்தா நகர் வழியாக மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரியில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 2.19 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.
வழக்கம்போல் விமானத்தின் முன்புறம் மூக்குப்பகுதிக்கு கீழே இருக்கும் டயர் ஓடுபாதையின் தரையை தொட்டதும் திடீரென்று வெடித்து சிதறியது.
இதனால், ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானத்தின் ஓட்டத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. விமானத்தின் முன்பகுதி லேசாக குலுங்கியதால் உள்ளே இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.
இதை கவனித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
ஒருவழியாக வேகம் குறைந்து, விமானம் நின்றதும் அதில் இருந்த விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 198 பேரும் அவசர வாசல் வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் திருச்சூர் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவால், மீண்டும் பொலிசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.
கடலூர்மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.முட்லூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி அமுதா(வயது 46).
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர், மகன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு அனுப்பும் பணத்தை வைத்து வட்டிக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் திகதி அமுதா திடீரென மாயமானார்.
இதன்பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், வெள்ளாற்றங்கரையில் அமுதாவை மர்ம மனிதர்களை கொன்று புதைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பான விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த மினிலாரி டிரைவர் வீரமணி, அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும் வீரமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் தேன்நிலவு என்ற பெண்ணை கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை.
எனது வீட்டின் அருகே அமுதா தனியாக வசித்து வந்தார். அவருக்கும் எனக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
எனக்கும், அமுதாவிற்கும் தகராறு ஏற்படும் போது ‘குழந்தை பெற முடியாதவன்’ என்று என்னை மனம் நோகும்படி திட்டுவார்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவமானம் தாங்காமல் துடித்தேன். எனவே அமுதாவை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.
இதுதொடர்பாக எனது நண்பர் பிரேம்குமாரிடம் கூறினேன். அவரும் அமுதாவை கொல்ல ஒப்புக்கொண்டார்.
கடந்த 29ம் திகதி இரவு அமுதா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், பிரேம் குமாரும் அங்கு சென்றோம்.
தூங்கிக் கொண்டிருந்த அமுதாவை தலையில் கோடரியால் ஓங்கி அடித்தேன். அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் அமுதா துடிதுடித்து இறந்தார்.
பின்னர் பிணத்தை வெள்ளாங்கரையில் புதைக்க நினைத்தேன். என்னுடைய மினி லொரியை அங்கு ஓட்டி வந்தேன். பின்னர் நானும், பிரேம் குமாரும் சேர்ந்து அமுதாவை தூக்கி சென்று மினி லொரியில் வைத்தோம்.
அதன்பின்னர்மினி லொரியை வெள்ளாற்றங்கரைக்கு ஓட்டிச்சென்றோம். அங்கு அமுதாவின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரையும் பொலிசார் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு தற்கொலை செய்ய முயன்ற நபரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
வருண் மாலிக்(வயது 30) என்ற நபர் குர்கானில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று கை நரம்புகளை அறுத்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், எனது பெயர் வருண் மாலிக், எனது வாழ்வை முடித்துக் கொள்ள போகிறேன்.
இதற்கு யாரும் பொறுப்பு கிடையாது, எனக்கு யாரும் கிடையாது, தனிமையில் தவிக்கிறேன், இதற்கு வாழ்வை முடித்துக் கொள்வது தான் ஒரே வழி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்டேட்டஸை பார்த்த நண்பர்கள் உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற அதிகாரிகள், சுயநினைவில்லாமல் கிடந்த வருண் மாலிக்கை காப்பாற்றியதுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், தற்போது நலமாக உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தாயார் காலமானார், இதுவே இவரது மன உளைச்சலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மொஹமட் ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது மாணவி வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது.
அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண்டத்தில் வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்தது.
அது தவிர வருகிற 2061 முதல் 2080ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் அண்டார்டிகாவை தவிர மற்ற பகுதிகளில் இதைவிட அதிக அளவு வெயில் கொளுத்தும் என்றும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
வெப்பம் அதிகரிப்பால் சுகாதார சீர்கேடு, பயிர்கள் அழிவு, கடுமையான வறட்சி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, கார்பன் வெளியேற்றத்தை குறைத்து தட்பவெப்ப நிலையை சீரமைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
பகுதி நேர வகுப்பில் 16 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய நீதவான் ஜயருவான் திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிரிஹூல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தேக நபர் பன்னல பிரதேசத்தில் பகுதி நேர வகுப்பில் வைத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
வகுப்பில் இருந்த மாணவர்கள் இடையில் மாணவியை தெரிவு செய்த சந்தேக நபர் டொபி தருவதாக கூறி, அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
குறித்த இடத்தில் இப்படியான சம்பவம் நடைபெறக் கூடும் என அந்த இடத்தை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக பீ. அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போதே பொலிஸார் இதனை கூறியுள்ளனர்.
மேலும், பன்னல பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப் பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.
3. காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.
4. காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.
5. காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும்.
இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி ‘காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்’ மதியம் இளவரசனைப் போல சாப்பிட வேண்டும்’ ‘இரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர். காலையில் தானிய வகைகள், பாண் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
6. பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகத்திற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை கேட்பது போன்றவை சிறந்த செயலாகும்.
7. நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே
தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.
8. பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.
கம்பஹாவில், செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையை கடந்த மாணவர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.கம்பஹா பண்டாரநாயக்க மத்திய மஹா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 19 வயதான செனேத் ரொசான் என்ற மாணவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
கம்பஹா நகரில் அமைந்துள்ள ரயில் கடவை ஒன்றை மாணவர், செல்லிடப் பேசியில் உரையாடிக்கொண்டே கடந்துள்ளார்,இதன்போது கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர் கொழும்பு கோட்டேயிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் ரயிலைப் பார்த்துக் கொண்டு பாதையை கடந்தபோது அவரது பின்னால் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வருவதனை காணவில்லை.மாணவரின் சடலம் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது மகளை கொலை செய்த தாய்யொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த மே மாதம் 31ஆம் திகதி அம்பாறை மத்திய முகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளார்.
தனது மகள் மதம் மாறியதன் காரணமாக ஏற்பட்ட வாய்தர்க்கத்தில் ஆத்திரமடைந்த தாய் கட்டில் பலகையால் தனது மகளை தாக்கியுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தனது மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் சந்தேக நபர் புதைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கொலை வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இச்சம்பவத்தில் உயிரிழந்த 21 வயதான செல்வநாயகம் ஜனனி என்பவர் சந்தேக நபரின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.தொழிற்சங்க போராட்டம் காரணமாக உரிய நேரத்தில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கா விட்டாலும் அதனால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்கள் உரிய நேரத்தில் கிடைத்தால் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக அமையும் என்ற போதிலும், இதனால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக தபால் திணைக்களத்தின் திகதியிடப்பட்ட முத்திரையுடன் தபாலுக்கு அனுப்பி வைத்திருந்தால், அந்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தபால் திணைக்கள ஊழியர்கள் பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக் கணக்கான தபால்கள் தேங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, உலகளாவிய ரீதியில் பொருளாதார கண்டுபிடிப்புக்களில் 85வது இடத்தை பிடித்து முன்னேற்றம் அடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 105வது இடத்தை பிடித்திருந்ததாகவும் தற்போது 20 நிலைகளில்முன்னோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புத்தாக்கம் அளவிடக்கூடிய முன்னோடியானகண்டுபிடிப்புக்களில் ஒன்றே உலகளாவிய பொருளாதார கண்டுபிடிப்பின்குறியீடு ஆகும்.
இலங்கை பல பொருளாதார துறைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், இதனை முதலாம்இடத்திற்கு கொண்டு வருவதே எமது நோக்கமாக அமைய வேண்டும் என கைத்தொழில் மற்றும்வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிவுசார் சொத்துக் கொள்கை மற்றும் தேசிய அளவிலான புத்தாக்கம் தொடர்பில்கொழும்பில் இடம் பெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே நேற்றுஇதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக-பொருளாதார நோக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை தேசிய அளவிலானபுத்தாக்க மற்றும் அறிவுசார் சொத்து கொள்கை மாநாடு மூலம் எதிர்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். புதுமையான சிந்தனையின் மூலம் நாட்டின் வளர்ச்சியை திறம்பட செயற்படுத்துவதன்ஊடாக விஞ்ஞான காலாச்சாரத்தை எளிதில் உருவாக்க முடியும் என்றும் பதியுதீன்மேலும் கூறியுள்ளார்.
அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் திணைக்கள பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பொன்றை கடந்த 12ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களின் விடுமுறைகள் இரத்து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றரிக்கைக்கு அமைவாக அனைத்து பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து தெரிவித்த தபால்மா அதிபர் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தபாற் தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.
இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் மற்றும் விசாஸ்டிக்கர்களுக்கான அறிமுகப்படுத்தல் நிகழ்வின் போது இதனை நேற்றுதெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கேட்போர் கூடத்தில்நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்மேற்பார்வையின் கீழ் இந்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தல் நிகழ்வுநடத்தப்பட்டதாக நாவின்ன தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்கள கட்டிடம் தற்போது இருந்த இடத்தில் இருந்து இரண்டு மாதங்களில்மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்2016ல் ரூபா 15 ஆயிரம் மில்லியன் அளவில் எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர்கூறினார்.நவீன தொழிநுட்ப வசதிகளுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரத்தில்,ரப்பர் முத்திரைகள் ஒட்டுதலுக்கு பதிலாக வாசிக்கும் வகையில் விசா ஏற்பாடுசெய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் விசா மாற்றம்,தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்,விசா மோசடிகள்போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும்,விண்ணப்பதாரர்கள்தங்களின் நேரங்களை சேகரித்துக் கொள்ளலாம் எனவும்கூறியுள்ளார்.இந் நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசாரஅலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.சுவர்ணபால மற்றும் குடிவரவு மற்றும்குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்கஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.