கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர்தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தீயை அணைப்பதற்காக 50ற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர், இராணுவம் மற்றும் துறைமுக தீயணைப்பு படையினரின்உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாவற்குளம் படிவம் 6 கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 11.06.2016 அன்று கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வெங்லசெட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஜேசுதாசன் மற்றும் பாடசாலை அதிபர் ஸ்ரீகந்தவேள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே எப்போதும் ஒருவித ஈர்ப்பு இருக்கும். இவர் எங்கு இருந்தாலும், இல்லையென்றாலும் அவரின் பெயரிலேயே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நமக்கு பேட்டியளித்த 2.0 தயாரிப்பு தரப்பிலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் கூறியிருந்தனர்.
நேற்று ஷங்கரும் தனது பேஸ்புக் பக்கத்தில் 2.0 பாதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சூப்பர்ஸ்டார் சென்னையில் தான் இருக்கிறார், அமெரிக்காவில் தான் இருக்கிறார் என மாறி, மாறி கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு எழும்பி வருகிறது.
இங்கிலாந்தில் பிறந்து தற்போது இந்திய சினிமாவை கலக்கிவருபவர் எமி ஜாக்சன். தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஏற்கனவே பல பேருடன் காதல், பின் பிரிவு என எப்போதும் அவரின் சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கும்.
தற்போது அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் Jean Bernard Fernandez Versini என்பவருடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்ற மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இருவரும் சந்தித்துகொண்ட பிறகு நெருக்கமான அவர்கள், தற்போது ஒன்றாக பல இடங்களில் சுற்றிவருகிறார்களாம்.
பிரபல பாடகி Cheryl Coleன் முன்னால் கணவர் தான் Jean Bernard என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின் டிரைவில் சச்சின் தெண்டுல்கர் உருவம் பொறித்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வெட்டு அமைக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சச்சின் தெண்டுல்கர் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு ஆர்.பி.ஜி. கலை நிறுவனத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டது.
இதன் பேரில், சிற்பத்தை அகற்றுவதற்கான பணியில் ஆர்.பி.ஜி. நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று சச்சின் தெண்டுல்கர் சிற்பம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
உலகின் மிகவும் சிறந்ததாக அறியப்படும் தேன்கூடு என்ற தலைமுடி அலங்காரத்தை (சிகை அலங்காரத்தை) முதலில் வடிவமைத்த பெண்மணி தன்னுடைய 98 ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக “உண்மையிலேயே வித்தியாசமான” படம் ஒன்றை வழங்குவதற்கு கேட்டு கொண்டபோது மார்கிரெட் வின்சி ஹெல்ட் என்பவர் ´பீ ஹைவ்´ எனப்படுகின்ற நீண்ட கூம்பு வடிவ தலைமுடி அலங்காரப் பாணியை உருவாக்கினார்.
பின்புறமாக வாரி அமைக்கப்படும் இந்த தலைமுடி அலங்காரம் ஒரு வாரம் குலைந்து விடாது என்பதால் அவருக்கு அதிகப் புகழை தேடிதந்தது.
இந்த தலைமுடி அலங்காரத்தை தன்னுடைய சலூனில் செய்கின்ற வாடிக்கையாளர்களிடம், கழுத்துக்கு மேலே தொடுவதற்கு அவர்களின் கணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நாக்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை மூச்சுதிணறலால் உயிரிழந்தது.
நாக்பூரில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவருக்கு தோல் இல்லாமல் அதிசய பெண் குழந்தை பிறந்தது. தோல் இல்லாததன் காரணமாக அந்த குழந்தையின் உள்ளுறுப்புகள் வெளியே தெரிந்தபடி இருந்தன.
குழந்தையின் முகத்தில் கண்கள் மற்றும் வாய் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. மூக்கு தோற்றம் இல்லாமல் நாசிதுவாரங்கள் மட்டுமே இருந்தன.
ஆனால் அந்த குழந்தை பிறந்த உடன் சராசரி குழந்தையை போல் அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து குழந்தை பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திடீரென குழந்தையின் இதய துடிப்பு பலவீனம் அடைந்து மூச்சுதிணறலால் அவதிப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சுவாச கோளாறால் குழந்தை உயிரிழந்ததை மருத்துவக்கல்லூரி டீன் கஜல் மித்ரா உறுதிப்படுத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலமானார்.
இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது.
1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார்.
பின்னர் 2015ம் ஆண்டு அக் கட்சியில் இருந்து விலகி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார்.
எதுஎவ்வாறு இருப்பினும், மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவனராக அறியப்பட்ட ரோஹன விஜயவீரவுக்கு பின்னர், அக் கட்சியின் தலைமை பீடத்தில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோமவன்ச என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாண்டிக்குளம் பாடசாலைக்கு அருகே இன்று (15.06.2016) சற்றுமுன் இரு தனியார் பேரூந்துகளின் சாரதிகள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்தும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தும் இன்று (15.06.2016) சற்று முன்னர் வவுனியா தாண்டிக்குளம் பாடசாலைக்கு அருகே சந்தித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
இரு பேரூந்தின் சாரதிகளும் வீதியின் நடுவே பேரூந்தினை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பாரிய வாகன நேரிசல் ஏற்ப்பட்டது.
இதனையடுத்து எமது செய்தியாளர் இச் சம்பவத்தினை உடனடியாக போக்குவரத்துப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இரு பேரூந்தினையும் தாண்டிக்குளம் பாலத்திற்கு அருகே மடிக்கிப் பிடித்த பொலிசார் விசாரணையினை மேற்கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்களால் பாதிப்படைவது பிரயாணிகளே.எனவே உரியவர்கள் இவ் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் கனடா கிளை நடந்தும் 2016ம் ஆண்டு கோடை காலத்திற்கான ஒன்று கூடல் ஆனி மாதம் 18ம் திகதி(18.06.2016) 10 மணிக்கு Neilson Parkல் நடைபெறவுள்ளது.
இதில் விளையாட்டுப் போட்டிகள், வினோத உடைப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
இன் நிகழ்வில் அனைவரையும் வருகைதந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயதுடைய சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை (11.06.2016) அன்று வவுனியாவிற்கு தையல் பயிற்ச்சிக்கான உபகரணங்கள் வாங்கச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இம் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்ட பொலிசார் நெடுங்கேணி பகுதியில் நேற்று (14.06.2016) இரவு 11.30 மணியளவில் குறித்த மாணவியினை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது ஜஸ்டின் சலாஸ் தொழில்முறை புகைப்படக் கலைஞராகவும் மலையேறுபவராகவும் இருக்கிறார்.
இவருக்குப் பார்வை கிடையாது. 5 வயதில் இருந்தே பார்வை குறைய ஆரம்பித்துவிட்டது. 14 வயதில் ஒருநாள் காலை கண் விழிக்கும்போது பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது.
எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பார்வை கிடைக்கவில்லை, பறிபோனதற்கான காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. ஜஸ்டின் மிகவும் மனம் உடைந்து போனார். சில நாட்கள் யாரிடமும் பேச மாட்டார். கணனித் திரையில் படங்களைப் பெரிதாக வைத்துக்கொண்டு ஏதாவது உருவம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பார். பெரிய எழுத்துகளும் படங்களும் மிக மங்கலாகத் தெரிந்தன.
”ஒருநாள் என் நண்பன் ஜோன்சன், பைக்கில் வெளியே அழைத்துச் சென்றான். அங்கே இன்னொரு நண்பனைச் சந்தித்தேன். அவன் என்னை மலையேறுவதற்கு அழைத்தான். பார்வை இல்லாமல் நான் எப்படி மலையேற முடியும் என்று கேட்டேன். மலை ஏறுவதற்குப் பார்வை அவசியம் இல்லை. தொட்டு உணரும் திறன் இருந்தால் போதும் என்றான்.
நானும் முயன்று பார்க்க நினைத்தேன். நான் தவறி விழுந்தால், அடிபடாமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். மலை ஏறுபவர்கள் எப்போதும் கீழே பார்க்காமல் மேலே ஏறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை. என் கைகளும் கால் பாதங்களும்தான் எனக்குக் கண்கள். அவற்றின் மூலம் உணர்ந்துகொண்டு வேகமாக ஏறிச் சென்றேன். பல தடவை என் முயற்சியில் தோல்வியடைந்தேன்.
ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. வெகு விரைவில் மலையேற்றம் என் வசப்பட்டது. 50 அடி உயரத்துக்கு ஏறி, வெற்றிகரமாக என் கணக்கைத் தொடங்கினேன். அதற்குப் பிறகு நண்பர்களின் ஒத்துழைப்பில் பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தேன். போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
இன்று மலையேறுபவர்களில் ஒருவனாக அறியப்படுகிறேன். என்னை யாரும் பார்வையற்றவன் என்று கருதுவதே இல்லை. நான் நடக்கும்போதோ, மலையேறும்போதோ பிரச்சினை வந்தால்தான் குரல் மூலம் எனக்கு எச்சரிக்கை செய்வார்கள். மற்றபடி நான் நானாக இருக்க அனுமதிக்கிறார்கள்.
சாகசப் பயணம் செய்யக்கூடிய என்னால் புகைப்படங்கள் எடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொடுத்தனர். என் புலன்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். சூரிய ஒளி, மனிதர்களின் குரல், காற்று போன்ற நுட்பமான விஷயங்களைக் கவனித்துப் புகைப்படம் எடுக்கிறேன்.
என் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் பார்வையற்ற ஒருவர் எடுத்த புகைப்படம் என்று நம்பவே மாட்டார்கள். 27 அங்குல கணனித் திரையில் தெளிவற்ற பிம்பமாக நான் எடுக்கும் படங்களைப் பார்த்துவிடுவேன் என்கிறார் ஜஸ்டின் சலாஸ்.
Linked In தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதற்கு Microsoft நிறுவனம் தீர்மானித்துள்ளது.
26 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Linked In ஐ வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் Microsoft நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கும் இணையத்தளமாகவும் இது பதிவாகியுள்ளது.
உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான Linked In இணையதளத்தை வாங்கியதனூடாக Microsoft நிறுவனம் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்டுகிறது.
Linked In உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.
Linked In இன் தற்போதைய தனித்துவ அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரத்தை தொடர்ந்தும் பேணி முன்னோக்கி செயற்படபோவதாக Microsoft தெரிவித்துள்ளது.
ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது.
இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில்,
இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.