வானவில் நிறத்தில் ஔியூட்டப்பட்ட ஈபில் கோபுரம் : காரணம் தெரியுமா?

Efil tower

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் நேற்று (13.06) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபில் டவர் மற்றும் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தகக் கட்டிடம் போன்ற உலகின் தலைசிறந்த அடையாள சின்னங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் ஔியூட்டப்பட்டன.

ஓர்லந்தோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களின் இரவு விடுதியில் 29 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் வரையில் உயிரிழந்தனர் மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற இளைஞர் பொலிஸார் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கமாக அமைந்துபோன இந்த கொடூர தாக்குதலால் துயருற்றுள்ள அமெரிக்க மக்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபில் கோபுரமும், பாரிஸ் நகர மேயர் அலுவலகமான சிட்டி ஹால் கட்டிடமும் அமெரிக்காவின் தேசிய கொடியில் காணப்படும் நிறங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியான வானவில்லின் நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.

மேலும், அங்கு கூடிய ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஒர்லந்தோ இரவு விடுதியில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை மேற்கொண்டனர்.

லோர்ட்ஸ் மைதானத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை தேசியக்கொடி : மஹேல விளக்கம்!!

LONDON, ENGLAND - JUNE 12: Sri Lanka coaching coaching staff hang their national flag from the players balcony during day four of the 3rd Investec Test match between England and Sri Lanka at Lord's Cricket Ground on June 12, 2016 in London, United Kingdom.
LONDON, ENGLAND – JUNE 12: Sri Lanka coaching coaching staff hang their national flag from the players balcony during day four of the 3rd Investec Test match between England and Sri Lanka at Lord’s Cricket Ground on June 12, 2016 in London, United Kingdom.

நடுவரின் தவ­றான தீர்ப்­பிற்கு எதிர்ப்புத் தெரி­வித்து லோர்ட்ஸ் மைதா­னத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்­கி­ருந்து அகற்­று­மாறு லோர்ட்ஸ் மைதான நிர்வா­கிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கி­ருந்து அகற்­றப்­பட்­டது.

இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 45 நிமிடங்களின் பின்னர் இலங்கை தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ளது.

இலங்கை – இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் ஆடிக்­கொண்­டி­ருந்த இங்­கி­லாந்து அணி வீரர் ஹேல்ஸின் விக்­கெட்டை, நுவன் பிரதீப் வீழ்த்­தினார்.

போல்ட் முறையில் இந்த ஆட்­ட­மி­ழப்பு எடுக்­கப்­பட்­டது. ஆனால் நடு­வ­ரினால் நோபோல் என சைகை காட்­டப்­பட் ­டது.

ஆனால் ரீப்­ளேயில் அது நோபோல் அல்ல என்­பது தெளிவாகத் தெரிந்­தது. ஆனாலும் நடுவர் அந்தத் தீர்ப்பை மாற்­றிக்­கொள்­ள­வில்லை.

இதற்காகத்தான் இலங்கை தேசியக் கொடி லோட்ஸ் மைதானத்தின் இலங்கை அணியினர் அமர்ந்திருந்த பார்வையாளர் பகுதியில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்­பவம் தொடர்பாக சர்­வ­தேச கிரிக்கெட் சபைக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியால் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் MCC கொடியைத் தவிர வேறெந்தக் கொடிகளும் பறக்கவிட முடியாது எனும் சட்ட வரையறையை, இலங்கை அணியினர் மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேவேளை, லோர்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தக்கூடிய நுவன் பிரதீப்பின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த நுவன் பிர தீபின் 2 வாய்ப்புகள் அடுத்தடுத்து தவறவிடப்பட்டன.

அதுமட்டுமல்லாது நடுவரின் தவறான நோபோலினால் வீழ்த்தப்பட்ட விக்கெட் இல்லாமல் போய்விட்டது என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகம் போர்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன ஈஎஸ்பிஎன் கிரிக்கின்போ இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நடுவர்களின் தீர்ப்புக் குறித்து கவலையை வெளிப்படுத்தியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டவசமாக நடுவர்களின் தீர்ப்பு இவ்வாறு நடப்பது வழமை. இருப்பினும் நான் தேசியக் கொடி தொடர்பில் நிறைய கதைக்கவிரும்பவில்லை.

தீர்ப்பு தொடர்பில் அவர்கள் அவ்வாறு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பமில்லை. போட்டியின் இறுதிநாள் என்பதால் போட்டியில் வெற்றிபெறவேண்டும் மற்றும் அணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே அவ்வாறு கொடியை கட்டியிருக்கலாம்.

எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு செய்திருக்க முடியாது. இது ஒரு எதிர்ப்பாக இருக்க முடியாதென நான் நினைக்கின்றேன்.

அவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமானால் அது தொடர்பில் தரவுகளைப் பெற்று, கடிதமொன்றை எழுதி போட்டி நடுவரிடம் கையளிக்க முடியும்.

ஒன்றை மட்டும் சொல்ல முடியும் நாம் விளையாடுவது நம் தாய் நாட்டிற்காகத் தான். MCC ஒரு பாரம்பரியமான பிரதேசம் என்பதால் எந்தவொரு கொடியையும் அங்கு பறக்கவிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 8559 பேர் கைது!!

bangladesh

பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில் 8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் 1500 மோட்டார் சைக்கிள் ஆகியன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாகும் தருவாயில் தாய்க்கு மெஸேஜ் அனுப்பிய மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

1

ஃபுளோரிடா: ஆர்லாண்டோ தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் ஒருவர், இறக்கும் தருவாயில், ‘I’m gonna die’… என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்வடையச் செய்திருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில், பல்ஸ் என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அப்போது, திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன் என்ற இளைஞர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியபடி அங்குமிங்கும் ஓடினர். சிலர் கழிவறைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். இன்னும் சிலர் வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனாலும், ஏராளமானவர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 53 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆர்லண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களை மையப்படுத்தி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் இறந்த ‘எட்டி ஜஸ்டீஸ்’ என்ற இளைஞர் தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது தாய்க்கு அனுப்பிய நெஞ்சை உருகச் செய்யும் குறுஞ்செய்திகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.

உமர் மாட்டீன் துப்பாக்கியுடன் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நேரத்தில், மகளிர் கழிப்பறைக்குள் பதுங்கி இருந்துள்ளார் அங்கு கணக்காளராக பணியாற்றிவந்த 30 வயது ‘எட்டி ஜஸ்டீஸ்’. அடுத்த சில நிமிடங்களில் சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ‘எட்டி ஜஸ்டீஸ்’ உள்ளிட்ட 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் இறக்கப்போவதை உணர்ந்துகொண்ட ‘எட்டி ஜஸ்டீஸ்’ தனது தாய் மினா ஜஸ்டீசுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இரவு 2:06க்கு அனுப்பிய முதல் குறுஞ்செய்தியில், தாய்க்கு தனது அன்பினை தெரிவிக்கும் வகையில் ‘Mommy I Love you’ என நெகிழ வைத்துள்ளார்.

அதன்பின், விடுதியின் கழிவறையில் தான் சிக்கிக் கொண்டது குறித்தும் அங்கே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பது பற்றியும் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கும் எட்டி, இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார்.

இந்த குறுஞ்செய்திகளைப் பார்த்து பதறிப்போன மினா ஜஸ்டீஸ், உடனே மகனின் தொலைபேசியை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை ஏற்காத எட்டி, அதனை தொடர்ந்து, தான் மறைந்திருந்த கழிவறைக்குள் இருந்தபடி அடுத்த குறுஞ்செய்தியை தன் தாய்க்கு அனுப்புகிறார். இறுதியாக எட்டி, ‘I’m gonna Die’ (‘நான் சாகப்போகிறேன்’) என தன்னை நோக்கி வரும் மரணத்தை, மன வேதனையுடன் குறுஞ்செய்தியாக அனுப்பி இருக்கிறார்.

தொடர்ந்து தன் மகன் எட்டியிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகளை கண்டு அலறிய மினா ஜஸ்டீஸ், தனது வீட்டில் இருந்து விரைந்து சென்று சம்பவம் நடந்த விடுதிக்கு வெளியே இரவெல்லாம் கண்ணீருடன் தனது மகன் உயிருடன் எப்படியும் மீட்கப்பட்டுவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருந்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, துப்பாக்கிச்சூட்டில் எட்டி ஜஸ்டீஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதை கனத்த மனதுடன் போலீசார் உறுதி செய்தனர்.

இறக்கும் தருவாயில் தன் தாய்க்கு தன் மரணத்தை குறுஞ்செய்திகளாக அனுப்பிய இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி அனைவரின் நெஞ்சங்களையும் கனக்கச் செய்துள்ளது.

2 3

நீராடச் சென்ற ஆறு வயது சிறுவன் பலி!!

Dead

வெல்லவாய – எத்திலிவெவ, தோரஆர வாவியில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும், சிறுவன் தனது பாட்டி மற்றும் தங்கையுடன் வாவியில் குளிக்கச் சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர், இந்த நிலையில் சிறுவர்களின் பாட்டி குறித்த சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில்அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

2 ஆண்டுகளாக கடலில் உலகை சுற்றிய கோழி!!(வீடியோ)

Guirec-monique

மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார்.

உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர்.

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை!! (வீடியோ)

Angel

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை ஒன்றை தமது கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்துள்ளனர்.

இது எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.

-அத தெரன-

வவுனியா தோணிக்கல் ஸ்ரார் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!

 
வவுனியா தோணிக்கல் ஸ்ரார் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று முன்தினம் (12.06.2016) பாலர் பாடசாலை பிரதம ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.ஸ்ரீ.மணிமாறன் (கிராமசேவையாளர் தோணிக்கல்) அ.முரளிதரன் (அதிபர் பாரதிவித்தியாலயம்) மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

01 02 IMG_3557 IMG_3558 IMG_3563 IMG_3564 IMG_3566 IMG_3572 IMG_3574 IMG_3580 IMG_3582 IMG_3596 IMG_3598 IMG_3599 IMG_3600 IMG_3601 IMG_3602 IMG_3605 IMG_3606 IMG_3609 IMG_3612 IMG_3613 IMG_3621 IMG_3623 IMG_3624 IMG_3626 IMG_3627 IMG_3628 IMG_3629 IMG_3631 IMG_3638 IMG_3647 IMG_3648 IMG_3651 IMG_3652 IMG_3654 IMG_3655 IMG_3661 IMG_3671 IMG_3673 IMG_3677 IMG_3680 IMG_3683 IMG_3690 IMG_3692 IMG_3696 IMG_3698 IMG_3708

வவுனியாவில் வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்த டிப்பர் வாகனம்!!

 
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் இன்று(14.06.2016) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

வேகமாக பயணித்த வாகனத்தின் சாரதி உறங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சாரதி உறங்கியதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

1 2 3 4 5 6

வவுனியா குருமன்காடு பகுதியில் பல வாரங்களாக அகற்றப்படாத குப்பை : மக்கள் விசனம்!!

 
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நகரசபையினர் குப்பைகளை அகற்றுவது வழமையாக நடைபெற்று வருகின்றது. எனினும் இவற்றில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும் வவுனியாவின் பல பகுதிகளில் சரியான முறையில் குப்பைகள் நகரசபையினரால் அகற்றப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா குடுமன்காடு பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியில் கடந்த 4 வாரங்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிள்ளையார் கோவிலில் திருவிழா நடைபெற்றுவரும் இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு குப்பைகளை அகற்றாது இருப்பதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் உரிய அதிகாரிகள் இவ் விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

3 4 5 6 7

நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் ஹோட்டல் திறக்கப்பட்டது!!

2F645EA800000578-0-image-a-36_1450196840915

மிக புதுமையான ஹோட்டல் ஒன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.
தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது.உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது.

இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.
இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்படும். விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மற்ற மதுபான வகைகள் சப்ளை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நிர்வாணமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு ‘பர்த்டே’ அறை ஒதுக்கப்படும். இந்த ஹோட்டலுக்கு இந்தியில் ‘புனிபாதி’ என பெயரிட்டுள்ளனர். இதற்கு தமிழில் ‘அடிப்படை’ என அர்த்தமாகும். இந்த புதுமையான ஓட்டலை லண்டனை சேர்ந்த செப்லியாலி என்பவர் தொடங்கியுள்ளார்.
சாப்பிட வரும் பொது மக்கள் எந்தவித கவலையுமின்றி மகிழ்ச்சியாக இரவு பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஹோட்டலை பார்த்து பார்த்து பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்.

இங்கு மூங்கிலால் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சைவப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கு என்று தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இங்கு 42 இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஹோட்டல் தொடங்குவதற்கு முன்பே இதற்கு ‘கிராக்கி’ அதிகரித்துள்ளது. 3700 பேர் ‘புக்’ செய்து ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டில் அதாவது காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

நீ குட்டி குஷ்பு மாதிரியே இருக்க – பிரபல நாயகியை பார்த்து அஜித் சொன்னாராம்!!

ajith-kumar-so-sorry

அஜித் ஒரு தனி மனிதர் அல்ல, பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர். அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஸ்வேதா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அஜித்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

முதல் நாள் அவரை பார்த்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு. நீ குட்டிக் குஷ்பூ மாதிரி இருக்கேனு சொன்னாரு. பயங்கர கலரு, ரொம்பப் பணிவு, அந்த படத்திற்கு பிறகு அவர பார்க்க வாய்ப்பே கிடைக்கல என்றார்.

படவாய்ப்புக்காக அந்த தவறை செய்யவில்லை : மனம் திறந்த நடிகை ஷகிலா!!

Shakela

தமிழ், மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் நடிகை ஷகிலா. தமிழ் படங்களில் சில பாத்திரங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆபாச படங்களில் தான் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ஒரு இதயத்தின் உண்மைக்கதை என்ற தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

இதில் சில்க்குடன் நடித்த முதல் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மிகவும் பிரபலமானேன். 17 வயதில் கஷ்டமில்லாமல் சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.ஆபாச படங்களில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புக்காக யாரிடமும் படுக்கையை பகிர்ந்ததில்லை என்றும் என் விருப்பத்தின் பேரில் சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்களிடம் பழகியிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.திரைத்துறையை பொறுத்தவரையில் ஒரு பருவமான சிறுமியிடம் பழகுவதை போலத்தான் எல்லோரும் என்னிடம் பழகியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 90 வயது இந்து முதியவரை தாக்கிய பொலிஸ்: எதற்காக தெரியுமா?

1121012-image-1465677544-808-640x480

பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு முன்னதாக உணவுப்பொருட்களை விற்பனை செய்தது மற்றும் உணவு உண்ட குற்றத்திற்காக கோகுல் தாஸ் (வயது 90) என்பவரை உள்ளூர் பொலிஸ் அதிகாரியான ஹுசைன் என்பவர் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.

கோகுல் தாஸின் பேரன் வினோத் குமார், குறித்த பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகள் தீவிரமானது. 90 வயது முதியவர் கோகுல் தாஸை கடுமையாக பொலிஸ் தாக்கிய புகைப்படத்தை அவருடைய குடும்பத்தார் வெளியிட்டு உள்ளனர்.இதனையடுத்து குறித்த மாகாணத்தின் பொலிஸ் ஐ.ஜி ஹுசைனை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

 

ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு அதிரடி திட்டம்!!

retirement-plan-with-pen-and-glasses
சுவிட்சர்லாந்து நாட்டில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் தற்போதைய வயதாக 65(ஆண்), 64(பெண்) என நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினரும் ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.அரசின் இந்த புதிய திட்டத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து Tamedia என்ற நிறுவனம் அண்மையில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 13,000 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 57 சதவிகித நபர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதாவது, 67 வயது வரை பணிபுரிய சுவிஸ் பொதுமக்கள் விரும்பவில்லை.

இதற்கு எதிர்மறையாக, 27 சதவிகித நபர்கள் அரசின் புதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 16 சதவிகித நபர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.பொதுமக்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய தொகையை படிப்படியாக அதிகரிக்கவே இந்த புதிய ஓய்வு வயதை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

எனினும், அரசின் இந்த புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புரோக்கர் மூலம் 7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்!!

Daily_News

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். மாட்டு வியாபாரியான இவரின் மகன் செல்வகுமார். இவருக்கு பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் புரோக்கர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள போதுபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ராவை (25) நிச்சயம் செய்து செல்வகுமாருக்க பெற்றோர் 2015 அக்டோபரில் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த மே 27ம் திகதி தாராபுரம் காவல் நிலையத்துக்கு வந்த செல்வகுமார், மனைவி பவித்ராவை 15 சவரன் நகைகளுடன் காணவில்லை என புகார் அளித்தார்.

பொலிசார் பவித்ராவை தேடிவந்த நிலையில், அவரது முதல் கணவர் கர்ணன் (35) என்பவருடன் உடுமலை பகுதியில் தலைமறைவாக இருப்பதாகவும், மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட அவர், மாலதி, பவித்ரா, ஏஞ்சலின் என பல்வேறு பெயர்களில் 7 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு முதல் கணவர் கர்ணன் மூலமாக 2 குழந்தைகள் உள்ளதும், பல ஆண்டுகளாக மணப்பெண் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உடுமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பவித்ரா என்ற மாரியம்மாள் மற்றும் அவரது முதல் கணவர் கர்ணன் ஆகிய இருவரையும் தாராபுரம் பொலிசார் கைது செய்தனர். இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர். இவர்களது விவரம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கடைசியாக திருமணம் செய்த செல்வகுமாரையும் கை கழுவி விட்டு எட்டாவதாக இன்னொருவரை மணம் முடிக்க முயன்றபோது தான் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். 8வது திருமணத்துக்காக பட்டுப் புடவை, நகை உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த திருமண மோசடியில் ஏமாந்தவர்கள் யார், யார் என்பது குறித்தும், இதில் முதல் கணவர் கர்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மாரியம்மாளிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.