வவுனியா இளைஞர் கண்டுபிடித்த தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம்!!

 
வவுனியா இளைஞரின் இரண்டாவது கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையின் பிரபல்யமான நிறுவனம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மின்சாரம், எரிபொருள், ஆளனி இன்றி செயற்படும் வகையில் புதிய நவீன முறையினை பயன்படுத்தி தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளதாகவும் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் விவசாயத்தில் ஒரு புரட்சியினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதுடன் விவசாயிகளுக்கு ஒரு உந்துசக்தியாக எதிர்காலத்தில் இருக்கும் என்றும் இக்கண்டுபிடிப்பாளர் என்.என்.ஜக்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தனது மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடத்தினை புதிய வடிவமைப்பில் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையினை வழங்கியிருந்ததுடன் தனது கண்டுபிடிப்புக்களை இலங்கையில் இருக்கும் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று பத்திரிகைகளில் தெரிவித்ததையடுத்தே இன்றைய புதிய கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையிலிருக்கும் நிறுவனமான (Eastern Eagle Property Developer (pvt) Ltd Srilanka) பெற்றுக்கொண்டது.

இன் நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.திமந்த கருணாரட்ன கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்..

உலகத்தில் முதற்தரமாக கண்டுபிடிப்பு என்றும் இதனை தமது நிறுவனம் தொழிநுட்பத்தினை பெற்றுக் கொண்டுள்ளது தனது நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1 DSC04567 DSC04571 DSC04573 DSC04579

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்!!(வீடியோ)

Teacher

மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசைப்பயிற்சி ஆசிரியரை மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர்(வயது-63). அங்கு பயிலும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல், கேலி செய்ததோடு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இசைப்பயிற்சி‌ என்ற பெயரில் மாணவிகளிடம் அந்த ஆசிரியர்‌ அத்துமீ‌றலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடாத்திய மரதன் ஓட்டப்போட்டி!!

 
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டப்போட்டி, வேகநடை என்பன நேற்று முன்தினம் (12.06.2016) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.

வடமாகாண விளையாட்டுத்துறை செயலாளர் திரு.குருபரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு போட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.பிரணவநாதன், மற்றும் உத்தியோகத்தர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

1 20160612_062931 20160612_063014 20160612_063032 20160612_063724

விபத்து – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி!!

?????????????????????????????????????????????????????????

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை – மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த, நால்வர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் 8 மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொடன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதியத்தலாவ – மஹவெவ வீதியின் புளுன்கஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று தனது கட்டுப்பாட்டை மீறி, வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த, மஹஓய – இத்தபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் (மோட்டார் சைக்கிள் சாரதி) பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

வட்டவளை குடியிருப்பில் தீ விபத்து!!

fire
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட மயிலாடி தோட்ட குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீட்டிலிருந்த உபகரணங்கள் மற்றும் பல பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் பரவிய தீயினால் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

1 (9)
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் வண்டி சாரதிகளும் இந்த அனுமதிப்பத்திரத்தை பெறுவது கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மோட்டார் சைக்கிளினால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில்!!

boycott
கொடுப்பனவு பிரச்சினையை மையப்படுத்தி ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமது மாதாந்த கொடுப்பனவில் சேர்க்கப்படும் 1000 ரூபாய் 13 மாதங்களாக தமது கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் அதற்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தப் பேராட்டம் என்றும் அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய பொரளை ஆயுர்வேத போதனா மருத்துவமனை, யக்கல, அம்பாறை, அம்பாந்தோட்டை சமல் ராஜபக்ச மருத்துவமனை, நாவின்ன உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆயுர்வேத வைத்திய பணியாளர்களே இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலைக்குச் சென்ற பெண்ணின் கையை முறித்த தாதி!!

625.0.560.320.160.600.053.800.668.160.90
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவரின் கையை முறித்த சம்பவம் ஒன்று அனுராதபுரம், நிலுபேவ வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறித்த பெண் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நிலுபேவ வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதே தாதி ஒருவர் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் போது குறித்த பெண்ணின் கையை முறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்த அந்த தாதி, பெண்ணின் வளைந்திருந்த (ஊனமுற்ற கை) கையை நீட்டுவதற்கு முயற்சி செய்த போதே இவரது கை முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண், எனது ஊனமுற்ற கையை தாதி நேராக நீட்டினார் என முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த பெண் 15 வருடங்களாக மூட்டுப் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், இது தொடர்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளி ல் ஈடுபட்ட இளைஞர் கைது!!

arrest (1)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டஇளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் தான் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக அடையாளப் படுத்திக்கொண்டு கந்தளாய் பிரதேச இளைஞர்,யுவதிகளிடம் தொழில் பெற்றுத் தருவதாக கூறி140,000 ரூபாய்களை மோசடி செய்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்சாவதிஸ்ஸபுரயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

சொற்ப வினாடிகளுக்குள் வீதியில் பிறந்த குழந்தை!

1 (73)

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் கடந்த 7ஆம் திகதி பெண் ஒருவர் குழுந்தையை பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பெண்ணும், அவரது கணவரும் கொழும்பில் உள்ள வைத்தியரை சந்திப்பதற்காக சிலாபத்திலிருந்து அதிவேகப் பாதையூடாக கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்த வேளையில் பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது.

இதனால் இவரது கணவர் வாகனத்தை அதிவேகத்துடன் செலுத்தியதால் இவர்களது வாகனம் பழுதடைந்துள்ளது.இதன்போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து கணவர் வாகனத்திலிருந்து இறங்கி அதிவேகப் பாதையில் சென்ற ஏனைய வாகனங்களின் உதவியைக் கோரியுள்ளார்.

எனினும் யாரும் இவர்களுக்கு உதவிக்கு வராத சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை புரிந்துக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தமது வாகனத்தில் குறித்த பெண்ணையும்,அவரது கணவரையும் ஏற்றியுள்ளனர்.பொலிஸாரின் வாகனத்தில் ஏறிய சொற்ப வினாடிகளுக்குள் அந்தப் பெண் குழுந்தையை பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸார் வாகனத்திலேயே குறித்த பெண்ணை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம் : பணிகள் முடக்கம்!!

Post

தபால் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

காலை முதல் ஆரம்பமான இந்த தொழிற்சங்க நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தனது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, சிந்தக்க பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு நேர்ந்த அநீதி : போட்டியும் வெற்றி தோல்வி நிறைவு!!

SL

நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை இலங்கை அணியினர் தெரிவித்தனர்.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களும், இலங்கை அணி 288 ஓட்டங்களும் எடுத்தன. 4வது நாளில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 58 ஓட்டங்களுடன் இருக்கையில் நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர் ராட் டக்கர் (அவுஸ்திரேலியா) அதனை முறையற்ற பந்து என்று அறிவித்தார்.

ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் பந்து வீசுகையில் நுவான் பிரதீப்பின் கால் கோட்டைத் தாண்டவில்லை என்பது தெரிந்தது.

இந்த விவகாரம் குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்ட் போட்டி நடுவரை அணுகி தங்களது அதிருப்தியை தெரிவித்தார். இதற்கிடையில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் இலங்கை தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

SL Flag

சுமார் 45 நிமிடம் தேசிய கொடி பறந்தது. மைதானத்துக்குள் தேசிய கொடியை அணி நிர்வாகம் பறக்க விடக்கூடாது. இது பற்றி அறிந்ததும் போட்டி அமைப்பு குழுவினர் இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியை அகற்றினார்கள்.

இதற்கிடையில் 362 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

5ஆவது நாளில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அப்போது இலங்கை அணி 24.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

வவுனியாவில் 17 வயது மாணவியைக் காணவில்லை!!

Vavuniya Girl Missing

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை (11.06.2016) அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்ற போது காணாமல் போயுள்ளார்.

இவ் யுவதி தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் யுவதியை யாராவது கண்டால் அல்லது தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்: நடிகை ஆனந்தி புகார்!!

Anandi

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறுவதாக படக்குழுவினரை மிரட்டினேன் என்று நடிகை ஆனந்தி கூறினார்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

பாடசாலையில் படித்துக்கொண்டு இருந்தபோது நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கயல் படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் என்னை நடிக்க வைத்து பிரபலபடுத்தினார். அவர்தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்பட பல படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. நல்ல கதாபாத்திரம் இந்த படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாக பழகினார்கள். அக்கறையோடு பார்த்துக்கொண்டனர்.

ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டன. இயக்குனர்கள் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். அரைகுறை ஆடையை கொடுத்தும் அணியச் சொன்னார்கள். என் உடல் அமைப்பிற்கு கவர்ச்சி எடுபடாது. கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சினிமாவில் அறிமுகமானபோதே முடிவும் செய்து விட்டேன்.

எனவே கவர்ச்சியான ஆடைகளை அணியமாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் இயக்குனரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன் என்று ஆனந்தி தெரிவித்தார்.

காக்கிச் சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் ஜெயம் ரவி – அரவிந்த் சாமி ஜோடி!!

Jayam Ravi

காக்கிச் சட்டைக்கும் கௌரவம் சேர்க்கும் வகையில் ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் போகன் படத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ரோமியோ ஜுலியட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி-ஹன்சிகா கூட்டணி மீண்டும் போகன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை ரோமியோ ஜுலியட் பட இயக்குனர் லஷ்மண் இயக்கி வருகிறார். மேலும், அரவிந்த் சாமி, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ-வில்லன் என இரு வேறு குணாதிசயங்களை வெளிக் கொண்டுவரும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவரைப்போலவே அரவிந்த் சாமியும் ஹீரோ-வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் லஷ்மண் கூறும்போது,

ரோமியோ ஜூலியட் எப்படி ஜாலியான காதல் கதையாக இருந்ததோ. போகன் அப்படி இல்லை. இது பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். இதிலும் மெலிதான காமெடி, படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

வாயு பலூனில் வானில் பறந்தவாறு 50 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்!!

 
வானில் வாயு பலூன்களில் பறந்தவாறு ஒரேசமயத்தில் 50 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஜியாங்ஸு மாகாணத்தின் தலைநகரான நன்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

வாயுபலூன்கள் தரையிறங்கியதும் புதுமண ஜோடிகள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியவாறு வீதியில் ஓடி தமது திருமணத்தைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8