கணவனுக்கு தீ வைத்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிய மனைவி!!

Fire

மனைவி ஒரு அறையில் தொலைக்­காட்சி நாடகம் பார்த்­து ரசித்துக்­கொண்­டி­ருக்க மறு அறையில் கணவர் தீயில் கருகி பலி­யான சம்பவ­மொன்று கொல்­கத்­தாவில் இடம்­பெற்றுள்­ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொல்கத்தாவின் மாணிக்தலா அரச குடியிருப்பிலுள்ள அடுக்குமாடி வீட்டுத்தொகுதியின் 2 ஆவது மாடியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுபெற்ற அரச அதிகாரியான 63 வயதுடைய ரஞ்சித்குமார் பரத் மற்றும் அவரது மனைவி சுதாபா ஆகியயோர் வசித்து வந்தனர். இவர்களது ஒரே மகள் திருமணமாகி குர்கானில் வசித்து வருகிறார்.

ரஞ்சித்குமார் பரத் மற்றும் சுதாபா தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவதினமாக கடந்த சனிக்­கி­ழமை அதிகாலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

அதனை அவதானித்து அங்கு திரண்ட அயல்வீட்டார், பொலிஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புபடையினர் குறித்த தம்பதியை மீட்க முயன்றனர்.

அப்போது சுதாபா ஒரு அறையில் தொலைக்­காட்சி பார்த்தபடி இருந்துள்ளார். அவரது கணவர் இருந்த மற்றொரு அறையிலிருந்து புகை வெளிவந்துள்ளது.

இதன்­போது பூட்டிக்கிடந்த அந்த அறை கதவை உடைத்த போது கணவரான ரஞ்சித்குமார் பரத் உடல் கருகி உயி­ரி­ழந்­த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இத­­னை­ய­டுத்து அவரது உடலை மீட்ட தீயணைப்பு படையினர், பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றனர்.

பின்னர் மனைவி சுதாபாவிடம் பொலிஸார் விசா­ரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏன் கணவரின் அறை கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது என கேட்டதற்கு அவர் தன்னை கொல்ல வந்ததால் அறைக்குள் வைத்து பூட்டியதாக தெரிவித்துள்­ளார்.

எனவே மனைவியே கணவனை தீ வைத்து எரித்துக் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுதாபாவின் உடலில் மண்ணெண்ணெய் சிதறி இருந்ததால் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் பரத் தீயில் கருகி இறந்தமை தொடர்பாக மனைவி சுதாபா மற்றும் அவரது ஆண் நண்பரையும் பொலி­ஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியாசமான முறையில் மாணவிக்கு தண்டனை வழங்கிய ஆசிரியை சிக்கலில்!!

Punishment

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவிக்கு ஆசிரியை ஒருவர் புதுவிதமான தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வலயக் கல்வி பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஐ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

சக மாணவி மீது பேனையால் கீறியமைக்கு தண்டனையாக மற்றைய மாணவர்களைக் கொண்டு “நான் முட்டாள்” என பேனையால் குறித்த மாணவியின் உடலில் எழுதியதாக இந்த ஆசிரியை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தன்னுடைய தொலைபேசி மூலமாக முறைப்பாடு ஒன்று தெரிவிக்கப்பட்டதாக டபிள்யூ.எம்.ஐ.ஹேரத் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தம்புள்ளை வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மனைவியைத் தாக்கிவிட்டு தலைமறைவான கணவன்!!

Husband wife fight

திருகோணமலை பிரதேசத்தில் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த கணவனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெர்ணாண்டோ இன்று (13.06) உத்தரவிட்டுள்ளார்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த நிலையிலேயே நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காய்கறிகளின் விலை உயர்வு!!

Veg

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு கிடைக்கும் காய்கறிகளின் அளவு குறைவாக இருப்பதனால் தான் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு காய்கறிகளை கொண்டு வரும் லொறிகளுக்கு பதிலாக தற்போது சிறிய ரக வாகனங்களில் இங்கு காய்கறிகள் கொண்டுவரப்படுவதாகவும்,அந்த அளவிற்கு காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாளில் காய்கறிகளின் கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 100-180 வரை என்றும் சில்லறை விலை 200 ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும் இங்குள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காய்கறிகளின் விலையேற்றத்தால் உணவகங்களை நடத்துவோர் மிகவும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடு பூராகவும் பெய்த மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரட்டும் ஊடகங்கள் : வேதனையில் விஜய் மல்லையா!!

MUMBAI, INIDA NOVEMBER 15: Vijay Mallya, Chairman of Kingfisher Airlines at press conference to announce the results at Regency Ballroom, Hyatt Regency, Andheri (E) on November 15, 2011 in Mumbai, India. (Photo by S Kumar/Mint via Getty Images)

தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கக்கோரி சர்வதேச பொலிசாரின் உதவியை இந்திய அமலாக்க துறை நாடியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விஜய் மல்லையா நேற்று விடுத்த அறிக்கையில், வங்கி கடன் மோசடி தொடர்பாக என் மீது அமலாக்க துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவை விட்டு நான் வெளியேறும் போது எனக்கு எதிராக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. பிடியாணையும் பிறப்பிக்கவில்லை.

அப்படி இருக்க கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளிநாட்டுக்கு நான் தப்பி சென்றதாக இந்திய அரசும், ஊடகங்களும் குற்றம் சாட்டின.

என் மீதான வழக்கை அமலாக்க துறை நேர்மையாக விசாரிக்கவில்லை. என்னிடம் விசாரிக்காமலேயே என்னை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர். அமலாக்க துறையின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது.

கடன் நிலுவை தொடர்பாக வங்கிகள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

ஊடகங்கள்எனக்கு எதிரான செய்திகளை பரப்பிவருகின்றன.அவை என்னை குற்றவாளியைபோல் சித்திரிக்கின்றன. ஊடகங்கள் நடுநிலையற்று செயல்படுவது எனக்கு வேதனை அளிக்கிறதுஎன்று கூறியுள்ளார்.

362 ஓட்டங்கள் இலக்கு வைத்த இங்கிலாந்து : வெற்றிபெறுமா இலங்கை அணி?

LONDON, ENGLAND - JUNE 11:  Rangana Herath of Sri Lanka pulls the ball during day three of the 3rd Investec Test match between England and Sri Lanka at Lord's Cricket Ground on June 11, 2016 in London, United Kingdom.  (Photo by Matthew Lewis/Getty Images)

இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 362 ஓட்டங்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது

லோட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ஓட்டங்களையும், இலங்கை அணி 288 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 362 ஓட்டங்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது

லோட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ஓட்டங்களையும், இலங்கை அணி 288 ஓட்டங்களையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 71 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹால்ஸ் 94 ஓட்டங்களும், அணித்தலைவர் குக் 49 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். சமிந்த எரங்க, நுவன் பிரதீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து இலங்கை அணிக்கு 362 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக கருணாரத்னே, கெளஷால் சில்வா ஆகியோர் களமிறங்கினர்.

நேற்றைய 4வது நாள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தது. கருணாரத்னே 19 ஓட்டங்களுடனும், கெளஷால் சில்வா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று இறுதிநாள் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. சற்று முன்னர் வரை இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

ஏற்கனவே இங்கிலாந்து தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாழில் குப்பைக்குத் தீ வைக்கச் சென்ற இளம் யுவதி பரிதாபமாகப் பலி!!

Girl

யாழ்ப்பாணம் – சபாபதிப்பிள்ளை இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அருகில், உடலில் தீப்பற்றிய நிலையில் படுகாயடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் முகாமுக்கு அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கச் சென்ற வேளையே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த 23 வயதான குறித்த பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுன்னாகம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புளோரிடா துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன : கொலையாளியின் தந்தை பரபரப்புப் பேட்டி!!

Seddique-Mateen

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது இளைஞர் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிதான் நாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய சித்திக் மட்டின் என்பவரின் மகனான ஒமர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதலை நடத்தினாரா என்ற கோணத்தில் அமெரிக்க பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கொலையாளியின் தந்தையான சித்திக் மட்டின் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அமெரிக்காவில் வசித்தபடியே ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்த சித்திக், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பல்வேறு விவாத மேடைகளிலும் முன்னர் பங்கேற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

தலிபான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இவர் வக்காலத்து வாங்கிய டி.வி. விவாத மேடை நிகழ்ச்சிகளின் தனி தொகுப்புகள் யூடியூப்பில் கூட ஏராளமாக காணக் கிடைக்கிறது. அந்த பதிவுகளில் சித்திக் மட்டினின் புளோரிடா வசிப்பிட முகவரியும், அவரது தபால் பெட்டி மற்றும் கைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகியுள்ள இவரது வீடியோவில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சித்திக் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று புளோரிடா இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக் கொன்ற இவரது மகன் ஒமர் மட்டின், துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே அந்த இரவு விடுதியின் கழிப்பறையில் மறைந்திருந்தபடி கைபேசி மூலமாக பொலிசாருடன் பேசியுள்ளான். அப்போது, பொஸ்டன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை நினைவூட்டிய அவன், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை புகழ்ந்து பேசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த கொலையாளி ஒமரின் தந்தை சித்திக், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ‘எனது மகனின் செயலுக்கும் அவன் சார்ந்திருந்த மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கொலைவெறி தாக்குதலில் அவன் ஈடுபடுவான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த செய்தியை அறிந்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ந்துப்போய் இருப்பதைப்போல் நானும் எனது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். எனினும், அந்த தாக்குதலுக்கும் அவன் சார்ந்திருந்த மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

சில மாதங்களுக்கு முன்னர் மியாமி நகரில் ஓரினச் சேர்க்கையாளர் ஜோடி பொது இடத்தில் முத்தம் கொடுப்பதை அவன் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளான். அதுவும் அவனது சிறுவயது மகனின் கண்ணெதிரே நடந்த அந்த அநாகரிக செயல் ஒமரின் மனதில் ஆழமாக பதிந்துப் போய் இருந்தது’ என்று பேட்டியளித்துள்ள சித்திக் மட்டின், தற்போது தனது மகனின் கொலைவெறி தாண்டவத்துக்கு புதிய நியாயம் கற்பிக்க தொடங்கியுள்ளார்.

முள்ளியவளை செங்குந்தா வீதி நரசிம்மர் ஆலய வருடாந்த உற்சவம்!!

 
முள்ளியவளை செங்குந்தா வீதி நரசிம்மர் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 03.06.2016 மாலையில் சிறப்புற நடைபெற்றது.

இவ் உற்சவ நிகழ்வில் ஆலய நிர்வாக வேண்டுகோளுக்கு இணங்க மக்களோடு மக்களாக வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

1 20160603_203309 20160603_203336 20160603_203443 20160603_212711 20160603_213006

வவுனியா வர்த்தக சங்கத்தால் வசதியற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி!!

Help

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வசித்துவரும் உயர்தர வகுப்பு மாணவி இம்மனுவேல் தனுஷியா வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றார்.

மாணவியின் தந்தை இருதயநோயால் பாதிப்படைந்துள்ளார். இவரின் வறுமையான குடும்ப நிலைமையினையும் கல்வி கற்கும் ஆர்வத்தினையும் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு தெரியப்படுத்தியதுடன் தனது தேவைக்காக துவிச்சக்கரவண்டி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

வசதியற்ற மாணவியின் தேவையினை கருத்திற்கொண்டு வவுனியா வர்த்தக சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.சபாநாதன் வவுனியா வர்த்தக சங்கம் சார்பாக நேற்று முன்தினம் (11.06.2016) துவிச்சக்கர வண்டியினை குறித்த மாணவிக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே. இராஜலிங்கம், நிர்வாக சபை உறுப்பினர் ஆர். கிரிதரன், மற்றும் திரு.விமல் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பல்வேறு செயற்திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு!!

 
வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இத்திட்டமானது ஜனாதிபதி செயலாக்க செயலணி சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சமூகத்தை இந்த நோயிலிருந்து பாதுகாக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் நேற்று (12.06.2016) மாலை 4.00 மணிக்கு போகஸ்வவ கிராமத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மாணவிகள் மற்றும் சிங்கள பாரம்பரிய நடனக் குழுவினரும் வரவேற்பு நடனத்துடன் வரவேற்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி சிறு நீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய வவுனியா போகஸ்வவ கிராமத்திற்கான குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் திறந்து வைத்தார்.

மற்றும் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஜனாதிபதியால் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.

நிகழ்வில் மதகுருமார்கள்,வடமாகாண ஆளுனர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு ஆதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், சிறுநீரக நோய் நிவாரண செயலணியின் பணிப்பாளர், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1 IMG_0328 IMG_0336 IMG_0391 IMG_0432 IMG_0433 IMG_0434 IMG_0458 IMG_0474 IMG_0480 IMG_0485 IMG_0487 IMG_0523 IMG_0528 IMG_0536 IMG_0550 IMG_0557 IMG_0560 IMG_0569 IMG_0570 IMG_0608 IMG_0615 IMG_0624 IMG_0625

CCTV காணொளிகளை கொண்டு வீதி விதிமுறையை மீறுவோருக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படும்!!

Acci

CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு, வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்வதாக அந்த சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் காணப்படும் குறைப்பாடுகளினூடாக குற்றவாளிகள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்துக்கு கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு , போக்குவரத்து தொடர்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை கடுமையாக்குவது அவசியமானதொன்று எனவும் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்!!

Gold

கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலருக்கு அடுத்த படியாக, பொது சர்வதேச மாற்று நாணயமாக தங்கம் கருதப்படுகின்றது. எனவே, உலக நாடுகள் தங்கள் கையிருப்பில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்கமாக வைத்திருப்பதை பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த தங்க வர்த்தகத்தில் 40 சதவீதம், ஆசிய நாடுகளில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதில் சீனா மற்றும் இந்தியாவுலேயே தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.

சமீபகாலமாக தங்கத்தில் முதலீடு செய்வது இலாபமாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றது.

இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது 1,307 டொலர்களைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வித்தியா வழக்கில் யாழ் நீதிமன்றத்தை தாக்கியவர்களின் வழக்கு ஒத்திவைப்பு!!

Jaffna courtயாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த முற்பட்ட வேளையில், நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இரண்டு பிரிவுகளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 70 க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தியமை, சிறைச்சாலை வாகனத்தை சேதப்படுத்தியமை, சட்டவிரோதமாக இளைஞர்கள் கூடியமை என, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, குறித்த வழக்கிற்கு சமூகமளிக்காதிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அந்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதிக்கும், சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை என்ற வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதிக்கும் ஒத்திவைத்து, நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊடகங்களின் விளம்பரங்களுக்காக சிறுவர்களை பலியாக்காதீர்கள் : ஜனாதிபதி!!

children-of-the-world

ஊடகங்கள் விளம்பரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு சிறுவர் தொடர்பான செய்திகளைவெளியிட்டு வருவதாகவும் எனவே அதற்கு சிறுவர்களை பலியாக்க வேண்டாம் எனவும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த ஊடகங்கள் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைத்து பார்க்கதவறுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவை ராஜகீய வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர்களுக்கான தேசிய தலைமைத்துவ பயிற்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவர்கள் விடயத்தில் அனைத்து ஊடகங்களும் அவதானமான நடந்துக் கொள்வதுமிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய தொழில்நுட்பத்துடனான இந்த சமூகத்தில் சிறுவர்களை பராமரிப்பில் பற்றாக்குறைகள் நிலவுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஜனாதிபதிசுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி இன்று  (13.06.2016) காலை  ஆலய பங்குதந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ்   தலைமையில்      இடம்பெற்றது.

திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொரவப்பொத்தான வீதி வழியாக சென்று மறுபடியும் ஆலயத்தினை வந்தடைந்தது.

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் , வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குதந்தை , அமலமரித்தியாகிகள், சபைக் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

13310510_996843110405778_1476648973227173020_n 13332865_996843150405774_6456952315280912250_n 13392187_996847467072009_4682690839577745923_o 13406976_1001548396601916_3220067041001204351_n 13412859_1001539106602845_7619597418716072794_n 13413136_1001529343270488_3078236549356255682_n 13413648_1001524886604267_5686723399761674798_n 13417436_1001529163270506_7947860834956041379_n 13417569_1001527383270684_5383470698380055138_n 13419013_1001538986602857_575016436352699756_n 13419030_1001528949937194_5749949893214138640_n 13423802_1001527266604029_5279729391289572435_n 13423822_1001517513271671_5505766227773395809_n 13423963_1001530973270325_2402766403435380455_n 13427918_1001528129937276_4024939291235843824_n 13428538_1001523119937777_5397462707139345981_n 13428627_1001517663271656_9013777488490923496_n 13432264_1001517746604981_5401831181179746301_n 13434771_1001527139937375_335063436353225106_n 13435304_1001528373270585_8835925261087452450_n 13435480_1001517376605018_4850598985230229220_n 13442209_1001538653269557_2092355678016641872_n 13442230_1001533969936692_5060114363220682929_n 13442283_1001525839937505_4223229976855224390_n 13442393_1001517913271631_8251281391294992010_n 13445491_1001529676603788_657978619687184487_n 13450068_1001517819938307_3906445000157516289_n