பேஸ்புக் மற்றும் கூகுளின் பிரதானிகள் இலங்கை வருகை!!

zucksundar

பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இந்த வருடத்தின இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் அதிவேக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரின் ஏற்பாட்டினால் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் தொழில்நுட்பத்துறைக்கு தேவையான அறிவை வளர்க்க நாட்டில் புதியதொழில்நுட்பங்களை கொண்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடனேயே இவர்கள் இங்கு வரவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த மாதங்களில் உலகம் முழுவதும் கூகுள் பலூனானது பரீட்சித்து பார்க்கப்பட்டதோடு இலங்கையிலும் பலூன் திட்டம் முயற்சி மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பலூன்கள் மூலம் இலங்கையிலுள்ள தொலைபேசி நிறுவனங்களின் ஒலிபரப்பு அலைகளுக்கு வாய்ப்புக்களை வழங்குதல், மற்றும் இலங்கை பூராகவும் குறைந்த செலவில் இணையங்களை பயன்படுத்துவதற்கான ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் பிரதானிகள் இங்கு வருகைத்தருவதானாது இலங்கையின் தொழில்நுட்ப துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவர் என நம்பப்படுகின்றது.

குட்டி விமானம் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி!!

Plane

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் ஒரு குட்டி விமானம் காலேஜ்டேல் விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மதியம் 12.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.

அந்த விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் எர்லாங்கர் மெடிக்கல் சென்டருக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக காலேஜ்டேல் விமான நிலைய போலீஸ் செய்தி தொடர்பாளர் டான்யா சட்லர் கூறும்போது, “படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது, வெளிநபர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை” என்றார்.

விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை என்ஜின் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய அடையாளம் உடனடியாக தெரியவரவில்லை.

தும்புத்தடியால் குழந்தையை அடித்துக் கொன்ற பெண் கள்ளக் காதலனுடன் கைது!!

Baby

தும்புத்தடியால் தாக்கி, தனது இரண்டு வயதான குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் தாய் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் சில மாதங்களுக்கு முன்னர் அதுருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, தனது குழந்தையை தாக்கிக் கொன்றுள்ளார்.

பின் அவரது கள்ளக் காதலனுடன் இணைந்து, அப் பகுதியிலேயே குழந்தையின் சடலத்தையும் புதைத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த 26 வயதான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் கைதான அப் பெண்ணின் கள்ளக் காதலன் கொழும்பைச் சேர்ந்தவராவார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியத் தேர்தலில் போட்டியிடும் இலங்கையர்!!

Australia Election

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜகத் பண்டார, தமது கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய லேபர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை 2ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தான், அங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) சென்ற நாள் முதல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகவும் அயராது உழைத்ததாக ஜகத் பண்டா அத தெரணவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜூலை 2ம் திகதி, கவனமாகவும், அவுஸ்திரேலியா மற்றும் எமது மக்களுக்கு எது சிறந்தது என ஆராய்ந்தும் வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நடிகர் சந்தானத்தின் தந்தைக்கு திரையுலகினர் அஞ்சலி!!(படங்கள்)

1

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சந்தானம். தற்போது இவர் கதாநாயகனாவும் அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சந்தானத்தின் நிஜவாழ்க்கையில் தற்போது ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

சந்தானத்தின் தந்தை நீலமேகன் நேற்று முன்தினம் மாலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

சந்தானத்தின் சொந்த ஊர், சென்னைக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் ஆகும். எனவே, அவரது தந்தையின் உடல் சொந்த ஊரான பொழிச்சலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. சந்தானம் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

2 3 4 5 6

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூன்று வருடங்களின் பின்   ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016)  காலை 10.30  மணியளவில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .

13406797_291295187871970_3695274971112175042_n 13406803_291295241205298_6968350581082885609_n 13407110_291294414538714_615997346876489119_n 13413143_291294121205410_3539666741726568896_n 13413595_291294177872071_2935471354337252206_n 13413674_291294324538723_7673705158287211475_n 13418743_291295441205278_112070512172474876_n 13427809_291295121205310_404716640658221284_n 13432411_291294234538732_2389429285282499892_n 13434977_291294521205370_2825156317259285117_n 13445572_291295297871959_2619919081984024148_n 13445612_291294591205363_7751619568662128808_n

தோல் இல்லாமல் பிறந்த அதிசயக் குழந்தை!!

Skinless Baby

நாக்பூர் வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.

நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30க்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தான் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்றும், மருத்துவ துறையில் இதுபோல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஹார்லிகுவின் இக்தியோசிஸ்’ என பெயர் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

3 இலட்சத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற அரிய வகை தோற்றத்துடன் பிறப்பதாக அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த டாக்டர் அவினாஷ் பனைத் நிருபர்களிடம் கூறினார்.

 

பேஸ்புக்கில் இனி 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றவும் பார்க்கவும் முடியும்!!

3d-bike

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பனோரமா 360 போன்ற அண்ட்ரொய்ட் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து இனி ஃபேஸ்புக்கில் பதிவேற்றலாம்.

பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணனித் திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏற்றவாறு அது மாற்றப்படும்.

பதிவேற்றப்பட்டுள்ள படத்தின் கீழ் வலது மூலையில் சிறிய திசைகாட்டி போன்ற ஐகான் தோன்றினால் அது 360 டிகிரி புகைப்படம் என அறியலாம்.

மவுஸை க்ளிக் செய்து அந்த படத்தில் மேல், கீழ், வலது, இடது என அசைக்கும்போது அந்த புகைப்படத்தின் முழு வடிவமும் தெரியவரும்.

மார்க் ஸக்கர்பெர்க் பதிவேற்றிய 360 டிகிரி புகைப்படம் இது.

Mark

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை!!

Rain

நாட்டின் பல பகுதியில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய, இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு, வடமேற்கு, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள்இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டல திணைக்களத்தின் நிபுணத்துவரான உதேனி வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான காற்றும் வீசக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடி மின்னல் தாக்குதல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுக்க மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனி சாதாரணதரப் பரீட்சார்த்திகள் அனைவரும் சித்தியடைய வைக்கப்படுவர் : கல்வி அமைச்சர்!!

ol

அடுத்த வருடம் முதல் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவோர் அனைவரும் சித்தியடைய வைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போது கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மனித மூலதனத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்திற்கு பொருத்தமான கல்வி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, அனைத்து மாணவர்களும் 13 வருட கல்வியை பெறுவது கட்டாயமானது என பிரதமரும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி!!(வீடியோ)

Sirumi

காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும் காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் தனது கைகளால் கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.

அதாவது சிறுமி கையை காட்டி முன்னோக்கி நடந்து செல்ல யானை பின்னோக்கி நகர்கின்றது. சில நிமிடங்களில் யானை காட்டுக்குள் ஓடி விடுகின்றது.

இந்த காணொளியை பார்த்த சிலர் சிறுமியை பாராட்டியுள்ள போதும் சிலர் சிறுமியின் பெற்றோருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

பிரபல பாடகியை சுட்டுக் கொன்றவர் தானும் தற்கொலை!!

Cristina

பிரபல அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி ப்ளோரொடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வயது 22 வயதான இவர், “தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு இரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக சுட்டார்.

இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுக்க முயன்றபோது அந்த மர்ம நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

40 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் நிர்க்கதி!!

27 Feb 2013, Sumatra, Indonesia --- epa03602854 Rohingya refugees sleep on the floor of the immigration office in Lhok Seumawe, northern Aceh, Indonesia, 27 February 2013. Around 120 Rohingya refugees, including six woman and two children, were rescued by local fisherman after getting stranded at sea while heading for Australia. The Rohingyas are a Muslim minority from Rakhine State in the west of predominantly Buddhist Myanmar. Human Rights groups say they suffer much abuse and are denied free movement, education and employment by the military junta. EPA/HOTLI SIMANJUNTAK --- Image by © HOTLI SIMANJUNTAK/epa/Corbis

இலங்கை அகதிகள் 40 பேர் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் அநாதரவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளானதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்ததாக ஆச்சே மாநிலத்தின் லோக்னா மாவட்ட இராணுவ பிரதான அதிகாரி மேஜர் தருல் அமீன் தெரிவித்துள்ளார்.

டி.என்.1எப்.வீ-00455.09 என்ற இலக்கத்தை கொண்ட இந்த படகு, 17 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது என அவர் கூறியுள்ளார்.

படகில் வந்தவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அகதிகளில் பெண்களும் சிறுவர்களும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை மீட்ட தமிழக மீனவர்கள்!!

An Australian Navy boat (front L) comes alongside a boat carrying 50 asylum seekers after it arrived at Flying Fish Cove on Christmas Island, about 2600 km (1615 miles) northwest of Perth August 7, 2011. Australia's highest court on Monday extended an injunction stopping the deportation of asylum seekers to Malaysia, leaving Prime Minister Julia Gillard's border security policy in limbo until late August or September when a final ruling is expected. Picture taken August 7, 2011. REUTERS/Renee Schipp (AUSTRALIA - Tags: SOCIETY POLITICS) - RTR2PQ05

தமிழகத்தின் நாகை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையை சேர்ந்தவர்கள் வந்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது.

இதனையடுத்து, அப் படகில் இருந்தவர்கள் அக்கரைபேட்டையே சேர்ந்த குமார் என்பவரது விசைபடகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)

 
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று
11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இலங்கையின் முன்னணி இசைக் குழுவான சிவகுமாரின் அக்கினி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி HD மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

இரவு நிகழ்வுகள் 

DSC_0154 DSC_0156 DSC_0157 DSC_0158 DSC_0159 DSC_0160 DSC_0165 DSC_0170 DSC_0176 DSC_0177 DSC_0178 DSC_0184 DSC_0186 DSC_0187 DSC_0190 DSC_0206 DSC_0215 DSC_0217 DSC_0218 DSC_0221 DSC_0223 DSC_0224 DSC_0225 DSC_0226 DSC_0232 DSC_0234 DSC_0236 DSC_0240 DSC_0241 DSC_0244 DSC_0246 DSC_0247 DSC_0249 DSC_0251 DSC_0252 DSC_0257 DSC_0260 DSC_0261 DSC_0263

பகல்நேர நிகழ்வுகள்

DSC_0032 DSC_0033 DSC_0035 DSC_0036 DSC_0037 DSC_0038 DSC_0040 DSC_0041 DSC_0042 DSC_0043 DSC_0044 DSC_0045 DSC_0049 DSC_0051 DSC_0057 DSC_0063 DSC_0064 DSC_0070 DSC_0071 DSC_0073 DSC_0074 DSC_0076 DSC_0077 DSC_0079 DSC_0081 DSC_0083 DSC_0084 DSC_0086 DSC_0087 DSC_0088 DSC_0090 DSC_0094 DSC_0095 DSC_0098 DSC_0101 DSC_0105 DSC_0106 DSC_0111 DSC_0121 DSC_0127 DSC_0129 DSC_0135 DSC_0136 DSC_0137 DSC_0142 DSC_0152

வவுனியாவில் பொதுமக்களை வெளியேற்ற வன இலகா அதிகாரிகள் முயற்சி : பொதுமக்கள் எதிர்ப்பு!!

 
வவுனியா ஆசிகுளம் பகுதியில் 2005ம் ஆண்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினரால் காணி அற்ற இடம்பெயர்ந்த பொதுமக்கள் 1000 பேருக்கு வழங்கப்பட்ட காணி அப்பகுதியிலிருந்து யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு வெளியேறிய பொதுமக்கள் தற்போது தமது காணிகளை இனங்கண்டு இப்பகுதிக்குச் சென்று குடியேறுவதற்கு 600 குடும்பங்கள் காணிகளை துப்பரவு செய்து கொண்டிருந்த பொதுமக்கள் வன இலகா அதிகாரிகளால் அப்பகுதியில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.

தமது காணியினை துப்பரவு செய்த 7பேர் வன இலகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு தமது காணிக்கான ஆவணங்களை மேற்கொண்டபோது இடம்பெயர்ந்து உறவினர் பொது இடங்களில் தங்கியிருந்து தற்போது திரும்பவும் தமது இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர். எனினும் அப்பகுதியில் வேறு ஒருவருக்கு கிணறு தோண்டி விவசாயம் செய்வதற்கு வன இலகா அதிகாரிகள் அனுமதித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிகின்றனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் அருகில் வசிப்பதாலும் இப்பகுதி தமிழ் தெற்கு பிரதேசசபையின் பகுதியில் வருவதால் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு அருகில் 15 பெருன்பான்மை இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று இப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் தமக்கான காணியினை பெற்றுத்தருமாறும், தாம் காணிகள் இன்றி உறவினரின் காணிகளில் வசித்துவருவதாகவும் தமது பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறும் தெரிவித்தனர்.

1 2 DSC04461 DSC04465 DSC04467 DSC04474 DSC04478 DSC04483 DSC04485