மரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு!!

tree-falls-neighbor-noaa_08cc2aba751e05eb84de0caf0ad64147
நாவலப்பிட்டி – கெட்டபுலா கடியன்லென தோட்டத்தில் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமாகியுள்ளதோடு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (8) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், அதன்போது மூன்று வீடுகள் முற்றாகவும், மூன்று வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் தோட்ட நிர்வாகம், வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.அத்தோடு பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, திருத்த பணிகளை நாவலப்பிட்டி மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.பழமைவாய்ந்த குறித்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்து மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! தொடர்ந்து கிடைக்கும் முறைப்பாடுகள்!!

1 (9)
திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான் பெர்ணான்டோ நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.

புல்மோட்டை பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் 14 மற்றும் 15 வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, பெற்றோர்கள் மூலம் மாணவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (07) முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டினையடுத்து பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஜானதிலக கருணாசேன (40 வயது) என்ற ஆசிரியரை கைது செய்து விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியருக்கெதிராக இதுவரை 05 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இன்னும் சில மாணவர்கள் பெற்றோர்கள் ஊடாக முறைப்பாடுகளை வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகள் நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்றப்படும்!!

garbage
கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்ற முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 250 பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொலன்னாவை பகுதியின் சில இடங்களில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

கைக்குண்டுத் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி, சிறுமி காயம்!!

The covered bodies of those killed by a bomb blast are seen outside a mosque in Godapitiya in Matara district, about 160 km (99 miles) south of the capital Colombo, March 10, 2009. A suspected Tamil Tiger suicide bomber killed 14 people and wounded 35, including Sri Lanka's telecommunications minister, during a Muslim festival in the island's south on Tuesday, officials said.    REUTERS/Stringer (SRI LANKA CONFLICT POLITICS IMAGE OF THE DAY TOP PICTURE)

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான ஆண் புனிதத்தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது தாய் பலியாகியுள்ள நிலையில், காயமடைந்த சிறுமி வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

-அத தெரன-

மரியா ஷரபோவாவிற்கு இருவருட போட்டித்தடை!!

Maria Sharapova of Russia looks back to challenge as call as she plays Nadia Petrova of Russia during their match at the US Open women's singles tennis tournament in New York, September 2, 2012. REUTERS

உலகின் முன்னணி டெனிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவிற்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச டெனிஸ் சங்கம் தடை விதித்துள்ளது.

ஊக்கமருந்து பாவனை தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததையடுத்தே அவருக்கு இருவருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய டெனிஸ் தொடரின் பின்னர் மரியா ஷரபோவா தடையை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மருந்து இதய நோய்க்கு பயன்படுத்தப்படுவது எனவும் 2006 ஆம் ஆண்டு முதல் குறித்த மருந்தினை தனது உடல் நிலையை கருத்திற் கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் 29 வயதான மரியா ஷரபோவா தெரிவித்திருந்தார்.

5 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள மரிய ஷரபோவா குறித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாலாவ தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

House

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு அவற்றை விரைவில் மக்களுக்கு கையளிக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தற்போது பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளதாக மேற்கு பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

குறித்த பகுதியில் காணப்படும் வெடிபொருட்களின் பாகங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாமிலிருந்து 500 மீற்றர் சுற்றுவட்டத்திலுள்ள மக்கள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் தமது வீடுகளுக்கு அவற்றின் நிலை தொடர்பில் பார்வையிட்டு மீண்டும் முகாம்களுக்கு சென்றதாகவும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கூறினார்.

இராணுவ முகாமில் ஏற்பட்ட தீச்சம்பவத்தினால் 75 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 150 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மலேசியாவில் அதிகரிக்கும் மியன்மார், இலங்கை அகதிகள்!!

Refugies

மலேசியாவில் 154,140 அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் வசித்து வருவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மலேசிய பிரதிநிதி ரிச்சர்ட் டோவி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத கணக்கெடுப்பின் படி, 139,780 பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் இலங்கை, பாகிஸ்தான், சோமாலியா, சிரியா, ஈராக், ஈரான், பாலஸ்தீனத்தை சேர்ந்த மக்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு இப்போது, அகதிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி மருத்துவ செலவுகளுக்கு ஆண்டுக்கு ஒரு அகதிக்கு 164 மலேசிய ரிங்கிட்டும் (2700 இந்திய ரூபாய்), அறுவை சிகிச்சைக்காக 10,000 மலேசிய ரிங்கிட்டும் (165,227 இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்எச்பி இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறது.

நடுவானில் ​நேருக்குநேர் மோதிக்கொண்ட போர் விமானங்கள்!!

Flight

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜோர்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!!

ODI Record

ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நொட்டிங்கமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பகலிரவு போட்டியில் முதலில் ஆடிய நொட்டிங்காம்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 445 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு மைக்கல் லம்ப் (184 ஓட்டங்கள்), ரிக் வெஸ்செல்ஸ் (146 ஓட்டங்கள்) ஜோடி 342 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டில் உலக கிண்ண போட்டியில் டொன்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ராகுல் டிராவிட் கங்குலி ஜோடி 318 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அத்துடன் நொட்டிங்காம்ஷைர் அணியால் பெறப்பட்ட ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் வரலாற்றில் ஒரு அணியால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 2007 ஆம் ஆண்டில் சர்ரே அணி 496 ஓட்டங்கள் குவித்ததே அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண போட்டியில் சிம்பாவேக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கெய்ல் – சமுவேல்ஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 372 ஓட்டங்களைக் குவித்ததே ஒருநாள் போட்டியில் அதிகபட்ச இணைப்பாட்ட சாதனையாகும்.

பின்னர் ஆடிய நொர்த்தம்டன்ஷைர் அணி 48.2 ஓவர்களில் 425 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 870 ஓட்டங்களை குவித்தன. இன்னும் 2 ஓட்டங்களை பெற்றிருந்தால் இருந்தால் உலக சாதனை படைத்து இருக்க முடியும்.

2006 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 872 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதே உலக சாதனையாக உள்ளது.

சமாதானத்தை வலியுறுத்தி கடும் குளிரில் நிர்வாணக் கோலத்தில் 6000 பேர் ஒன்றுகூடல்!!(வீடியோ)

11

கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர்.

அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பொகோட்டாவில் கடந்த 6 வருடங்களில் இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது.

12 13

இலங்கை அணியில் மீண்டும் உபுல் தரங்க, மஹ்ரூப்!!

Team Srilanka

இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட்.

இலங்கையில் பத்து பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு : சுகாதார அமைச்சு!!

Young woman sitting on edge of bed, holding head in hand

தேசிய மன நோய் விஞ்ஞான அறிக்கைக்கு அமைய இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதில் சிகிச்சைப் பெறுவோர் நூறில் 20 % என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை செய்து கொள்வோர் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் நூற்றுக்கு 50 % மதுபானத்துக்கு அடிமையாகியுள்ளதாகவும், இதுவே மனநிலை பாதிப்பதற்கான காரணம் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மனநிலை பாதிப்பு பிரச்சினையை குறைப்பது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம் எனவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டலால் 118 பயணிகளுடன் எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

EgyptAir

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து எகிப்து தலைநகரான கெய்ரோவை நோக்கி இன்று சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

118 பயணிகள் மற்றும் விமானி உள்பட 17 பணியாளர்கள் என மொத்தம் 135 பேருடன் வந்த அந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள உர்கென்ச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த விமானம் எகிப்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் அவசர வாசல் வழியாக கீழே இறக்கப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தேர்வு!!

Eelam Girl

அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய நீச்சல் போட்டிக்கான தமிழ்நாட்டு அணிக்கு ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார்.

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுஅணித் தேர்வுக்காக கடந்த 3,4,5 ஆகிய நாட்களில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் Sub-Junior பிரிவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் திருச்சி SRM அணிசார்பில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் சிறுமி தனுஜா ஜெயக்குமார் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கான அணியில் தேர்வாகியுள்ளார்.

100 மீட்டர் Freestyle பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 1:18.69 நேரத்திலும், 50 மீட்டர் Back Stroke பிரிவில் குறித்த தூரத்தை 0:41.90 நேரத்திலும் கடந்து இரண்டாவதாக வந்து இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 50 மீட்டர் Freestyle பிரிவில் குறித்த தூரத்தை 0:34.66 நேரத்தில் கடந்து மூன்றாவதாக வந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு அணிசார்பிலான Sub-Junior பிரிவில் 50 மீட்டர் Back Stroke, 100 மீட்டர் Freestyle ஆகிய தனிநபர் பிரிவு நீச்சல் போட்டிகளுக்கும் 50×4 மீட்டர் Freestyle தொடர்நீச்சல் பிரிவு போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் தனுஜா.

இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழ் சிறுமி தனுஜா தனது அபார நீச்சல் திறமையினாலும் கடுமையான பயிற்சியினாலும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள தனுஜாவின் தொடர் வெற்றிகளும் எமது தேசத்திற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது.
தமிழ்நாட்டில் உள் அரசியல் தலையீடுகள் மூலம் திறமையும் தகுதியும் இருந்தும் முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத துயரம் தோய்ந்த வரலாறு விளையாட்டு துறையையும் விட்டுவைக்கவில்லை. அவற்றையெல்லாம் தனது திறமையின் மூலம் தகர்த்தெறிந்து வெற்றிகளை குவித்து வரும் தனுஜா தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டிகள் இம்மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கணவனை இழந்த குடும்பத் தலைவிக்கு ராம் பவுண்டேசன் உதவி!!

 
வவுனியா புதியவேலர்சின்னக்குளத்தில் வசிக்கும் கணவனை இழந்த செல்லையா உதயகுமாரிக்கு கனடா ராம் பவுண்டேசன் மூலம் வாழ்வாதார உதவியாக புதிய மோட்டர் பம், பைப்புகள் இன்று (08.06.2016) வழங்கி வைக்கப்பட்டது.

சமூக சேவகி கமலாதேவி மூலம் தமிழ் விருட்சம் அமைப்பிடம் தனது நிலையை எடுத்து சொல்லி தனக்கு தோட்டம் செய்து வாழ்வதற்கு மோட்டர் பம்பும் , பைப்புகளும் தந்து உதவும்படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கனடா வாழ் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன .

ராம் பவுண்டேசனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

DSCN7015 DSCN7021 DSCN7023 DSCN7038 DSCN7047 DSCN7055 DSCN7059

வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கலில் தாமதம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

 
வவுனியா மாவட்டத்திலுள்ள 42 கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் திட்டத்தை சமூக சேவைகள் அமைச்சு வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.

கேள்வி அறிவித்தல் மூலம் தனியாருக்கு பொருட்களை வழங்கும் உரிமையினை பிரதேச செயலகம் வியாபார நிலையம் ஒன்றிற்கு வழங்கியிருந்தது.

எனினும் அந்த வியாபார நிலையம் பொருட்களை வழங்குவதில் குறைபாடுகள் நிலவிவருவதாகவும் சிலருக்கு பொருட்கள் வழங்குவதில்லை எனவும், பொருட்கள் முடிந்துவிட்டதாகவும் அடுத்தமுறை வந்து சத்துணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கர்ப்பிணித் தாய்மாரை அலையவைப்பதாகவும் கர்ப்பிணித்தாய்மார் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றசச்சாட்டு தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களிடம் தெரிவித்ததையடுத்து குறித்த பொருட்கள் வழங்கும் வியாபார நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதேச செயலாளர் சத்துணவு பெற வரும் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களை தாமதமின்றி வழங்குமாறும் பொருட்களைப் பெறவரும் அனைவருக்கும் வழங்கிவைக்குமாறும் தெரிவித்ததுடன் பிரதேச செயலகத்திலிருந்து உத்தியோகத்தரை அனுப்பி பார்வையிட்டு வருவதாகவும் கர்ப்பிணித் தாய்மார் தாமதமின்றி பொருட்களை பெறுவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

1 2 3